அத்தியாயம் - 113 அல்ஃபலக் - காலை பொழுது
மொத்த வசனங்கள் : 5
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ





அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1, 2, 3, 4, 5. அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! 357