Mar 8, 2017

குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம்

குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம்
"குல்ஹுவல்லாஹு அஹத்எனும் (112ஆவது) அத்தியாயத்தை ஓதினால் குர்ஆனில் மூன்றில் ஒரு பங்கை ஓதியதற்கு ஈடானதாகும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் "குல்ஹுவல்லாஹு அஹத்எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 5013
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதாஎன்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள்அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் ஒருவனேஅல்லாஹ் தேவைகளற்றவன்' (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 5013
பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலிகள் வழங்குவதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதையும் இந்நேரத்தில் நினைவு கூர்வது சாலச்சிறந்தது.
நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர்ஆன் 39:10