Jan 19, 2017

அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அர்ஷ் என்றால் என்ன?

அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அர்ஷ் என்றால் என்ன?
அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷின் இருக்கிறான்.

அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான். துரும்பிலும் இருக்கின்றான் என்று நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.

அர்ஷ் என்பது அவனுடைய பிரம்மாண்டமான ஆசனமாகும்.

எல்லாம் வல்ல ஏகஇறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் இருக்கை அர்ஷ் எனப்படும். இது வானங்களையும்பூமியையும் விட மிகவும் பிரம்மாண்டமானது. இறைவன் அர்ஷின் மீது வீற்றிருக்கிறான் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

அவனது ஆசனம் வானங்களையும்பூமியையும் உள்ளடக்கும். 
(அல்குர்ஆன் 2:255)

அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். 

(அல்குர்ஆன் 69:17)