Jan 19, 2017

அல்லாஹ்வின் இலக்கணம்

அல்லாஹ்வின் இலக்கணம்
'அல்லாஹ்என்ற சொல் அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் சர்வ அதிகாரமும்வல்லமையும் படைத்த ஏகஇறைவனை மட்டுமே குறிக்கும் அரபுமொழிச் சொல்லாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே இச்சொல்லை அரபுகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வணங்கி வந்த சிலைகளை வேறு வார்த்தைகளில் தான் குறிப்பிட்டார்களே தவிர அல்லாஹ் எனக் கூறியதில்லை.

அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் ஒரே கடவுள் இருக்கிறான்அவன் தான் அல்லாஹ். மற்ற தெய்வங்கள் யாவும் அல்லாஹ்விடம் பெற்றுத்தரும் குட்டி தெய்வங்கள் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
  • அல்லாஹ்வுக்கு மனைவியும்மக்களும் இல்லை.
  • அல்லாஹ்வுக்கு பெற்றோர் இல்லைஅதனால் உடன் பிறப்புக்களும் இல்லை.
  • அல்லாஹ்வுக்கு இயலாதது எதுவும் இல்லை.
  • அல்லாஹ்வுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை.
  • தூக்கம்மறதிஅசதிகளைப்புபசிதாகம்இயற்கை உபாதைமுதுமைநோய் என எந்த விதமான பலவீனமும் அல்லாஹ்வுக்கு இல்லை.
  • எந்த விதமான தேவையும் அவனுக்கு அறவே இல்லை.

இத்தகைய இலக்கணங்கள் யாவும் ஒருங்கே கொண்டிருப்பவன் தான் அல்லாஹ். 

அல்லாஹ் ஒருவனே
 ‘அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ்.  அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்
(அல் குர்ஆன் 6:102)

அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை) வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்” என்று கூறுவீராக!
(அல் குர்ஆன் 17:42)