Oct 26, 2015

அபூபக்ர் (ரலி)வரலாறு தொடர் – 24

அபூபக்ர் (ரலி)வரலாறு  தொடர் – 24


வெற்றி கொள்ளப்பட்ட உமான்

எம்ஷம்சுல்லுஹா
மூன்று தளபதிகளை உள்ளடக்கிய முக்கூட்டுப் படை வருகின்றது என்ற தகவல் போலிநபி "லகீத்'துக்குக் கிடைத்தது தான் தாமதம்அவன் தன் படை பரிவாரங்களுடன் தபாஎன்ற இடத்தில் முகாமிட்டான்தபா என்பது யமனைச் சுற்றியுள்ள ஊர்களின்பட்டணமும்வணிகச் சந்தையுமாகும்.
லகீத் (கடந்த தொடரில் லகீத் என்பதற்குப் பதிலாக வகீத் என்று தவறுதலாக இடம் பெற்றுவிட்டதுமுஸைலமாவின் பாணியில் மக்களின் சொந்தங்களையும்சொத்துக்களையும்தனக்குப் பின்னால் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டான்அப்போது தான் போரில்புறமுதுகு காட்டும் பெட்டைத் தனம் தலை காட்டாது என்பதற்காக இந்த ஏற்பாடு!
இந்தத் தருணத்தில் ஜைபரும்அப்பாதும் ஸஹார் என்ற இடத்தில் சங்கமமாயினர்.சண்டைக்கான தளம் அமைத்தனர்இஸ்லாமிய தளபதிகளுக்குத் தகவல் அனுப்பினர்.

பலியான பத்தாயிரம் பேர்

தகவல் கிடைத்தவுடன் அந்தத் தளபதிகள் அப்பாத்ஜைபருடன் அங்கம் வகித்தமுஸ்லிம்களுடன் சங்கமித்தனர்போர் தொடங்கியதுஇரு படைகளும் கடுமையாகமோதினமுஸ்லிம்கள் மிகக் கடுமையான சோதனைக்கு உள்ளாயினர்இந்தஎதிரிகளைத் தீர்த்துக் கட்ட முடியாது என்று கருதி திரும்பி விடுவார்கள் எனும் அளவுக்குமுஸ்லிம்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
அந்தச் சமயத்தில் தான் அல்லாஹ்வின் திருக்கரம் அவர்கள் மீது அருள் மழை பொழியத்துவங்கியதுமுஸ்லிம்களுக்குப் பக்கத் துணையாக நாஜியா மற்றும் அப்துல் கைஸ்சந்ததியினர் இந்த எதிரிகளைச் சந்திக்கக் களம் புகுந்தனர்.
அல்லாஹ்வின் உதவியும்வெற்றியும் முஸ்லிம்களை ஆரத் தழுவிஅணைக்கஆரம்பித்து விட்டதுபுறமுதுகு காட்டி ஓடத் துவங்கிய எதிரிகளுக்குப் பின்னால் புழுதிபறக்கத் துரத்திச் சென்று அவர்களைப் புரட்டி எடுத்தனர்அவர்களது படையில் வந்தபத்தாயிரம் பேர் பலியாயினர் என்றால் அவர்கள் அடைந்த தோல்வியும்வீழ்ச்சியும்எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
புறமுதுகு காட்டக் கூடாது என்பதற்காக தங்களுக்குப் பின்னால் நிறுத்தி வைத்திருந்தஅவர்களின் சந்ததியினர் முஸ்லிம்களிடம் கைதி களாயினர்அவர்கள் கொண்டு வந்தபொருளாதாரங்கள் முஸ்லிம்களின் அருளாதாரங்களாயினமொத்தக் கடைத் தெருவும்முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.
இந்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்கும் வகையிலும்போரில் கிடைத்த வெற்றிப்பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை - இந்த அரிய வெகுமதியைக் கொண்டு சேர்க்கும்வகையிலும் தளபதிகளில் ஒருவரான அர்பிஜாவை முஸ்லிம்கள் ஆட்சித் தலைவர்அபூபக்ர் (ரலி)யை நோக்கி அனுப்பி வைக்கின்றார்கள்அவர் அந்தப் பணியை ஆற்றிவிட்டு மீண்டும் படையில் வந்து சேர்ந்து கொள்கின்றார்.

மக்கள் கண்ட மஹரா வெற்றி

போலித் தூதர்களுக்கு எதிரான புனிதப் போர்ப் பயணங்களில் அடுத்த இலக்குமஹராவாகும்உமான் நாட்டைச் சேர்ந்த உன்மத்தன் "லகீத்ஒழிக்கப்பட்டவுடன்,இக்ரிமாமஹராவை நோக்கி வெற்றி நடை போடத் துவங்குகின்றார்மஹராவில்அவரது படை மையம் கொள்கின்றது.
மஹராவின் புவியியல் வரைபடத்தை மட்டுமின்றிஅரசியல் வானிலையில் தட்ப வெப்பநிலைகளையும் சரியாகவே தன் மனத்திரையில் படம் பிடித்துக் கொள்கின்றார் இக்ரிமா!
மஹராவை ஆள்வது இரு மகராஜாக்கள்அவர்கள் இருவருக்கும் மத்தியில் மனக்கசப்புகள்அதனால் அவ்விருவருக்கும் இடையில் மோதல் தொடர்கதையாக உள்ளதுஎன்பதைத் தெளிவாக மோப்பம் பிடித்துக் கொண்டார்.
அவ்விருவரில் ஒருவரின் பெயர் ஷிக்ரீத்மற்றவர் பெயர் முஸப்பிஹ்ஷிக்ரீத்துக்குஇக்ரிமா தூது அனுப்புகின்றார்அவர் அதற்கு இசைவு தெரிவித்து இக்ரிமாவுடன்இணைந்து கொள்கின்றார்இது முஸ்லிம்களுக்கு வலிமையையும்படை வளத்தையும்கொடுத்தது.
முஸப்பிஹின் படை வலிமை குன்றியதாக இருந்ததுஇதைக் காரணமாக வைத்துப்பாய்ந்து விடுவோம் என்று இக்ரிமா போய் அவர்கள் மீது பாய்ந்திடவில்லை.அடக்கத்துடனும்அமைதியுடனும் முஸப்பிஹுக்கு செய்தி அனுப்புகின்றார்கள்.
"அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு வந்து விடுகட்டளைக்குக் காது கொடுகட்டுப்படு!என்றுமுஸப்பிஹிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.
முஸப்பிஹ் அதைக் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லைஅவனுடன் இருந்த படைஅவனுக்கு இறுமாப்பை அளித்ததுஅதில் அவன் ஏமாந்தான்அதன் விளைவாகஇக்ரிமாவை எதிர்க்கக் களமிறங்கினான்போட்டியில்லாத புது அரசனாக மஹராவைஆளப் போவதாகக் கனவு கண்டான்கற்பனை செய்து கொண்டான்அந்த உந்துதல்காரணமாக இக்ரிமாவின் வேண்டுகோளை மறுத்து விடுகின்றான்அதன் விளைவு இருஅணிகளுக்கும் போர் தொடங்கியது.
வல்ல அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி அடைந்தனர்.முஸ்லிம்கள் தபாவில் நடந்த போரைக் காட்டிலும் மிகக் கடுமையாகப் போரிட்டனர்.வெற்றிக் கனியைத் தட்டிப் பறித்தனர்இங்கும் அல்லாஹ்வின் அருளால் பெரும் பொருட்செல்வம் முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.
மஹராஅபூபக்ர் (ரலிஅவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது என்பதைத்தெரிவிப்பதற்கும்அல்லாஹ்வின் ஆணைப் படி போரில் கிடைத்த வெற்றிப்பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை இஸ்லாமியக் கருவூலத்தில் சமர்ப்பிப்பதற்கும்இக்ரிமாமஹராவின் ஆட்சியாளர் ஷிக்ரீத்தை அனுப்பி வைக்கின்றார்.
மத மாற்றத்திற்கு எதிரான மகத்தான யுத்தத்தின் கணடைசி அத்தியாயமாக ஷிக்ரீத்,ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி)யைச் சந்திக்கின்றார்அபூபக்ர் (ரலிஆட்சி அரியணைஏறியதும் மதீனாவைச் சுற்றியுள்ள ஊர்களில் - நாடுகளில் பற்றிஆர்ப்பரித்து எரிந்த கடைசி கட்டத் தீச்சுவாலையான மஹராவும் அணைந்து விட்டதுமத மாற்றத்திலிருந்துவிடுபட்டு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இணைந்து விட்டதுஇனி எஞ்சியிருக்கும் ஒரேஎதிரி யமனில் உள்ள கைஸ் மட்டும் தான்கைஸின் கதைக்கு முற்றுப் புள்ளி வைக்கும்பணி மட்டும் நிலுவையில் இருந்தது.
யமனைக் களங்கப்படுத்திக் கொண்டும்கறை படுத்திக் கொண்டும் இருந்த அந்தக்கரும்புள்ளியை வெறும் புள்ளியாக்கி விட்டால் மத மாற்றம் என்ற முடை நாற்றம்சுத்தமாகத் துடைக்கப்பட்டு விடும்அதைத் துடைப்பதற்கான பாதையில் தான்இஸ்லாமியப் போர்த் தளபதிகள் இறங்கி அதில் கரையும் காண்கின்றனர்அவர்கள் கரைகாணும் அந்தக் காட்சியைக் காண்பதற்கு முன்னால் கைஸின் கதையைக் கொஞ்சம்கண்டு வருவோம்.

பொய் நபியின் கையில் வந்த யமன்

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் எடுத்துரைத்த அவர்களின் கனவைப் பற்றி நான்அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலிஅவர்களிடம் கேட்டேன்அதற்கு அவர்கள்பின்வருமாறு கூறினார்கள்:
"நான் உறங்கிக் கொண்டிருக்கும் போது என் இரு கைகளிலும் தங்கத்தாலான காப்புகள்இரண்டு வைக்கப்பட்டன.  நான் அவற்றை அருவருப்பாகக் கருதி வெறுத்தேன்உடனே(அவற்றை ஊதிவிடஎனக்கு அனுமதிக்கப்பட்டது.  நான் அவ்விரண்டையும் ஊத அவைபறந்து விட்டனஅவ்விரண்டும் இனி வரவிருக்கும் இரண்டு பெரும் பொய்யர்களைக்குறிப்பதாக நான் விளக்கம் கண்டேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்அவர்கள் கூறுகின்றார்கள்:
அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட(அஸ்வத்அல் அன்ஸீ ஆவான்.  மற்றொருவன் மகா பொய்யன் முஸைலிமா ஆவான்.  (நூல்புகாரி 4379)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களால் "பூ'' என்று ஊதித் தள்ளப்பட்ட கனவுலகபொற்காப்புகளில் ஒருவன் யமாமாவைச் சேர்ந்த முஸைலமாஅவனைப் பற்றிமுழுமையாகப் பார்த்து விட்டோம்மற்றொருவன் அல்அஸ்வத் அல்அன்ஸீஇவனைஇனி தான் நாம் முழுமையாகப் பார்க்க இருக்கின்றோம்.
இவனது பெயர் அப்ஹலா பின் கஃப் பின் கவ்ஸ்கஹ்ப் ஹனான் என்பது இவனது ஊர்!இவன் யமனை நோக்கிப் படையெடுத்து வருகின்றான்பத்து நாட்களில் நஜ்ரான் என்றஊர் அவனது படையில் ஆதிக்கத்தில் வீழ்ந்து விடுகின்றது.
அடுத்ததாக அவனது ராணுவம் யமனை நோக்கி நகர்கின்றதுஅப்போது யமனின்ஆளுநர்கள் நபி (ஸல்அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட அபூமூஸா அல் அஷ்அரி (ரலி)மற்றும் முஆத் பின் ஜபல் (ரலிஆகியோர் ஆவர்.
பாரசீக மன்னரான ஷஹ்ர் பின் பாதாமுக்கும் யமானிய ஆட்சிப் பரிபாலணத்தில்பங்கிருந்ததுஅப்போது தான் போலி நபியின் படை யமனுக்குள் புகுந்ததுஅந்நியப்படையை எதிர்த்து ஷஹ்ர் பின் பாதாம் போராடுகின்றார்போலி நபிக்கும் ஷஹ்ர் பின்பாதாமுக்கும் கடுமையான போர் நடக்கின்றதுபோரில் பாதாம் கொல்லப்பட்டுவிடுகின்றார்.
பாரசீகப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் பாதாமின் படைகள் போலி நபியின்படையால் முறியடிக்கப்பட்டு விடுகின்றதுதான் புறப்பட்டு வந்த இருபத்து ஐந்தாம்நாளில் யமனில் தன் ஆக்கிரமிப்பை போலி நபி நிலை நிறுத்துகின்றான்.
முஆத் பின் ஜபலும்அபூமூஸா அல்அஷ்அரியும் ஹள்ர மவ்த் என்ற இடத்துக்குத் தப்பிவிடுகின்றனர்யமானிய ஆளுநர்களில் சிலர் தாஹிர் என்ற ஊருக்குச் சென்றுவிடுகின்றனர்அம்ர் பின் ஹராம்காலித் பின் ஸயீத் பின் அல்ஆஸ் ஆகியோர்மதீனாவுக்குத் திரும்பி விடுகின்றனர்.
ஆளுநர்கள் தங்கள் மாநிலங்களில் இருந்து தப்பியதும் யமன் தேசம் முழுவதும் பொய்நபியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றது.
ஷஹ்ர் பின் பாதாமை அவனது படை சந்திக்கும் போது குதிரைப் படையினர் மட்டும் 700பேர்இது அவனது படையின் வலிமையைத் தெளிவாக எடுத்தியம்புகின்றதுஇப்படி ஒருவலிமை மிக்க படையின் தளபதிகளில் ஒருவர் தான் கைஸ்கைஸ் பின் அப்து யகூஸ்பின் மக்ஷூஹ் என்பது இவரது முழுப் பெயர்.
போலி நபி தன் இராணுவப் படையின் கட்டுப்பாட்டை கைஸிடமே ஒப்படைத்திருந்தான்.மித்ஜஹ் என்ற பகுதியின் ஆளுமையை அம்ர் பின் மஃதீகர்ப் என்பாரிடம் ஒப்படைத்துஇருந்தான்பாரசீகப் பிள்ளைகளின் பிரச்சனைகளைக் கவனிக்கும் பொறுப்பைபாரசீகத்தைச் சார்ந்த பைரோஸ் மற்றும் தாதவைஹ் ஆகியோரிடம்ஒப்படைத்திருந்தான்.
ஷர்ஹ் பின் பாதாமின் மனைவியான அஸாத் என்பவள் ஓர் அழகு தேவதை!பைரோஸின் சிறிய தந்தையின் மகளான இவர் இஸ்லாத்தை ஏற்ற இனியபெண்மணியாவார்இவரைப் போலி நபி திருமணம் செய்து கொள்கின்றான்.
போலி நபியின் இந்தப் போக்கைக் கண்டு சுகூன் என்ற கிளையினர் கொதித்துஎழுகின்றனர்சுகூன் கிளையார் இவ்வாறு கொதித்து எழுவதற்குக் காரணம்அவர்கள்தங்கள் கிளையிலிருந்து ரம்லா என்ற பெண்ணை முஆத் பின் ஜபலுக்குத் திருமணம்செய்து வைத்திருந்தனர்.
போலி நபிக்கு எதிராக முஆத் பின் ஜபல் எதுவும் செய்யாமல் மவுனமாக இருந்தார்.ஆளுநரான தங்கள் மருமகனின் இந்த மவுனம் அந்த மக்களுக்கு ஆத்திரத்தையும்வேதனையையும் அளித்ததுஅதனால் போலி நபிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றுமுழு வேகமாகக் கிளம்புகின்றனர்.
அவர்கள் இது தொடர்பாக ஒரு குழுவாகச் சென்று போலி நபியின் படைத் தளபதிகைஸை நேரில் சந்தித்து தங்கள் ஆத்திரத்தையும் மனக் குமுறலையும் வெளிப்படுத்துகின்றனர்அப்போது தான் போலி நபி மீது கைஸ் கொண்டிருந்த வெறுப்பின் உச்சக்கட்டத்தை உணர முடிந்தது.

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஏகத்துவம் மார்ச் 2006