May 8, 2017

புகைக்கத் தடை ஆஸ்துமாவுக்கு விடை

புகைக்கத் தடை ஆஸ்துமாவுக்கு விடை

பிரிட்டனில் உணவு மற்றும் பொது விடுதிகளிலும் பொது இடங்களிலும் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட மாத்திரத்தில் கூச்சல்களும் கூப்பாடுகளும் ஒருசேரக் கிளம்பின. இது ஜனநாயகத்தின் குரல்வளை நெறிப்பு, சர்வாதிகாரத்தின் கொக்கரிப்பு, அக்கிரமம், அநியாயம் என்று எதிர்ப்பலைகள் மிகப் பெரிய அளவில் கிளம்பின.

ஆனால் தடை விதிக்கப்பட்ட இந்த ஐந்து வருட காலங்களில் குழந்தைகளின் உடல் நலத்தில் அபரிமிதமான முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது. லண்டன் இம்பீரியல் காலேஜ் நடத்திய ஆய்வறிக்கை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

இந்தத் தடை 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமானது. இவ்வாறு அறிமுகமான முதல் ஆண்டில் ஆஸ்துமா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.3 விழுக்காடு குறைந்திருந்தது.

புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்கள் - அதாவது புகைக்காதவர்கள் புகையால் பாதிக்கப்படுதல் டஹள்ள்ண்ஸ்ங் நம்ர்ந்ண்ய்ஞ் எனப்படுகின்றது. இந்த டஹள்ள்ண்ஸ்ங் நம்ர்ந்ண்ய்ஞ் என்பது எந்த அளவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதை இந்தப் புள்ளி விபரம் நமக்கு உணர்த்துகின்றது.

இத்தடை, வீட்டிலோ அல்லது கார் போன்ற மூடப்பட்ட இடங்களிலோ குழந்தைகளுக்கு முன்னால் சிகரெட் பற்ற வைக்கும் பெற்றோரின் பழக்கத்தையும் வெகுவாகக் குறைத்திருக்கின்றது.

டங்க்ண்ஹற்ழ்ண்ஸ்ரீள் என்ற மாத இதழில் இந்த ஆய்வு வெளியானது. கிரிஸ்டோபர் மில்லட் என்பவர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வு இங்கிலாந்துக்கு ஒரு நல்ல செய்தியாகும்.

புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடை காரணமாக, குழந்தைகள் டஹள்ள்ண்ஸ்ங் நம்ர்ந்ண்ய்ஞ் என்ற ஆபத்திற்கு மிக மிகக் குறைவான அளவிலேயே இலக்காவதன் மூலம் இந்தப் பயன் கிடைத்துள்ளது. புகை தடைச் சட்டத்தின் வாயிலாக மக்கள் புகையில்லா வீடுகள் என்ற மனோபாவத்திற்கு மாறி விட்டார்கள் என்பதையே இந்த ஆய்வு காட்டுகின்றது.


"இதற்கு வலிமை சேர்க்கும் விதமாக சிகரெட் பாக்கெட்டுகளில் பிராண்டுகளின் பெயரைத் தவிர வேறெதுவும் அச்சிடாமல் வெளியிட வேண்டும். அப்போது தான் இளைஞர்கள் இதன் கவர்ச்சியில் விழாமல் தப்பிப்பார்கள்'' என்று இங்கிலாந்தின் புகை எதிர்ப்புப் பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.

EGATHUVAM FEB 2013