Mar 2, 2017

பரேலவிகளுக்கு தொழுகை ஒரு யோகாதான்

பரேலவிகளுக்கு தொழுகை ஒரு யோகாதான்
எம். ஷம்சுல்லுஹா
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப் படுத்தியதும் இதற்குக் காரணம்.
திருக்குர்ஆன் 7:146
இந்த வசனம் மிகவும் அழகாக பொருந்திப் போவது பரேலவி களுக்குத்தான்.
அல்லாஹ்விடம் நேரடியாக உதவி தேடுவது நேர்வழியாகும். இதை இவர்கள் நேர்வழியாக எடுத்துக் கொள்வதில்லை.
மாறாக அவ்லியாக்கள் இறந்த பிறகும் உயிருடன் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் வழியாக நாம் அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும் என்ற அறிவு கெட்ட, அர்த்தமற்ற வாதத்தை வைக்கிறார்கள்.
இது உண்மையில் வழிகேடான பாதையாகும். இதைத் தான் பரேலவிகள் தங்கள் வாழ்க்கைப் பாதையாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
இந்தப் பாதையின் மையப் புள்ளியாய் பரேலவிகள், ஷியாக்கள் மோடியுடன் இந்துத்துவா கொள்கையில் ஒன்றாகிறார்கள்; சங்கமிக்கின்றார்கள்.
அண்மையில் இந்துத்துவாவின் தலைவர் நரேந்திர மோடி அனைத்து பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும், யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தனது இந்துத்துவா திட்டத்தை வெளியிட்டிருந்தார்.
தனது இந்துத்துவா வழிபாட்டைச் செயல்படுத்துவதற்காக ஜூன் 21, 2015 யோகா தினம் என்று அவர் அறிவித்திருந்தார். சூரிய வணக்கம் என்பது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு வணக்கமாகும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனிலும் தெளிவாகத் தடை செய்கின்றான்.
இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திர னுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! (திருக்குர்ஆன் 41:37)
சூரியனை வணங்குவது ஒரு புறமிருக்கட்டும். சூரியனை ஒரு கூட்டம் வணங்கிக் கொண்டிருக் கின்றது. அவர்கள் வணங்குகின்ற அந்த நேரங்களில் அல்லாஹ்வைக் கூட தொழக் கூடாது. காரணம் அந்த நேரங்களில் முஸ்லிம்கள் அல்லாஹ் வைத் தொழுதாலும் மற்றவர்கள் பார்க்கும் போது, முஸ்லிம்கள் சூரியனை வணங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் நிழல் கூட மற்றவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக சூரியன் உதிக்கின்ற, மறைகின்ற, நேரங்களில் தொழக் கூடாது என்று மார்க்கம் தடை செய்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்பு களுக்கிடையே உதிக்கின்றது.
புகாரி 3273
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கüல் ஒருவர் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து தொழவேண்டாம்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி),
புகாரி 585
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(ஹதீஸின் ஒரு பகுதி) "சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்      வரை தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும்போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப் படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக் கொள்ளுங் கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர் வரைத் தொழுது கொள்க. பிறகு சூரியன் மறையும் வரைத் தொழுவதை நிறுத்தி விடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபசா (ரலி),
நூல்: முஸ்லிம் 1512
இஸ்லாம் இந்த அளவு சூரிய வணக்கத்தின் சாயல் முஸ்லிம்கள் மீது படியாமல் பார்த்துக் கொள்கின்றது. மோடி அரசு இந்த சூரிய வழிபாட்டைத் தான் சூட்சுமத்துடன் முஸ்லிம்கள் மீது திணிக்கப் பார்க்கின்றது.
இந்தச் சூரிய வழிபாட்டை வெறுமனே திணித்தால் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு இந்துத்துவா மோடி அதை யோகாவுடன் சேர்த்து திணிக்கின்றார்.
பள்ளிக் கூடங்களில் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுகள் என்ற அடிப்படையில் எத்தனையோ உடற்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இத்தனையையும் தாண்டி யோகா என்ற பெயரில் இப்படி உடற் பயிற்சியை அறிமுகப்படுத்துவதற்கு மோடி பரிவாரம் துடிப்பதற்குக் காரணம் என்ன? யோகாவில் தான் உடற்பயிற்சி என்ற பெயரில் சூரியனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு வணங்குதல் என்ற சூரிய வழிபாடு பிணைக்கப்பட்டுள்ளது.
அதனால் அந்த வடிவில் முஸ்லிம்களை வழிமாற்றம் செய்வதற்கு மிகப்பெரிய ஒரு சதிவலை இந்துத்துவா அரசால் பின்னப்பட்டுள்ளது.
இதற்கு யோகா என்று உடற்பயிற்சி முலாம் பூசப்பட்டுள்ளது. யோகா என்ற முகம் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி ஓர் அறிவிப்பு வெளியான மாத்திரத்தில் உடனே சுதாரித்துக் கொண்ட அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சூரிய வழிபாட்டையும் யோகாவையும் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக் குவதைக் கடுமையாக கண்டித்து கடந்த ஜூன் 8 அன்று அறிக்கை வெளியிட்டது.
நாடு முழுவதும் இதற்கு எதிரான பிரச்சாரத்தை மக்களிடத்தில் அது கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தது.
சூரிய வணக்கத்தை பள்ளிக் கூடங்களில் கட்டாயமாக்கக் கூடாது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்திக்கு முன்னாலும் தலை வணங்க மாட்டார்கள் என்று அதன் உறுப்பினர் கமால் ஃபரூக்கி தெரிவித்தார்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டம் வாரியத்திடம்  இலங்குகின்ற ஏகத்துவ உணர்வாகும் இது.
இப்படி ஏகத்துவ சிந்தனைகள் கொண்ட ஓர் இஸ்லாமியக் கூட்டம் இதை வன்மையாக எதிர்த்துக் கொண்டிருக்கையில் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகளில் சில குழுவினர், ஆயுர்வேத யோகா இணை அமைச்சர் சிரிபத் நாயக்கைச் சந்தித்து 21ஆம் தேதி நடைபெற்ற யோகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மஜ்லிஸ் உலமா ஹிந்த் (உத்தரபிரதேஷ்), ஜமாஅத் உலமா ஹிந்த் (டெல்லி), அனைத்து இந்தியா ஜமாஅத் -இ சல்மானி, ஜமாஅத் ஹூஃப்பாஸ்- இ கிராம், தாவூதி போரா கமிட்டி ஆகியோர் தான் இந்தக் குழுவினர்.
இந்தப் பெயர்களிலேயே இவர்கள் பக்கா பரேலவிகள், பகிரங்க ஷியாக்கள் என்பது நன்கு வெட்ட வெளிச்சமாகின்றது.
இந்த சன்னியாச சாமிகளான பரேலவி, ஷியாக்கள் மோடியின் இந்துத்துவா என்னும் கொள்கையில் சங்கமிக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு சங்கமிப்பதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
காரணம் மோடி கூட்டம் (கற்சிலைகளை) நட்ட வைத்து வணங்கும் கூட்டம். இவர்களோ படுக்க வைத்து வணங்கும் கூட்டம். அதனால் இந்த மையப்புள்ளியில் இவ்விரு சாராரும் ஒன்றாகச் சந்திக்கின்றனர்.
நேர்வழியைத் தங்கள் வழியாகக் காணாமல் வழிகேட்டைப் பாதையாக எடுத்துக் கொள்வார்கள் என்று எவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறானோ அந்த ரகத்தைச் சார்ந்தவர்கள் தான் இவர்கள்.
இந்த பரேலவிகள் அந்த பக்கம் இருக்க வேண்டியவர்கள். தப்பித் தவறி இந்தப் பக்கம் உட்கார்ந்து கொண்டு இஸ்லாத்தையும் முஸ்லிம் களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு ஈமானிய சிந்தனையோ, சமுதாய உணர்வோ அறவே கிடையாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
தமிழகத்தில் உள்ள அப்துல்லாஹ் ஜமாலி கூட்டம் இந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தொழுகை ஒரு யோகாவா?
ஈமானிய உணர்வுடன், ஏகத்துவ சிந்தனையுடன் அகில இந்திய தனியார் சட்ட வாரியம் மோடியின் இந்துத்துவா கொள்கைத் திணிப்பை எதிர்த்துக் களம் இறங்கும் வேளையில் இந்த பரேலவி - ஷியா கூட்டம், இஸ்லாமிய சமுதாயத்தைக் கலாச்சார ரீதியாக மாற்றத் துடிக்கும் மோடி கூட்டத்துடன் கைகோர்த்து நிற்பதன் மூலம் தாங்கள் யார் என்பதைத் தெளிவாக அடையாளப் படுத்தி உள்ளனர்.
அப்துல்லாஹ் ஜமாலி, ஸைபுத்தீன் ரஷாதி போன்றவர்கள் இந்த பரேலவிகள் படையைச் சார்ந்தவர்கள். சமுதாயம் இந்த ஆசாமிகளை இனியாவது தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பரேலவிகள் கொடுத்த தெம்பால் அமைச்சர் சிரிபத் நாயக், "தொழுகையில் கூட்டு யோகா நிலைகள் உள்ளன' என்று வாய்க்கு வந்தபடி விட்டு அடித்துள்ளார். முஸ்லிம்கள் மீது ஒரு கலாச்சார திணிப்பை நடத்துவதுடன் தொழுகையில் யோகா நிலைகள் உள்ளன என்ற திமிர் வாதத்தை அமைச்சர் பேசுகின்றார்.
தொழுகை என்பது முஸ்லிம் களுக்கு உடற்பயிற்சி கிடையாது. அல்லாஹ்வுக்குச் செலுத்துகின்ற தூய வணக்கமாகும். நெஞ்சுக்கு மேல் கை கட்டி நிற்றல், குனிதல், நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குதல் அனைத்தும் இறைவனுக்கு ஒரு முஸ்லிம் செய்கின்ற வணக்கமாகும். இது ஒரு போதும் யோகாவாகாது.
ஒரு முஸ்லிம் யோகா என்ற நினைப்பில் தொழுகையை நிறை வேற்றினால் அது தொழுகையாகாது.  ஏனென்றால் செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்று நபிகள் நாயகம் கூறிவிட்டார்கள்.
ஒரு முஸ்லிம் யோகா செய்வதாக நினைத்துத் தொழுகையை நிறை வேற்றினால் அது அவனது முகத்தில் தூக்கி வீசியெறிப்படும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது.
பரேலவிகள், ஷியாக்கள் போன்ற அறிவிலிகளைத் தவிர வேறு எந்த ஒரு முஸ்லிமும் தொழுகையை யோகாவாக நினைத்து செய்வதில்லை.
அமைச்சரின் இந்த விஷமக் கருத்துக்கு பரேலவி மற்றும் ஷியா வகையறாக்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போகிற போக்கில் இந்த பரேலவி, ஷியா வர்க்கம் வெளிப்படையாக அறிவித்து இந்துத்துவாவில் சங்கமம் ஆகிவிடுவார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
இஸ்லாமிய சமுதாயம், முஸ்லிம் பெயர்தாங்கிகளின் வலையில் விழுந்து விடாமல் இந்துத்துவா சக்திகளின் சதிகளை அடையாளங்கண்டு செயல்பட வேண்டும். யோகா என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது இந்துத்துவா திணிக்கும் சூரிய வணக்கத்திலிருந்து தங்கள் தலைமுறையினரைப் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
யோகாவை ஆஹா ஓஹோ என்று மோடிக்கூட்டம் புகழ்ந்து தள்ளு கின்றது. யோகா என்றால் என்ன? என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகின்றார்:
யோகா பயிற்சியின் அனைத்து நிலைகளையும் நாயின் உடல் இயக்கத்தின்போது காண முடியும். உதாரணமாக, நாய் படுக்கையி லிருந்து எழுந்ததும் முன்புற மற்றும் பின்புற கால்களை நீட்டி பெருமூச்சுவிடும். அதுபோன்ற பயிற்சி யோகாவில் உள்ளது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த யோகா அவசியம் என்று கருதினால், முதலில் அவர்களது பசியையும் பட்டினியையும் போக்க முன்னுரிமை தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மோடியின் யோகாவுக்கு நாயின் உடல் அசைவு என்ற இந்த தகுதியைத் தவிர்த்து வேறு எந்த பெரிய தகுதியையும் கொடுத்து விட முடியாது.

EGATHUVAM JUL 2016