May 14, 2017

அறிவியல்- உறக்கம் ஓர் அற்புதம்

அறிவியல்- உறக்கம் ஓர் அற்புதம்

கடவுளையும் மனிதனையும் பிரிக்கின்ற பல காரணிகள் உள்ளன. அவற்றில் பசி, தூக்கம், மறதி ஆகியன முக்கியமான காரணிகள். படைத்த அல்லாஹ் இந்த பலவீனமான காரணிகளை விட்டும் தூய்மையானவன். இதை நினைவுபடுத்தும் விதமாகவும் எல்லாம் வல்ல இறைவனை என்றும் நினைக்கும் விதமாகவும் சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூய்மையானவன் - என்று நாம் அடிக்கடி  நமது நாவுகளை நனைத்துக் கொண்டிருக்கின்றோம். உயிர்ப் பிராணிகள் அத்தனையும் உறக்கத்துக்கு விதிவிலக்கல்ல! எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

மதுரையில் உள்ள பிரபலமான கோவிலுக்கு மீனாட்சி அம்மன் என்று பெயர்! நீரில் நீந்தும் மீனுக்கு நித்திரை கிடையாது. அது போன்று நித்திரையின்றி மதுரையை மட்டுமல்ல! இத்தரை முழுவதும் விழித்திருந்து ஆட்சி செய்வதால் அந்தக் கடவுளுக்கு மீனாட்சி என்று பெயர். இது தவறு என்பதைப் பின்வரும் அறிவியல் உண்மை தெளிவுபடுத்துகின்றது.

நீந்தும் மீனுக்கும் நித்திரை உண்டு

உண்மையில் மீனுக்கு தூக்கம் இல்லையா என்று பார்க்கும் போது மீனுக்கும் தூக்கம் உண்டு என்றே அறிவியல் கூறுகிறது. இமைகள் மூடியிருப்பதை வைத்து மனிதர்கள் தூங்குவதை அறிந்து கொள்ள முடியும். மீன்கள் தூங்குவதை எப்படி அறிய முடியும்?

நம்மைப் போன்று மீன்களுக்கு இமைகள் உள்ளனவா என்று வெளிப்படையாகப் பார்த்தால் இமைகள் இல்லை என்றே முடிவு செய்ய முடியும். ஆனால் மீன்களுக்கு விழித்திரைகள் உள்ளன. அவை கண்ணாடி போன்று இலைமறை காயானவை ஆகும். மெல்லிய இமைகளை மூடிக்கொண்டு அந்தக் கயல்களும் நீரில் கண்ணயர்கின்றன.

அவ்வாறு கண்ணயரும் போது நீரில் அவை அந்தரமாக ஆடாமல் அசையாமல் சலனமின்றி நிற்கின்றன; அல்லது மனிதர்களைப் போன்று தரையில் மண்ணோடு மண்ணாக ஒட்டி படுத்துக்கொள்கின்றன. தண்ணீரில் இழுப்பு அதிகமாக இருக்குமேயானால் நீரின் அடியில் கிடக்கும் மரத் துண்டுகளில் அல்லது கற்பாறைகளில் ஒதுங்கி உறங்குகின்றன. ஆனால் இவற்றை மீன்கள் உறங்குவதற்குரிய உறுதியான அடையாளங்களாக எடுத்துக் கொள்ள முடியாது. அவை உறங்குவதை உறுதி செய்ய ஆய்வு ரீதியிலான அணுகுமுறைகள் உள்ளன.

மீன்கள் ஏராளமான அளவு தண்ணீரை உட்கொள்கின்றன. வாய் வழியாக உட்கொள்கின்ற அந்தத் தண்ணீரைத் தாடையினால் அழுத்துகின்றன. தாடையினால் அழுத்தப்படுகின்ற அந்தத் தண்ணீர் சீப்பு போன்று அமைந்திருக்கும் செவுள் போன்ற பற்கள் வழியாக வெளியேறுகின்றது. இந்தக் கட்டத்தில் தான் தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜன் பிரிக்கப்பட்டு மீன்களின் இரத்தத் துளைகளிலும் துவாரங்களிலும் செலுத்தப்படுகின்றது. இதேவேளையில் கார்பன்டை ஆக்ஸைட் வெளியேற்றவும் படுகின்றது. இந்த பண்டமாற்றமும் பரிமாற்றமும் மீன் சுவாசத்தின் போது மின்னல் வேகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த ஏக்கம் கூடுதல் வேகத்தில் நடக்கும் போது அது விழித்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த வேகம் குறையும் போது அது உறங்கிக் கொண்டிருக்கிறது என்று அறிவியல் உறுதி செய்கின்றது. (தி ஹிந்து 07/12/2007 அறிவியல் பகுதி).

மீனுக்கு உறக்கம் இல்லை அதனால் அது கடவுள் என்று மக்களின் ஒரு சாரார் முடிவு செய்துள்ளனர். இந்தக் கண்ணோட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு தான் மீனாட்சி என்று பெயர் அந்த தெய்வத்துக்குப் பெயர் சூட்டப்படிருகின்றது. இது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்த அறிவியல் உண்மை இங்கு தரப்படுகிறது.

ஒருபோதும் எந்த ஓர் உயிர்ப்பிராணியும் உறக்கம் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதனால் அது ஒரு போதும் கடவுள் ஆக முடியாது என்பதற்கும் இந்த அறிவியல் உண்மை எடுத்துக்காட்டாகும்.

உறக்கம் இல்லாத உயர் நாயன்

உறக்கம் என்பது மனிதனையும் இறைவனையும் பிரித்துக்காட்டும் ஒரு அளவுகோல் என்பதால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ இல்லையென்று தெளிவாக மறுக்கின்றான்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

(அல்குர்ஆன் 2:255)

ஆனால் மனிதர்களைக் கண்டிப்பாக தூக்கம் ஆக்கிரமிக்கும். அது அவனை அமுக்கி படுக்க வைத்து விடும். இந்தத் தூக்கத்தை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது மனிதனுக்கு பலவீனம் ஆகும். அதே சமயம் மனிதனுடன் அதை இணைத்துப் பார்க்கும் போது அவனுக்கு அதுதான் பலமும் சிரமப் பரிகாரமும் ஆகும்.

அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

(அல்குர்ஆன் 25:47)

உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.

(அல்குர்ஆன் 78:9)

அல்லாஹ் மனிதனின் தூக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அதை ஓர் ஓய்வாகவும் சிரமப் பரிகாரமாகவும் ஆக்கி வைத்ததாகக் கூறுகின்றான்.

இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 30:23)

இந்த வசனத்தில் உறக்கம் ஓர் அற்புதம் என்று குறிப்பிடுகின்றான். குவைத்தில் அரப் டைம்ஸ் என்ற பத்திரிகை 19.10.2013 இதழில் அமெரிக்காவின் ஆய்யை மேற்கோள் காட்டி ஒரு துணுக்கை வெளியிட்டுள்ளது.

பெரிய கட்டிடத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு அதன் வாயிற்காப்பாளன் அதன் முற்ற வெளிகளில் குவிந்து கிடக்கும் குப்பைக் கூழங்களை கூட்டிப் பெருக்கி, துப்புரவு செய்வது போன்று தூக்கம் மூளையிலிருந்து கழிவுகளை அகற்றி துப்புரவு செய்கின்றது. அத்துடன் சில நோய்கள் வராமல் தடுத்துக் காக்கின்றது. மக்கள் ஏன் தங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்தில் கழிக்கின்றனர் என்ற ஆய்வு வினாவுக்கு அறிவியல் இதழ் (நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ஓர்ன்ழ்ய்ஹப்) இவ்வாறு பதிலளிக்கின்றது. வயோதிக பருவத்தில் ஏற்படும் டிமின்ஷியா (உங்ம்ங்ய்ற்ண்ஹ) என்ற நினைவு மறதி நோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு நோய்க்கு தூக்கம் தான் அருமருந்து என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. அல்ஸீமியர்ஸ் (ஆப்க்ஷ்ட்ங்ம்ங்ண்ழ்ள் உண்ள்ங்ஹள்ங்) என்ற நினைவு மறதி நோய் ஏற்பட காரணமே அமிலாய்ட் பீட்டா (ஆம்ஹ்ப்ர்ண்க் இங்ற்ஹ) என்ற புரதம் தான். இந்த புரதச் சத்து தான் மூளையில் இருந்து நீக்கப்படும் கழிவு என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

அல்குர்ஆன் தூக்கத்தை ஓர் ஓய்வு என்று மட்டும் நிறுத்தாமல் ஓர் அற்புதம் என்று கூறுவதன் உண்மையினை இந்த ஆய்வு நமக்குத் தெளிவாக விளக்குகின்றது.

இன்று உலகில் இன்ஸோமேனியா என்ற உறக்கமின்மை நோயால் பலர் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி மனநோயாளியாக இருக்கின்றனர். இதற்காக வேண்டி தூக்க மாத்திரைகளை உட்கொண்டும் தூக்கமின்றி தவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் நமக்கு இது போன்ற சிரமம் இன்றி உறக்கத்தை அளித்திருக்கின்றான். இந்த உறக்கம் என்பது பாக்கியம் ஆகும். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் உறங்கி முடிந்து எழுந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்தியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (உறக்கத்திலிருந்து) எழும்போது "அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்'' "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது' என்று கூறுவார்கள்.

(புகாரி 6312)


தூங்கிவிட்டு எழுந்ததும் நாமும் இந்த வார்த்தைகளை நாள்தோறும் சொல்லி நாயனுக்கு நன்றி செலுத்தும் நன்மக்களாக ஆவோமாக!

EGATHUVAM NOV 2013