முஸ்லிம் - முஸ்லிம்கள்
முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப்படையில்
கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் மூலம் ஒருவனுக்குக் கிடைக்கும் பெயராகும்.
இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதன் பொருள்
"அல்லாஹ் கடமையாக்கியவைகளைச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் விலகி
அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்'' என்பதாகும்.
இச்சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
சமுதாயத்துக்கு மட்டுமின்றி அவர்களுக்கு முன் சென்ற இறைத்தூதர்களை ஏற்று
அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே
தான் இச்சொல்லைத் தமிழ்ப்படுத்தாமல் எல்லா இடங்களிலும் முஸ்லிம் என்றே
குறிப்பிட்டுள்ளோம்.
இச்சொல்லை தமிழக முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லீம் என்று நெடிலாக உச்சரித்தும் எழுதியும் வருகின்றனர். அது தவறாகும். முஸ்லிம் என்பதே சரியாகும். அரபு மூலத்தில் முஸ்லிம் என்று குறிலாகவே எழுதப்பட்டுள்ளது.
அன்ஸார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட
தோழர்களும் மக்காவில் இருந்து விரட்டப்பட்டு மதீனாவில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு
தஞ்சம் புகுந்தவர்களை அரவணைத்து ஆதரவளித்து பேருதவி செய்தவர்களே அன்ஸார்கள்
எனப்படுவர்.
இவர்களில் ஒவ்வொருவரும் அகதிகளாக வந்த
மக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவருக்கு தங்களின் வீடு, சொத்து, வியாபாரம், ஆடைகள் அனைத்தையும் சரிபாதியாகப்
பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
இம்ரான்
இவர் ஈஸா நபியின் தாயாரான மர்யம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லை.
இவர் ஈஸா நபியின் தாயாரான மர்யம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லை.
மர்யம்
இவர் ஈஸாவின் தாயார். கிறித்தவர்கள் இவரை மேரி என்பர். திருக்குர்ஆனில் மிகச் சிறப்பித்துக் கூறப்படும் பெண்மணியாவார்.
குகைவாசிகள்
லுக்மான்
தாலூத்
தாவூத் நபி சாதாரணப் படை வீரராக இருக்கும் பொழுது இறைவனால் நியமிக்கப்பட்ட மன்னரே தாலூத். இவரது தலைமையில் ஜாலூத் என்ற கொடியவன் தோற்கடிக்கப்பட்டான். (பார்க்க திருக்குர்ஆன் 2:247-249).
துல்கர்னைன்
இவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி
புரிந்த நல்ல மன்னர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஸாபியீன்கள்
இறைத்தூதர்கள் அனுப்பப்படாதபோதும் அல்லது இறைத்தூதர்களின் வழிகாட்டு நெறி சென்றடையாதபோதும் நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்!
இவ்வுலகுக்கு ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும். மனிதனால் உருவாக்கப்பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைத்தூதர் வழியாக இல்லாமல் இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
மேலும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும்போது எவை தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ கேடு தருமோ அவற்றிலிருந்து விலகி வாழ்வார்கள். நல்லவை எனத் தெரிபவற்றைக் கடைப்பிடிப்பார்கள்.
வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத்தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.
நஜ்ஜாஷிமன்னர் (அபீசீனியா)