உடல் களைப்பைப் போக்கும் உன்னத மருந்து
ஃபாத்திமா (ரலி) அவர்கள் மாவு அரைக்கும் திருகையினால்
தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப் பட்டிருக்கின்றார்கள் எனும் செய்தி
ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு
பணியாளைக் கேட்கச் சென்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால்
அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே
ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் ஆயிஷா
(ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட
பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க
முயன்றோம். நபி (ஸல்) அவர்கள் “உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்” என்று கூறி விட்டு எங்களுக்கு இடையே அமர்ந்தார்கள். (அவர்களின்
பாதம் என் மீது பட்டதால்) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் இதயத்தில்
உணர்ந்தேன். பின்னர், “நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை
உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று முப்பத்து நான்கு தடவையும், “அல்ஹம்துலில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே” என்று முப்பத்து மூன்று தடவையும், ”சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்” என்று முப்பத்து மூன்று தடவையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் – அலீ (ரலி), நூல் – புகாரி 3113