எழுச்சி கண்ட வீழ்ச்சி
எம். எஸ். ஜீனத் நிஸா
ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய
கல்வியகம்,
மேலப்பாளையம்
ஏகத்துவ அழைப்புப் பணியை உயிர்மூச்சாகக் கொண்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகின்றது.
பிற மதத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்க பிரச்சாரம், சிறுவர், சிறுமியர் மார்க்க அடிப்படையில்
வளர்வதற்குத் தனி இல்லம், ஆதரவற்றோர் வயதான காலத்தில்
மார்க்க அடிப்படையில் மரணிப்பதற்கு முதியோர் இல்லம், தனி
நபர் பிரச்சாரம், நரிக்குறவர்களுக்கும், பார்வை யற்றோருக்கும்
பிரச்சாரம், இஸ்லாத்தை ஏற்ற ஆண்கள், பெண்களுக்காக மூன்று மாதப் பயிற்சி வகுப்பு, இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை
அறியாதவர்களுக்காக ஒரு வருட ஆலிமா வகுப்பு, ஆண்கள் சத்தியப்
பிரச்சாரத்தைக் கற்று அதனைப் பரப்புவதற்காக நான்கு வருட ஆலிம் படிப்பு, ஏகத்துவத்தை பொக்கிஷமாகப் பெற்ற தவ்ஹீத் குடும்பத்தினர் தன்
குடும்பத்திலிருந்தே பெண் பிரச்சாரகர்களை உருவாக்குவ தற்காக மூன்று வருட ஆலிமா படிப்பு
என பல்வேறு நிறுவனங்களின் மூலம் ஏகத்துவப் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்து வருகின்றது.
இதுதவிர வார பயான், மாத பயான், தெருமுனைப் பிரச்சாரங்கள், தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள்,
பெண்கள் பயான், ஜும்ஆ உரை, இனிய மார்க்கம், எளிய மார்க்கம், பொதுக்கூட்டங்கள், ஒரிறைக் கொள்கை
விளக்க மாத இதழ், மகளிர் மாத இதழ் எனப் பல்வேறு
செயல்பாடுகள் மூலம் தஃவா பணியை உயிர் மூச்சாகக் கொண்டு தஃவா பணியில் வெற்றி நடை போட்டுக்
கொண்டிருக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
மனிதர்கள் ஒரே ஒரு கடவுளை வணங்க வேண்டும், பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு குழப்பம் விளைவிக்கக்
கூடாது, அசத்தியத்திலிருப்பவர்களை சத்திய கொள்கைக்குக் கொண்டு வருவ தற்கும், அதில் உறுதித் தன்மையை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்கும், மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கப்பட்டு மக்கள் அனைவரும்
சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த முடிவில்லாத தொடர் பிரச்சாரங்கள்.
இப்படிப் பல்வேறு வகையில் ஏகத்துவத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற
நாம், சத்தியக் கொள்கையில் இருக்கும் பெண்கள் நம் கண்முன்னே முஷ்ரிக்குகளுக்கு
(அசத்தியவாதிகளுக்கு) வாழ்க்கைப் பட்டு, மறுமை வாழ்க்கையை
இழந்து கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
இலட்சியத்தில் அலட்சியம்
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ்ந்து
காட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்ததற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்தாமல், மார்க்கம் முழுமையடைந்ததற்குப் பிறகு இறை வசனங்களுககும், நபிகளாரின் பொன்மொழிகளுக்கும் உயிரூட்டாமல், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதும் ஏன்?
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம்
செய்யாதீர் கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை
கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு
(உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான்
கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர்.
அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை
பெறுவதற்காக (இறை வன்) தனது வசனங்களை மனிதர் களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
அல்குர்ஆன் 2:221
நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின்
அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.
அல்குர்ஆன் 2:208
அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகின்றாள்:
1. அவளது
செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.
ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை
(மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
நூல்: புகாரி 5090
இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற வீட்டில் பிறந்து வளர்ந்த ஒர் ஏழைப்
பெண் அழகிலும்,
செல்வத்திலும், அந்தஸ்திலும்
குறைந்தவளாக இருக்கின்றாள். ஆனால் அவள் மனதிலோ இந்த ஏகத்துவக் கொள்கை மிக உறுதியாக
இருக்கின்றது. இந்த ஏகத்துவத்திற்காக தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பகைத்து, தான் ஒரு தவ்ஹீத்வாதியைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற
எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் தன் வாழ்நாளை
கழித்துக் கொண்டிருக்கிறாள்.
நீங்கள் மார்க்கத்தைத் தான் உண்மையில் நேசித்தீர்கள் என்றால்
மார்க்கத்திற்காக போராடிக் கொண்டி ருக்கின்ற இந்தப் பெண்ணையே தேர்ந்தெடுத்திருப்பீர்கள்.
அழகும், அந்தஸ்தும் உள்ள பெண்கள் அவர்களது ஒழுக்கம் குறை சொல்லப்படக்கூடிய
அளவில் இருந்தாலும் அவர்கள் 17 வயது முதல் 20 வயதிற்குள் பெரும்பாலும் திருமணம் முடிக்கப்பட்டு விடுகின்றனர்.
தேங்குவதெல்லாம் கொள்கைப் பிடிப்புள்ள பெண்கள் தான். இவர்கள் பல ஊர்களிலும் இருக்கின்றனர்.
இதன் மூலம் நாங்கள் மார்க்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.
அழகிற்கும். அந்தஸ்திற்குமே முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று சொல்லாமல் செயல் வடிவில்
நிரூபித்துக் கொண்டிருக்கின்றீர்க்ள்.
மார்க்கத்தை முதன்மைப் படுத்துவதாக இருந்தால் கொள்கைப் பிடிப்புள்ள
பெண்கள் உங்கள் கண்களை விட்டும் மறைந்திருக்க மாட்டார்கள். இப்போதாவது சிந்திக்க வேன்டாமா? சுய பரிசோதனை செய்ய வேண்டாமா? நாம்
யாரை, யாருக்காக, எதற்காகத் திருமணம் முடித்திருக்
கின்றோம் என்பதை...
சத்தியக் கொள்கைக்கு வந்த பெண்களை அழகை, அந்தஸ்தை, செல்வத்தை, பட்டங்களைக் காரணம் காட்டி அசத்தியவாதிகளிடம் அனுப்பிக் கொண்டிருக்கின்றீர்களே!
இவர்கள் விஷயத்தில் இவர்களுக்காக என்ன பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து
உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு
அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை)
மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டோர்
அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப் பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக)
செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள்
வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும்
பெண் களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை
நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை.
உங்களுக் கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அல்குர்ஆன் 60:10
மேலும் முஷ்ரிக்கான பெண்ணை மணமுடிப்பது ஒழுக்கம் கெட்டவளை (விபச்சாரியை)
மணமுடிப்பதை விட கேவலமான செயலாகும். ஏனெனில் இணைவைப்பு என்பது அல்லாஹ் வுக்குச் செய்கின்ற
மாபெரும் அநீதியாகும். இவ்வாறு தான் இறைவனும் கூறிக்காட்டுகின்றான்.
விபச்சாரம் செய்தவன், விபச்சாரம்
செய்தவளையோ இணை கற்பிப் பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ளமாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து
கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 24:3
இவ்வளவு பெரிய மாபெரும் கண்டனத்திற்குப் பிறகு அசத்தியத்தில்
இருக்கின்ற பெண்களுக்கு உங்கள் மனதில் இடம் தரப்போகிறீர்களா? சத்தியத்தில் உள்ள நம் கொள்கைச் சொந்தங்களை அசத்தியவாதிகளிடம்
அனுப்பி வைக்கலாமா? இப்பெண்கள் கொள்கைக்காகப் படும்
வேதனை களை,
துன்பங்களை சிந்தித்துப் பாருங்கள்.
1. தவ்ஹீதை ஏளனமாகப் பார்ப்பவர்களுக்கு முன்பு தலைகுனிவு.
2. திருமணம் சம்பந்தமாக உறவினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க
முடியாமை.
3. தங்கள் வயதிற்கு ஒத்த அல்லது தங்களை விட வயதில் குறைந்த பெண்களுக்கெல்லாம்
இரண்டு அல்லது மூன்று குழந்தைகள்.
4. பொதுவான சபைகளுக்குச் செல்ல முடியவில்லை. தோழிகளின் திருமண நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்ள முடிவதில்லை. கண்களில் கண்ணீரைத் தவிர வாழ்த்துச் சொல்வதற்கு வார்த்தைகள்
இல்லை.
5. வயது முதிர்ந்த பெற்றோருக்குப் பாரமாகவும், உடன் பிறந்த அண்ணன், தம்பி, தங்கைகளின் திருமணம் தன்னால் தடைபடுகின்றதே என்ற மனக்கவலையும்
ஒவ்வொரு நாளும் அவளை வாட்டி வதைக்கின்றது.
இவை தான் அவர்களுக்கு நீங்கள் அளிக்கின்ற பரிசா? ஒருவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது ஈமானின் சுவையில் ஒன்றாகும்.
உங்களுக்கு வரவிருக்கின்ற வாழ்க்கைத் துணையை அல்லாஹ்வுக்காக நேசித்து மணமுடிக்கின்றீர்களா? அல்லது காதல் எனும் வலையில் விழுந்ததற்காக மணமுடிக்கின்றீர்களா? கொள்கைக் குன்றுகளை விட்டு விட்டு அழகைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.
முன்மாதிரி நபித்தோழர்கள்
எந்த ஒரு விஷயத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் பக்கம் பக்கமாக பயான்
பேசவில்லை. நபிகளாரின் கட்டளைக்கு, "செவியுற்றோம், கட்டுப் பட்டோம்' என்று மதிப்பளித்தார்கள்
நபித்தோழர்கள்.
ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் திருமண ஒப்பந்தங் களைத் தொடராதீர்கள்
என்ற வசனம் இறக்கப்பட்டவுடன் மக்காவில் உள்ள தனது மனைவியை விவாகரத்து செய்த உமர் (ரலி)
அவர்கள் எங்கே?
தவ்ஹீத் என்ற போர்வையில் இருந்து கொண்டு முஷ்ரிக்கான பெண்கள்
என்று தெரிந்தும் அவர்களைக் கரம் பிடிக்கும் நமது ஆண்கள் எங்கே?
இப்பெண்களுக்காக இரக்கப் படுங்கள் என்று கேட்கவில்லை. குர்ஆன், ஹதீசுக்குக் கட்டுப்படுங்கள் என்றே கேட்கின்றோம். உயிரை விட
இந்தத் தூதருக்கே முன்னுரிமை என்று வாயளவில் கூறிவிட்டு நழுவிச் செல்லாமல் அதற்கு உயிரூட்டி
யவர்கள் நபித்தோழர்கள் என்பதற்குக் கீழ்கண்ட ஹதீஸ் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்)
நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் இருந்தோம். அப்போது
செருப்பணியாத,
(அரை) நிர்வாணி களான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார்
தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது
ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று
விட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும்
கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, "மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்து
கொள்ளுங்கள் எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக
ஓதிக்காட்டினார்கள். மேலும், அல்ஹஷ்ர் அத்தியாயத் திலுள்ள, "நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு
ஆன்மாவும் நாளைக் கென்று தாம் செய்த வினையை கவனிக்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்' எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி
(முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது (உங்களில்) ஒருவர்
தமது பொற்காசு,
வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம்
பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும் என்று கூறி, பேரீச்சம்
பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும் என்று வலிலியுறுத்தினார்கள். உடனே (நபித்தோழர்களில்)
ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந் தும், வெள்ளிக்
காசுகளிலிலிருந்தும், ஆடைகளிலிலிருந்தும் ஒரு ஸாஉ
கோதுமையிலிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்திலிலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது
அன்சாரி களில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல்
அவரது கை திணறியது; தூக்கவே முடியவில்லை. பின்னர்
தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட் களுடன்) வந்து கொண்டிருந்தனர். இறுதியில்
உணவுப் பொருட்களாலும், ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை
நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்
கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு
அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு
அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் - அ(தன்படி செயல்பட்ட)வர்களின்
பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் - உண்டு என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1848
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM JUL 2015