ஷியாக்கள் ஓர் ஆய்வு 11
- நபிமார்களை இழிவுபடுத்துதல்
அபூஉஸாமா
அல்லாஹ்வுக்கு அறியாமையைக்
கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின்
கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும்
மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம்.
அல்லாஹ்விடமும் அவனது
மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல்
இருப்பார்களா? நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின்
தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க
சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம்.
அல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில்
உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில்
உள்ளவர்களிடமும் காண்பித்தான். அதைச் சிலர் ஒப்புக் கொண்டனர்; சிலர் மறுத்தனர். யூனுஸ் நபி அதை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவர் அதை ஒப்புக் கொள்கின்ற வரை அவரை
அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்து விட்டான்.
நூல்: பஸாயிருத் தரஜாத்
ஷியாக்களின் திமிரை, தீவிர இறை மறுப்பை இங்கே தெளிவாகக் காணலாம்.
இறைக் கோபமும் சிறை வாசமும்
அல்லாஹ், தனது தூதர்
யூனுஸ் அவர்களை எதற்காக மீன் வயிற்றில் சிறை வைத்தான்? அதைத் திருக்குர்ஆனிலிருந்து பார்ப்போம்.
எல்லா இறைத் தூதர்களையும் போலவே யூனுஸ் நபி தமது
சமுதாயத்தாரிடம் சத்தியத்தைப் போதிக்கிறார்கள். மக்கள் சத்தியத்தை ஏற்றுக்
கொள்ளவில்லை.
எனவே அந்தச் சமுதாயத்தின் மீது வேதனை நிச்சயமானது.
இறை வேதனை வரும் போது இறைத் தூதர்கள் அந்த ஊரை விட்டும் வெளியேறி விடுவர்.
அந்த அடிப்படையில் யூனுஸ் நபியும் வெளியேறி விடுகின்றார்.
ஆனால் அந்தச் சமுதாயத்தினர் வேதனை வருமுன் திருந்தி
விட்டனர். உலக வரலாற்றில் வேதனை வரு முன் இவ்வாறு திருந்திய சமுதாயம்
யூனுஸ் நபியின் சமுதாயம் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். இதை
அல்லாஹ் திருக்குர்ஆனில் வெகுவாகப் பாராட்டிச் சொல்கிறான்.
(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும்
நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.
அல்குர்ஆன் 10:98
தமது பிரச்சாரத்தை ஏற்காத மக்கள் அழிந்து
போயிருப்பார்கள் என்று எதிர்பார்த்துவந்த யூனுஸ் நபிக்கு அதிர்ச்சியே
காத்திருந்தது. வேரறுந்த மரங்களாக வீழ்ந்து கிடப்பார்கள் என்று எண்ணியிருந்த
யூனுஸ் நபியின் கண் முன்னால் சீராக, சிறந்த
மக்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே கோபம்
கொண்டார்கள்.
அதனால் அங்கிருந்து வெளியேறினார்கள். கடலை நோக்கிச்
சென்று கப்பலில்பயணமாகின்றார்கள். இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.
யூனுஸ் தூதர்களில் ஒருவர். நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி
விட்டார்.இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள்
உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச்
செய்தோம். அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக
அனுப்பினோம். அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை
அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.
அல்குர்ஆன் 37:139-148
தன்னிடமே கோபம் கொண்டு சென்ற யூனுஸ் மீது
அல்லாஹ் கொண்ட கோபத்தைப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம்
சக்தி பெறமாட்டோம்' என்று
நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை. நீ தூயவன்.
நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்றுஇருள்களிலிருந்து அவர் அழைத்தார்.
அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து
அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
அல்குர்ஆன் 21:87. 88
யூனுஸ் நபி அனுபவித்த சிறைவாசம், மேன்மையும் மேலாண்மையும் மிக்க அல்லாஹ்வின் மீது அவர் கொண்ட கோபத்தினால் தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச்
சொல்கின்றது. ஆனால் இந்த ஷியா விஷமோ அலீயின் விலாயத்தை யூனுஸ் நபி ஏற்க
மறுத்ததால் தான் என்று கூறுகின்றது. இது அப்பட்டமான இறை
மறுப்பில்லையா?
இது ஒரு புறம் என்றால், இவ்வாறு கூறுவதன் மூலம் யூனுஸ் நபியை விட அலீ (ரலி) அவர்களை உயர்த்திக் காட்டி இறை மறுப்பின்
உச்சக்கட்டத்திற்குச் செல்கிறதுஷியாயிஸம்.
தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?
அலீ (ரலி) அவர்களை இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்துவதுடன்
இவர்கள்நிற்கவில்லை. தங்களது பன்னிரெண்டு இமாம்களையும் இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்தி மகிழ்கின்றார்கள்.
யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:
நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா
ஜமாஅத்தினர் சகிதமாகஅமர்ந்திருந்தோம். அப்போது அவர், "ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, "உளவாளி யாரும் இல்லையே!'' என்று சொன்னோம். அதற்கு அவர், "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின்
நாயன் மீதுஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால்இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என
தெரிவித்திருப்பேன்.இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன்.
ஏனெனில்மூஸாவும், கிழ்ரும்
நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமேஅளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவைபற்றிய ஞானம்
அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.
கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:
"வானங்கள், பூமியில்
உள்ளவற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும்,நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.
நூல்: அல்காஃபி ஃபில் உசூல்
பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்
"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில்
இருந்திருந்தால் இவ்விருவரை விட நான்தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார்.இதிலிருந்து
ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
யூனுஸ் நபியை விட அலீ உயர்ந்தவர் என்று கூறிய ஷியாக்கள், ஒரு படி மேலே சென்று மூஸா, கிழ்ர்
ஆகியோரை விட தங்கள் இமாம்கள் மேலானவர்கள் என்று தூக்கி நிறுத்துகின்றார்கள்.
இங்கு இவர்களது நெஞ்சழுத்தத்தையும், இறை மறுப்பின் ஆழத்தையும் நாம் உணரலாம்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் மிக மிகத் தன்னடக்கத்துடன், தம்மை
மூஸாவுடன் மட்டுமல்ல, யூனுஸ்
நபியை விடவும் உயர்த்தக் கூடாது என்றுகட்டளையிடுகின்றார்கள்.
யூனுஸ் நபி
அல்லாஹ்வின் முடிவில் கோபம் கொண்டதால், அவரைப்
போன்று ஆகி விடாதீர் என்று முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ்
எச்சரிக்கின்றான்.
உமது இறைவனின் தீர்ப்புக்காகப்
பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்!
அல்குர்ஆன் 68:48
அல்லாஹ்வின் மீது கோபம்
கொண்டது யூனுஸ் நபிக்கு ஒரு குறை! இந்தக் குறை அவர்களுக்கு ஏற்பட்டதால் மக்கள் அவரைக் குறைவாக எண்ணி விடக் கூடாது
என்பதற்காகவும், இதை வைத்துக் கொண்டு தம்மை யூனுஸ் நபியை விட
உயர்த்தி விடக் கூடாது என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் இந்த
முன்னெச்சரிக்கையைவிடுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச்
சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3415, முஸ்லிம் 4376
இறைத் தூதர்களுக்கு இடையில் ஏற்றத் தாழ்வு காட்டுவதை
கடுமையாகக் கண்டிக்கும் நபி (ஸல்) அவர்கள், மூஸா
நபியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் மரியாதையையும் மாண்பையும்
நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மறுமை நாளில் அனைவரும் மூர்ச்சையாகி எழும் போது மூஸா நபியவர்கள் அர்ஷைப்
பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.
இப்படிப்பட்ட மூஸா நபியவர்களைத் தான் இந்த ஷியா
விஷக் கிருமிகள், தங்கள்
பன்னிரெண்டு இமாம்களை விட உயர்த்திக் கூறுகின்றார்கள்.
ஐம்பது நேரத் தொழுகைகளை ஐந்து நேரமாகக் குறைப்பதற்குக்
காரணமாக இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது
போல் இந்த இறை மறுப்பாளர்களுக்கு எங்கே மூஸா நபியின் அருமை புரியப்
போகின்றது.
இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா மூஸா
நபியவர்களால் இந்தச் சமுதாயத்திற்கு விளைந்த அருட்கொடை விளங்கும்? இவர்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதால் இவர்களுக்கு இது விளங்கப் போவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் யூனுஸ் நபியை விடவும் தம்மை உயர்த்தாதீர்கள்
என்றுகூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஷியா பாவிகளோ இந்தக் கட்டளையைப்
புறந்தள்ளிவிட்டு அலீ (ரலி) அவர்களை யூனுஸ் நபியை விடவும் உயர்த்துகின்றார்கள். தங்கள் இமாம்களை மூஸா, கிழ்ரை
விடவும் உயர்த்துகின்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் முஹம்மது (ஸல்) அவர்களை விடவும்
அலீயை உயர்த்துகின்றார்கள். அதை இப்போது பார்ப்போம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM NOV 2008
EGATHUVAM NOV 2008