அத்தியாயம் - 114 அந்நாஸ் - மனிதர்கள்
மொத்த வசனங்கள் : 6
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ




அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...1, 2, 3, 4. மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 26
5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
6. ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.