7, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள்.
ஆதாரம்: புகாரி 5018, 5748, 6319
அந்த அத்தியாயங்கள் வருமாறு:
பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம்யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு(எ)வன் அஹத்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்
பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
குல் அவூது பி(இ) ரப்பி(இ)ல் ப(எ)லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(இ). வமின் ஷர்ரின் னப்ப(எ)ஸாத்தி பி(எ)ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!
113 வது அத்தியாயம்
பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
குல்அவூது பிரப்பி(இ)ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ(எ) ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.
இதன் பொருள்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர்.
114வது அத்தியாயம்