2, வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
அல்லாஹும்ம ரப்ப(இ)ஸ் ஸமாவா(த்)தி வரப்ப(இ)ல் அர்ளி, வரப்ப(இ)ல் அர்ஷில் அளீம், ரப்ப(இ)னா வரப்ப(இ) குல்லி ஷையின், பா(எ)லி(க்)கல் ஹப்பி(இ) வன்னவா, வமுன்ஸிலத் தவ்ரா(த்)தி வல் இஞ்சீலி வல் பு(எ)ர்கான், அவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்(த்)த ஆஃகிதுன் பி(இ)னாஸிய(த்)திஹி, அல்லாஹும்ம அன்(த்)தல் அவ்வலு ப(எ)லைஸ கப்ல(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் ஆஃகிரு ப(எ)லைஸ ப(இ)ஃத(க்)க ஷைவுன், வஅன்(த்)தள் ளாஹிரு ப(எ)லைஸ ப(எ)வ்க(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் பா(இ)த்தினு ப(எ)லைஸ தூன(க்)க ஷைவுன், இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ப(எ)க்ரி
இதன் பொருள்:
இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 4888