ஸஜ்தாவில் ஓத வேண்டியது
சுப்[B]ஹான ரப்பி[B]யல் அஃலா
ஆதாரம்: அஹ்மத் 3334
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ[B] குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு
இதன் பொருள் :
இறைவா! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும்,கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும்
மன்னிப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 745
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
அல்லாஹும்ம அவூது பி[B]ரிளா(க்)க மின் ஸகதி(க்)க வ பி[B]முஆபா[F](த்)தி(க்)க மின் உகூப[B](த்)தி(க்)க வஅவூது பி[B](க்)க மின்(க்)க லா உஹ்ஸீ ஸனாஅன் அலை(க்)க அன்(த்)த கமா அஸ்னை(த்)த அலா நப்[F]ஸி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத்
தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத்
தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து
கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.
ஆதாரம்: முஸ்லிம் 751
ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ
ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ
இதன் பொருள் :
அல்லாஹ்வே எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன். இறைவா! என்னை
மன்னித்து விடு.
ஆதாரம்: புகாரி 794, 817, 4293, 4968, 4967
இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில்
ரப்பிஃக்பி[F]ர்லீ ரப்பிஃக்பி[F]ர்லீ
இதன் பொருள் :
இறைவா என்னை மன்னித்து விடு! இறைவா என்னை மன்னித்து விடு!
ஆதாரம்: இப்னுமாஜா 887
இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டிய மற்றொரு துஆ
ரப்பிஃக்பி[F]ர்லீ வர்ஹம்னீ வஜ்பு[B]ர்னீ வர்ஸுக்னீ, வர்ப[F]ஃனீ
இதன் பொருள் :
இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை
நிவர்த்தி செய்வாயாக! எனக்கு உணவளிப்பாயாக! என்னை உயர்த்துவாயாக!
ஆதாரம்: இப்னுமாஜா 888