Mar 28, 2017

வானம், பூமி நிறைகின்ற தஸ்பீஹ்

வானம், பூமி நிறைகின்ற தஸ்பீஹ்

தூய்மை ஈமானில் பாதியாகும்.

அல்ஹம்துலில்லாஹ் (என்று சொல்வது) எடையை நிறைக்கின்றது.

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் (என்று சொல்வது) வானம், பூமிக்கு இடையில் உள்ளவற்றை நிறைக்கின்றது.

தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறிமை பிரகாசமாகும்.

குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகும்.

மக்கள் அனைவரும் முயற்சி செய்கின்றனர்.

தமது ஆத்மாவை (சுவனத்திற்காக) விற்று அதை விடுதலை செய்து விடுகின்றனர். அல்லது அதை (நரகத்திற்காக விற்று) நாசப்படுத்தி விடுகின்றார்.

அறிவிப்பவர் அபூமாலிக் அல்அஷ்அரி,

நூல் முஸ்லிம் 328