6, பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
ஆதாரம்: புகாரி 4008, 5010, 5040, 5051
இரவில் ஓதினால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் மஃரிப் முதல் சுப்ஹ் வரை இதை ஓதிக் கொள்ளலாம். அந்த வசனங்கள் வருமாறு:
ஆமனர் ரஸுலு பி(இ)மா உன்ஸில இலைஹி மின் ரப்பி(இ)ஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பி(இ)ல்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபி(இ)ஹி, வருஸுலிஹி, லாநுப(எ)ர்ரி(க்)கு பை(இ)ன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுப்(எ)ரான(க்)க ரப்ப(இ)னா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிபு(எ)ல்லாஹு நப்(எ)ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸப(இ)த். வஅலைஹா மக்தஸப(இ)த். ரப்ப(இ)னா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்ப(இ)னா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்(இ)லினா, ரப்ப(இ)னா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பி(இ)ஹி, வஃபு(எ) அன்னா வஃக்பி(எ)ர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ப(எ)ன்ஸுர்னா அலல் கவ்மில் காபி(எ)ரீன்.
இதன் பொருள்:
இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர். எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. 'எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
(திருக்குர்ஆன் 2:285,286)
Thanks : www.onlinepj.com & "நமக்குள் இஸ்லாம்"