தொழுகையின் சட்டதிட்டங்கள்
(பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 13
உளூவை நீக்குபவை
தொடர்-13 -தூக்கம் உளூவை நீக்குமா?
பி. ஜைனுல் ஆபிதீன்
தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
தூங்குகின்ற முறை, தூங்கும் கால அளவு போன்றவற்றின் அடிப்படையில் சட்டங்களை அவர்கள் வேறுபடுத்துகின்றனர்.
முதலாவது கருத்து
எவ்வளவு நேரம் தூங்கினாலும் எந்த முறையில் தூங்கினாலும் உளூ அறவே நீங்காது. உளூச் செய்து விட்டு ஒருவர் தூங்கினால் தூங்கி எழுந்தவுடன் உளூச் செய்யாமலேயே தொழலாம் என்று சிலர் கூறுகின்றனர். அபூமூஸா (ரலி) என்ற நபித்தோழர், ஸயீத் பின் முஸ்லிம், ஹுமைத் ஆகிய அறிஞர்கள் இந்தக் கருத்துடையவர்கள்.
இரண்டாவது கருத்து
எவ்வளவு நேரம் தூங்கினாலும் எந்த முறையில் தூங்கினாலும் உளூ நீங்கி விடும். ஓரிரண்டு வினாடிகள் தூங்கினால் கூட மீண்டும் உளூச் செய்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது இன்னும் சிலரது கருத்தாகும். ஹஸன் பஸரீ, இஸ்ஹாக் பின் ராஹவைஹி போன்ற அறிஞர்கள் இக்கருத்தை உடையவர்கள்.
மூன்றாவது கருத்து
தூங்குகின்ற முறை எது என்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தூங்கும் கால அளவைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும். குறைவான நேரம் தூங்கினால் உளூ நீங்காது அதிக நேரம் தூங்கினால் உளூ நீங்கும் என்பது வேறு சிலரின் கருத்து. இமாம் மாலிக், இமாம் அஹ்மத் பின் ஹம்பல், அவ்ஸாயீ, ஸுஹ்ரீ ஆகியோர் இந்தக் கருத்துடையவர்கள்.
நான்காவது கருத்து
தொழுகையில் உள்ள நிலைகளைப் போல் தூங்கினால் உளூ நீங்காது. வேறு விதமாகத் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்பது மற்றும் சிலரின் கருத்து. அதாவது ருகூவு செய்வது போல், சுஜுது செய்வது போல், அத்தஹியாத்தில் இருப்பது போல், நிலையில் நிற்பது போல் தூங்கினால் உளூ நீங்காது. இது தவிர வேறு வழிகளில் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்கின்றனர். இமாம் அபூஹனீஃபா, தாவூத் ஆகியோர் இந்தக் கருத்துடையவர்கள்.
ஐந்தாவது கருத்து
ருகூவு, ஸஜ்தா ஆகிய நிலையில் தூங்கினால் தான் உளூ நீங்கும். வேறு எந்த வகையில் தூங்கினாலும் உளூ நீங்காது என்பது மற்றும் சிலரது கருத்து. இமாம் அஹ்மது பின் ஹம்பலின் மற்றொரு கருத்தாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறாவது கருத்து
ஸஜ்தாவில் தூங்கினால் மட்டும் உளூ நீங்கும். வேறு எந்த நிலையில் தூங்கினாலும் உளூ நீங்காது என்பது சிலரது கருத்தாகும். இது இமாம் அஹ்மது பின் ஹம்பலின் மற்றொரு கருத்தாகும்.
ஏழாவது கருத்து
தொழுகையில் தூங்கினால் உளூ நீங்காது. தொழுகைக்கு வெளியே தூங்கினால் உளூ நீங்கும் என்பது இன்னும் சிலரது கருத்தாகும். இது அபூஹனீஃபா அவர்களின் மற்றொரு கருத்தாகும்.
எட்டாவது கருத்து
பின் பாகம் தரையில் நன்றாக அழுத்தும் வகையில் உட்கார்ந்து கொண்டு தூங்கினால் உளூ நீங்காது. அவ்வாறு அமராமல் படுத்துக் கொண்டு உறங்கினால் உளூ நீங்கும் என்று சிலர் கருதுகின்றார்கள். இது இமாம் ஷாஃபி அவர்களின் கருத்தாகும்.
இவ்வாறு எட்டு விதமான கருத்துக்கள் உள்ளதாக இமாம் நவவீ அவர்கள் தமது ஷரஹ் முஸ்லிம் என்ற நூலில் எடுத்து எழுதுகின்றார்கள்.
இது தொடர்பாக முரண்பட்ட அறிவிப்புகள் வந்துள்ளதால் இத்தகைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. நாம் ஆராய்ந்த வகையில் எட்டு வகையான கருத்துகளிலும் பதில் சொல்ல முடியாத அளவுக்குக் கேள்விகள் எஞ்சி நிற்கின்றன. இவை அல்லாத ஒன்பதாவது கருத்தை நோக்கித் தான் நாம் செல்ல வேண்டியுள்ளது.
எனவே இது பற்றி விரிவாக நாம் ஆராய்வோம்.
மூன்றாவது கருத்துக்குரியவர்கள் தமது கருத்துக்கு ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் கூறவில்லை. அதிக தூக்கம், குறைந்த தூக்கம் என்பதற்கு எந்த அளவுகோலையும் இவர்கள் வைக்கவில்லை. உளூவை நீக்காது என்று கூறும் ஹதீஸ்களில் எவ்வளவு நேரம் தூங்கினார்கள் என்ற விபரம் ஏதும் கூறப்படவில்லை. எனவே இதை நாம் தள்ளுபடி செய்து விடலாம்.
நான்காவது கருத்துடையவர்கள் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி தமது வாதத்தை நிலைநாட்டுகின்றனர்.
ஸஜ்தா, ருகூவு, நிலை ஆகியவற்றில் தூங்கினால் நீ உளூச் செய்யத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் இப்னு அதீ அவர்களின் அல்காமில் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் மஹ்தீ பின் ஹிலால் என்பார் இடம் பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனப் பெயரெடுத்தவர்.
மற்றொரு அறிவிப்பாளராக உமர் பின் ஹாரூன் என்பார் இடம் பெறுகின்றார். இவரும் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர்.
மற்றொரு அறிவிப்பாளராக முகாதில் பின் சுலைமான் இடம் பெறுகின்றார். இவரும் பொய்யரென சந்தேகிக்கப் பட்டவர்.
இந்தக் கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ்களும் அடியோடு நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
மேலும் தொழுகைக்கு வெளியே தூங்கிய நபித்தோழர்கள் உளூச் செய்யாமல் தொழுதுள்ளனர் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அதற்கு இந்தக் கருத்து முரணாக அமைந்துள்ளது.
ஐந்தாவது கருத்து இதற்கு நேர் முரணாக உள்ளது. இவர்கள் தமது கருத்துக்குத் தக்க ஆதாரம் காட்டவில்லை. ருகூவு, ஸஜ்தா ஆகிய நிலைகளில் காற்றுப் பிரிய வாய்ப்பு அதிகம் என்பது தான் இவர்கள் காட்டுகின்ற ஆதாரம். இது ஏற்க முடியாததாகும்.
ஆறாவது கருத்தும் இதே காரணத்துக்காக தவறாகும்.
ஏழாவது கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.
முதல் கருத்து, இரண்டாவது கருத்து மற்றும் எட்டாவது கருத்து ஆகிய மூன்று கருத்துக்கள் தான் ஆய்வுக்கு எடுக்கத்தக்கவையாக உள்ளன.
முதல் கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஆய்வு செய்வோம்.
....நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்துகள் தொழுதார்கள். பின்னர் ஒருக்களித்துப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கினார்கள் - குறட்டை விட்டுத் தூங்குவது தான் அவர்களின் வழக்கம் - பிலால் (ரலி) அவர்கள் வந்து சுப்ஹ் தொழுகை பற்றி அவர்களுக்கு அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 138, 198, 769,859, 6316
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கியுள்ளனர். தூக்கம் உளூவை முறிக்கும் என்றால் அவர்கள் தூங்கி எழுந்து உளூச் செய்யாமல் தொழுதிருக்க மாட்டார்கள் என்பது முதலாவது கருத்துடையவர்களின் வாதம்.
மற்ற ஏழு கருத்துகளும் தவறானவை என்பதற்கு இந்த ஒரு செய்தியே போதுமானது என்ற அளவுக்கு இது தெளிவாக இருக்கின்றது. குறட்டை விட்டுத் தூங்கினாலே உளூ நீங்காது என்றால் சாதாரண தூக்கம் உளூவை நீக்காது என்பதில் ஐயமில்லை.
ஆனாலும் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதற்கு ஆதாரம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூக்கம் மற்றவர்களின் தூக்கத்திலிருந்து வேறுபட்டதாகும். அவர்கள் தூங்கினாலும் கண்கள் தான் தூங்குமே தவிர உள்ளம் உறங்காது. மற்றவர்கள் தூங்கும் போது உள்ளமும் கண்களும் சேர்ந்து தூங்கும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்கும் போது காற்றுப் பிரிதல் போன்ற ஏதும் ஏற்பட்டால் அதை அவர்களால் அறிய முடியும். மற்றவர்களால் அதை அறிய முடியாது என்பது தான் அந்த ஆதாரம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்கள் தான் உறங்கும். உள்ளம் உறங்காது என்பதை புகாரி 7281வது ஹதீஸில் காணலாம்.
இது ஏற்கத்தக்க காரணமாக உள்ளதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்கி விட்டு உளூச் செய்யாமல் தொழுததை அனைவருக்கும் பொதுவானதாக எடுத்துக் கொள்ள முடியாது. என்பது ஏற்கத்தக்க வாதம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே இந்த ஹதீஸை பொதுவான ஆதாரமாகக் கருதாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்பான தகுதி என்று கருதி அதை விட்டு விடுவோம்.
இதைத் தவிர வேறு ஆதாரங்களும் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் தூங்கி விட்டு உளூச் செய்யாமலேயே தொழுவார்கள்.
முஸ்லிம் 566
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தோழர்கள் தூங்கும் வரை அந்த மனிதருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.
- முஸ்லிம் 565
நபித்தோழர்கள் (தூக்கத்தின் காரணமாக) தலைகள் தொங்கி விடும் அளவுக்கு இஷா தொழுகைக்காக காத்திருப்பார்கள். பின்னர் உளூச் செய்யாமல் தொழுவார்கள்.
- அபூதாவூத் 172
நான் எனது சிறிய தாயாரும் (நபிகள் நாயகத்தின் மனைவியுமான) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவு தங்கினேன். நபி (ஸல்) அவர்களின் இடது புறத்தில் நான் நின்று கொண்டேன். என் கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் தூங்கி வழியும் போது என் காது சோனையைப் பிடிப்பார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.
- முஸ்லிம் 1277
நபித்தோழர்கள் தொழுகைக்காக எழுப்பி விடப்படுவார்கள். அவர்களில் சிலரிடமிருந்து குறட்டை வெளிவருவதையும் நான் செவியுற்றுள்ளேன். அவர்கள் எழுந்து உளூச் செய்யாமல் தொழுவார்கள் என்று அனஸ் (ரலி) கூறுகின்றார்கள்.
- பைஹகீ, தாரகுத்னீ
இந்த ஹதீஸ்கள் யாவும் தூக்கத்தினால் உளூ நீங்காது என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றன. ஆனாலும் இந்தக் கருத்துக்கு எதிராக எந்த ஹதீசும் இல்லாவிட்டால் இந்தக் கருத்தே சரியானது என்று உறுதியான முடிவுக்கு வரமுடியும்.
காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நஸயீ 127, அஹ்மத் 17396, 17401, திர்மிதீ 89, 3458, 3459, இப்னுமாஜா 471)
மலஜலம் கழிப்பது எவ்வாறு உளூவை நீக்குமோ அவ்வாறே தூக்கமும் உளூவை நீக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ் மேலே நாம் சுட்டிக் காட்டிய ஹதீஸ்களுடன் முரண்படுகின்றது.
இரண்டு வகையான ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானதாக இருப்பதால் இரண்டையுமே இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இரண்டில் எதையும் நாம் நிராகரித்து விடக்கூடாது.
எவ்வாறு இரண்டையும் இணைப்பது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தான் இதில் அதிகமான அபிப்பிராயங்கள் தோன்றி விட்டன.
இவ்விரு வகையான ஹதீஸ்களையும் பார்க்கும் போது முதலாவது கருத்தும் இரண்டாவது கருத்தும் தவறானது என்பது தெளிவாகின்றது.
தூங்கினால் அறவே உளூ நீங்காது என்ற முதல் கருத்து கடைசியாக நாம் சுட்டிக் காட்டிய ஹதீஸை நிராகரிக்கின்றது.
எப்படித் தூங்கினாலும் உளூ நீங்கும் என்ற இரண்டாவது கருத்து ஆரம்பமாக நாம் சுட்டிக் காட்டிய அனைத்து ஹதீஸ்களையும் நிராகரிக்கின்றது.
எனவே முதல் இரண்டு கருத்துக்களும் தவறானவை என்பதில் ஐயமில்லை.
எட்டாவது கருத்துடையவர்கள் இரண்டு விதமான ஹதீஸ்களையும் இûனைத்து விளக்கம் கூறுவதால் முதல் இரண்டு கருத்துக்களை விட அது ஏற்புடையதாக இருக்கிறது.
காற்றுப் பிரிவதற்கு இடமளிக்காத வகையில் பின்புறத்தைத் தரையில் நன்றாக அழுந்தச் செய்து தூங்கினால் உளூ முறியாது. அதைத் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. அவ்வாறு இல்லாமல் உறங்கினால் உளூ நீங்கி விடும். அதைத் தான் கடைசியாக குறிப்பிட்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது என்று இந்தக் கருத்துடையவர்கள் விளக்கம் தந்து இரண்டு விதமான ஹதீஸ்களையும் ஏற்கின்றார்கள். இந்த விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும் இவ்வாறு விளங்குவதற்குத் தடையாக மற்றொரு ஹதீஸ் உள்ளது.
நபித்தோழர்கள் தொழுகைக்காக காத்திருப்பார்கள். அவர்களில் சிலர் படுத்துக் கொள்வார்கள். அவ்வாறு படுத்துக் கொள்பவர்களில் சிலர் உறங்கி விட்டு எழுந்து தொழுவார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(நூல்: பஸ்ஸார்)
இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும்.
அதாவது நபித்தோழர்களில் சிலர் உட்கார்ந்து தூங்கினாலும் வேறு சிலர் படுத்துத் தூங்கியுள்ளனர். அவ்வாறிருந்தும் உளூச் செய்யாமல் தொழுதுள்ளனர். எனவே உட்காரும் முறையை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தருவது ஏற்க முடியாததாகி விடுகின்றது.
பஸ்ஸாரில் இடம் பெற்ற இந்த மூன்றாவது ஹதீஸையும் மற்ற ஹதீஸ்களையும் ஏற்கும் வகையில் தான் இதற்கு விளக்கம் கூறவேண்டும்.
திட்டமிட்டு தூங்கினால் உளூ நீங்கும். அவ்வாறு இல்லாமல் வேறு வேலையை, தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போது தூக்கம் வந்து விட்டால் உளூ நீங்காது என்ற கருத்தைக் கொடுத்தால் மூன்று ஹதீஸ்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகின்றன.
நபித்தோழர்கள் பள்ளிவாசல்களில் படுத்துத் தூங்கினாலும், உட்கார்ந்து கொண்டு தூங்கினாலும் அவர்கள் தூங்குவதற்காக அங்கே வரவில்லை. தொழத் தான் வந்தனர். வந்த இடத்தில் அவர்களையும் அறியாமல் தூக்கம் மேலிட்டு விட்டது. எனவே தான் உளூ நீங்கவில்லை.
இந்தக் கருத்தை யாரும் சொல்லாவிட்டாலும் இது தான் பொருத்தமானதாக நமக்குத் தோன்றுகின்றது. எட்டாவது கருத்தைத் தான் ஹதீஸைப் பின்பற்றும் அறிஞர்கள் ஆதரிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பஸ்ஸார் நூலில் இடம் பெறும் ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கு எந்த விளக்கமும் தராமல் நழுவுகின்றனர். இதுவே இவர்களின் முடிவு போதிய கவனமின்றி எடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக உள்ளது.
நாம் கூறும் கருத்து மேலே நாம் சுட்டிக் காட்டிய மூன்று வகையான ஹதீஸ்களையும் ஒருங்கிணைப்பதாக அமைந்துள்ளது.
எனவே மேற்கண்ட எட்டுக் கருத்துக்களுமே தவறானவையாகத் தான் தெரிகின்றன.
திட்டமிட்டுத் தூங்காமல், நம்மை அறியாமல் தூங்கினால் படுத்துத் தூங்கினாலும், உட்கார்ந்து தூங்கினாலும் தொழுகைக்கு வெளியே தூங்கினாலும், அதிக நேரம் தூங்கினாலும், குறைந்த அளவு தூங்கினாலும் உளூ நீங்காது.
தூங்குவதற்கு முடிவு செய்து தூங்கினால் உளூ நீங்கும் என்று முடிவு செய்வதே ஏற்புடையதாக நமக்குத் தோன்றுகிறது.
உளூவை நீக்கும் மற்ற காரியங்களை அடுத்த இதழில் காணலாம்.

(EGATHUVAM JUNE 2004)