Mar 1, 2017

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா - OCT 2015

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா - OCT 2015
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

சமீபத்தில் மனாருல் ஹுதா எனும் மாத இதழ், "நபிகள் நாயகம் மரணிக்கவில்லை, இன்னும் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து கொண்டி ருக்கின்றார்கள்' என்ற வழிகெட்ட கருத்தை வெளியிட்டிருந்தது.
இதற்கு ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் எடுத்து வைத்த சில வாதங்களுக்கான விளக்கங்களைப் பார்த்து வருகிறோம்.
நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டிருக்கிறார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் உள்ளார்கள். நாம் சொல்வதை எல்லாம் நேரடியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக, நபிமார்கள் அனைவர்களும் உயிருடன் உள்ளார்கள், கப்ரில் தொழுது கொண்டிருக்கிறார்கள் எனும் ஹதீஸை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
இந்த ஹதீஸ்களின் உண்மைத்தரம் என்ன? அவை என்ன கருத்தைத் தெரிவிக்கின்றன? என்பதைப் பார்ப்போம்.
இமாம் பைஹகீ அவர்கள் தமது ஹயாதுல் அன்பியா எனும் நூலில் இது தொடர்பாக சில ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள்.
செய்தி: 1
ஹீலூளீனீ ளீகூரீஞூறீலூளீமீ கூகூறீலூடூளுலூ 458 - (1 / 75)
ரீóக்ஷீúறீóசுóஞூóளீ ரீóறீõணூ ருóறீúகுö ளீகூகூøóடூö ளீகூúஹீóளீழுöயுõ கி ஜீóஞூóளீ ரீóறீõணூ ஹீóளீசூöகுனூ ரீóஹீúசூóகுõ றீúஞூõ ருóகூöலூøனூ ளீகூúஹீóடுúஞூóணூöலூøõ கி வீöசூúகூளீமீளூ கி ஜீஞூளீ ரீóறீõணூ ருóறீúகுö ளீகூகூøóடூö சூõஹீóசூøóகுõ றீúஞூõ ளீகூúருóறீøóளீடுö ளீகூúஹீöசூúதுöலூøõ கி றீöஹீöசூúதுó கி ஜீஞூளீ ரீóறீõணூ ளீகூசுøóறீöலூருö ளீகூஞுøóடூúசுóளீஞூöலூøõ கி ஜீஞூளீ வீöடுúசூóளீருöலூகூõ றீúஞூõ முóகூúஹீóனீó றீúஞூö லூóஞுöலூகுó கி ருóஞூú சூõஹீóசூøóகுö றீúஞூö ருóறீúகுö ளீகூசுøóஹீúசூóஞூö றீúஞூö ரீóறீöலூ கூóலூúகூóரூ கி ருóஞூú ஜீóளீறீöஸீனூ கி ருóஞூú ரீóஞூóடுனூ கி சுóநுöலூó ளீகூகூøóடூõ ருóஞூúடூõ கி ருóஞூö ளீகூஞூøóறீöலூøö துóகூøóரூ ளீகூகூøóடூõ ருóகூóலூúடூö ணூóடுóகூøóசூó கி ளுóளீகூó : “ வீöஞூøó ளீகூரீóஞூúறீöலூóளீமீó கூளீ லூõஸீúசுóறுõணூஞூó ழுöலூ ளுõறீõணூசுöடூöசூú றீóருúகுó ரீóசுúறீóருöலூஞூó கூóலூúகூóனீளூ கி ணூóகூóறுöஞூøóடூõசூú லூõதுóகூøõணூஞூó றீóலூúஞூó லூóகுóலூö ளீகூகூøóடூö ருóஞுøó ணூóஷீóகூøó ஹீóஸீøóரூ லூõஞூúழுóக்ஷீó ழுöலூ ளீகூதுøõணூசுö
அனஸ் (ரலி) அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிமார்கள் நாற்பது நாட்களுக்கு மேல் தங்கள் கப்ருகளில் விட்டு வைக்கப்பட மாட்டார்கள். எனினும் அல்லாஹ்வின் முன் சூர் ஊதப்படும் வரை தொழுவார்கள்.
ஹயாதுல் அன்பியா, ஹதீஸ் எண்: 4
இந்தச் செய்தி முழுக்க முழுக்க பலவீனமான செய்தியாகும்.
இந்தச் செய்தியில் அஹ்மத் பின் அலி அல்ஹசனவிய்யு என்பவர் இடம் பெறுகிறார்.
இவரை அறிஞர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இவர் பெரும் கூட்டத்திடமிருந்து அறிவிக்கின்றார். ஆனால் அல்லாஹ்வை சாட்சியாக்கி சொல்கிறேன். இவர் அவர்களிடம் செவியேற்றதில்லை என்று ஹாகிம் விமர்சித்துள்ளார்.
இமாம் கதீபுல் பக்தாதீ, இவர் நம்பகமானவர் அல்ல என்று குறை கூறியுள்ளார்.
மீஸானுல் இஃதிதால் 1/121
மொத்தத்தில் இவரது ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டாது என்றும் ஹாகிம் விமர்சித்துள்ளார்.
லிஸானுல் மீஸான் 1/541
இமாம் முஹம்மத் பின் யூசுஃப் இவரைப் பொய்யர் என்று சாடியுள்ளார்.
ஸியரு அஃலாமிந் நுபலாஃ, 30/49
இது இந்த ஹதீஸில் உள்ள ஒரு குறையாகும்.
அடுத்து, இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா என்பவரும் அறிஞர்களால் கடுமை யாகக் குறை கூறப்பட்டவர் ஆவார்.
இவரை விட நினைவாற்றலில் மோசமானவரை நான் பார்த்ததில்லை என இமாம் ஷுஃபா விமர்சித்துள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் 1 152
கைஸ் பின் ரபீஃ எனும் பலவீனமான நபரைப் பற்றி இமாம் அபூஹாதம் விமர்சிக்கும் போது, முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலாவை விட கைஸ் தான் எனக்கு விருப்பத்திற்குரியவர்; ஆனால் இருவரது ஹதீஸ்களும் ஆதாரம் கொள்ளப்படாது என்கிறார்.
அல்ஜரஹ் வத்தஃதீல், 7/98
இமாம் அஹ்மத், இவர் நினைவாற்றல் மோசமானவர் என்று குறை கூறியுள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் 7/322
இன்னும் பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்.
எனவே இது இச்செய்தியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்கிறது.
அதுமட்டுமின்றி இதில் இஸ்மாயீல் பின் தல்ஹா, மற்றும் முஹம்மத் பின் அப்பாஸ் ஆகிய இரு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை அறிஞர்களால் உறுதி செய்யப் படவில்லை.
எனவே இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
செய்தி: 2
அனஸ் (ரலி) அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள்.
ஹயாதுல் அன்பியா ஹதீஸ் எண்: 1
இந்தச் செய்தி இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவை முஸ்னது பஸ்ஸார் 6888, முஸ்னது அபீயஃலா 3425, அல்ஃபவாயித் 58, அக்பாரு உஸ்பஹான் பாகம் 6, பக்கம் 316 ஆகிய நூல்களாகும்.
ஹஸன் பின் குதைபாவின் அறிவிப்பு
பஸ்ஸார், அல்ஃபவாயித் மற்றும் ஹயாதுல் அன்பியா ஆகிய நூல்களின் அறிவிப்பில் ஹஸன் பின் குதைபா என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
அல்அஸதீ எனும் அறிஞர் இவரை ஹதீஸ் துறையில் மோசமானவர் என்றும், அலி பின் உமர் என்பவர் இவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்படுபவர் என்றும் குறை கூறியுள்ளார்கள்.
தாரீகு பக்தாத் 7/404
இவர் பிரச்சனைக்குரியவராக இல்லை என நான் கருதுகிறேன் என்று இப்னு அதீ அவர்கள் கூறிய கூற்றை எடுத்துக் கூறி, "அவ்வாறில்லை; இவர் (அழிந்து போகக் கூடியவர்) அபாயகரமானவர்' என்று தஹபீ விமர்சித்துள்ளார்.
அபூஹாதம் இவரை பலவீன மானவர் என்று விமர்சித்துள்ளார்.
இவரிடம் அதிகமான சந்தேகங்கள் உள்ளன என்று உகைலீ குறை கூறியுள்ளார்.
பார்க்க: மீஸானுல் இஃதிததால்,
பாகம் 1, பக்கம்  519
எனவே ஹஸன் பின் குதைபாவை ஆதாரம் கொள்ள இயலாது என்பதால் இவர் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்புகள் பலவீனமானவையாகும்.
இதர அறிவிப்புகள்
அக்பாரு உஸ்பஹானில் பதிவான அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் இப்றாஹீம் பின் ஸபாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் அறியப்படாத நபர் ஆவார். இவரது நம்பகத்தன்மை அறிஞர்களிடம் நிரூபிக்கப்படவில்லை.
(குறைகள் உள்ள பல செய்திகளை ஒன்றிணைத்து அதன் அடிப்படையில்) ஹதீஸைச் சரி காணும் இமாம் அல்பானீ அவர்களும் கூட இவரது நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்.
அப்துல்லாஹ் பின் இப்றாஹீம் பின் ஸபாஹ் பற்றி எந்த குறை நிறையையும் இமாம் அபூநுஐம் தனது நூலில் குறிப்பிடவில்லை.
ஸில்ஸிலது ஸஹீஹா 2/120
மேலும் இச்செய்தியில் அலீ பின் மஹ்மூத் பின் மாலிக் இடம் பெறுகிறார். இவரின் நம்பகத் தன்மையையும் எந்த அறிஞரும் உறுதி செய்ததாக நாம் காணவில்லை.
எனவே நம்பகத்தன்மை அறியப் படாத அறிவிப்பாளரின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பு பலவீனமாகி விடும்.
இறுதியாக மீதமுள்ளது முஸ்னது அபீயஃலாவின் அறிவிப்பாகும். இதில் அபுல்ஜஹ்ம் அல்அஸ்ரக் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார்.
இவரை இப்னு ஹிப்பானை தவிரத் வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்றளிக்கவில்லை. இப்னு ஹிப்பானைப் பொறுத்தவரை யாரென்று அறியப்படாத நபரையும் நம்பகமானவர் என்று சான்றளித்து விடுவதால் அவர் மட்டும் தனித்து அளிக்கும் சான்றிதழ் ஏற்கப்படாது. இது ஹதீஸ்கலையில் அறியப்பட்ட விஷயமாகும்.
இப்னு ஹஜர் அவர்கள் இவரை உண்மையாளர். புதிய செய்திகளை அறிவிப்பர் என்று கூறுகிறார்.
இது அவரது நம்பகத் தன்மைக்கான சான்றாக ஆகாது.
எனவே அபீயஃலாவின் அறிவிப்பும் பலவீனமேயாகும்.
இமாம் அல்பானீ அவர்கள் இந்த மூன்றையும் இணைத்து ஒன்று இன்னொன்றுக்கு வலுசேர்க்கின்றது என்ற அடிப்படையில் தான் இந்த செய்தியைச் சரியானது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு பலவீனமான செய்தி இன்னொரு பலவீனமான செய்திக்கு வலு சேர்க்காது. இவ்வாறு எல்லா பலவீனமான ஹதீஸ்களிலும் முடிவு செய்தால் பல ஆபத்தான, தவறான கொள்கை முடிவுகளை எடுக்க நேரிடும்.
எனவே நபிமார்கள் உயிருடனும், கப்ரில் தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள செய்தி பலவீனமானதாகும்.
மிஃராஜின் போது இறந்தவர்களைப் பார்த்தது எப்படி?
நபிமார்கள் உயிருடன் இருக் கிறார்கள் என்பதற்கு மிஃராஜில் நபிகள் நாயகம் இறைத்தூதர்கள் பலரையும் பார்த்த நிகழ்வையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப் பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 4736
இது நபிகள் நாயகம் மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணம் செய்த போது நடந்த நிகழ்வாகும்.
அந்தப் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல இறைத்தூதர்களையும் பார்த்தார்கள்.
நபிகள் நாயகம் மிஃராஜில் இறந்தவர்களைப் பார்த்தார்கள் என்பதை வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று உயிருடன் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் மிஃராஜில் நபிகள் நாயகம் இறந்தவர்களைப் பார்த்தார்கள் என்பதை நேரடியாகப் பார்த்தார்கள் என்று விளங்க முடியாது. மாறாக அது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வாகும்.
இறைவன் தனது வல்லமையினால் அவர்களை தன் தூதருக்கு எடுத்துக் காட்டினான். அவ்வளவு தான். மிஃராஜில் இறைவன் எடுத்துக் காட்டிய நிகழ்வை வைத்துக் கொண்டு இறந்தவர்கள் உயிருடன் இருக் கிறார்கள் என்று வாதிடமுடியாது.  எடுத்துக்காட்டப்படுதல் வேறு. பார்த்தல் என்பது வேறு.
மிஃராஜில் நபிகளார் பார்த்த நிகழ்வுகள் யாவும் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வு தான் என்பதைப் பல சான்றுகள் உறுதி செய்கின்றன.
தஜ்ஜாலைப் பார்த்தார்கள்
மிஃராஜின் போது நபிகள் நாயகம் இறந்தவர்களை மட்டும் பார்க்க வில்லை. மாறாக உலகில் வெளிப்படாத பலரையும் பார்த்தார்கள். தஜ்ஜாலைப் பார்த்தார்கள் என்றும் ஹதீஸ்களில் காண்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை "ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்ட வர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 3239
உலகில் இதுவரை தோன்றாத தஜ்ஜாலை எப்படிப் பார்த்தார்கள்? அவன் தான் இதுவரை வெளிப் படவில்லையே? வெளியாகுவதற்கு முன்பே தன் தூதருக்கு இறைவன் எடுத்துக் காட்டியிருக்கிறான். இதுவே நபிகள் நாயகம் பார்த்த காட்சிகள் யாவும் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வு தான் என்பதை உணர்த்துகின்றது.
சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன்
நூல்: புகாரி 3241
(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) "நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்கüடம், "இவர் யார்?'' எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்கüல் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள்'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் அபூதர் (ரலி),
நூல்: புகாரி 349
நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் அதிகமான ஏழைகளைக் கண்ட தாகவும், நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாகவும் முதல் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
ஆதமுடைய சந்ததிகள் அனைவரையும் சொர்க்கவாசிகள் - நரகவாசிகள் என இரு அணியாகப் பார்த்தார்கள் என இரண்டாவது ஹதீஸ் தெரிவிக்கின்றது.
அதில் மறுமை நாள் வரும் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரும் உள்ளடங்குவர். நாமும் அடங்குவோம். நபிகள் நாயகம் மிஃராஜ் சென்ற போது நாம் தான் பிறக்கவே இல்லையே பிறகு எப்படி நம்மைக் கண்டார்கள்?
உலகம் அழிக்கப்பட்டு, தீர்ப்பு நாளுக்குப் பிறகு தானே  சொர்க்க வாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் செல்ல முடியும்?
தீர்ப்பு நாளுக்கு முன்னரே நபிகள் நாயகம் எப்படி இந்தக் காட்சியைக் காணமுடிந்தது?
இவை யாவும் இறைவனது வல்லமையால் நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்ச்சி என்பது தான் இதற்குப் பதில்.
இறந்தவர்களையும் இறைவன் எடுத்துக்காட்டுவான். இனி வரவிருப் பவர்களையும் எடுத்துக்காட்டுவான். இது இறைவனுக்கு சாத்தியமே.
ஆதம் (அலை) அவர்களிடம் மறுமை நாள் வரையிலும் வரவிருக்கிற சந்ததிகளை வெளிப்படுத்தி எடுத்துக் காட்டியதாக திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.
ஆதமுடைய மக்களின் முதுகு களிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)
அல்குர்ஆன் 7:172
மறுமை நாள் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் எடுத்துக் காட்டியதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் அனைவரையும் ஆதம் நபி பார்த்தார்கள் என்றால் நேரடியாகப் பார்த்தார்கள் என்ற பொருளில் அல்ல. இறைவன் எடுத்துக் காட்டிய விதத்தில் பார்த்தார்கள் என்பதாகும்.
இது போலவே மிஃராஜிலும் நபிகள் நாயகம் அவர்களுக்கு பல காட்சிகளை எடுத்துக் காட்டினான்.
எனவே இறைவன் தன் தூதருக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வை வைத்துக் கொண்டு இறந்தவர்கள் உலகில் உள்ளதைப் போன்று உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறுவது அபத்தமானதாகும்.
மேலும் நபிகள் நாயகம் மிஃராஜில் பார்த்தது அனைத்தும் எடுத்துகாட்டல் தான் என்பதை இன்னும் சில ஆதாரங்களும் உறுதி செய்கின்றன.
ஏனெனில் நபிகள் நாயகம் மிஃராஜில் உலகில் உயிருடன் உள்ளவர்களையும் பார்த்தார்கள் என்று ஹதீஸ்களில் காண்கிறோம். மிஃராஜில் அவர்களை நபியவர்கள் பார்த்த அதே நேரத்தில் அவர்கள் உலகிலும் இருந்தார்கள்.
பிலாலைப் பார்த்தார்கள்
ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1149
அனஸ் (ரலி) தாயார்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்த வனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்கüன் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, "யார் அவர்?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), "இவர் பிலால்' என்று பதிலüத்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், "இது யாருக் குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), "இது உமருடையது' என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)'' என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்கüடமா நான் ரோஷம் காட்டுவேன்'' என்று கேட்டார்கள்.
நூல்: புகாரி 3679
பிலால் (ரலி) அவர்கள் உலகில் உயிருடன் இருக்கும் போது அவர்களை அங்கு காட்டுகின்றான். இறந்தவர்களை மிஃராஜில் நபி பார்த்ததினால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று இவர்கள் நம்புவதைப் போன்று, உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக ஆகிவிடுவார்களா?
உலகில் உள்ள பிலால் தான் அங்கேயும் உலாவினார் என்றால் அதே நேரத்தில் அவர் எப்படி உலகிலும் இருக்க முடியும்?
நபிகள் நாயகம் பிலாலிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது பிலாலுக்கே இந்தத் தகவல் தெரியவில்லையே? நேரடியாக அவரே சொர்க்கத்தில் உலாவியிருந்தால் இது பிலாலுக்குத் தெரியாமல் போகுமா?
பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை சுவனத்தில் நடமாட விடுவது போன்று, இறந்தவர்களை மிஃராஜின் போது எழுப்பிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றான். அதாவது எடுத்துக் காட்டியிருக்கின்றான். இது இறைவனின் வல்லமையை உணர்த்தும் செயலாகும்.
பல இடங்களில் மூஸாநபி
ஒருவரையே பல இடங்களில் பார்த்ததாக வருவதும் இது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வுதான் என்பதை மேலும் தெளிவாக்குகிறது.
மூஸா நபியை முதலில் கப்ரில் பார்த்தார்கள் என்று முஸ்லிம் 4736 கூறுகின்றது.
கப்ரில் தொழும் நிலையில் மூஸா நபியைப் பார்த்தது போலவே வானத்திலும் மூஸா நபியைச் சந்தித்தார்கள். (பார்க்க: புகாரி 349)
நபிகள் நாயகம் அவர்களுக்கு இதற்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர். (முஸ்லிம் 3410)
நேரடியாகப் பார்ப்பதாக இருந்தால் ஒருவரை ஒரு இடத்தில் தான் பார்க்க இயலும். ஒருவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்த்ததாக வருவதிலிருந்து இது இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட காட்சி என்பதை அறியலாம்.
பல தண்டனைகள்
உலகம் அழிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு நாளில் தீர்ப்பும் வழங்கப்பட்ட பின்னரே நல்லோர்கள் சொர்க்கத் திற்கும், தீயோர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.
அதுவரை நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது.
பிர்அவ்ன், அபூஜஹ்ல்களாகவே இருந்தாலும் நரகத்திற்குச் செல்ல முடியாது. (பர்ஸக் வாழ்க்கையில் தான் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்)
ஆனால் நபிகள் நாயகம் மிஃராஜில் நரகத்தில் வழங்கப்படும் பல தண்டனைகளை அனுபவிக்கும் நபர்களைப் பார்த்ததாக அந்த ஹதீஸ்களில் வருகிறது.
பொய் கூறித் திரிந்தவர், விபச்சாரம் செய்தவர், குர்ஆனைப் புறக்கணித் தவர், பிறர் மானத்தில் விளையாடியவர் ஆகியோர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதை நபிகள் நாயகம் மிஃராஜில் பார்த்துள்ளார்கள்.
"இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!'' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் "ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள்.
அறிவிப்பவர் ஸமுரா பின் ஜுன்துப்,
நூல்: புகாரி 1386
விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். "ஜிப்ரயீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: அபூதாவூத் 4255
இனி தான் உலகம் அழிக்கப் படவிருக்கின்றது. இனி தான் அனைவரும் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவிருக்கின்றது. அதன் பிறகே நரகவாசிகள் நரகிற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பார்கள். அதற்குள் இந்தத் தண்டனைகளைப் பெறுபவர்களை நபிகள் நாயகம் எப்படிப் பார்த்தார்கள்?
நபிகள் நாயகம் கண்ட இக்காட்சி இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டு, நரகத்தின் தண்டனை எப்படி இருக்கும் என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இப்படி பல காட்சிகளையும், அத்தாட்சிகளையும் நபிகளாருக்குக் காட்டும் போது தான் இறந்து போன இறைத்தூதர்களையும் இறைவன் எடுத்துக் காட்டினான். இதனால் அவர்கள் உலகில் உள்ளதைப் போன்று  உயிருடன் இருக்கிறார்கள் என்பதாக ஆகாது.
எனவே மிஃராஜில் இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வை வைத்துக் கொண்டு உலகில் உள்ளதைப் போன்று அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்வது தவறான வாதமாகும்.
இது பற்றி ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் விளக்கம் தேவைப்படுவோர் இந்த இணைப்பில் காணலாம்.

பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் இல்லையா?
இறந்தவர்கள் அனைவரும் பர்ஸக் வாழ்க்கைக்குள் சென்றுவிடுவதாக திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
அல்குர்ஆன் 23 99, 100
ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது. இது தான் பர்ஸக் வாழ்க்கை எனப்படுகிறது.
பர்ஸக் வாழ்க்கையில் நபிமார்கள் மட்டுமல்லாமல் இறந்து விட்ட நல்லவர்கள் - தீயவர்கள் என அனைவருமே உயிருடன் தான் உள்ளார்கள்.
தீயவர்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். நல்லோர்கள் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். நபிமார்கள் மேலான உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.
அங்கு உயிருடன் இருக்கிறார்கள் என்பதை வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் இருப்பது என்பது இவ்வுலக வாழ்க்கையில் உயிருடன் இருப்பதைப் போன்றதல்ல.
அங்குள்ளவர்கள் இங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ள மாட்டார்கள். உலகில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள இயலாது.  அந்த அளவில் பலமான திரையொன்று இறைவனால் போடப்படுகிறது. நாம் உணரமுடியாத வகையிலேயே பர்ஸக் எனும் வாழ்க்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2 154
பர்ஸக் வாழ்க்கையில் - கப்ரில் தீயவர் சம்மட்டியால் அடிக்கப் படுவதாகவும் அதனால் கடுமையாக அலறுவதாகவும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
(புகாரி 1338)
ஆனால் நாம் மையவாடிக்கு அருகில் இருந்தாலும் அந்தச் சப்தத்தை நம்மால் கேட்க இயலவில்லை. ஏன்?
இறைமறுப்பாளனுக்கு அவரின் மண்ணறையில் நெருப்பாலான ஆடை, விரிப்பு, போர்வை போன்றவை வழங்கப்படும் என்றும் ஹதீஸ் உள்ளது. (அபூதாவூத் 4127)
இப்போது ஒரு காபிரின் கப்ரில் தோண்டிப் பார்த்தால் நரகத்து ஆடை, போர்வை, விரிப்பு போன்றவைகள் இருக்குமா? அவற்றை நம்மால் பார்க்க இயலவில்லையே?
அதே போன்று நல்லவருக்கு சொர்க்கத்தின் விரிப்பு, சொர்க்கத்தின் நறுமணம் வழங்கப்படும் என்றும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 17803)
முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்வதற்காகத் தோண்டும் போது இது நாள் வரையிலும் எந்தப் போர்வையும் கிடைத்ததில்லையே?
அப்படி எனில் இறந்தவர்கள் வாழும் பர்ஸக் வாழ்க்கை நம்முடைய புலன்களுக்கு அப்பாலும், நம்மால் அறிந்து கொள்ள முடியாத வகையிலும் உள்ளது என்பதை இது விளக்குகிறது.
பர்ஸக் வாழ்க்கையில் நடை பெறுவதை வைத்து உலகில் சட்டம் சொல்ல இயலாது. அந்த வாழ்க்கை நம்முடைய புலன்களால் அடைந்து கொள்ள முடியாத திரை போடப்பட்ட வாழ்க்கையாகும்.
எனவே அந்த வாழ்க்கையில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை இவ்வுலகில் உள்ளதைப் போன்று என்று புரிந்து கொள்ளக் கூடாது.
நபிமார்கள் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் உள்ளார்கள் என்பதை இவ்வுலகில் உள்ளதைப் போன்று என்று புரிந்தால் நபிமார்கள் உலகில் உயிருடன் இருந்தால் என்னென்ன செய்ய வேண்டும்? அவற்றைச் செய்கிறார்களா?
மிகக் குறிப்பாக, நபிமார்கள் தம் தூதுப்பணியை எடுத்துரைக்க வேண்டும். அதற்குரிய சான்றுகளை வெளிப்படுத்த வேண்டும். அற்புதங்கள் வழியாக தஃவா செய்ய வேண்டும். இவற்றில் எந்த ஒன்றையும் செய்யாமல் கப்ரில் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அது எப்படி சாத்தியமாகும்?
இறந்து விட்ட ஒவ்வொரு மனிதரும் பர்ஸக் வாழ்க்கையில் உயிருடன் தான் உள்ளனர். அதனால் அவர்களது சொத்தைப் பங்கிடக் கூடாது, அவர்களது மனைவியை இன்னொரு ஆண் திருமணம் செய்யக் கூடாது என்று கூறுவோமா? இதிலிருந்தே அங்கு உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உலகத்தில் இருப்பதை போன்று இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில்லை.
நபிமார்கள் விஷயத்திலும் இவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும்.

EGATHUVAM OCT 2015