அல்லாஹ்வுக்கு பலவீனங்கள் இல்லை
மறதி
(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை.
279 (என்பதை இறைவன் கூறச் சொன்னதாக ஜிப்ரீல் கூறினார்)
(அல் குர்ஆன் 19:64)
'அது பற்றிய ஞானம் எனது இறை வனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்.’ என்று அவர் கூறினார்.
(அல் குர்ஆன் 20:52)
பசி, தாகம்
“வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகி விடக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக!
(அல் குர்ஆன் 6:14)
நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நாடவில்லை.
(அல் குர்ஆன் 51:57)
அவனுக்கு உதவியாளன் இல்லை
“சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை’” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக!
(அல் குர்ஆன் 17:111)
தேவையற்றவன்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 2: 267)
வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
அல்லாஹ் புகழுக்குரியவன். தேவையற்றவன்.
(அல்குர்ஆன் 22:64)
மனைவி
(அவன்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில், அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 6 :101)
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
(அல்குர்ஆன் 72:3)
மகன்
“அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன்.
(10. வானகளிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபனிகின்றன)
(அல்குர்ஆன் 2:116)
“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக!
அல்லாஹ் தேவைகளற்றவன்.
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்)பிறக்கவுமில்லை.
அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்லாஹ் தேவைகளற்றவன்.
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்)பிறக்கவுமில்லை.
அவனுக்கு நிகராக யாருமில்லை.
(அல் குர்ஆன் 112: 1-4)
பெண் மக்கள்
ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன்.
10.அவர்கள் வர்ணிப்பதை விட்டும் உயர்ந்து விட்டான்.
(அல்குர்ஆன் 6:100)
அல்லாஹ்வுக்கு புதல்வியரைக் கற்பனை செய்கின்றனர். அவன் தூயவன். (10.அவர்களுக்கோ அவர்கள் ஆசைப்படுவது (ஆண்குழந்தை) வேண்டுமாம்!)
(அல்குர்ஆன் 16:57)
அவனுக்கு பெண் குழந்தைகளும் உங்களுக்கு ஆண் குழந்தைகளுமா?
(அல்குர்ஆன் 52:39)
அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப் பட்டு விசாரிக்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் 43:19)