Apr 3, 2017

வேரறுக்கும் ஆமெரிக்கா வேடிக்கை பார்க்கும் ஆரபியா

வேரறுக்கும் ஆமெரிக்கா வேடிக்கை பார்க்கும் ஆரபியா

1991ஆம் ஆண்டு "அப்பன் புஷ்' இராக்கில் நுழைந்து விளைவித்த அக்கிரமங்கள், அநியாயங்கள் மற்றும் அதன் பாதிப்புகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்நாட்டை 2003ஆம் ஆண்டு "மகன் புஷ்' ஆக்கிரமித்தான்.

சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்று குற்றம் சாட்டி அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் இராக்கில் நுழைந்தன.

ஓர் இறையாண்மை மிக்க அரபு நாட்டிற்குள் படையெடுத்துச் செல்ல வேண்டுமாயின், அதுவும் நியாயமான காரணத்தை முன்னிட்டுச் செல்ல வேண்டுமாயின் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி பெற்ற பின்னர் தான் செல்ல வேண்டும்.

ஆனால் சாத்தானிய சதிகாரன் ஜார்ஜ் புஷ் அத்தகைய அனுமதி எதுவும் பெறாமலேயே அத்து மீறி இராக்கில் நுழைந்தான். உள்ளே நுழைந்த பின் இந்த அநியாயக்காரன் செய்த அக்கிரமங்களைக் கொஞ்சம் பட்டியலிடுவோம்.

உயிர்க் கொல்லி ஆயுதங்களை சதாம் வைத்திருக்கின்றார் என்று குற்றம் சுமத்தி இராக்கில் நுழைந்த ஜார்ஜ் புஷ் அங்கு சுமார் ஆறரை லட்சம் மக்களைக் கொன்று குவித்து, சதாமின் ஆட்சியையும் கவிழ்த்து, அவரைச் சிறை பிடிக்கின்றான்.

ஆனால் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதையும் காண முடிந்ததா? இல்லை! இனியும் காணப் போவதில்லை.

பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி இராக்கை ஆக்கிரமித்தது ஏன்? என்று கேட்கும் உலக மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக ஒரு பொம்மை நீதிமன்றத்தை புஷ் உருவாக்குகின்றான்.

போரில் கைது செய்யப் படுபவர்களை ஆக்கிரமிப்பு அரசு விசாரிக்கக் கூடாது; சர்வதேச நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்ற விதிகளையெல்லாம் மதிக்காமல் புஷ் நியமித்த இந்தப் பொம்மை நீதிமன்றம் சதாமை விசாரிக்கின்றது.

சதாம் ஹுசைனைப் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச நீதி மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள நீதித் துறையினரும், மனித உரிமை அமைப்பினரும் விடுத்த வேண்டுகோளை உதாசீனம் செய்து விட்டு, பொம்மை நீதிமன்றத்திடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

சதாமை விசாரிக்கும் பொம்மை நீதிமன்றம் செல்ல வேண்டிய திசையையும், சொல்ல வேண்டிய தீர்ப்பையும் ஜார்ஜ் புஷ்ஷே தீர்மானிக்கின்றான்.

சதாமின் வழக்கறிஞரான அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ரம்ஸி கிளார்க் என்பவர் இந்த அநியாயத்திற்கு எதிராக வாதாடிய போது அவரை நீதிமன்றத்திற்கு வெளியே தூக்கி வீசினான்.

இந்த நீதிமன்றத்தில் முதன் முதலில் பொறுப்பேற்ற தலைமை நீதிபதி அரசியல் நிர்ப்பந்தம் என்று பகிரங்கமாகக் காரணம் கூறி பதவியை விட்டு விலகினார். நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிபதியும் பொறுப்பேற்க வரவில்லை. இத்தனைக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, புஷ்ஷின் கைப்பாவையானான்.

சதாமுக்காக வாதாட வந்த வழக்கறிஞர்களில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

தன் வழக்கறிஞரைச் சந்திப்பதற்குக் கூட சதாம் ஹுசைனுக்குச் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குற்றம் செய்ததற்குரிய ஆதாரங்கள் சதாமின் வழக்கறிஞர்களிடம் சமர்ப்பிக்கப்படவில்லை; அவருக்கு எதிராகச் சாட்சி சொன்னவர்களை குறுக்கு விசாரணை செய்வதற்கும் அனுமதியில்லை.

விசாரணை முடிவதற்குள்ளாகவே மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே, "சதாம் புத்தாண்டுக்கு முன் தூக்கில் இடப்படுவார்'' என்று இராக் பொம்மை அரசாங்கத்தின் பிரதமர் நூரி மாலிக்கி அறிவிப்புச் செய்தார்.

சுன்னத் வல் ஜமாஅத்தினரின் பரம எதிரியும், சதாமைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருப்பவர்களுமான ஷியாக்களிடம் ஒப்படைத்து, தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் செய்தான் இந்த ஜார்ஜ் புஷ்.

முஸ்லிம்களின் புனித நாளான பெருநாளைத் தேர்வு செய்து அந்த நாளில் சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டு, தனது முழு இஸ்லாமிய வெறுப்பையும், விரோதத்தையும் வெளிப்படுத்திக் கொண்டான்.

எது மனித குலத்திற்கு எதிரான குற்றம்?

இந்தத் தண்டனை எதற்காக? மனித குலத்திற்கு எதிராக சதாம் ஹுசைன் குற்றமிழைத்தார் என்று இவன் கூறுகின்றான்.

துஜைல் என்ற நகரத்தில் 148 ஷியாக்கள் சதாமின் ஆட்சியைக் கவிழ்த்து, அவரைக் கொலை செய்ய முயன்றனர். அதனால் இந்த 148 பேரும் தண்டிக்கப்பட்டனர். இது தான் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறி ஜார்ஷ் புஷ் என்ற கயவனால் சதாம் ஹுசைன் படுகொலை செய்யப்பட்டார்.

148 பேரைக் கொன்றது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றால், இந்த வெள்ளை வெறியன் இராக்கில் நுழைந்த நாள் முதல் சதாமைக் கொலை செய்த காலம் வரை, இன்னும் சொல்லப்போனால் இன்று வரை கொன்று குவித்திருக்கும் உயிர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கு மேல்!

இது மனித குலத்திற்கு எதிரான குற்றமில்லையா? இதற்காகவல்லவா முதலில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்!

இப்படி உலகெங்கும் உள்ள மக்கள் கேட்கின்றனர்! ஆனால் அரபுலகத் தலைவர்கள் கேட்கவில்லை.

இன்று வரை இராக்கில் அன்றாடம் மழலைச் செல்வங்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பாகுபாடில்லாமல் முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக அமெரிக்கப் படையினரால் வேரறுக்கப் படுகின்றனர். இன்னும் அம்மக்களை வேரறுக்க 21,500 படையினரை      புஷ் அனுப்பி வைத்துள்ளான். இத்தனைக்குப் பிறகும் இந்த அரபுலகத் தலைவர்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

(அல்குர்ஆன் 4:75)

என்று அல்லாஹ் கேட்பதைப் போன்று இராக் மக்களுக்காகப் போர் புரிவதை விட்டு விட்டு, இந்த மாபாவி அனுப்பி வைத்திருக்கும் காண்டலீஸா ரைஸ் என்பவளுடன் அரபகத் தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சதாம் ஹுசைனைக் கொலை செய்து விட்டு, ஷியாக்கள் அடைந்த மகிழ்ச்சி தான் அந்த முக்கியமான விஷயம்! யார் இந்த ஷியாக்கள்? யூதர்களின் மறு பதிப்பு தான் இந்த ஷியாக்கள்!

முஸ்லிம்களுக்கு மத்தியில் ஊடுறுவி, முஸ்லிம்கள் ஒருவரை மற்றொருவர் வெட்டிச் சாய்க்கும் விஷத்தைப் பரப்பி, ஏகத்துவக் கொள்கையை அடித்துத் தகர்க்கும் ஆபத்தான கொள்கை வாதிகள் தான் ஷியாக்கள்!

அந்த ஷியாக்களுடன் சதாம் ஹுசைன் 1980 முதல் எட்டு ஆண்டு காலம் போர் புரிவதற்கு முழுக்க முழுக்க உதவியவர்கள் தான் இந்த அரபக ஆட்சியாளர்கள்! துஜைலில் 148 பேர் கொல்லப்பட்ட போதும், இன்னும் சதாம் மீது என்னென்ன குற்றச்சாட்டு உள்ளதோ அத்தனையின் போதும் சதாமுக்கு உதவியாக இருந்தவர்கள் தான் அரபக ஆட்சியாளர்கள்!

எந்த யூதர்களும், ஷியாக்களும் அரபகத்தில் வலுப்பெற்று விடக் கூடாது என்பதற்காக சதாமும், மற்ற அரபுத் தலைவர்களும் போராடினார்களோ அந்த ஷியாயிஸம் இன்று தலை விரித்தாடுகின்றது.

யூத சீயோனிஸத்திற்கு ஒத்த ஷியாயிஸத்தின் இந்த வளர்ச்சியை இப்போது அரபக ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இதற்குக் காரணம் என்ன? படை நடத்தி வரும் அமெரிக்காவுக்கு எதிராகக் கிளம்பாமல் தொடை நடுங்கக் காரணம் என்ன?

இவர்களுடைய உள்ளத்தில் "வஹ்ன்' வந்து விட்டது.

"உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கி-ருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களி-ருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்!  உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் "வஹ்னை' ஏற்படுத்தி விடுவான்'' என்று பதிலளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?'' என்று நாங்கள் கேட்டோம். "உலகத்தை நேசிப்பது; மரணத்தை வெறுப்பது'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: அஹ்மத் 21363

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு இன்று நிறைவேறி வருகின்றது. மரண பயம் இந்த அரபக ஆட்சியாளர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றது.

அதனால் தான் இந்தத் தொடை நடுக்கம்! இத்தனைக்குப் பிறகும் இவர்கள் துணியவில்லை எனில் அல்லாஹ் கூறுவது போல் அவனுடைய கட்டளைக்காகக் காத்திருக்க வேண்டியது தான்.

"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 9:24)

அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டால் அப்போது இவர்கள் மாபெரும் அழிவைச் சந்திக்க நேரிடும். அல்லாஹ் காப்பானாக!


அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அல்லாஹ்வின் போர் வாள் மாவீரர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களால் தான் இந்த இராக் வெற்றி கொள்ளப்பட்டது. அதற்குக் காரணம் காலித் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. ஆனால் இன்று இவர்களோ மரணத்தைக் கண்டு பயப் படுகின்றார்கள். அதனால் தான் பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியமர்த்தியதைக் கண்டும் காணாமல் இருந்தோம்; தற்போது இராக்கையும் யூத, கிறித்தவர்களிடம் இழந்து கொண்டிருக்கின்றோம்.

EGATHUVAM FEB 2007