அத்தியாயம் - 112 இஃக்லாஸ் - உளத்தூய்மை
மொத்த வசனங்கள் : 4
இந்த அத்தியாயத்தின் மொத்த கருத்தும் ஓரிறைக் கொள்கையைத் தூய்மையாகக் கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ




அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. ""அல்லாஹ் ஒருவன்’’ என கூறுவீராக!
2. அல்லாஹ் தேவைகலற்றவன்.
3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4. அவனுக்கு நிகராக யாருமில்லை.