அத்தியாயம் 001 - அல் பாத்திஹா (தோற்றுவாய்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

தீர்ப்பு நாளின்1 அதிபதி.

(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
Thanks : www.onlinepj.com & http://quran.com
Thanks : www.onlinepj.com & http://quran.com