Mar 8, 2017

காலையிலும் / மாலையிலும்

காலையிலும்மாலையிலும் ஓத வேண்டிய துஆ

1, காலையிலும்மாலையிலும்படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற  வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். 


அல்லாஹும்ம பா(எ)(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளிஆலிமல் ஃகைபி(இ) வஷ்ஷஹாத(த்)திரப்ப(இ) குல்லி ஷையின் வமலீ(க்)கஹுஅஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)தஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி நப்(எ)ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி

இதன் பொருள்:
இறைவா! வானங்களையும்பூமியையும் படைத்தவனே! மறைவானதையும்வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77

2, காலையிலும்மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: நஸயீ 5333

அந்த அத்தியாயங்கள் வருமாறு:

பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித்வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு(எ)வன் அஹத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

112 வது அத்தியாயம்

பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
குல் அவூது பி(இ) ரப்பி(இ)ல் ப(எ)லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(இ). வமின் ஷர்ரின் னப்பா(எ)ஸாத்தி பி(எ)ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும்பரவும் இருளின் தீங்கை விட்டும்முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113வது அத்தியாயம்

பி(இ)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 
குல்அவூது பி(இ)ரப்பி(இ)ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ(எ) ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும்மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும்மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர்.

114வது அத்தியாயம்