Sep 14, 2016

நரகம்

அல்லாஹ்வின் கட்டளையையும், அவனுடைய தூதர்களின் வழியையும் பின்பற்றாத மக்களுக்கு மறுமையில் விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தண்டனையே நரகம் எனப்படும்.

சில குற்றங்களைச் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.


இக்குற்றங்களைத் தவிர ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இறைவனின் கருணையால் மன்னிக்கப்பட்டால் சொர்க்கம் செல்வார்கள். மன்னிக்கப்படாவிட்டால் தங்களது தவறுகளுக்கேற்ப தண்டனைகளை அனுபவித்து விட்டுப் பிறகு சொர்க்கம் செல்வார்கள்.

அனைவரும் நரகைக் கடக்க வேண்டும் – 19:71
நரகின் எரிபொருட்கள் யாவை – 2:2421:9840:7272:15
நரகில் பல படித்தரங்கள் – 4:145
வெளியேற முடியாது – 5:3732:20
நரகத்திற்கு ஏழு வாசல்கள் உள்ளன – 15:44
தீய வழிகாட்டிய தலைவர்களும், வழிகாட்டப்பட்டவர்களும் சண்டையிட்டுக் கொள்வர் – 7:387:3926:96-10233:66-6838:60-6340:47-48
நரகத்தில் உணவு
கொதிக்கும் நீர் புகட்டப்படும் – 6:7010:437:6738:5747:1555:4456:4256:5456:9378:2588:5
சீழ் புகட்டப்படும் – 14:16,1738:5769:3678:25
கொதிக்கும் நீரால் குடல் துண்டாகும் – 47:15
உருக்கப்பட்ட செம்பு போல் வெப்பமுடைய தண்ணீர் புகட்டப்படுவர் – 18:29
ஸக்கூம் மரமே உணவாகும் – 37:6644:43-4656:52,53
தொண்டைக்குள் இறங்காத உணவு தோலைக் கருகச் செய்யும் – 73:1374:29
முள்மரமே உணவாகும் – 88:6
பசியைப் போக்காத உணவு – 88:7
பல் வகைத் தண்டனைகள்
கருகும் தோல்கள் உடனே மாற்றப்படும் – 4:56
நெருப்பினால் ஆன ஆடை – 22:19
கொதிநீர் தலையில் ஊற்றப்படும் – 22:1944:48
நெருப்பினால் எரிக்கப்படுவர் – 40:72
நெருப்புக் காற்று வீசும் – 56:42
விலங்கிடப்படுவார்கள் – 13:534:3336:840:7169:3273:1276:4
நெருப்பால் விரிப்பு – 7:41
நெருப்பால் போர்வை – 7:41
பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும் – 9:35
நெருப்பின் வேகம் தணியும்போது உடனே அதிகரிக்கப்படும் – 17:97
நரகத்தில் மரணம் இருக்காது – 14:1720:7435:3644:5678:1387:13
நரகம் கடுமையான வெப்பமுடையது – 9:81
நரகவாசிகளின் கூச்சலும், அலறலும் – 11:10621:100
இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவார்கள் – 22:21
முகத்தை எரிக்கும் நெருப்பு – 23:104
நரகத்தின் பேரிரைச்சல் – 25:1267:7
நரகில் புரட்டி புரட்டிப் போடப்படுவார்கள் – 26:9433:66
கீழ்ப்புறத்திலிந்தும், மேற்புறத்திலிருந்தும் வேதனை செய்யப்படும் – 29:55
வேதனை இலேசாக்கப்படாது – 40:4943:75
கரும் புகையே நிழலாகும் – 56:43-44
கடுமையான காவலர்கள் – 66:674:31
மண்டை ஓட்டைக் கழற்றும் வெப்பம் – 70:16
மாளிகை போல் பிரம்மாண்டமான தீப்பந்தங்களை வீசி எறியும் – 77:31-34
குளிர்ச்சியை அனுபவிக்க மாட்டார்கள் – 78:24
இதயங்களைத் தாக்கும் கடும் நெருப்பு – 104:6,7
என்றென்றும் நரகில் கிடப்போர்
இறைவனை நம்ப மறுத்தவர்கள் – 2:392:161,1622:2172:2573:1164:1699:6833:6539:7240:7641:2859:1664:1098:6
ஒரு நன்மையும் செய்யாது தீமைகளை மட்டுமே செய்தவர்கள் – 2:8110:2716:2943:74
வட்டி வாங்கியவர்கள் – 2:275
ஏகஇறைவனை ஏற்று பிறகு மறுத்தவர்கள் – 3:88
அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகள் அனைத்தையும் மீறியவர்கள் – 4:145:8072:23
சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் – 58:16
கொலை செய்தவர்கள் – 4:93
இறை வசனங்களை நம்ப மறுத்துப் புறக்கணித்தவர்கள் – 7:3620:10023:103
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் – 6:1289:1725:6840:7698:6
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிடுவோர் – 9:63
இரட்டை வேடம் போடும் நயவஞ்சகர்கள் – 9:68
மறுமையை நம்பாதவர்கள் – 10:5213:522:14
தடுப்புச் சுவர்

இடைநிலையில் சிலர் – 7:46