குடும்பவியல் 18 - ஆண்களின் கண்டிப்பும் பெண்களின் கரிசனமும்
தொடர்:
18
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையில் வித்தியாசம் இருக்கிறது என்பதை
அறிவியல் ரீதியாக அறிந்தோம். இப்போது ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு சிந்தனை முக்கியமா? நினைவாற்றல் முக்கியமா? என்று ஆராய்ந்தால், சிந்தனைதான் முக்கியம்.
பொருளாதாரத்தை எப்படி பயன்படுத்துவது, இதில் பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதினால் நமக்கு இலாபமா? நஷ்டமா? என்றெல்லாம் ஆராய்பவர்கள் ஆண்கள்தான்.
இதில் பெண்கள் ஏமாளிகளாகத் தான் இருக்கிறார்கள். விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு.
நடைமுறையில் உதாரணம் சொல்வதாக இருப்பின், 1000 ரூபாய் பொருளை 2000 ஆயிரம் ரூபாய்க்குத்
தவணை முறையில் விற்கிறார்கள். அதை நம்பி ஏமாறுகிறவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள்.
ஆண்களில் பெரும்பாலும் இப்படி ஏமாற மாட்டார்கள். குறைவாகப் பணம் கட்டினால் நிறைய கிடைக்கும்
என்று நம்பி ஏமாறுவதும், சீட்டுக் கட்டி ஏமாறுபவர்களும்
அதிகமாகப் பெண்களாகத் தான் இருக்கிறார்கள்.
குடும்பம் என்பது பொருளாதார ரீதியாக நாம் எடுக்கிற முடிவு சரியாக
இருக்க வேண்டும்; குடும்பத்திற்கு நன்மை தரக்கூடிய
காரியங்களில் நாம் எடுக்கும் முடிவு சரியாக இருக்க வேண்டும்.
ஒரு அலுவலகத்திற்குத் தலைமை நிர்வாகியைத் தேர்வு வேண்டுமெனில், 25 ஆண்டுகளாக குமாஸ்தாவாக வேலை செய்பவரைப் போடவேண்டுமா? அல்லது இந்த அலுவலகத்தின் அனைத்துப் பணிகளை திறம்பட செயல்படுத்துகிற
திறமை வாய்ந்தவரை நிர்வாகத்தில் போட வேண்டுமா? நேற்று வந்தவராக
இருந்தாலும் அதற்குரிய திறமை இருப்பவரைத் தான் நிர்வாகத்தில் போடுவோம். 25 ஆண்டுகளாக நமது நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை செய்திருக்கிறார்
என்று அங்கு பரிதாபப்படுவதற்கு அவசியமில்லை.
காவல் துறை நிர்வாகத்தில் ஒடந போன்ற தலைமைப் பணிக்காக மேற்படிப்பை
முடித்து அதில் பல்வேறு பரிசோதனைகளைக் கடந்து பல தடவை தோற்று, பிறகு வெற்றி பெறுகிற நபர்களைத் தான் தேர்வு செய்கின்றனர். இவரை
விடவும் காவல் நிலையங்களில் 30 வருடம், 40 வருடங்கள் வேலை பார்க்கும் அனுபவசாலிகள் என்று காவல் துறை நிர்வாகம்
அவர்களைத் தேர்வு செய்வதில்லை. ஏனெனில் ஒரு ஏட்டாக வேலை செய்பவருக்குக் காவல்துறையின்
தலைவர் பணியைத் திறம்பட செய்ய முடியாது. இதற்கெல்லாம் மூளையானது சிந்தனைத் திறன் மிக்கதாக
இருக்கவேண்டும்.
எனவே ஆண் பெண்ணை நிர்வாகிப்பான் என்று அல்லாஹ் சொல்வது, அந்தத் தகுதியை ஆணுக்குக் கொடுத்து விட்டுத்தான் சொல்கிறான்
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகவும் இருக்கிறது. ஒரு
ஆண் நிர்வகிப்பான் என்பது ஆண் என்ற காரணத்தினால் மட்டுமல்ல. உடல் உறுப்புக்கள் ரீதியாகவும்
மன ரீதியாகவும் ஆராய்ந்து அவற்றில் ஆணுக்குத் தான் அந்தத் தகுதி இருக்கிறது என்று அறிவியல்
ஆய்வாளர்களும் உடற்கூறு ஆய்வாளர்களும் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.
பெண்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாவது ஏன்?
மூளையில் உணர்வுகள் சம்பந்தப்பட்ட செயல்திட்ட நாளங்கள் (கஒஙஇஒஈ
நவநபஊங) இருக்கிறது. பாசம் என்பது தர்க்க ரீதியாக
உருவாவதில்லை. பிள்ளை என்றோ, அண்ணன் என்றோ, தந்தை என்றோ ஒருவர் மீது விருப்பம் வைத்துவிடுவோம். இதற்கென
மூளையில் ஒரு பகுதி உண்டு. இந்தப் பகுதி ஆணுக்கு மிகவும் திறன் குறைவாக இருக்கிறது.
பெண்களுக்கு உணர்ச்சி சம்பந்தப்பட்ட மூளையின் பகுதி நன்றாகத் திறம்பட வேலை செய்கிறது
என்று ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். அதனால்தான் பெண்களால் பிள்ளைகளை சரியாகக் கவனிக்க முடிகிறது.
ஆண்களைப் பொறுத்தவரை இரண்டு தடவை மூன்று தடவை பிள்ளைகளைத் தூக்கிக்
கொஞ்சுவோம். அவ்வளவு தான். பாசத்தைக் காட்டுவதாக இருந்தாலும் அளவோடு தான் காட்டுவார்கள்
ஆண்கள். ஆனால் பெண்களுக்கு 24 மணி நேரமும் குழந்தைகளைத் தூக்கிக்
கொஞ்சினாலும் அலுப்பு தட்டாமல் இருப்பதற்குக் காரணம் இந்த உணர்ச்சி நாளங்கள் திறம்பட
செயல்படுவதினால் தான். இதற்குக் காரணம் பெண்ணுக்கு கஒஙஇஒஈ நவநபஊங இறைவனால் கூடுதலாக
படைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இது அறிவியல் உண்மை. இந்தப் பகுதி பெண்ணுக்கு பெரிது.
ஆணுக்கு சிறிது. அதனால் தான் சீரியல் நாடகங்களில் உட்கார்ந்து கொண்டு அழுதுகொண்டு இருக்கிறார்கள்.
அதில் உணர்ச்சி தான் முக்கியமாக இருக்கிறது.
ஆண்களின் ரசனை கூட குத்துச் சண்டையும் மல்யுத்தமும் கிரிக்கெட்டும்
கால்பந்துமாகத் தான் இருக்கிறது. கரடுமுரடானவைகளைத் தான் ஆண்கள் ரசிக்கின்றனர். ஆணுக்கு
வீரம். பெண்ணுக்கு உணர்ச்சி. இப்படித்தான் இறைவன் படைத்திருக்கிறான்.
இதற்கு வளர்ப்பு முறையெல்லாம் காரணம் கிடையாது. ஏனெனில் எல்லாப்
பெண்களும் இப்படி இருப்பதற்குக் காரணம், படைப்பிலக்கணமே
அப்படியிருக்கிறது என்பதுதான். இப்படி உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான், குழந்தையின் அசைவுகளை வைத்தே அதன் தேவையை பெண்கள் கண்டுபிடித்து
விடுவார்கள். குழந்தை ஒரு மாதிரியாகப் போனால் தூக்கத்திற்கு ஏங்குகிறது என்று கண்டுபிடித்து
விடுவார்கள். இது பசிக்கு உரியது, இது தூக்கத்திற்கு உரியது, இது வயிற்று வலிக்கு உரியது, இது
செரிக்காமல் இருப்பதால் வந்தது என்றெல்லாம் கண்டுபிடித்து விடுபவர்கள் பெண்கள் தான்.
ஆண்களுக்கு இப்படியெல்லாம் சொல்லவே முடியாது.
எனவே பாசம் காட்டுவது, மனனம் செய்வது, அக்கறை காட்டுவது போன்ற வேலைகளை பெண்கள் செய்து கொள்ள வேண்டியதுதான்.
ஆண்களுக்கு இதில் அக்கறையே இருக்காது.
உதாரணத்திற்கு, கணவனுக்குத்
தலைவலி வந்தால் மனைவி மிகவும் அக்கறை எடுத்துப் பார்ப்பாள். தைலம் தடவி விடுவாள். பரிதாபத்துடன்
கவனிப்பாள். ஆனால் அதுவே பெண்ணுக்குத் தலைவலி காய்ச்சல் என்றால் மனைவி அக்கறை எடுத்தளவுக்கு
ஆண் எடுத்துக் கொள்ளமாட்டான். தலைவலித்தால் மாத்திரை போட்டுக் கொள் என்றோ மருத்துவமனைக்குச்
சென்றுவிடு என்றோ சொல்லிக் கொண்டு இடத்தைக் காலிசெய்து விடுவார்கள்.
ஆண்கள் இப்படி இருப்பதை மனைவிமார்கள் சொல்லிக் காட்டி சச்சரவு
செய்வதையும் கண்கூடாகப் பார்க்கத்தான் செய்கிறோம். இதற்குக் காரணம் ஆண்களுக்கு அப்படித்தான்
செயல்திட்ட நாளங்கள் (டதஞஏதஆஙஒசஏந) இருக்கிறது. இப்படி நடப்பதை வைத்துக் கொண்டு பாசம்
கூடுதல் குறைவு என்றெல்லாம் முடிவெடுத்துவிடக் கூடாது. பெண்களுக்கு இறைவன் பாசம் காட்டுவதைப்
போன்ற மூளை நரம்புகளைப் படைத்துள்ளான். பெண் அளவுக்கு அந்த நாளங்கள் ஆணுக்குக் கிடையாது
என்பதே நிதர்சன அறிவியல் உண்மை. இறைவனின் படைப்பே அப்படித்தான் இருக்கிறது.
இப்படி அளவோடு பாசம் இருப்பது தான் குடும்ப நிர்வாகத்திற்கு
சரியான தன்மையாக இருக்கிறது. தந்தை கண்டிப்புடன் பிள்ளையை வளர்ப்பதற்குக் காரணம் அளவோடு
பாசம் வைப்பதினால் தான். தாய் தான் பிள்ளை கெட்டுப் போவதற்குக் காரணமாக அமைகிறாள்.
ஏனெனில் பாச உணர்வு கண்ணை மறைத்துக் கொண்டு மதுக் குடிப்பதற்கும், தவறான வழியில் செல்வதற்கும் பிள்ளைக்குத் தாய் உதவுகிறாள். ஆனால்
தந்தை அப்படி உதவமாட்டார். அதனால்தான் குடும்பத்தை நிர்வகிக்கிற பொறுப்பை அல்லாஹ் ஆணிடம்
கொடுத்துள்ளான்.
நாம் பெற்ற பிள்ளைகள் தங்களது காரியத்தைச் சாதிப்பதற்கு தந்தையைப்
பயன்படுத்துவதை விட தாயைத்தான் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலம்
பெண்ணின் தன்மையை சிறுவர்கள் கூட விளங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு
சைக்கிள் வேண்டுமானால், தாயிடம்தான் முறையிடுகிறது.
காரணம் தாய்க்குரிய செயல்திட்ட நாளங்களை அந்தக் குழந்தை விளங்கியிருக்கிறது. ஆனால்
பச்சைக் குழந்தைக்கு விளங்கிய விஷயம் கூட பெண்ணியம் பேசும் அறிவு (?) ஜீவிகளுக்கு விளங்காமல் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. மூளையை
ஆராய்ச்சி செய்து இதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்.
வளர்ப்பு முறை தான் காரணமா?
இன்னும் சொல்வதெனில், கேம்ப்ரிட்ஜ்
என்ற உலகளாவிய பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். பெண்ணை இப்போது உள்ளபடி
வளர்த்ததனால் பெண் என்ற அடையாளம் ஏற்பட்டுவிட்டது என்றும், ஆணை இப்போது உள்ளபடி வளர்த்ததால்தான் ஆண் என்ற அடையாளம் ஏற்பட்டு
விட்டது என்ற ஒரு வாதம் வைக்கப்பட்டது. வளர்ப்பு முறைதான் பெண் என்றும் ஆண் என்றும்
பிரிக்கிறது என்ற கருத்தை ஆய்வு செய்தனர். அதில் வளர்ச்சியடையாத ஒரு வயதுக் குழந்தைகளை
யாருடைய வளர்ப்பிலும் உருவாகாத குழந்தைகளை ஆய்வுக்குட்படுத்தினார்கள். இந்தக் குழந்தைகளின்
எண்ண ஓட்டங்களும் செயல்திட்ட நாளங்களும் எப்படி இருக்கிறது என்று நூற்றுக்கணக்கான குழந்தைகளை
வைத்து ஆராய்கின்றனர்.
இந்த ஆய்வில் பல நூறு ஆண், பெண்
குழந்தைகளை கலந்து வைத்துக் கொண்டு மல்யுத்தம், கபடி விளையாட்டு
போன்ற வீரதீரமான காட்சிகளையும் சீரியல், குழந்தையைக்
கொஞ்சுவது,
அழுவது போன்ற பாசம் நேசம் சார்ந்த மென்மையான காட்சிகளையும் திரையில்
ஓடவிட்டுப் பார்த்தால், வீரதீரமான காட்சி வருகிற போது
ஆண் குழந்தைகள் ரசிக்கின்றனர். மென்மையான காட்சிகள் வரும் போது பெண் குழந்தைகள் ரசிக்கின்றனர்.
இதற்குக் காரணம், பெண் குழந்தை
படைக்கப்படும் போதே அதற்கான காரணங்களுடன் தான் படைக்கப்படுகிறது. ஆண் குழந்தையும் அதற்குண்டான
தன்மைகளுடன் தான் படைக்கப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ளாத பெண்ணியல் ஆதாரவாளர்கள்
என்ற பெயரில் தங்களை பெரிய அறிவு ஜீவிகளாக நினைத்துக் கொள்பவர்கள், வளர்க்கும் முறையில் தான் ஆண் பெண் வித்தியாசம் உருவாகிறது என்று
கொக்கரிப்பதைப் பார்க்கிறோம்.
ஆனால் இந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம்தான் முதன் முதலில் பெண்ணுக்கும்
ஆணுக்கும் வித்தியாசம் இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்கள். என்னதான் வளர்த்தாலும்
பயிற்சி கொடுத்தாலும் ஆணும் பெண்ணும் தனித்தனியான கட்டமைப்பில்தான் உருவாக்கப்படுகின்றனர்
என்றும் இருவரின் சிந்தனையும் திறனும் வெவ்வேறானது தான் என்று நிரூபித்து பெண்ணியல்
ஆதரவாளர்களின் மூடக் கருத்தை உடைத்தனர்.
எனவே இறைவன் ஆண்கள் தான் பெண்ணை நிர்வகிக்க வேண்டும் என்று பொத்தாம்
பொதுவாகச் சொல்லிவிடாமல் அதற்கான காரணத்துடன் தான் சொல்கிறான். இதற்கு இன்னுமொரு ஆய்வை
ஆதாரமாகக் கூறலாம்.
மூளை பெண்களுக்குச் சிறியதாகவும் ஆண்களுக்குப் பெரியதாகவும்
இருப்பதாகக் கண்டுபிடிக்கின்றனர். இதையும் கூட தெளிவாக ஆய்வு செய்து விட்டனர். 25 வருடங்கள் மதுபானம் குடிக்காத ஒருவனின் மூளையின் அளவை ஸ்கேன்
மூலம் அளந்து விடுகின்றனர். பின்னர் பத்து வருடங்கள் மது குடிக்கிறான் எனில் அவனது
மூளை பெண்களைப் போன்று சிறியதாகத்தான் இருக்கிறது. அப்படியெனில் சிந்திப்பதினால் தான்
மூளை பெரியதாக ஆகிறது என்பதை ஆய்வு செய்து நிரூபிக்கின்றனர்.
மதுபானம் ஒருவன் அருந்தினால் முதலாவது மூளையில் தாக்கும் பகுதி
சிந்தனைக்குரிய பகுதியைத்தான். மற்றபடி சாப்பிடுவான், குடிப்பான், பேசுவான், வேலைகளைச் செய்வான். ஆனால் சிந்திக்கிற பகுதி பாதிக்கப்பட்டுவிடும்.
இப்படி தொடர்ச்சியாக மதுவைக் குடித்துக் குடித்து சிந்திக்கிற செல்கள் தேவையில்லை என்ற
நிலையை உருவாக்கிற போது மூளையின் 100 கிராம் ஆண்களுக்கென
பிரத்தியேகமாக இருக்கிற பகுதி குறைந்துவிடும், அல்லது வளரவே
செய்யாது என்கின்றனர் இன்றைய ஆய்வாளர்கள். அப்படியெனில் சிந்திக்கிற பகுதியை பயன்படுத்துவதன்
மூலம்தான் மூளையின் பெண்ணுக்கில்லாத, ஆணுக்கு மட்டுமே
உள்ள 100 கிராம் அதிகமான பகுதி விரிவடைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனவே சிந்திக்கிற பகுதிக்குத் தான் 100 கிராமுக்குத்
தேவையான செல்களையெல்லாம் அதிகமாக உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இப்படியெல்லாம் பல வகையில் ஆய்வு செய்து சிந்தனை செய்கிற மூளை
பெரிதாக இருக்கும் என்று ஆய்வில் தீர்மானிக்கின்றனர். இது மனிதனுக்கு மட்டும்தான்.
மாட்டு மூளையை மனிதனுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவைகளுக்கு மனிதர்களைப் போன்று எந்த
செயல்திட்ட நாளங்களும் கிடையாது. எனவே சிந்திக்கும் மனிதனுக்கு மூளை பெரிதாகவும் சிந்திக்காத
மனிதனுக்கு அதற்குத் தகுந்தமாதிரி சிறியதாகவும்தான் இருக்கும் என்ற ஆதாரங்களெல்லாம், நிர்வாகத்திற்குத் தகுதியானவன் ஆண்தான் என்று அல்லாஹ் சொன்ன
செய்தியை நிரூபிக்கின்ற ஆதாரங்களாக இருக்கின்றன.
அடுத்து இரத்தத்தை உடல் உறுப்புக்களுக்கெல்லாம் கொண்டு செல்கிற
வேலையைச் செய்கிற இதயத்தினை ஆராய்கின்றனர். நாமெல்லாம் ஆணுடைய இதயமும் பெண்ணுடைய இதயமும்
ஒன்றாகத்தான் செயல்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால் அதை ஆராய்கிற விஞ்ஞானிகள், ஆணின் இதயத்தின் வடிவம் 250 கிராம்
முதல் 300 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கிறது. அதுவே ஆணுடைய இதயத்தில்
பெரிய இதயம் என்று சொல்வதாக இருப்பின் 350 கிராம் வரை
இருக்கும். அப்படியெனில் குறைந்த பட்சம் சிறியது என்று ஆணுக்கு எடுத்துக் கொண்டால்
250 கிராம் எடை கொண்டதாகவும் அதிக பட்சம் ஆணுக்கு 350 கிராம் எடை கொண்டதாகவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் பெண்களை ஆய்வு செய்ததில் பெரிய உடல்வாகு கொண்ட பெண்ணின்
இதயம் என்றால் கூட 300 கிராம் எடையைத் தாண்டாது என்றும்
அறிவியல் உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. இதில் ஆண்களை விட 50 கிராம் குறைந்து தான் காணப்படும். அதுவே பெண்களுக்குச் சிறியது
என்று எடுத்துக் கொண்டால் 200 கிராம் எடைதான் இருக்கும்.
ஆனால் 200 கிராமில் எந்த ஆணுடைய இதயமும் இருக்காது என்று ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர். இப்படி எல்லோருக்கும் இருப்பதற்குக் காரணம் என்ன என்று ஆராய்கிற
போது, ஆண் கடின வேலை செய்வதற்காக இவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்கிற
பேருண்மையை ஒத்துக் கொண்டுள்ளனர். எனவேதான் ஆணிடம் இஸ்லாம் நிர்வாகத்தைக் கவனித்துக்
கொள்ளும் பொறுப்பை வழங்குகிறது. இதிலும் ஆணும் பெண்ணும் சமமாக இல்லை என்கிறது அறிவியல்.
அதேபோன்று மனித உடலில் ஆண் பெண் இருபாலரின் இறைச்சி என்கிற சதைப்
பகுதியை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தனர். அதிலும் ஆண் பெண் சமமில்லை என்பதைத் தான்
விஞ்ஞானம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்திருக்கிறது. சராசரியாக 100 கிலோ எடை கொண்ட ஆணிடம் சதை என்கிற தசை அதாவது எலும்பு, நரம்பு, கொழுப்பு போன்றவைகள் இல்லாமல்
இறைச்சியாக இருக்கிற பகுதி 40 கிலோ எடை என்று கண்டறிந்துள்ளனர்.
அதேபோன்று ஆண்களுக்கு கொழுப்பு 15 சதவீதம் அதாவது 100 கிலோவுக்கு 15 கிலோ கொழுப்பு
இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். 100க்கு 55 கிலோ சதையும் கொழுப்பும் போக எலும்பு, நரம்பு, நாளங்கள் போன்றவைகள் 45 கிலோ இருக்கும் என்கின்றனர்.
பெண்களின் உடலை ஆராய்ந்த போது, சராசரியாக 100 கிலோ எடை
கொண்ட பெண்ணிடம் சதை என்ற இறைச்சிப் பகுதி 30 கிலோ இருக்கிறது.
அதாவது ஆண்களை விட 10 சதவிகிதம் குறைவாகத்தான் பெண்களுக்குச்
சதை இருக்கிறது. அதேபோன்ற கொழுப்பு 27 கிலோ பெண்ணிடம்
இருக்கிறது. அதாவது 100 கிலோ எடை கொண்ட பெண்ணிற்கு
30 கிலோ சதையும் 27 கிலோ கொழுப்பும்
காணப்படுகிறது. ஆண்களை விட கொழுப்பில் பெண்கள் 12 சதவிகிதம்
அதிகமாக இருக்கிறது. ஏறத்தாழ ஆண்களுக்கு இருப்பதைப் போன்று இன்னொரு மடங்கு அதிகமாக
பெண்களுக்கு கொழுப்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இப்படித்தான் ஆணும் பெண்ணும் வித்தியாசத்துடன்
படைக்கப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு ஆணின் உடலை இயக்குவதற்கு அதிகமான எரிபொருள்
தேவை என்பதை உணர்த்துகிறது. அதாவது சதை என்கிற இறைச்சிப் பகுதி செயல்படுவதற்கு அதிகமான
ஊட்டச் சத்து தேவை என்றும், கொழுப்பு இயங்குவதற்கு அதிகமான
எரிபொருள் தேவையில்லை என்றும் உணர்ந்தனர். அதனால் அவர்களுக்கு ஆண்களைப் போன்ற ஊட்டச்
சத்துக்கள் பெரியளவுக்குத் தேவைப்படாது என்றும் கண்டறிந்துள்ளனர்.
அதிகமான எரிபொருள் ஆண்களுக்குத் தேவைப்படுகிறது என்பதால் தான்
பெண்களை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்பது மிகப் பெரிய
அறிவியல் உண்மை. இதை மறுக்க முடியாது. சாப்பிடுகின்ற அளவும் ஆண்களுடன் ஒப்பிடுகிற போது
பெண்களிடம் குறைவுதான். அதுபோன்று சாப்பிடுகிற முறையைப் பார்த்தாலும் ஆண்கள் அனைத்தையும்
நன்றாக மிச்சம் வைக்காமல் ஒன்றும் விடாமல் சாப்பிடுவார்கள். எது கிடைக்கிறதோ அதைச்
சாப்பிட்டு வாழ்கிறவளாகத் தான் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுவும் நடைமுறை உண்மை. அதுவே
அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. அவர்களுக்கு அதிகமான கலோரிகள் தேவையாக இல்லை.
ஏனெனில் சதை குறைவாக இருப்பதால் அதை இயக்கும் அளவுக்கு கலோரி கிடைத்தால் அதுவே போதுமானதாக
இருக்கிறது என்பதுதான் இதற்குரிய காரணம். ஆண்களுக்கு சதை அதிகமாக இருப்பதினால் அதிகமான
கலோரிகள் தேவைப்படுவதால் தான் பெண்களை விட அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்பது யாராலும்
மறுக்கவே முடியாத உண்மையாக இருக்கிறது.
எனவே ஒன்றை நிர்வாகம் செய்வதற்கு முதலில் உடல் திடகாத்திரமானதாக
இருக்க வேண்டும். இதை ஈடுகட்டுவதற்காகச் சில பெண்கள் உடற்பயிற்சியெல்லாம் எடுத்துப்
பார்க்கிறார்கள். என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் இறைவன் படைத்த இயற்கைக்கு ஈடுசெய்யவே
முடியாது என்பது தான் உண்மை. நிச்சயம் ஆண்களைப் போன்று ஆகவே முடியாது.
ஒலிம்பிக்கில் ஒரு பெண்மனி பதக்கம் வாங்கிவிடுகிறாள். ஆனாலும்
பெண்களுக்கான உடல் நிலையில் அவள் ஓடவில்லை என்று ஆய்வாளர்கள் சந்தேகம் கொண்டதால் அந்தப்
பெண்ணின் ஹார்மோன்களை ஆராய்ந்தனர். அதில் ஆண் தன்மைக்கான ஹார்மோன்கள் மிகைத்து இருந்ததால்
முதலில் வந்துள்ளார். பெண்கள் எனில் பெண்களுக்கான நிலையில் இருந்து ஓடி அதில் முதலில்
வந்தால் தான் அந்த பரிசைப் பெறுவதற்கான தகுதியிருக்கும் என்று கூறி, கொடுத்த பதக்கத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட வரலாறெல்லாம் நடந்திருக்கிறது.
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், என்னதான் பெண்கள் என்றாலும் ஒரு பெண்ணை பெண்ணுடன்தான் விளையாட
வைக்கிறார்கள். ஒரு ஆண் குத்துச் சண்டை வீரனுடன் ஒரு பெண் குத்துச் சண்டை வீராங்கனையை
யாராவது போட்டிக்கு வைக்கிறார்களா? அப்படி வைத்தாலும் எவரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பெண்ணுக்கும்
பெண்ணுக்கும் குத்துச் சண்டை வைத்து அதில் ஒரு பெண் வெற்றி பெற்றால்தான் சரியாக இருக்கும்
என்பதை விளங்கியிருக்கின்றனர். இன்று உலக அளவில் இந்தச் சட்டம் எழுதப்படாத விதியாக
நடைமுறைப்படுத்தப் படுவதற்குக் காரணம் ஆண் வேறு, பெண்
வேறு என்றும்,
இருவரும் சமமில்லை என்பதும் தான் காரணம். அதற்கான உடல் அமைப்பு
கிடையாது என்பதும் உண்மை.
மேலும் பெண்கள் கொழு கொழுவென்று இருப்பதற்குக் காரணம் அவர்களின்
உடலில் சதை இருக்கும் அளவுக்கு கொழுப்பு இருப்பதினால் தான். கொழுப்பு இல்லாததினால்தான்
ஆண்களின் உடலைப் பார்த்தால் மெலிந்த தேகம் உடையவர்களாக காட்சி தருகிறார்கள். ஆனால்
பெண்கள் எவ்வளவு மெலிந்தவர்களாக இருந்தாலும் ஆண்களை ஈர்ப்பதைப் போன்று மெனுமெனுவென்று
இருப்பதற்குக் காரணம் அவர்களிடம் கொழுப்பு அதிகமாக இருப்பதினால் தான் என்பது அறிவியல்
உண்மை. இதற்குக் காரணம் ஆண்களுக்குப் பெண்கள் ஈர்ப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக
பெண்களுக்கு சதை குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் வைத்து இறைவன் பெண்ணைப் படைத்திருக்கிறான்.
அதுவே வலிமை இருந்தால் தான் நிர்வகிக்க முடியும் என்பதால் பெண்களை விட ஆண்களுக்கு கொழுப்பைக்
குறைத்து சதையை அதிகமாக்கி ஆண்களைப் படைத்துள்ளான்.
எனவே நிர்வாகத் திறமைக்கு முதலில் மூளை திறம்பட செயல்பட வேண்டும்
என்பதிலும்,
இரத்த ஓட்டம் என்கிற வேலையைச் செய்கிற இதயம் திறம்பட செயல்பட
வேண்டும் என்பதிலும், சதை மற்றும் கொழுப்பு பகுதிகள்
எப்படி செயல்பட வேண்டும் என்பதிலும், மூளை சின்னது
பெரியது என்ற வித்தியாசத்திலும், ஆண் பெண் உடல் ரீதியான மற்றும்
மன ரீதியான அனைத்திலும் பெண்ணை விட கூடுதல் தன்மையுடன் ஆண் படைக்கப்பட்டிருக்கிறான்
என்பது அறிவியல் உண்மை. இதை மீறுகிறவர்கள் பலவிதமான கேடுகளைச் சுமக்க நேரிடும். இது
சம்பந்தமாக இன்னும் பல தகவல்களை அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்.
EGATHUVAM DEC 2014