Mar 8, 2017

தூக்கத்திற்கு முன்பும் / பின்பும்

தூங்கும் போது

அல்லாஹும்ம பி(B)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
இதன் பொருள்:
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)

தூங்கும்முன் ஓத வேண்டிய துஆ – 8


இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 1154

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹுலஹுல் முல்(க்)குவலஹுல் ஹம்துவஹுவஅலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்(இ)ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(இ)ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(இ)ல்லாஹிஅல்லாஹும்மஃக்பி(எ)ர்லீ.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும்தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர் இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ஆதாரம்:

புகாரி 6312, 6314, 6324, 6325, 7395

இதன் பொருள்:

எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.