கூத்தாடும் குறைக் குடங்கள்
மார்க்கச் சட்டம் பற்றிக் கேள்வி கேட்கப்படும் போதும், மார்க்கச் சொற்பொழிவாற்றும் போதும் மார்க்கச் சட்ட ஆய்வில் இருப்பவர்களே
அலறவும் அரளவும் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக அவர்களது உரை தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது
என்றால் அவர்களது அலறலுக்கும் அரட்சிக்கும் அளவில்லை. மார்க்க விஷயத்தில் அவசரப்பட்டு
தீர்ப்பு வழங்கிவிடக் கூடாது என்ற அல்லாஹ்வின் அச்சம் தான் இதற்குக் காரணம்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ்
மிகைத்தவன்; மன்னிப்பவன்.
அல்குர்ஆன் 35:28
விபரம் தெரியாமல், விளக்கம் புரியாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்களுக்கு நபி
(ஸல்) அவர்கள் மடையர்கள் என்று பட்டம் தருகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக்
கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக்
கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ்
விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம்
கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த
அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: புகாரி 100
அரை குறை வைத்தியனும் அரை குறை ஆலிமும் உலகத்திற்குக் கேடு என்பார்கள்.
அந்த ஆசாமிகள் பொய்யன்டிஜே வர்க்கம் தான் என்பதைத் தொண்டியப்பாவின் நொண்டித் தீர்ப்பைப்
பார்த்து புரிந்து கொள்ளலாம். கோட்டு சூட்டு மாட்டிக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு என்ற
பெயரில் கண்டதையும் டிவியில் தோன்றிக் கூறி விடுகின்றார்கள். அது வாசகர்களின் முகங்களைச்
சுழிக்கச் செய்கின்றது. குமட்டலைக் கொடுக்கிறது. பிஜேயைப் போல சைகை காட்டிக் கொண்டு, அவரைப் போல குரலையும் மாற்றிக் கொண்டு, வாயில் வந்ததைச் சொல்லி விட்டால் போதும், அது மார்க்கமாகி விடும் என்பது இவர்களின் நினைப்பு. இவர்களின்
டிவி நிகழ்ச்சி இதே பாணியில் தொடர வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அப்போது
இவர்களின் நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் நஞ்சம் பார்க்கும் கூட்டமும் வெகுண்டு வெகுவிரைவில்
வெகு தூரத்திற்குச் செல்லும். இப்போது மார்க்க மேதை தொண்டியப்பாவின் நொண்டித் தீர்ப்பைப்
பார்ப்போம். பள்ளிவாசல் பணம் ரூபாய் ஐம்பதாயிரத்தை வாயில் போட்ட பாக்கர் விஷயத்திற்கு
தொண்டியப்பா பக்காவாக வக்காலத்து வாங்கி வக்கனை பேசுவதைப் பாருங்கள். ஹதீஸை வளைக்கும்
அநியாயத்தைப் பாருங்கள். கீழக்கரையைச் சேர்ந்த நசூர்தீன் என்ற சகோதரர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியாக பாக்கர் இருந்த போது அவரிடம்
பள்ளிவாசல் கட்டுவதற்காக ரூ. 50,000ஐ நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
பள்ளிவாசல் கட்டுவதற்குச் செலவிட வேண்டும் என்ற தனது அண்ணனுடைய
நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக பாக்கரிடம் இந்தத் தொகையை அவர் வழங்கியிருக்கிறார். அவர்
வழங்கிய இந்தத் தொகைக்கு பாக்கர் எந்த ரசீதும் வழங்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், பாக்கர் நடத்தும் ஹஜ் சர்வீஸ் சார்பாக ஹஜ் பயண விளக்கக் கூட்டம்
சென்னையில் பாண்டியன் ஹோட்டலில் நடைபெற்ற போது பாக்கரை நேரில் சந்தித்த கீழக்கரை நசூர்தீன், நான் எனது அண்ணன் சார்பாக பள்ளிவாசல் கட்டுவதற்காக கொடுத்த பணம்
என்ன ஆனது என்று வினவியிருக்கிறார். அதற்கு பாக்கர், ஆம்! நீங்கள் கொடுத்த பணம் செலவிடப்படாமல் இருக்கிறது. இன்னும்
எதுவும் செய்யவில்லை; சொல்றேம்மா
என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் பாக்கர், பாலியல் மற்றும் பொருளாதார மோசடி காரணமாகத் தமிழ்நாடு தவ்ஹீது
ஜமாஅத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட செய்தியை அறிந்த நசூர்தீன், தான் பாக்கரிடம் கொடுத்த ரூ. 50,000த்தின் நிலை என்ன ஆனதோ என்ற அதிர்ச்சியில் இராமநாதபுரத்தில்
பீ.ஜே. அவர்களை சந்தித்து இது தொடர்பாக விசாரித்த போது, டிஎன்டிஜே தலைமையகத்தில் உள்ள வரவு - செலவு கணக்குகளில் பள்ளிவாசல்
வகைக்காக ரூ. 50,000 பாக்கர் மூலமாக
வரவு வைக்கப்படவில்லை என்ற உண்மை தெரிய வந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நசூர்தீன், பாக்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, நீங்கள் என்னிடம் பணம் தரவே இல்லை. நீங்கள் சொல்வது பொய். நீங்கள்
என்னிடம் பணம் கொடுப்பதற்கு நான் உங்கள் மாமனுமில்லை; மச்சானுமில்லை என்று பாக்கர் பதில் கூறியது நசூர்தீனுக்கு பெரும்
அதிர்ச்சியாக இருந்தது.
மேலும் பாக்கர் பேசும் போது, நேரில் வந்து நிரூபியுங்கள் என்று தொலைபேசியில் கூறியதால், நேரில் சென்னைக்கு வந்திருக்கிறார் நசூர்தீன். பாக்கரிடம் பணம்
கொடுத்த போது அதை நேரில் பார்த்த சாட்சியான சேதுகரையைச் சேர்ந்த பவுசுல் என்பவரும்
வந்து சாட்சி கூறியுள்ளார்.
நேரிலும் மறுத்த பாக்கர்
நேரில் வந்து கேட்ட போதும், சாட்சியை வைத்து நிரூபித்த பிறகும் தான் பணம் வாங்கியதை பாக்கர்
மறுத்து விட்டு, வழக்கம் போல் அல்லாஹ்வின்
மீது பொய் சத்தியம் இடும் ஆயுதத்தை கையிலெடுக்கத் துணிந்துள்ளார். நசூர்தீனிடம், நான் இப்போது ஒளுவுடன் இருக்கிறேன். சத்தியம் செய்து விடுவேன்
என்று பாக்கர் கூற, அல்லாஹ்வின்
மீது சத்தியம் செய்ய ஒளுவுடன் இருக்க வேண்டுமோ என்று நினைத்த நசூர்தீனும் சாட்சியாக
வந்த பவுசுலும் நாங்களும் ஒளு செய்து வருகிறோம் என்று சொல்லி ஒளு செய்து வந்திருக்கிறார்கள்.
ஒளு செய்து வந்தவர்களிடம் அல்லாஹ்வின் மீதெல்லாம் சத்தியம் செய்ய முடியாது என்று அந்தர்
பல்டி அடித்த பாக்கர், ஐம்பதாயிரம்
நான் வாங்கவே இல்லை. இது சுத்தப் பொய் என்று கூறி அவர்களை வெளியேற்றி விட்டார். பகிரங்க
அறைகூவல்
பாக்கரிடம் அல்லாஹ்வுடைய ஆலயம் கட்ட ஐம்பதாயிரத்தை கொடுத்து
ஏமாந்த நசூர்தீன், பாக்கர் உண்மையானவராக
இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் பணம் வாங்கவில்லை என்று மறுக்கத் தயாரா? என்றும், நான்
கூறும் உண்மையை ஏற்காத பாக்கர், நான்
கொண்டு வரும் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளாத பாக்கர், என்னிடத்தில் முபாஹலா செய்யத் தயாரா? என்றும், பாக்கர்
உண்மையாளராக இருந்தால், அவர் அவரது
மனைவி மற்றும் பிள்ளைகளோடு வரட்டும். நானும் எனது மனைவி மக்களோடு வந்து முபாஹலா செய்கிறேன்
என்று பகிரங்க அறைகூவலை விடுத்துள்ளார்.
தொண்டியப்பாவின் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரம்
கீழக்கரை நசூர்தீன், தொண்டியப்பாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த
அறைகூவலுக்குப் பின்வாங்கி ஓடிய பாக்கர், தொண்டியப்பாவின் மூலம் நசூர்தீனிடத்தில் பேச வைத்துள்ளார். நசூர்தீனிடம்
பேசிய தொண்டியப்பா, சின்ன சின்ன
விஷயத்திற்கெல்லாம் சத்தியம் செய்ய முடியாது. பாக்கர் ஆயிரம் பேரிடம் பணம் வாங்கி இருப்பார்.
ஆயிரம் பேரிடமும் போய் சத்தியம் செய்ய முடியுமா? என்று சால்ஜாப்பு பதிலைக் கூறியதுடன், முபாஹலாவுக்கெல்லாம் வர முடியாது. அதிலெல்லாம் எங்களுக்கு உடன்பாடு
இல்லை. பணத்தைக் கொடுத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு போய்க்
கொண்டே இருங்கள் என்று திமிரான பதிலையும் கூறியுள்ளார்.
மேலும், குர்ஆன்
- ஹதீஸ் அடிப்படையில் மூன்று ஆதாரங்களை நசூர்தீனிடம் முன் வைத்துள்ளார் தொண்டியப்பா.
இந்த ஆதாரங்களே இவர்கள் எப்படிப்பட்ட கேடு கெட்டவர்கள் என்பதையும், குர்ஆன் - ஹதீஸை இவர்கள் பண மோசடி செய்வதற்கு எப்படியெல்லாம்
பயன்படுத்துவார்கள் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகின்றது.
ஆதாரம்: 1
ஒரு முஃமினான சகோதரனுடைய குறையை இந்த உலகில் மறைத்தால், அல்லாஹ் உங்களது குறையை மறுமையில் மறைப்பான் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பாக்கருடைய குறையை பகிரங்கப்படுத்தாமல் மறைத்தால் அல்லாஹ்
உங்களுடைய குறையை மறுமையில் மறைப்பான் என்று பாக்கரது மோசடிக்கு ஆதாரமாக நபிமொழியை
எடுத்து வைத்துள்ளார் தொண்டியப்பா.
ஆதாரம்: 2
இரண்டு முஃமின்கள் மத்தியில் அவர்களை ஒன்று சேர்ப்பதற்காக பொய்
சொல்லலாம். அவ்வாறு பொய் சொல்வது பொய் ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஏற்கெனவே எங்களுக்கும் பீ.ஜே.வுக்கும் பிரச்சினை என்று இருக்கின்ற நிலையில், நீங்கள் இந்த நேரத்தில் இந்த விஷயத்தைக் கூறி மேலும் பிரிவினையை
அதிகமாக்கலாமா? முஸ்லிம்களுக்கு மத்தியில்
இணக்கத்தை ஏற்படுத்த பொய் சொல்வதும் ஹலால் எனும் போது நீங்கள் இப்போது பாக்கர் மீது
மோசடி செய்து விட்டதாக உண்மையைச் சொல்லி பிரிவினையை அதிகமாக்குகிறீர்கள் என்று ஒரு
அபாயகரமான வாதத்தை தொண்டியப்பா முன் வைத்துள்ளார்.
ஆதாரம்: 3
நீங்கள் அல்லாஹ்வுக்காகக் கொடுத்து விட்ட பிறகு, அல்லாஹ் உங்களுக்கு அதற்குரிய கூலியை நிச்சயமாக கொடுத்து விடுவான்.
நீங்கள் அந்தப் பணம் என்ன ஆனது என்று ஆராயத் தேவையில்லை என்ற அற்புதமான (?) வாதத்தையும் தொண்டியப்பா முன் வைத்துள்ளார்.
இதிலிருந்தே இவர்கள் தாங்கள் செய்யக் கூடிய அனைத்து பித்தலாட்டங்களுக்கும்
அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் ஆதாரமாகக்
காட்டுவார்கள் என்பதும் இவர்கள் குர்ஆன் - ஹதீஸை எப்படி வேண்டுமானாலும் வளைப்பார்கள்
என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
இந்த ஹதீஸ் அடிப்படையில் பாக்கரின் குறைகளை மறைக்க வேண்டும்
என்ற தொண்டியப்பாவின் தூர நோக்குத் தீர்ப்பை இங்கே அலசுவோம்.
தொண்டியப்பாவுடன் இக்பால், இத்ரீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு அறைக்குள் ஒன்றாக இருக்கிறார்கள்
என்று உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். பேசி விட்டுக் கலைந்து சென்ற பின் பார்த்தால், தொண்டியப்பாவின் சட்டையில் இருந்த பத்தாயிரம் ரூபாயைக் காணவில்லை.
அதை இக்பால் தான் எடுத்தார். நான் பார்த்தேன் என்று இத்ரீஸ்
கூறுகிறார். அதை என்னிடத்தில் நீ சொல்லியிருக்க வேண்டாமா? என்று தொண்டியப்பா இத்ரீஸைக் கண்டிக்கும் போது, ஒரு முஃமினுடைய குறையை மறைக்க வேண்டாமா? அதனால் தான் நான் சொல்லவில்லை என்று இத்ரீஸ் பதிலளிக்கிறார்.
இத்ரீஸ் அளிக்கும் இந்தப் பதிலை தொண்டியப்பா ஏற்றுக் கொள்வாரா? அப்படியானால் இந்த ஹதீஸிற்கு இவர்கள் கூறும் பொருள் கிடையாது
என்பதை மார்க்க விஷயம் தெரிந்த யாரும் அறிந்து கொள்ளலாம். இரண்டு பேர் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்கல் ஒருவர், எங்கிளுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பயுங்கள் என்று
கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் ஆம். அல்லாஹ்வின் தூதரே!
அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பயுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள் என்றார்.
நபி (ஸல்) அவர்கள், பேசுங்கள்
என்றார்கள். அந்த மனிதர், என் மகன் இவரிடம்
கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான்.
ஆகவே,
மக்கள் என்னிடம், உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும்
பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்கடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், (திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்து விட்ட) என் மகனுக்கு
நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவருடைய மனைவிக்குத் தான்
என்றும் தெரிவித்தார்கள் என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே
நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பக்கிறேன்: உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்கடமே
திருப்பித் தரப்படும் என்று கூறிவிட்டு, அவருடைய மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு
நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு
உத்தரவிடப் பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ்
அப் பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். ஆகவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.
அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி)
நூல்: புகாரி 6634
மெத்தப் படித்த மேதாவி, முற்றிலும் தெரிந்த முஃப்தீ தொண்டியப்பாவின் கருத்துப்படி நபி
(ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரின் குறையை மறைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மறைக்காமல்
நபி (ஸல்) அவர்கள் மக்கள் மன்றத்தில் போட்டு இதை உடைக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கன் காலத்தில் மக்கா வெற்றிப் போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி
திருடி விட்டாள். ஆகவே, அவளுடைய குலத்தார்
(தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள்
(நபி -ஸல்- அவர்கடம்) அவளுக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது
முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகல் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்தி விடும்
படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்? என்று கேட்டார்கள். உடனே உஸாமா (ரலி) அவர்கள், எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப்
பிறகு,
நிற்க, உங்களுக்கு
முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும் போது அவனை
(தண்டிக்காமல்) விட்டு வந்ததும், பலவீனமான
(பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும் போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும் தான்.
முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே
திருடி விட்டிருந்தாலும் அவளது கையையும் நான் வெட்டியிருப்பேன் என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில்
பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டாள்; மேலும் மணம் புரிந்தும் கொண்டாள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர், நூல்: புகாரி 4304
தூர நோக்குப் பார்வை கொண்ட (?) தொண்டியப்பாவின் கருத்துப்படி தூதர் (ஸல்) அவர்கள் திருடிய அந்த
முஸ்லிம் பெண்ணின் குறையை மறைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அப்பெண்ணிற்காகப்
பரிந்துரை செய்ய வந்த உஸாமாவை நபி (ஸல்) அவர்கள் வெளுத்துக் கட்டுகிறார்கள். அதுவும்
சொற்பொழிவு நிகழ்த்தி உஸாமா செய்த தவறையும் சேர்த்து வெளிப்படுத்துகின்றார்களே!
இவர்களின் வாதப்படி பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் வெளுத்துக்
கட்டாமல் சொற்பொழிவு நிகழ்த்தி வெளிப்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு
செய்யவில்லை.
நபி (ஸல்) அவர்கள் அஸ்த் என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை
(ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு
வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்)
அவர்கள்,
இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து
கொண்டு,
தமக்கு அன்பப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே!
என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கல் யாரேனும் அந்த ஸகாத்
பொருல் இருந்து (முறை கேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நால் தன் பிடரியில் சுமந்து
கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள்.
பிறகு,
அவர்களுடைய அக்குள்கன் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத்
தம் கைகளை உயர்த்தி, இறைவா! (உன்
செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மும்முறை கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி)
நூல்: புகாரி 2597
பொது நிதி வசூலிக்கச் சென்றவர் அன்பளிப்பு வாங்கியதைக் கூட அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இது எனக்குரியது என்று கூறிய அந்த மனிதரின் தவறை
நபி (ஸல்) அவர்கள் மறைக்கவில்லை. மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் அம்பலப்படுத்துகின்றார்கள்.
ஆனால் இவர்களோ பொது நிதியைக் கையாடல் செய்வதைக் கூட மறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட முஃப்தீ தொண்டியப்பாவின் விளக்கப்படி
பார்த்தால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தில் ஒரு சட்டம் கூட தேராது. பொய்யன்டிஜே மேடையில்
பேசியது போல் மறு ஆய்வு செய்து குற்றவியல் சட்டத்தைத் தூக்கி விடுவது இடம் பெற்றிருந்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. ஹதீஸை விளங்க வேண்டிய விதத்தில் விளங்காதது தான் இந்தக் குறைக்
குடங்களின் குருட்டு விளக்கத்திற்கும் கூறு கெட்ட வியாக்கியானங்களுக்கும் அடிப்படைக்
காரணம். இனி, குறையை மறைப்பது சம்பந்தப்பட்ட
ஹதீஸின் சரியான விளக்கம் என்ன? என்பதைப்
பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு
முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான்.
எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு
செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ
அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நான் துன்பங்கல் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர்
ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நால் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 2442
இந்த ஹதீஸ் கூறுவதென்ன?
1. ஒருவர் கடந்த காலத்தில் சில தவறுகளைச் செய்திருப்பார். பின்னர்
அவர் திருந்தி நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பார். மக்கள் அவரை இப்போது நல்லவர் என்று
பாராட்டவும் செய்வார்கள். அப்படி மக்கள் அவரை பாரட்டும் போது, கடந்த காலத்தில் அவர் செய்த தவறை இப்போது வெளிப்படுத்துவது இந்த
ஹதீஸின் அடிப்படையில் தவறாகும். 2. ஒரு
முதலாளியிடம் ஒரு தொழிலாளி பணி புரிகின்றார். தொழிலாளி திருடி விடுகின்றார். இதைப்
பார்த்த முதலாளி தனது தொழிலாளியை மன்னிக்கவும் செய்யலாம். தண்டிக்கவும் செய்யலாம்.
தண்டித்தால் அது நிச்சயம் வெளியே தெரியவரும். இப்போது அவர் மன்னிப்பைத் தேர்வு செய்து
தொழிலாளியின் குறையை மறைத்துக் கொள்ளலாம். 3. ஒருவருக்கு எய்ட்ஸ் அல்லது கேன்ஸர் போன்று ஏதாவது நோய் ஏற்பட்டு
அது வெளியே தெரியக் கூடாது என்று அவர் நினைப்பார். பொதுவாக சமுதாயத்தில் யாருக்காவது
நோய் ஏற்பட்டு அது மற்றவருக்குத் தெரிந்து விட்டால் அதை பிறரிடத்தில் சொல்வதில் ஒரு
அற்ப சந்தோஷம். இது மாதிரியான கட்டத்தில் ஒருவரின் குறையை மற்றவரிடம் சொல்லாமல் மறைத்தால்
அல்லாஹ் அவரின் குறைகளை மறைக்கிறான்.
ஆனால் அதே சமயம் ஒரு எய்ட்ஸ் நோயாளி ஒரு பெண்ணை மனம் பேசி தனது
குறையை அப்பெண்ணிடம் தெரிவிக்காமல் திருமணம் முடிக்கப் போகிறார் என்றால் இப்போது அவரது
குறையை மறைக்க முடியாது. மறைக்கக் கூடாது. காரணம் இது ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைப் பாதிக்கச்
செய்துவிடும். (விவாகரத்துச் செய்யப்பட்ட) நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா
பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப்
பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார்.
(கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்).
முஆவியோ,
அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து
கொள் என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் நீ உசாமாவை மணந்து கொள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை
வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அறிவிப்பவர்: ஃபத்திமா பின்த் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம் எனவே இது போன்ற கட்டத்தில் உண்மையைச் சொல்லித்
தான் ஆக வேண்டும். குறைகளை மறைத்தல் என்பது சில பிரச்சனைகளிலும் சூழ்நிலைகளிலும் வருமே
தவிர எல்லா நிலைகளிலும் வராது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பிறரின் உயிர், மானம், பொருளாதாரத்தைப்
பறிக்கும் விஷயத்தில் குறையை மறைத்தல் என்பது வராது. குற்றவியல் சட்டங்களில் குறையை
மறைத்தல் வராது. நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள, அன்பளிப்பைத் தனக்கு என்று சொந்தம் கொண்டாடியவரின் ஹதீஸ், திருடிய பெண்ணுக்கு உஸாமா பரிந்துரை செய்த ஹதீஸ் ஆகியவை இதைத்
தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விளக்கத்தையும் வேறுபாட்டையும் தெரியாத தொண்டியப்பா, பாக்கர் தன் பையில் போட்டுக் கொண்ட பள்ளிப் பணத்திற்கு வக்காலத்து
வாங்கி தனக்குச் சாதகமாக இந்த ஹதீஸை வளைக்கின்றார். இப்படி இவர்கள் குர்ஆனையும் ஹதீஸையும்
வளைக்கும் போது இவர்களைத் தோலுரித்துக் காட்ட நாமும் தயங்க மாட்டோம்; தாமதிக்க மாட்டோம்.
EGATHUVAM JUL 2009