ஸைபுத்தீன் ராபிளிக்கு மந்திரிகளே முன்மாதிரி
அல்லாஹ்வின் அருளால் நெல்லை மாவட்டம் மேலப்
பாளையத்தில் கடந்த மே 31 அன்று நடைபெற்ற ஹதீஸ் மாநாடு மாபெரும் வரலாறு
படைத்தது. ஜின்னா திடல் இதுவரை கண்டிராத மக்கள் கடலைச் சந்தித்தது.
இதே இடத்தில் இரண்டு மாநாடுகளை பரேலவிகள்
கூட்டம் நடத்தியது. இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் செய்து, பிரியாணி பொட்டலங்கள் வினியோகம் செய்து பேருக்கு ஒரு
கூட்டம் கூடியதே தவிர சொல்லும்படியான கூட்டம் கூடவில்லை. வழக்கமாக அவர்கள்
நடத்தும் மாநாடுகளில் பொய்யர்களின் தலைவன் ஸைபுத்தீன் ரஷாதி தான் பிரதான
கதாநாயகன்.
அவர்களது முதல் கூட்டம் நடைபெற்ற போது நமது
ஜமாஅத்திலிருந்து அப்பாஸ் அலீ என்பவர் விலை போய் வெளியேறிய சமயம். இதைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்டு, "தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து
ஆலிம்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்; இன்னும் ஆலிம்களில் ஒரு கூட்டம் வெளியேறக் காத்துக்
கொண்டிருக் கின்றது' என்று ஸைபுத்தீன் ராபிளி கதையளந்தார்; காதில் பூச்சுற்றினார்.
இதற்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக, "என்னைக் கவர்ந்த ஏகத்துவம்' என்ற தலைப்பில் ஆலிம்களின் சங்கமம் நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
அத்துடன் அம்மாநாட்டில் ஸைபுத்தீன் ராபிளி
வைத்த வாதங்களுக்கு அவரை விடவும் அனுபவத்திலும் வயதிலும் இளைஞரான, இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் அப்துல் கரீம்
எம்.ஐ.எஸ்.சி. பதிலடி கொடுத்தார்.
தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு ஆலிம்கள் வெளியேறிக்
கொண்டி ருக்கின்றார்கள் என்று ஸைபுத்தீன் ராபிளி சொன்ன பொய்யைத் தவிடுபொடியாக்கும்
வகையில், இதோ இத்தனை ஆலிம்கள் சத்தியத்தில்
சங்கமித்திருக்கிறார்கள்; இன்னும் ஆலிம்கள் வந்து கொண்டிருக் கிறார்கள்
என்று பதிலடி கொடுத்தோம். ஆலிம்களின் இந்த சங்கம நிகழ்ச்சி, தவ்ஹீதுக் கொள்கையின் வளர்ச்சியை யும் எழுச்சியையும்
தமிழகமெங்கும் பறைசாற்றியது. இதற்குப் பரேலவிகளின் அசத்தியக் கூடாரத்திலிருந்து
எந்தப் பதிலும் வரவில்லை.
இக்கால கட்டத்திலும் இதற்கு முன்னரும் தவ்ஹீத்
ஜமாஅத்தினர் ஹதீஸ் மறுப்புக் கொள்கை யுடையவர்கள் என்ற குற்றச்சாட்டை நமது எதிரிகள்
சொல்லி வருகின் றார்கள். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஹதீஸின் பெயரிலேயே ஒரு மாநாட்டை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
உண்மையில் இந்த ஹதீஸ் மாநாடு தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். மேலப்பாளையம்
ஜின்னா திடல் இப்படி ஒரு மக்கள் கடலைச் சந்திக்கவில்லை எனுமள வுக்கு மக்கள்
எழுச்சியுடன் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இதைப் பொறுக்க முடியாத பரேலவிகள் கூட்டம் பஜார்
திடலில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. வழக்கமாக ஸைபுத்தீன் ராபிளி
கலந்து கொண்டு, பி.ஜே.வைக் கரித்துக் கொட்டினார்; வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார்.
ஏற்கனவே இவர் பேசும் போது, தவ்ஹீத் ஜமாஅத்தினர் நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டி, சோளக்காட்டுப் பொம்மை போல் நிற்கிறார்கள் என்று
கிண்டலடித்துப் பேசினார்.
இதற்கு ஹதீஸ் மாநாட்டில் பதிலளித்துப் பேசிய
மவ்லவி ஷம்சுல்லுஹா, "நெஞ்சுக்கு மேல் தக்பீர்
கட்டுவது பலவீனமான ஹதீஸ் என்றே வைத்துக் கொள்வோம்; உங்கள் வாதப்படி பலவீனமான ஹதீஸ் அடிப்படையில் அமல் செய்யலாம் அல்லவா? அதன்படி நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டும் ஹதீஸைச்
செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, அதைக் கிண்டல் செய்யலாமா? இது ஹதீஸ்
மறுப்பை விட மோசமான செயல் அல்லவா?'' என்று கேள்வி
எழுப்பினார்.
இதற்கு ஸைபுத்தீன் ராபிளியின் பதிலைப்
பாருங்கள்:
தொப்புளுக்குக் கீழ் கட்டுவதில் தான் அதிக
மரியாதை என்பதற்கு ஒரு ஆதாரம் சொல்லவா? ஜெயலலிதாவுக்கு முன்னால் மந்திரிகள் நிற்பார்கள் பாருங்கள். முதலமைச்சருக்கு
முன்னால் அமைச்சர்கள் எல்லாரும் நெஞ்சில் கையைக் கட்டிக் கொண்டா நிற்கிறார்கள்? தொப்புளுக்குக் கீழ் கட்டிக் கொண்டு தான் நிற்பார்கள். ஏன்? மரியாதைக்காக அப்படி நிற்கிறான். அது ஒரு பண்பு; ஒரு வெளிப்பாடு!
இதுதான் தொப்புளுக்குக் கீழ் தக்பீர்
கட்டுவதற்கு ஸைபுத்தீன் ராபிளி எடுத்து வைக்கும் மிகப் பெரிய ஆதாரம்(?).
இவர் தன்னுடைய பேச்சு முழுவதிலும், ஹதீஸைக் கிண்டலடிக்க வில்லை என்று கூறிக்கொண்டே, தான் அடித்த கிண்டலைக் கடைசி வரைக்கும் நியாயப்படுத்திப்
பேசுகின்றார்.
நெஞ்சுக்கு மேல், கீழ், தொப்புளுக்குக் கீழ் தக்பீர் கட்டுகின்ற மூன்று
ஹதீஸ்களும் பலவீனம் என்றால் மூன்றையும் சம அளவில் பாவித்துச் செயல்படவேண்டும்.
அவ்வாறு செயல்படாமல் ஏதேனும் ஒன்றை விட்டாலும் அதைக் கேலி செய்யக்கூடாது.
ஆனால் இந்த உரையில் முன்பைவிட இன்னும் மோசமாகக்
கேலி செய்கின்றார். அதை நியாயப்படுத்துகின்றார். எல்லா வற்றிற்கும் மேலாக தனக்கு
யார் முன்மாதிரி என்பதையும் இந்த ராபிளி போட்டு உடைக்கின்றார்.
அசத்தியவாதிகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு
அல்லாஹ் ஏதாவது ஓர் அடையாளத்தை வைத்திருக்கின்றான். தஜ்ஜாலுக்கு வலது கண்ணைக்
குருடாக ஆக்கி, நெற்றியில் காஃபிர் என்ற வார்த்தையைப் பதிய
வைத்து அடையாளப்படுத்தியிருக்கிறான். அதுபோல் ஸைபுத்தீன் ராபிளிக்கு அல்லாஹ்
ஏற்படுத்தியுள்ள அடை யாளம் இதுபோன்ற உளறல்களாகும்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு முன்னால்
எப்படி கைகட்டி நிற்க வேண்டும் என்று ஒரு முறையைக் காட்டித் தந்து விட்டார்கள்.
இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
"நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும்
அவர்கள் இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன்'' என்று ஹுல்ப் அத்தாயீ (ரலி) அறிவிக்கிறார்.
யஹ்யா என்ற அறிவிப்பாளர் "இதைத் தமது
நெஞ்சின் மீது'' என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக்
காட்டினார்.
நூல்: முஸ்னத் அஹ்மத் 22610
தவ்ஹீத் ஜமாஅத் சொல்கின்றது; அதனால் அதை ஏற்க முடியாது என்று வீம்புக்கு மறுத்துவிட்டு, முதலமைச்சருக்கு முன்னால் மந்திரிகள் கைகட்டி நிற்பதை
மார்க்கத்திற்கு உதாரணமாகக் காட்டுகின்றார்கள்.
ஜெயலலிதா காலடியில் மந்திரிகள் நெடுஞ்சாண்
கிடையாகக் குப்புற விழுந்து வணங்குகின்றார்கள். பரேலவிகள் தங்கள் ஷைகுமார்களின்
காலடியில் விழுந்து வணங்குகின் றார்கள். இதற்கும் அதுதான் உதாரணமாக அமைந்துள்ளது.
அதாவது, பிற மதக் கலாச்சாரம் இவர்களின் வணக்க வழிபாடுகளுக்கு ஆதாரமாக உள்ளது என்பதற்கு
இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
பிறமதக் கலாச்சாரத்தை ஸைபுத்தீன் ராபிளி
வலுவாகக் கடைப்பிடித்து, தனக்கு முன்மாதிரி முஹம்மத் (ஸல்) அவர்கள்
இல்லை, மங்குனி அமைச்சர்கள் தான் என்பதை உறுதிப்
படுத்தியுள்ளார். இவர் வழிகேடர் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
மூளை வறட்சி! மூத்திரப் புரட்சி!
அண்மையில் ஒரு பலவீனமான ஹதீஸைக் காட்டி, "ஒரு நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் மூத்திரத்தைக்
குடித்தார்' என்று ஸைபுத்தீன் ராபிளி ஒரு சொற்பொழிவில்
பேசுகின்றார்.
மூத்திரம் அசுத்தம் என்று நபி (ஸல்) அவர்கள்
போதிக்கின்றார்கள். அதைக் கழுவ வேண்டும் என்றும் வழிகாட்டியிருக்கின்றார்கள்.
இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் எப்படி நடப்பார்கள் என்ற சிந்தனை கூட இந்த
ராபிளிக்கு இல்லை.
இப்படி மூத்திரத்தை நபித்தோழியர் குடித்தார்கள்
என்று ஒரு புரட்சி (?) கருத்தைச் சொல்லும் அளவுக்கு இவருக்கு மூளை
வறட்சி கண்டு விட்டது. இப்படி ஒரு பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொள்வது அப்துல்லாஹ்
ஜமாலி போன்ற கடைந்தெடுத்த பரேலவி களின் கூட்டம் தான்.
இதுபோன்ற ஹதீஸ்களை இவர் ஆதாரம் காட்டிப் பேச
ஆரம்பித்திலிருந்து இவரை ராபிளி என்று நாம் அழைப்பது எவ்வளவு பொருத்தமானது
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பலவீனமான மூத்திர ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒரு
மூத்திரப் புரட்சி படைத்தாலும் படைப்பேன். ஆனால் ஒரு வாதத்திற்குக் கூட நெஞ்சுக்கு
மேல் தக்பீர் கட்டும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட மாட்டேன்; அதைக் கிண்டலும் செய்வேன் என்று கூறுகின்றார் என்றால்
இவர்கள் எப்படிப்பட்ட ஹதீஸ் மறுப்பாளர்கள் என்பதை இதிலிருந்து நாம் தெளிவாகப்
புரிந்து கொள்ளலாம்.
EGATHUVAM AUG 2015