Mar 8, 2017

ஜகாத்,ஹஜ்ஜை ஈடுகட்டும் நன்மை

ஜகாத்,ஹஜ்ஜை ஈடுகட்டும் நன்மை

ஏழை மக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகின்றார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். அறப்போர் செய்கின்றனர். தர்மமும் செய்கின்றனர் என்று முறையிட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகின்றேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்தி விட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கின்றீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்தக் காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை இறைவனைத் துதியுங்கள். 33 தடவை இறைவனைப் புகழுங்கள். 33 தடவை இறைவனைப் பெருமைப் படுத்துங்கள் என்று கூறினார்கள்.

இது வஷயத்தில் நாங்கள் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர், சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 34 தடவையும் கூறலானோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர் என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையும் 33 தடவைகள் கூறியதாக அமையும் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்  அபூஹுரைரா (ரலி),
நூல்  புகாரி 843