தொழுகை இருப்பில் ஓத வேண்டியது
அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா[B](த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபி[B]ய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வப[B]ரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபா[B]தில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்[B]துஹு வரஸுலுஹு
இதன் பொருள் :
எல்லாவிதமான கன்னியங்களும், தொழுகைகளும், நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும்
உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி
உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது (ஸல்)
அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தொழுகையில் ஓதும் ஸலவாத்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த
அலா இப்[B]ராஹீம, வஅலா ஆலி இப்[B]ராஹீம
இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக்
அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த
அலா இப்[B]ராஹீம
வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.
ஆதாரம்: புகாரி 3370
இதன் பொருள் :
இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின்
குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும்
அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன்.
மகத்துவமிக்கவன். இறைவா இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ
பாக்கியம் செய்தது போல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும்
பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.
இருப்பில் ஓதும் கடைசி துஆ
அத்தஹியாத், ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்கு பல துஆக்களை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதலாம்.
1. அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஹ்யா வபி[F]த்ன(த்)தில் மமாத். அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் மஃஸமி வல் மஃக்ரமி
இதன் பொருள் :
இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.
இறைவா! பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி 833
2. அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நப்[F]ஸீ ளுல்மன் கஸீரன் வலா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த, ப[F]க்பி[F]ர்லீ மஃக்பி[F]ரதன் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கபூ[F]ருர் ரஹீம்.
இதன் பொருள் :
இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத்
தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு
மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற
அன்புடையவன்.
ஆதாரம்: புகாரி 834, 6326, 7388
3. அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரப்[F](த்)து அன்(த்)த அஃலமு பி[B]ஹி மின்னீ அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த
இதன் பொருள் :
நான் முந்திச் செய்ததையும், பிந்திச்
செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச்
செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து
எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே
பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
ஆதாரம்: திர்மிதீ 3343