பொருளியல் தொடர்:
3 பொருளாதாரம் ஒரு சோதனை
பொருளாதாரம் மனிதனுக்கு அவசியம் என்பதை இதுவரை நாம் பார்த்தோம்.
இதன் காரணமாக,
சம்பாதிக்க வேணடும்; சொத்து செல்வங்களைச்
சேர்க்க வேணடும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் வந்திருக்கும். இதை மட்டும் வைத்து
கொண்டு பொருளாதாரத்தைத் திரட்டுதுவது தான் வாழ்க்கை என்று எண்ணிவிடக் கூடாது.
பொருளாதாரம் பயங்கரமானது; அதைக்
கையாள வேண்டிய விதத்தில் கையாள வேண்டும். இல்லாவிட்டால் இது சுவர்க்கத்துக்குப் பதிலாக
நரகப் படுகுழிக்குக் கொண்டு செல்லும் என்பதைப் பற்றி எச்சரித்து, குர்ஆன் மற்றும் ஹதீஸில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியிருக்கின்றார்கள்.
எந்தச் செல்வத்தினால் சொர்க்கம் செல்ல முடியும் என்றும், எந்தச் செல்வத்தை மீட்பதற்காக உயிரைக் கொடுத்தும் போராட வேண்டும்
என்றும் மார்க்கம் கூறியுள்ளதோ அந்தச் செல்வம் தான் சோதனை என்றும் மார்க்கம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைக்கு நமக்கு கொடுக்கப்பட்ட செல்வம் போல யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் சிலர் சொத்துக்களை வைத்திருந்தார்கள். ஆனால் அதை அவர்கள் அனுபவிக்கவில்லை.
அந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு, மரணிக்கும்
தருவாயில் யாரிடமும் கூறாமல் நிலத்தில் புதைத்து விடுவார். ஆனால் நம்முடைய காலத்தில்
எவ்வளவு காசு வைத்திருந்தாலும் அதை வைத்து அனுபவித்து விடலாம். இன்று காசை வைத்து எதையும்
வாங்கலாம்,
எதையும் செய்யலாம் என்ற நிலையில் அல்லாஹ் நம்மை ஆக்கி வைத்திருக்கின்றான்.
"ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின்
சோதனை செல்வமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல
நான் கேட்டேன் என்று கஅப் இப்னு இயால் அறிவிக்கின்றார்கள்
நூல்: திர்மதி 2258
இந்தச் செல்வத்தை இறைவன் நமக்குச் சோதனையாகக் கொடுத்திருக்கின்றான்.
இதை நாம் கவனமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று விளங்குகின்றது.
உங்களின் மக்கட் செல்வமும், பொருட்
செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு
என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:28)
செல்வம் இவ்வுலகத்தின் கவர்ச்சிப் பொருள்
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின்
கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும்.
(அல்குர்ஆன் 18:46)
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை
நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப் பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள்.
அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது
(அல்குர்ஆன் 3:14)
மறுமையே சிறந்தது
கொள்கைக்காக காசு, பணங்களைத்
தூக்கியெறிந்துவிட்டு வந்தவர்களை அல்லாஹ் முஃமின்களுக்கு உதாரணமாக கூறிக் காட்டுகிறான்.
முஸ்லிமாக இருந்தால் இவர்களைப் போன்று நடக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் பிர்அவ்னுடைய
மனைவி ஆசியா (ரலி) அவர்களும், மர்யம் (அலை) அவர்களுமாவார்கள்.
"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக!
ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த
கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக'' என்று ஃபிர்அவ்னின்
மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 66:11)
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்)
அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின்
வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்
படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.
அல்குர்ஆன் 66:12
பிர்ஃவ்ன் ஒரு கொடுங்கோல் மன்னனாக இருந்தான். இவனுடைய மனைவிக்கு
அவனுடைய அனைத்து அதிகாரங்களும் இருந்தது. இவன் ராஜாவென்றால் இவன் மனைவி ராணியாவாள்.
ஆசியா (ரலி) எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்று ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்தார்கள்.
பஞ்சு மெத்தைகளிலும் பல்லக்குக் கட்டிலிலும் சுகமாக வாழ்ந்தார்கள். இவைகள் அனைத்தையும்
விட்டுவிட்டு ஓரிறைக் கொள்கைக்கு வந்தார்கள்.
இதைப் போன்று மர்யம் (அலை) அவர்களும் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டு
சமுதாயத்தை விட்டு விரட்டப்பட்டு எந்த ஒரு வசதிவாய்ப்புக்களும் இல்லாமல் பள்ளிவாசலில்
தங்கி மற்றவர்களால் வளர்க்கப்பட்டார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 28:13)
மறுமையை மறக்கடிக்கும் பொருளாதாரம்
ஒருவனுக்கு காசு, பணம் மறுமையை
மறக்கச் செய்து விடும். மறுமையை மறந்தவர்கள் நரகம் தான் சென்றடைவார்கள்.
மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை) தேடுவது உங்கள்
கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும்
அறிவீர்கள். அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.
பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன்: 102வது அத்தியாயம்
செல்வத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருப்பவர்கள், அடுத்தவனைப் பற்றிப் புறம் பேசிக் கொண்டு அலைவார்கள். இவர்களுக்கு
நரகம் காத்துக் கொண்டிருக்கின்றது.
குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத்
திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று
எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு
எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.
அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
அல்குர்ஆன்: 104வது அத்தியாயம்
நாசமாக்கும் செல்வம்
முன்னர் வாழ்ந்தவர்கள் பொருளாதாரத்தைப் பார்த்து அழிந்து விட்டார்கள்.
இந்ந நிலை நமக்கு வரக்கூடாது என்பதற்காக இதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மிஸ்வர் பின் மக்ரமா (ர-) அவர்கள் கூறியதாவது: "பனூ ஆமிர்
பின் லுஅய்'
குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான
அம்ரு பின் அவ்ஃப் அல் அன்சாரீ (ர-) அவர்கள் எனக்குக் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி)
அவர்களை பஹ்ரைனி-ருந்து ஜிஸ்யா வரியை வசூ-த்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு
அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ர-) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா
(ர-) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ர-) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள்
நபி (ஸல்) அவர்கüடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்கüடம் சைகையால்
கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து
விட்டு, "அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்' என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்'' என்று கூற, அன்சாரிகள், "ஆமாம், அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலüத்தார்கள்.
"ஆகவே,
ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி
நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும்
என்று நான் அஞ்சவில்லை. ஆயினும் உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக்
கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப் பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து
விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 3158, 4015, 6425
சுவனத்தில் ஏழைகள்
செல்வம் வழங்கப்பட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும், ஏழைகள் அதிகமாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மிஃராஜ் - விண்ணுலகப்
பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக
ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப்
பெண்களையே கண்டேன்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ர-)
நூல்: புகாரி 5198 3241 6449 6546
முந்திச் செல்லும் ஏழைகள்
பணக்காரர்கள் மறுமையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து
செல்வங்களுக்கும் கணக்குக் காட்ட வேண்டும். அதனால் அது முடிந்து வர பல வருடங்களாகும்.
ஆனால் ஏழைகள் இவர்களை விடப் பல வருடங்களுக்கு முன் சென்று சொர்க்கத்தில் உள்ளவைகளை
அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள்.
அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), "அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்
மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப் பொருட்களோ
இல்லை'' என்று கூறினர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள்.
நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏழை முஹாஜிர்கள் மறுமை நாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு
முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்' என்று கூறியதைக்
கேட்டுள்ளேன்''
என்றார்கள்.
அதற்கு அவர்கள் (மூவரும்), "அப்படியானால், நாங்கள் பொறுமையாக
இருக்கிறோம்;
எதையும் கேட்கமாட்டோம்'' என்று கூறினர்
நூல்: முஸ்லிம் 5291
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் சொர்க்கத்தின் வாச-ல் நின்று
கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாச-ல் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், (அவர்கüல்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்
ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாச-ல் நின்று கொண்டிருந்தேன்.
அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ர-)
நூல்: புகாரி 5196, 6547
ஏழையே சிறந்தவன்
பணக்காரர்கள் சமுதாயத்தில் சிறப்பானவர்களாக மதிக்கப்படுவார்கள்.
ஏழைகள் இழிந்தவர்களாகத் தாழ்த்தப்படுவார்கள். ஆனால் அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்தில்
ஒரு ஏழை அனைத்து பணக்காரர்களை விடச் சிறந்தவன்.
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ர-) அவர்கள் கூறியதாவது: (செல்வமும்
செல்வாக்கும் பெற்ற) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் நடந்து சென்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் "இவரைப் பற்றி
நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு
அவர் "மக்கüல் இவர் ஒரு பிரமுகர் ஆவார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று பதிலüத்தார். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமைதியாக இருந்தார்கள்.
பின்பு மற்றொரு மனிதர் (அவ்வழியாகச்) சென்றார். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (முத-ல் கேட்ட அதே நபரிடம்) "இவரைக் குறித்து நீங்கள் என்ன
நினைக்கின்றீர்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்
"அல்லாஹ்வின் தூதரே! இவர் ஏழை முஸ்-ம்கüல் ஒருவராவார்.
இவர் பெண் கேட்டால் மணமுடித்து வைக்கப்படாமலும் இவர் பரிந்து பேசினால் ஏற்றுக் கொள்ளப்படாமலும்
இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று பதிலüத்தார். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரைப் போன்ற (செல்)வர்கள் இந்தப் பூமி நிரம்ப
இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6447, 5091
இதுவரை, பொருளாதாரம் சிறந்தது; அதன் மூலம் சுவனம் செல்ல முடியும் என்பதையும், பொருளாதாரம் ஆபத்தானது; அது நரகப்
படுகுழியில் தள்ளி விடும் என்பதையும் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின்
போதனைகளில் நாம் பார்த்தோம்.
ஒரு நேரத்தில் பொருளாதாரம் நல்லது என்று சிலாகித்துச் சொல்லப்படுகின்றது.
இன்னொரு நேரத்தில் அதைத் தரம் தாழ்த்திச் சொல்லப்படுகின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று
முரண்படுவதைப் போன்று தோன்றினாலும் இதில் முரண்பாடு கிடையாது.
இந்த இரண்டையும் நாம் எப்படி விளங்க வேண்டுமென்றால் பொருளாதாரமென்பது
கத்தியைப் போன்றது; அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால்
அது நல்லது. அதைக் கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தினால் அது கெட்டது என்று புரிவதைப்
போன்று தான் பொருளாதாரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால் அதன் முலம் சுவர்க்கம்
செல்ல முடியும். அதை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த முடியாது; தீய காரியங்களுக்குத் தான் அதனைப் பயன்படுத்த முடியும் என்றும்
கருதினால் அது நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். பொருளாதாரம் குறித்து இஸ்லாம்
கூறும் சட்ட திட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் பேண முடியாது என்று நினைத்தால் நம்மிடம்
பொருளாதாரம் இல்லாமல் இருப்பதே சிறந்தது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM MAY 2010