407. பன்றியை உண்ணத் தடை
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை
செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும்
நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்;
நிகரற்ற
அன்புடையோன்
(அல் குர்ஆன் 2:173)
இவ்வசனங்களில்
பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை
திருக் குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை. மலத்தை உண்பதாலும், சாக்கடையில்
புரள் வதாலும் தான் பன்றி தடை செய்யப் பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இது
உண்மையில்லை.
இது தான் காரணம்
என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க
வேண்டும். சாக்கடை யில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப் படும் பன்றி
அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே
பன்றியின் மாமிசம் தடுக்கப் பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது.ஆயினும், பன்றியின்
இறைச்சியை உண்ணக் கூடாது என்ப தற்கு வேறு பல காரணங்கள்உள்ளன.
பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும் போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய நோயாளிகள்
ஆட்டிறைச்சி,
மாட்டிறைச்சி
ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம்என்கின்றனர். 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு
உள்ளது. 100
கிராம்
மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி
இறைச்சியில் 50
கிராம்
கொழுப்பு உள்ளது. சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக
இருக்க முடியாது.
மேலும் எல்லாக்
கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும் போது
வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம்
வெளியேறுகின்றது.
ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம்.
இதனால் தான் 29 டிகிரியை விட
வெப்பம் அதிகமாகும் போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது. பன்றியின்
இறைச்சியில் மனித னுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள்
உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக்
காய்ச்சல்,
மஞ்சள்
காய்ச்சல்,
இதய
வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம்
கண்டறிந்துள்ளது. பன்றி உணவு
சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக்
கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர்.
இது போன்ற
காரணங்களால்,
வருமுன்
காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:173, 5:3, 6:145, 16:115
இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:173, 5:3, 6:145, 16:115
SOURCE: http://www.tamilquran.in