இணை கற்பித்தல் தொடர்: 34 - அல்லாஹ்வும் அவ்லியாவும் ஒன்றா?
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களுக்கு முன்பிருந்த
சமுதா யங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப் பட்டவர்கள்
இருந்துள்ளார்கள். என் சமுதாயத்தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.
நூல்: முஸ்லிம் 4769
பின்னால் நடக்கக் கூடியதை முன் கூட்டியே
அறிவிப்பதெல்லாம் நபிமார்களோடு முடிந்து விட்டது. இந்த உம்மத்தில் யாருக்கும்
அவ்வாறு கிடையாது. இதை இறைவன் தந்த அருட்கொடை என்று கூடச் சொல்லலாம்.
இந்தச் செய்தியை மையமாக வைத்து உமர் (ரலி) அவர்கள் சம்பந்தமாக ஒரு செய்தியையும்
சொல்வார்கள்.
உமர் (ரலி) அவர்கள் மதினாவில் உரையாற்றிக்
கொண்டிருக்கும் போது, ஈரான் நாட்டிற்குப் போருக்காக அனுப்பியிருந்த
படை யின் தளபதி ஸாரியா மற்றும் அவரது படையினரை அந்த மலையின் பின் பகுதியில்
இருந்து ஒரு படை தாக்க வருவதை மதினாவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே பார்த்தார்கள். உடனே உமர் (ரலி)
அவர்கள் ஸாரியா! ஸாரியா! என்று சப்தமிட்டார்கள். மக்களெல்லாம்
ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களிடத்தில் இதைப்பற்றி எதுவும்
கேட்கவில்லை. பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து ஸாரியாவும் அவரது படையினரும் போரை
முடித்து விட்டு திரும்பி வந்த பிறகு மக்கள் அவரிடம் சென்று விசாரித்து தெரிந்து
கொண்டார்கள்.
இப்படி ஒரு செய்தியைக் கூறி உமர் (ரலி)
அவர்களுக்கு மறைவான ஞானத்தை அல்லாஹ் வழங்கி சிறப்பித்திருப்பதாகவும் கூறுவார்கள்.
மேற்கண்ட செய்தி பலவீன மானதாகும். இந்தச்
செய்தி தலாயிலுந் நுபுவ்வத் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் அய்யூப் பின்
ஹூத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் புகாரி, நஸாயி, அபூஹாத்தம், பைஹகீ, அஹ்மது இப்னு
ஹம்பல், தாரகுத்னி, அபூதாவூத் ஆகிய அறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.
மேலும் இதே செய்தியை லைஸ் என்பவர் அம்ரு இப்னு
ஹாரிஸ் வழியாக அறிவிக்கிறார். ஆனால் இவர்கள் இவருடைக்குமிடையில் சுமார் 124 வருடங்கள் இடைவெளி இருக்கின்றது. இத்தனை வருடங்கள் இடைவெளி
இருக்கும் போது இவர்கள் இருவரும் சந்திப்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. ஒரே
காலத்தில் வாழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.
எனவே இந்தச் செய்தியும் பலவீனமானது. இதை
ஏற்றுக் கொள்ள முடியாது.
அடுத்ததாக, அவ்லியாக்களுக்கு சக்தி உண்டு என்பதற்கு இன்னொரு ஹதீஸையும் ஆதாரமாகக்
காட்டுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக்
கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கüல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என்
அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வ தில்லை. என் அடியான் கூடுதலான
(நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில்
அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற
செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம்
கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம்
நான் அவனுக்குப் பாதுகாப்பு அüப்பேன். ஓர்
இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செய-லும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ
மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை
வெறுக்கிறேன்.
நூல்: புகாரி 6502
இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா! நபிமார்களுக்கு இல்லாத அற்புதத்தை அல்லாஹ்
அவ்லியாக்களுக்கு வழங்கியிருக் கிறான். அவ்லியாவுடைய கண் என்பது அல்லாஹ்வுடைய கண்ணாகும்.
அப்படியென்றால் அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்ப்பதைப் போன்று அவ்லியா
பார்ப்பார். அவ்லியாவுடைய காது என்பது அல்லாஹ்வுடைய காதாகும். அப்படியானால்
அல்லாஹ் ஒரே நேரத்தில் அத்தனை பேச்சையும் கேட்பதைப் போன்று அவ்லியாவும் கேட்பார்
என்று சொல்வார்கள்.
அப்துல் காதர் ஜீலானி, சாகுல் ஹமீது பாதுஷா, உட்பட அத்தனை அவ்லியாக்களுமே அல்லாஹ் பார்ப்பதைப் போன்று
பார்ப்பார்கள். அல்லாஹ் கேட்பதைப் போன்று கேட்பார்கள். அவர்கள் பிடித்தால் அது
அவ்லியாக்களுடைய கை கிடையாது. அல்லாஹ்வுடைய கையாகும் என்று சொல்லி மக்களை வழிகெடுப்பதைப்
பார்க்கலாம்.
நாம் இதற்கு முன் வைத்த எந்த ஆதாரத்தையும்
கவனிக்க மாட்டார்கள். இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து வாதித்துக்
கொண்டிருப்பார்கள்.
இந்த ஹதீஸை நாம் அதில் சொல்லப்பட்டதைப் போன்று
நேரடியாகத்தான் புரிந்து கொள்வதா?
நம்முடைய கை அல்லாஹ்வுடைய கையாக மாறுமா? நம்முடைய காது அல்லாஹ்வுடைய காதாக மாறுமா? நம்முடைய பார்வையாக அல்லாஹ் ஆகுவானா? அப்படி ஆகியிருந்தால் அவ்லியாக்கள் என்று சொல்லப் பட்டவர்களுக்கு மரணம்
வந்திருக்குமா? அப்படியானால் இறந்த பிறகு புதைக்கப்பட்டது
அல்லாஹ்வா?
இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று
சொல்கி றார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும், அல்லாஹ்வின் தன்மை பெற்றவர்கள் என்றும் தானே சொல்கிறார்கள்.
அப்படியானால் அவர்கள் ஏன் மரணித்தார்கள்? இப்போதும் அவர்கள் உயிருடன் பூமியில் சுற்றித் திரிய வேண்டியது தானே! ஏன்
அத்தனை அவ்லியாக்களும் சாதாரண ஒரு மனிதன் இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதைப்
போன்று மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்?
அதுமட்டுமல்லாமல், அவர்கள் இறந்த பிறகு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் அவ்லியாக்களுக்கு வாரிசு (பிள்ளைகள்) இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு
சொத்துக்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கு மனைவியும் இருந்திருக்கிறார்கள்
என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இறந்து போனது அல்லாஹ்வா?
இந்த ஹதீஸைப் புரிந்து கொள்வதில் தான் பிரச்சனை
இருக்கிறது. சாதாரண மனிதனுடைய பேச்சாக இருந்தாலும், அல்லாஹ் வுடைய பேச்சாக இருந்தாலும் இலக்கியமாக - உவமையாகச் சொல் வது என்பது
ஒருவகை இருக்கிறது. நேரடியாகப் புரிந்து கொள்வது என்றும் ஒருவகை இருக்கின்றது.
எது நேரடியாகச் சொல்லப்பட்டிருக் கிறதோ அதை
நேரடியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். எது உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை
உவமையாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித வழக்கில், ஒருவரை இவன் சிங்கம் என்று சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவன் சிங்கம் என்று
எடுத்துக் கொள்வோமா? கிடையாது. அவன் சிங்கத்தைப் போன்ற வீரம் -
வலிமை உடையவன். சுறுசுறுப்பு உடையவன் என்றுதான் நாம் விளங்கிக் கொள்வோம். இதை நாம்
நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடாது. உவமையாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதே போன்று, நாம் நம்முடைய மனைவியை என் கண்ணே, கண்மணியே என்று கொஞ்சுவோம். அதற்காக அவளுடைய கண்ணாக நம் கண் ஆகிவிடுமா?
இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம்? என்னுடைய கண்ணை நான் எவ்வாறு முக்கியமாகக் கருதுகின்றேனோ? அதைப் போன்று நீயும் எனக்கு முக்கியம் என்று தான் புரிந்து
கொள்வோம்.
இதுபோன்று, நம்முடைய பேச்சு வழக்கில் உள்ள ஒன்று தான், நாம் ஒருவரை இவர் இன்னாரின் வலது கையாகச் செயல்படுகிறார் என்று சொல்வதாகும்.
உண்மையில் அவர் அவரின் வலது கையா? அவருக்கு என்ன
வலது கை இல்லாமலா இருக்கிறது?
இதை நாம் எப்படி விளங்கிக் கொள்வோம். நாம் நமது
பெரும் பாலான காரியத்தை வலது கை மூலமாகத்தான் நிறைவேற்றுகின்றோம். எவ்வாறு நமக்கு
வலது கை முக்கியமானதாக இருக்கின்றதோ அதை போன்று அந்த மனிதரும் வலது கையாகச்
செயல்படுகிறார் என்று தான் நாம் புரிந்து கொள்வோம்.
இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகத்தைத் தான்
அல்லாஹ்வும் பயன்படுத்துகின்றான். அவ்வாறுதான் மேற்கண்ட ஹதீஸையும் நாம் விளங்கிக்
கொள்ள வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM OCT 2015