Mar 8, 2017

ருகூவு


ருகூவில் ஓத வேண்டியது
ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ

இதன் பொருள் :
இறைவா! என் எஜமானே நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். இறைவா என்னை மன்னித்து விடு.
ஆதாரம்: புகாரி 794, 817, 4293, 4698, 4697

அல்லது

ஸுப்[B]ஹான ரப்பி[B]யல் அளீம்.

இதன் பொருள் :
மகத்தான என் இறைவன் தூயவன்.
ஆதாரம்: அஹ்மத் 3334

ருகூவிலிருந்து எழுந்த பின்

அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவா(த்)தி வமில்அல் அர்ளி வமில்அ மாபை[B]னஹுமா வமில்அ மாஷிஃ(த்)த மின் ஷையின் ப[B]ஃது

இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும், மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு உனக்கே புகழனைத்தும்.

ருகூவிலிருந்து எழுந்த பின் மற்றொரு துஆ

ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: புகாரி 722, 733, 789