Oct 26, 2015

அபூபக்ர் (ரலி)வரலாறு தொடர் – 26


அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 26

மரணத்தைத் தழுவிய மகாப் பொய்யன்

எம்ஷம்சுல்லுஹா
தன்னைக் கொல்வதற்கு பைரோஸ் சதித் திட்டம் தீட்டினார் என்பதைக் கேள்விப்பட்டபொய் நபி அஸ்வத் அல்அன்ஸீபைரோஸைக் கொல்வதற்காக கத்தியை எடுத்தவுடன்,பைரோஸ் அவனைப் புகழ ஆரம்பிக்கின்றார்.
"(எங்கள் குடும்பத்தில் பெண் எடுத்ததன் மூலம்எங்களை நீங்கள்  சம்பந்தவழியாக்கினீர்கள்மற்ற பாரசீக மக்களை விட எங்களை நீங்கள்மகிமைப்படுத்தியிருக்கின்றீர்கள்நீங்கள் மட்டும் நபி இல்லையெனில் எதற்கு ஈடாகவும்எங்களது ஆட்சிப் பீடத்தை உங்களுக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டோம்உங்களிடம்தான் எங்களுக்குரிய இம்மைமறுமையின் விவகாரம் ஒருங்கே இணையப்பெற்றிருக்கின்றதுஅப்படி இருக்கையில் எங்களால் எப்படி (ஆட்சியைவிட்டுக்கொடுக்காமல் இருக்க முடியும்?
உங்கள் காதுகளுக்கு வரும் அரைக் காசுக்குத் தேறாத அற்பப் பிரச்சனைக்கெல்லாம்எங்களிடம் வந்து வினா தொடுக்கலாமாவிளக்கம் கேட்கலாமாநீங்கள்விரும்பியவாறு வாழ்பவன் நான்'' என்று பைரோஸ் அஸ்வதின் உள்ளத்தைப் பனித்துளிகளான வார்த்தைச் சரம் கொண்டு நனைத்து விட்டார்.
உஷ்ணமாய் உள்ளக் கொதிப்பு எடுத்து உறுமியவன் பைரோஸ் உதிர்த்த பனிக்கட்டிவார்த்தைகளில் உருகிப் போனான்தான் அறுத்துகுவித்து வைத்திருந்த கால்நடைகளின்கறியை பங்கு வைக்குமாறு அவரைப் பணித்தான்.
அவன் பணித்தபடி ஸன்ஆவின் குடிமக்களிடம் அந்த இறைச்சியை பைரோஸ்விநியோகித்தார்மக்களிடம் இறைச்சியை விநியோகித்து விட்டுஅந்தத் தகவலைமகிழ்ச்சியுடன் அவனிடம் சொல்ல வருகின்றார்அவ்வாறு சொல்ல வந்துகொண்டிருக்கையில், "பைரோஸைக் கொன்று விடுங்கள்'' என்று ஒருவன் அஸ்வதின்காதில் சொல்லிக் கொண்டிருந்தான்அது பைரோஸின் காதுகளிலும் விழுந்து விட்டது.
"நாளை காலை பைரோஸையும்அவனது தோழர்களையும் கொன்று விடுகிறேன்நாளைகாலை நீ இங்கு வா!'' என்று அவனிடம் அஸ்வத் சொல்லி விட்டுத் திரும்பினான்அவன்கண்ணெதிரே பைரோஸ் நின்று கொண்டிருந்தார்.
என்னவென்று அஸ்வத் கேட்டான்இறைச்சி விநியோகத்தைப் பற்றி பைரோஸ்தெரிவித்தார்அதைக் கேட்டு விட்டு அவன் அப்படியே வீட்டுக்குள் போய் விட்டான்.

அதிரடி ஆலோசனை

பைரோஸ் தன் தோழர்களிடம் வந்து அஸ்வதின் முன்னிலையில் அரங்கேறிய சதித்திட்டத்தை அம்பலப்படுத்தினார்உடனே அவர்களின் அரசியல் அவை அதிரடியாகக்கூடியதுஅஸ்வதின் மனைவியைச் சந்தித்து அடுத்தடுத்த காரியங்களில் அவசரமாகஇறங்குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவானது.
அதன் படி பைரோஸ் அஸ்வதின் அரண்மனைக்கு வந்து அவனது மனைவியைச் சந்தித்துஆலோசனை கேட்கின்றார்.
"அரண்மனையில் எங்களது வீட்டைத் தவிர மற்ற அனைத்து வீடுகளும் பலத்தபாதுகாப்பின் கீழ் உள்ளதுநான் இருக்கும் இந்த வீடு இன்ன தெருவில்இந்த இடத்திற்குநேராக அமைந்துள்ளதுஅந்த இடத்திலிருந்து இந்த வீட்டிற்கு நேராககாவலர்கள்இல்லாத அந்தப் பகுதியிலிருந்து ஒரு சுரங்கம் அமையுங்கள்இனிமேல் இவனைஉயிருடன் விட்டு வைப்பது முறையல்ல'' என்று அஸ்வதின் மனைவி முழங்குகின்றார்.
மாலை நேரமானதும் அந்தப் பணியை ஆரம்பித்து விடுங்கள்நான்    வீட்டில் வேண்டியஆயுதங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைக்கிறேன் என்றும் கூறினார்.

அஸாதின் அலறல்

அஸ்வதின் மனைவி அஸாதிடம் பேசி விட்டு வெளியே வந்து கொண்டிருக்கும் போதுபைரோஸை அஸ்வத் பார்த்து விடுகின்றான். "என் மனைவியிடம் உனக்கென்ன வேலை?உள்ளே நீ எப்படி வரலாம்?'' என்று உறுமியவாறு பைரோஸின் தலையைப் பிடித்துஉலுக்க ஆரம்பிக்கின்றான்.
அஸ்வத் ஒரு முரடன்தான் தோன்றிஎனவே அவன் பைரோஸைக் கொன்றே விடுவான்என்று அஸாத் கூக்குரலிட்டார்அந்தக் கூக்குரலின் காரணமாக பைரோஸின்தலைமுடியை விடுகின்றான்இல்லையெனில் அங்கேயே பைரோஸைக் கொன்றுஇருப்பான்.
"இவர் எனது சிறிய தந்தை மகன்என்னைச் சந்திக்க வந்திருக்கின்றார்'' என்று தன்கணவனிடம் அஸாத் தெரிவிக்கின்றார்.
அதற்கு அவன், "பேசாமல் இருஉன்னால் தான் அவனைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்'' என்று ஆத்திரத்தில் கத்தினான்.
அஸ்வதின் கோரப் பிடியிலிருந்து தப்பிய பைரோஸ் தன் நண்பர்களிடம், "நாம் நம்மைக்காக்க வேண்டும்'' என்று தனக்கு ஏற்பட்ட ஆபத்தைப் பற்றி விளக்கினார்அவர்கள்அப்போது என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் அஸாதின் பணிப்பெண் ஒரு செய்தியைக் கொண்டு வந்தாள். "எடுத்த முடிவில் ஓர் அடியைக் கூட பின்வைக்காதீர்கள்'' என்ற தந்தி வரிகளைத் தான் அந்த அடிமைப் பெண் தந்து சென்றாள்.
அஸாதிடமிருந்து வந்த செய்தியின் வழியைச் சரியானது தான் என்று பைரோஸ்உறுதிப்படுத்திக் கொண்டார்இதற்கிடையே சுரங்கம் தோண்டும் பணி சுறுசுறுப்பாகநடந்து கொண்டிருந்ததுஅஸ்வதின் மரணம் சுரங்கப் பாதை வழியாகப் படையெடுத்துவந்து கொண்டிருந்ததுஇரவாகி விட்டதுசுரங்கப் பணிகள் முடிந்ததுசுரங்கத்தின்முடிவில் ஒரு சுடர் தெரிந்ததுஅது அஸாத் வைத்திருந்த விளக்குச் சுடர்உண்மையில்அது ஒரு நம்பிக்கைச் சுடர்!
அந்த விளக்கின் துணை கொண்டு அஸ்வதின் படுக்கையறைக்கு அருகில் பைரோஸ்வந்து விட்டார்அப்போது அஸ்வத் விட்ட குறட்டை அவனது கோட்டையை அதிரச்செய்ததுமக்களுக்குச் சரியான பாதை காட்ட வந்த போலி இறைத்தூதன் (?) சரியானபோதையில் படுத்திருந்தான்.
பைரோஸ் வாசலில் தான் அடியெடுத்து வைத்திருப்பார்அவரை இனங் கண்டவன்போல், "பிரோஸேஉனக்கும் எனக்கும் இடையே என்ன விவகாரம் இருக்கின்றது?'' என்றுபிதற்ற ஆரம்பித்தான்.
இப்போது பைரோஸின் உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்ததுஆபத்திற்கான அனைத்துவாசல்களும் தன் முன் திறந்து கிடப்பதைப் போன்று ஓர் உணர்வைப் பெற்றார்இனி,தான் திரும்பினால் வரப் போகும் அழிவு தனக்கு மட்டுமல்லஅஸ்வதுக்கு அருகில்நிற்கும் அவனது துணைவி அஸாதுக்கும் தான் என்பதை உணர்ந்த பைரோஸ் ஒரு நொடிநேரத்தில் சுதாரித்தார்அவ்வளவு தான்ஒரே பாய்ச்சல்!
குப்புறக் கிடந்த அவன் மீது முதுகில் தன் மூட்டுக்களைப் பதித்து பிடரியைக் குதறத்துவங்கினார்கடைசியில் பட்டு மெத்தையில் இரத்தம் பீறிட்டு வழிய ஆரம்பித்தது.ஆரவாரப்பட்ட அவனது அங்க அவயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் துவங்கின.
இனி இங்கு நிற்க வேண்டாம்நமது தோழர்களிடம் இந்த சுபச் செய்தியை அறிவிப்போம்என்று கருதி பைரோஸ் இடம் பெயரலானார்அப்போது அஸாத் அவரது மேலாடையைப்பிடித்து இழுத்து, "என்னை இங்கு விட்டு விட்டு எங்கே செல்கின்றீர்கள்?'' என்று கேட்டார்.அஸ்வத் இன்னும் உயிருடன் இருக்கின்றாôன் என்ற எண்ணத்தில் தான் அவர் இவ்வாறுவினவினார்.
அதற்கு பைரோஸ், "அஸ்வத் கொல்லப்பட்ட செய்தியை தோழர்களுக்குத்தெரிவிப்பதற்காகச் செல்கின்றேன்'' என்று பதிலளித்தார்அப்போது பைரோஸின்தோழர்கள்அஸ்வதின் தலையைத் துண்டிப் பதற்காக உள்ளே வந்தனர்.
அணையப் போகின்ற ஜோதியைப் போல் அஸ்வதின் உடலில் ஆட்டம்அசைவுஏற்படுகின்றதுஅஸ்வதின் உடலில் ஆட்டமாஅது கூடவே கூடாது என்று இரண்டு பேர்சேர்ந்து மீண்டும் அவனது முதுகில் அடிக்கின்றனர்அவனது வாயில் இன்னும்ஆத்திரமிக்க வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன.
இப்போது அஸாத் அவனது தலை முடியைப் பிடிக்கின்றார்இருவரில் ஒருவர் அவனதுதலையைத் தனியாக எடுக்கின்றார்அறுக்கப்பட்ட காளையின் வாயிலிருந்து வரும்காற்றுடன் கூடிய கதறலைப் போல் இவனுடைய வாயிலிருந்து காற்றுடன் கூடிய கதறல்ஒலி வெளிவந்ததுஇது காவலர்கள் காதுகளில் விழவே அவர்கள் அடித்துப் புரண்டுகொண்டு ஓடி வருகின்றனர்என்ன நடந்ததுஎன்று காவலர்கள் அஸாதிடம்விசாரித்தனர்.
"ஒன்றுமில்லைநபிக்கு வஹீ வந்து கொண்டிருக்கின்றது'' என்று விடைப்புடன்பதிலளிக்கின்றார்உடனே காவலர்கள் திரும்பி விடுகின்றனர்.

அவசர ஆலோசனைக் கூட்டம்

போலி நபி கொலையுண்டவுடன் கைஸ்தாதவைஹ்பைரோஸ் ஆகியோர் உடனேஅங்கு கூடினர்அஸ்வதின் மரணத்தை எப்படித் தங்கள் அணியினருக்குத் தெரிவிப்பதுஎன்று ஆலோசனை செய்தனர்இஸ்லாமியப் படையினருக்குரிய சங்கேத மொழியில்கோட்டையில் நின்று அறிவிப்பது என்று முடிவு செய்தனர்.
அதிகாலை நேரமானதும் கோட்டையிலிருந்து அடையாள அழைப்பு மொழிகிளம்புகின்றதுஅதைக் கேட்ட முஸ்லிம்கள் அனைவரும் அங்கு அணி திரள்கின்றனர்.இந்த அழைப்பொலி எழுப்பியவர் கைஸ் தான்.
"முஹம்மத் (ஸல்அவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர்அப்ஹலா (என்ற இந்தஅஸ்வத்ஒரு பொய்யன் என்று நான் பிரகடனம் செய்கின்றேன்'' என்று கோட்டையின்மீது ஏறி நின்று கைஸ் முழங்கினார்அத்துடன் அஸ்வதின் தலையைத் தூக்கி மக்கள்மன்றத்தில் எறிகின்றார்அவ்வளவு தான்அஸ்வதின் - தூதரின் - தோழர்கள் அலறிப்புடைத்துக் கொண்டு ஓடி விட்டனர்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
ஏகத்துவம் ஜூன் 2006