அபூபக்ர் (ரலி)வரலாறு தொடர் – 28
ரோமானிய பாரசீக பேரரசுகளுடன் போர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது, அவர்கள் இறக்கவில்லை,உயிருடன் தான் இருக்கிறார்கள் என்ற விவகாரம் கிளம்பியது. அபூபக்ர் (ரலி) அவர்கள்அதை வேருடன் கெல்லி எறிந்தார்கள். அடுத்து அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும்ஜகாத்தைத் தர மறுத்தல், மதம் மாற்றம் போன்ற பிரச்சனைகள் எழுந்தன. அவற்றையும்இறையருளால் வெற்றிகரமாக முறியடித்தார்கள்.
அதன் பின்னர், இறுதித் தூதுத்துவத்திற்கு எதிராக போலித் தூதர் விவகாரங்கள் பொட்டுச்செடிகளாக அல்ல; பூகம்பங்களாக, பூதாகரமாக வெடித்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் மரணம் அடைந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பொய் நபிகளைஎதிர்த்துப் போர் நடைபெற்றது. இந்தப் போலித் தூதர்கள் இஸ்லாமிய கொள்கையைமட்டுமல்ல! கூடவே அது வரை இஸ்லாமியப் பேரரசு கண்டிருந்த எல்லைகளையும்சேர்த்தே பறிக்க முனைந்தனர். ஆனால் அபூபகர் (ரலி) அவர்கள் இவ்விரண்டையும் எதிர்கொண்டு வெற்றி கண்டார்கள்.
இந்த வெற்றிக்குப் பின்னர் தான் ஆட்சித் தலைவரின் கவனம் ரோமாபுரி, பாரசீகப்பேரரசுகளின் பக்கம் திரும்புகின்றது. யமாமா போர் முடிந்ததும் பாரசீகத்தின்கைவசமிருந்த இராக், ரோமாபுரியின் கைவசமிருந்த சிரியா ஆகிய நாடுகளை நோக்கிமீண்டும் இஸ்லாமியப் படைகளை அனுப்புகின்ற பணியில் ஆட்சித் தலைவர் இப்போதுஆயத்தமாகி, களமிறங்கி விட்டார்கள்.
அல்லாஹ்வின் போர் வாள் காலித் பின் வலீத் தலைமையில் ஒரு படையை இராக்கைநோக்கி அனுப்புகின்றார்கள். இந்த வீரப் படை இராக்கை அடைவதற்கு முன்னால் நாம்ரோம, பாரசீகப் பேரரசுகளையும் அவற்றின் ஆளுகையின் கீழ் இருந்த அரபு அரசுகளையும்கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்.
அடிமைப்பட்டுக் கிடந்த அரபு அரசுகள்
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆன கால கட்டத்தில்ரோமாபுரியும், பாரசீகமும் உலகின் இரு பெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்துகொண்டிருந்தன. சிரியா, இராக் போன்றவையும் அவற்றைச் சுற்றியுள்ள சிறு சிறுஅரசுகளும் இந்த ரோமானிய, பாரசீகப் பேரரசுகளின் அடிமை நாடுகளாக இருந்தன. சிரியாமற்றும் இராக்கின் ஆட்சியதிகாரம் இவ்விரு பேரரசுகளிடம் மாறி, மாறி சுழன்று வந்தது.
கொஞ்ச காலம் பாரசீகம், சிரியாவை ரோமர்களிடமிருந்து பறித்து, தன் கைவசமுள்ளஇராக்குடன் இணைத்துக் கொள்ளும். கொஞ்ச காலம், ரோமாபுரி இராக்கைபாரசீகத்திடமிருந்து பறித்து, தன் கைவசமுள்ள சிரியாவுடன் இணைத்துக் கொள்ளும்.இப்படி இரு பேரரசுகளுக்கு இடையிலான போர் பல நூற்றாண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது.
இந்தப் போர் குறித்து திருக்குர்ஆன் வசனங்களும் நமக்குத் தெளிவாக்கிக்கொண்டிருக்கின்றன.
பாரசீக வெற்றியும் பரிகசிக்கும் எதிரிகளும்
ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்கள்தோல்விக்குப் பிறகு சில வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றிபெறுவார்கள். முன்னரும், பின்னரும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. நம்பிக்கைகொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சியடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவிசெய்கிறான். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 30:2,3,4,5)
பாரசீகப் படுதோல்வியை, ரோமாபுரியின் வெற்றியை திருக்குர்ஆன் ஏன் கூற வேண்டும்?என்ற ஐயம் எழலாம். இது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் விளக்கம்இதோ:
ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. ரோம்(பாரசீகத்தால்) தோற்கடிக்கப்பட்டு விட்டது. பாரசீகர்கள், ரோமப் பேரரசை வெற்றிகொள்ள வேண்டும் என்று இணை வைப்பாளர்கள் விரும்பினர். ஏனெனில் இவர்களும்பாரசீகர்களும் சிலைகளை வணங்குபவர்கள்.
ரோமப் பேரரசு, பாரசீகத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்பினர்.காரணம், (முஸ்லிம்களைப் போலவே) ரோமாபுரியினர் வேதக்காரர்கள்.
இணை வைப்பாளர்கள் தங்களது இந்த விருப்பத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம்கூறினார்கள். அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்சென்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரோமாபுரியினர்வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்தப் பதிலை முஷ்ரிக்குகளிடம் தெரிவித்தனர். அதற்குஅவர்கள், "நமக்கும் உங்களுக்கும் மத்தியில் ஒரு தவணை குறிப்பிடுங்கள். நாங்கள்வெற்றி பெற்றால் நீங்கள் இன்னின்ன பொருட்களை எங்களுக்குத் தர வேண்டும். நீங்கள்வெற்றி பெற்றால் நாங்கள் இன்னின்ன பொருட்களை உங்களுக்குத் தருவோம்'' என்றுகூறினர். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் "ஐந்து வருடங்கள்'' என்று கூறினார்கள்.
ஆனால் ரோமாபுரியினர் வெற்றி பெறவில்லை. அபூபக்ர் (ரலி) இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது, "இதைப் பத்துக்குக் கீழ் என்று குறிப்பிட்டிருக்கலாமே''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ரோம் வெற்றி பெற்று விட்டது.
இது தான், "ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது''என்ற வசனத்தில் "நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சி அடைவார்கள். தான்நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான்'' என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குவிளக்கமாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர்
நூல்: திர்மிதீ 3117
முஸ்லிம்களின் ஆறுதலுக்காக இந்த வசனம் அருளப்பட்டது. எனினும் இந்த வசனம்பாரசீகம் தோல்வியுறும் என்று முன்னறிவிப்பு செய்தது. அது போன்றே ரோமிடம்பாரசீகம் தோல்வியைத் தழுவி அல்லாஹ்வின் முன்னறிவிப்பு நிறைவேறியது.
நாம் இங்கே இதைக் குறிப்பிடக் காரணம், சிரியா, இராக் இன்னும் இதர அரபு நாடுகள்இவ்விரு பேரரசுகளின் பிடியில் சிக்குண்டு கிடந்தன; அந்த அளவுக்கு இவ்விருபேரரசுகளின் ஆதிக்கம் அரபுலகத்தின் மீது நிலவி வந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத் தான்.
மண்ணில் விழுந்த மணி மகுடங்கள்
இஸ்லாமிய ஒளிக்கதிர் மக்காவில் இருந்து கிளம்பிய மாத்திரத்திலேயே ஏகத்துவத்திற்குஎதிரான இந்த இலக்குகளின் மீது குறி வைக்கத் துவங்கி விட்டது. இதை நபி (ஸல்)அவர்களின் முன்னறிவிப்பில் இருந்து தெளிவாக விளங்கலாம்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமைநிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றிமுறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?''என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச்சொல்லப்பட்டு இருக்கின்றது'' என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீநீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்துஇருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்துஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும்அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள். "அப்படியென்றால் நாட்டையே தன்அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது)எங்கே சென்று விட்டிருப்பார்கள்?'' என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். நபி (ஸல்)அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின்கருவூவலங்கள் வெற்றி கொள்ளப் படுவதைப் பார்ப்பாய்'' என்று சொன்னார்கள். நான், "(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்'' என்றுபதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி 3595
இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் ஹீரா என்ற பகுதிஇராக்கில் உள்ள பகுதியாகும். இராக் பாரசீகத்தின் கை வசமிருந்தது. இந்தப் பகுதியைத்தான் இஸ்லாம் வெற்றி கொள்ளும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்முன்னறிவிப்பு செய்கின்றார்கள்.
ஏகத்துவத்திற்கு எதிரான கிறித்தவ உலகமும் அதாவது ரோமப் பேரரசும் இந்தமுன்னறிவிப்பை உணரத் தலைப்பட்டது.
ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸ், அபூ சுஃப்யானிடம் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுச்செய்தி பற்றி சில கேள்விகளைத் தொடுக்கின்றார். அதற்கு அபூசுஃப்யான் அவர்கள்அளித்த பதிலைக் கேட்டு விட்டு மன்னர் தமது மொழி பெயர்ப்பாளரிடம் மொழிபெயர்க்கச் சொன்னதாவது:
"அவரது குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர்குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத் தூதர்களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில் தான் அனுப்பப் பட்டுள்ளார்கள்.உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன்.அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இந்த வாதத்தைச்செய்திருந்தால் முன்னர் செய்யப் பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும்செய்கின்றார் என்று நான் கூறியிருப்பேன். இவரது முன்னோர்களில் யாரேனும்மன்னராக இருந்திருக்கின்றார்களா? என்று உம்மிடம் நான் கேட்ட போது இல்லை என்றுசொன்னீர். இவரது முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருந்தால் தம்முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்றுசொல்லியிருப்பேன். இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள்அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்றுகூறினீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத்துணிய மாட்டார் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள்அவரைப் பின்பற்றுகின்றார்களா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானியமக்கள் தான் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தான்இறைத் தூதர்களைப் பின்பற்றுவோராய் இருந்துள்ளனர்.
அவரைப் பின்பற்றுகின்றவர்கள் அதிகரிக்கின்றார்களா? அல்லது குறைகின்றார்களா?என்று கேட்டேன். அவர்கள் அதிகரிக் கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை,நிறைவு பெறும் வரை அப்படித் தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும்.
அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீதுஅதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கிறார்களா? என்று கேட்டேன். இல்லை என்றுகுறிப்பிட்டீர். அப்படித் தான். இதயத்தில் நுழைந்து விட்ட இறை நம்பிக்கையின் எழில்(உறுதியானது). அவர் (எப்போதாவது) வாக்கு மீறியதுண்டா? என்று என நான் உம்மிடம்கேட்ட போது, இல்லை என்றீர். திருத்தூதர்கள் அப்படித் தான் வாக்கு மீற மாட்டார்கள்.அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன்.அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும், அவனுக்கு எதையும் இணையாக்கக்கூடாது என்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும், சிலை வணக்கத்தில் இருந்து அவர்உங்களைத் தடுப்பதாகவும், தொழுகை, உண்மை, கற்பு நெறி ஆகியவற்றை உங்களுக்குஅவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர்.
நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இருபாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆட்சி செய்வார். (இப்படிப்பட்ட) ஓர்இறைத்தூதர் தோன்றுவார் என்று நான் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர்(அரபிகளாகிய) உங்களிலிருந்து தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை.அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப் பட்டாவதுஅவரைச் சந்தித்து இருப்பேன். நான் அவருக்கு அருகே இருந்தால் அவரது பாதங்களைநான் கழுவி விடுவேன்.
இவ்வாறு மன்னர் ஹெர்குலிஸ் குறிப்பிட்டார்.
(நூல்: புகாரி 7)
ரோமாபுரியின் பேரரசராக இருந்த மன்னர் ஹெர்குலிஸ் தனது ஆட்சியின் கீழுள்ளபகுதிகளை இஸ்லாம் ஆட்சி செய்யும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.
மன்னர் ஹெர்குலிஸின் இந்தக் கூற்று, ரோமாபுரி விரைவில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ்வரும் என்பதை கிறித்தவ உலகம் விளங்கியிருந்ததை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
வேதக்காரர்களுக்கு எதிரான முதல் போர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்து பலபோர்க்களங்களைச் சந்தித்தார்கள். அந்தப் போர்க்களங்களில் முஃத்தா எனப்படும் போர்,முதன் முதலாக கிறித்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராகும். முஃத்தா என்பதுசிரியாவின் அருகிலுள்ள கிராமம்.
ஹிஜிரி 8, ஜமாதுல் அவ்வல் மாதம், அதாவது கி.பி. 629 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்மாதம் இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரில் தான் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் போர் வாள் என்ற பட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் பெற்றுத் தடம்பதிக்கின்றார்கள்.
"(முஃத்தா போர்க்களத்தில்) இஸ்லாமிய சேனையின் கொடியை ஸைத் எடுத்தார். அவர்கொல்லப்பட்டு விட்டார். பிறகு ஜஃபர் எடுத்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகுஇப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார்''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களின்கண்கள் இரண்டும் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. "இறுதியில் அக்கொடியைஅல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் பின் வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரதுகரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்து விட்டான்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 3757
இந்தப் போருக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ரோமானியப் பேரரசை எதிர்த்து நடத்தியபோர் தபூக் போராகும். மக்களை முழு அளவில் தயார்படுத்தி அழைத்துச் சென்ற போரும்இந்த தபூக் போர் தான். இது கடும் வெயிலில், நீண்ட தூரப் பயணம் செய்து நடத்தப்பட்டபோராகும். இதைப் பற்றி புகாரியில் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கும்4418வது ஹதீஸ் தபூக் போரைப் பற்றி விரிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
நபி (ஸல்) அவர்களின் இராணுவம் போதிய வாகனமின்றி தவித்த யுத்தமும் இந்த தபூக்போர் தான். இதைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
(முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் "உங்களை ஏற்றிஅனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை'' என்று நீர் கூறிய போது, (நல்வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும்நிலையில் திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை.
(அல்குர்ஆன் 9:92)
இந்தப் போரில் பங்கெடுக்காமல் தங்கி விட்டவர்களை 9:80,81,82,83 ஆகியவசனங்களிலும் இன்னும் பல்வேறு வசனங்களிலும் அல்லாஹ் கடுமையாகக்கண்டிக்கின்றான். இதன் தூரத்தைக் கணக்கில் கொண்டு போருக்கு வராதவர்களை 9:42வசனத்தில் அல்லாஹ் தூரப்படுத்திப் பேசுகின்றான்.
இப்படிப்பட்ட இந்தப் போர், ரோமானியப் பேரரசை, கிறித்தவ சாம்ராஜ்யத்தை எதிர்த்துநடத்திய போராகும். இது ஹிஜிரி ஒன்பதாம் ஆண்டு ரஜப் மாதம் நடைபெற்றது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
ஏகத்துவம் செப்டம்பர் 2006