Mar 8, 2017

தொழுது முடித்தவுடன்


தொழுது முடித்தவுடன்

அஸ்தஃக்பி[F]ருல்லாஹ்

(அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்) என்று மூன்று தடவை கூற வேண்டும்.

பின்னர்

அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபா[B]ரக்(த்)த தல் ஜலாலி வல் இக்ராம்

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :
இறைவா! நீயே சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும்,கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமிக்கவன்.
ஆதாரம்: முஸ்லிம் 931

அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் ஜுபு[B]னி வஅவூது பி[B](க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்னதித் துன்யா வஅவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி

இதன் பொருள் :
இறைவா! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். தள்ளாத வயது வரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ண றையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 2822

ரப்பி[B] கினீ அதாப[B](க்)க யவ்ம தப்[B]அஸு இபா[B]த(க்)க

இதன் பொருள் :
என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 1290