போர் நெறியைப் போதித்த புனித இஸ்லாம்
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான
சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம். இந்த மார்க்கம், மனித சமுதாயத்திற்கு நல்லதை ஆதரிக்கும்; தீமையை எதிர்க்கும். நியாயமான செயல்களை அனுமதிக்கும்; அநியாயமான, அராஜகமான செயல்களைத் தடுக்கும்.
இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், சரியாகப் புரிந்து கொள்ளாமல் சிலர் இதன் மீது தவறான குற்றச்சாட்டுகளைச்
சொல்கிறார்கள். இஸ்லாம் தீவிரவாத்தைப் போதிக்கிறது; அதை
ஆதரிக்கிறது;
அதைப் பரப்புகிறது என்று நினைக்கிறார்கள். இதற்கு ஆதாரமாகக்
குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இருக்கும் போர் சம்பந்தமான செய்திகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.
இத்தகைய மக்கள், போர் சம்பந்தமாக
இஸ்லாம் கூறும் அனைத்து செய்திகளையும் ஒன்று சேர்த்து பார்த்தார்கள் எனில், தங்களது கருத்து தவறு என்பதை அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள்.
காரணம், போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, போரில் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப்
பற்றி இஸ்லாம் பேசுகிறது. இதை நாம் மறுக்கவில்லை. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும்
இஸ்லாம் வகுத்துள்ளது. எனவே, போர் குறித்து மார்க்கம் வரையறுத்து
இருக்கும் சட்டங்களைப் பார்ப்போம்.
போர் செய்ய அரசாங்கம் அவசியம்
போர் தொடர்பான சட்டங்களுள் ஒன்றாக, எப்போது போர் செய்ய வேண்டும்? என்பது
குறித்தும் இஸ்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லிம்கள் போர் செய்ய வேண்டும் எனில்
முதலில் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசு, அரசாங்கம் இருக்க வேண்டும். அந்த அரசு நியமித்த படைத் தலைவரின்
தலைமையில் முஸ்லிம்கள் அணிதிரண்டு ஒரு படையாக இருந்து போர் செய்ய வேண்டும். இவ்வாறு
இல்லாமல், முஸ்லிம்கள் தங்களது சுய முடிவின் அடிப்படையில் தனியாகவோ, குழுக்களாகவோ, கூட்டங்களாகவோ, இயக்கங்களாகவோ இருந்து முடிவெடுத்து கொண்டு போர் செய்யப் புறப்பட்டுச்
செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப்
பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை
நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்'' என்று
தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க
மாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார்.
"எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள்
வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன
வந்தது?'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட
போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ்
அறிந்தவன்.
"தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். "எங்கள் மீது
அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை
விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு
செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான்.
தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார்.
(திருக்குர்ஆன் 2:246, 247)
இவ்வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு
நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன.
அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொணாத் துன்பத்திற்கு
உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும்
அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.
இந்த நேரத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தங்களுக்கு
ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப்
பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான்
என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.
படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது
சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர்
செய்யவில்லை.
அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக
ஒரு மன்னரை நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்த பிறகு இறைவன் மன்னரை நியமித்தான்.
அதன் பிறகுதான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.
போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ
அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க
மாட்டான்.
ஆரம்ப காலத்தில் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளமான
துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்ட போது, உடனே நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை ஏற்றுக் கொண்டவர்களை வைத்து போர்ப் பிரகடனத்தை அறிவிக்கவில்லை.
மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்து தமது தலைமயிலான இஸ்லாமிய ஆட்சி அமைந்த பிறகே போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இதைச் சரியாக விளங்காமல்
செயல்படும் ஒரு சில முஸ்லிம்களின் செயல்களால், இஸ்லாம் ஒவ்வொரு
முஸ்லிமையும் போர் செய்யத் தூண்டுகிறது என்று பிறமத மக்கள் தவறாகக் கருதி விடுகிறார்கள்.
போருக்கான படைபலம்
முஸ்லிம்களை வழிநடத்தும் அராசங்கம் இருந்தாலும், போர் செய்வதற்கான முழு அனுமதி இருப்பதாக நினைத்துவிடக் கூடாது.
எதிரிகள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்தத் தொகையில் பாதியளவில் முஸ்லிம்கள் கண்டிப்பாக
இருக்க வேண்டும். இல்லையெனில், போர் செய்யப் புறப்படக்கூடாது.
நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக!
உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள்.
உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள்
புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி
விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய
நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால்
அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன்
இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 8:65, 66)
ஆரம்பத்தில் எதிரிகளுடைய எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு இருந்தால்
போர் செய்யலாம் என்று அனுமதி இருந்தது. பிறகு மனிதர்களுக்கு இருக்கும் பலவீனமான நிலைகளைக்
கருத்தில் கொண்டு, எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவிற்கு
இருக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையைப் பிறப்பித்து விட்டான். இதற்கு முஸ்லிம்கள்
கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
இதை விளங்கிக் கொண்டால், சிறுபான்மையாக
இருக்கும் முஸ்லிம்களில் ஒரு சிலர், பெரும் தொகையில்
இருக்கும் எதிரிகளுக்கு எதிராக ஆவேசப்பட்டு அவசரப்பட்டு செயல்படுவது இறைக் கட்டளைக்கு
எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போருக்கு வருவோருடன் மட்டுமே போர்
ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். எதிரியாக இருக்கும்
நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையில் பாதியை விட அதிகமாக இருக்கிறார்கள். உடனே
போர் செய்ய அனுமதி இருக்கிறது என்று நினைத்துவிடக் கூடாது. காரணம், எதிரிகள் நம்முடன் போர் செய்வதற்காகப் படை திரண்டு வரும்போது
மட்டுமே எதிர்த்துத் தாக்கி, போர் செய்ய மார்க்கம் அனுமதி
அளிக்கிறது. இதற்கு மாற்றமாக, நாமாக தேடிச் சென்று போரைத்
துவங்கக்கூடாது.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும்
போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(திருக்குர்ஆன் 2:190)
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர்
தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள்
நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.
(திருக்குர்ஆன் 9:13)
போர் செய்யுங்கள், கொல்லுங்கள், வெட்டுங்கள், போர்க் கருவிகளை
திரட்டிக் கொள்ளுங்கள் என்று குர்ஆனில் சொல்வதெல்லாம், போர் செய்வதற்கு வலிந்து வருபவர்களை எதிர்த்துப் போரிடும் போது
எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கட்டளைகள். சத்தியத்திற்கு எதிராகப் படை திரண்டு
வருபவர்களை எதிர்கொள்வதற்கான ஆணைகள், ஆலோசனைகள்
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
"இஸ்லாமிய ஆட்சி அமைப்பது நமது கடமை; அதற்காக ஜிஹாத் செய்ய வேண்டும்' என்று கூறிக் கொண்டு ஒரு சில முஸ்லிம்கள், எந்த விதத்திலும் நமக்குத் தொல்லை தராமல் அமைதியாக இருக்கும்
மக்களுக்கு எதிராகச் செயல்படுவது, அவர்களைத் தேடிச் சென்று தாக்குவது
முற்றிலும் குற்றம். இது மார்க்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாததன் அடையாளம் என்பதே
உண்மை.
பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து, தலையிட்டு, பிறகு அதற்குள் அத்துமீறி நுழைந்து
போர் செய்யும் நாடுகளை இன்றைய காலகட்டத்தில் நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறின்றி, வலிந்து போருக்கு வருவோருடன் மட்டுமே போர் என்ற இஸ்லாத்தின்
கோட்பாடு பாராட்டுதலுக்கும் போற்றதலுக்கும் உரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பாதிக்கப்படும் போது போர்
ஒருவர் நம்மைத் தாக்குகிறார், அவரிடம்
இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு அவரை எதிர்த்துத் தாக்குவதற்கு அனுமதி இருக்கிறது.
இது உலகத்தில் இருக்கும் எந்த நாட்டின் சட்டங்களின் அடிப்படையிலும் தவறாகாது.
இதுபோன்று அநியாயமான முறையில் ஒருவர் மற்றொருவரைத் தாக்குகிறார்; அவரை அடிக்கிறார்; உதைக்கிறார்.
இப்போது பாதிக்கப்படும் மனிதருக்கு உதவி செய்வதை, வரம்பு
மீறும் நபரைத் தடுப்பதை யாரும் குற்றம் என்று சொல்ல மாட்டார்கள். இந்த வகையில் தான்
இஸ்லாமும் போருக்கு அனுமதியைக் கொடுக்கிறது.
"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை
வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து
உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக்
கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக
அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
(திருக்குர்ஆன் 4:75)
"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். "எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து
வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால்
மடங்களும்,
ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும்
இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ்
வலிமையுள்ளவன்;
மிகைத்தவன்;
(திருக்குர்ஆன் 22:39, 40)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில், தங்களை உயந்த குலம் என்று கருதும் மக்கள், பிற குலத்தைச் சேர்ந்த மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து
விட்டார்கள்;
அவர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். அடுத்தவர்கள் தங்களுக்கு
அடிபணிந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீட்பதற்காக
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அட்டூழியம் செய்பவர்களுக்கு
எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இறங்கினார்கள். உண்மைக்கும் உரிமைக்கும்
உழைத்தார்கள்.
இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம்
ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க
வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
சமாதானத்தை ஏற்க வேண்டும்
சத்திய மார்க்கமான இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும்; சத்தியவாதிகளான முஸ்லிம்களை வேரறுக்க வேண்டும் என்று படை திரண்டு
வருகிறார்கள். இஸ்லாம் அனுமதி அளித்தபடி அவர்களை எதிர்த்து போர் நடைபெறுகிறது.
இந்நிலையில் எதிரிகள் போரிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்தால், சமாதானத்தை விரும்புவதாகக் குறிப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ள
வேண்டும். அதற்குப் பிறகும் அவர்களை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது. போரிடுவதை நிறுத்த
மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
(போரிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக
ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர்
மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது.
(திருக்குர்ஆன் 2:192, 193)
அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச்
சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.
(திருக்குர்ஆன் 8:61)
உயிர் இழப்புகளும் பொருளாதார சேதமும் இல்லாமல் சமுதாயத்தில்
சுமூகமான சூழ்நிலை தோன்றுவதையே முஸ்லிம்கள் விரும்ப வேண்டும். மக்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்க்கை அமைய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
காரணம், இஸ்லாம் என்பது அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று
பொதுநலம் நாடும் மார்க்கம்.
கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை
இஸ்லாம் என்பது ஏக இறைவன் கொடுத்த வாழ்க்கை வழிமுறை. இந்த மார்க்கத்தை
முழுமையாக ஏற்று, முறையாக வாழ்பவர்களுக்கு மட்டுமே
மறுமையில் வெற்றி இருக்கிறது. இத்தகைய மார்க்கத்தில் இருப்பவர்கள், அதன் பக்கம் மற்ற மக்களையும் அழைக்க வேண்டும்.
இஸ்லாத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்து, பிறமத மக்களை அழைப்பது மட்டுமே முஸ்லிம்கள் மீது கடமையே தவிர, அவர்களைக் கட்டாயம் செய்வதற்கு, நிர்ப்பந்தப்படுத்தி இஸ்லாத்தைத் திணிப்பதற்கு மார்க்கத்தில்
கடுகளவும் அனுமதி இல்லை.
இப்படி இருக்கும்போது, இஸ்லாத்தைப்
பரப்புவதற்காக,
அதன் கொள்கையை, கருத்துக்களைப்
பிற மக்கள் மீது திணிப்பதற்காகப் போர் செய்ய இஸ்லாம் தூண்டுமா? இதை ஆதரிக்குமா? என்று யோசித்துப்
பாருங்கள். அடுத்த நொடியே இதை இஸ்லாம் அறவே அனுமதிக்காது என்று நமது மனதும் நாவும்
சொல்லும். இதுவே நிதர்சனம்.
இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து
நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத
பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(திருக்குர்ஆன் 2:256)
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும்
ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை
நீர் நிர்பந்திக்கிறீரா?
(திருக்குர்ஆன் 10:99)
"ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.
நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன்.
நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம்
எனக்கு'' எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 109; 1-6)
முன்சென்ற இறை வசனங்களை மெய்ப்படுத்தும் வகையில் முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் ஆட்சி செய்தார்கள். அதனால்தான் யூதர்கள், கிறித்தவர்கள் என்று ஏராளமான பிறமத மக்களும் நபிகளாரின் ஆட்சிக்கு
உடன்பட்டு இஸ்லாமிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
போரில் வரம்பு மீறக் கூடாது
போரின் போது எதிரிகளை, எதிரிகளைச்
சார்ந்தவர்களை,
எதிரிகள் இருக்கும் இடங்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல்கள்
சர்வ சாதாரணமாக நடக்கின்றன. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாத
அளவிற்கு எவரையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீதியில் எதிரிகளிடம் நடந்து
கொள்கிறார்கள். காட்டு மிராண்டித்தனமான செயல்களைச் செய்கிறார்கள்.
ஆனால், இஸ்லாமிய மார்க்கம் போர்க்களத்திலும்
வரம்பு மீறக் கூடாது என்று சொல்கிறது. போர் செய்வதற்கு வந்த எதிரிகளைத் தவிர்த்து பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் போன்ற போரில் பங்கெடுக்காமல் இருப்பவர்களைக் கொல்லக்
கூடாது என்று சொல்கிறது. இன்னும் ஏன்? எதிரிகள் நாட்டில்
இருக்கும் மத குருமார்களைக் கொல்லக் கூடாது
என்றும் சொல்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் போர்க்களங்களின் போதுகூட வரம்பு மீறிவிடக்கூடாது
என்று போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில்
பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
(நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)
"பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தடை விதித்தார்கள்''
(புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும்
இடம்பெற்றுள்ளன)
போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும்
மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: புரைதா (ரலி),
நூல்: முஸ்லிம்.
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரது அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின் போது அல்லது பகைமையின்
காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
(நூல்: புஹாரி 2474)
புரைதா பின் அல்ஹசீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ, அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின்
நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள். பிறகு, பின்வருமாறு
அறிவுரை கூறுவார்கள்: இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில்
போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில்
கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக்
கொல்லாதீர்கள்.
நூல்: முஸ்லிம் 3566
யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவர்
ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு
ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுத மாட்டேன்'' என்று கூறி பின்வருமாறு அவருக்குப் பதில் எழுதினார்கள்): நீர்
என்னிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்து
கொண்டார்களா?''
எனக் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில்
பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள்.
போர்ச் செல்வத்திலிருந்து சிறிதளவு அவர்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை.
போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.
நூல்: முஸ்லிம் 3700
பொதுவாக இஸ்லாம், எந்த இக்கட்டான
நேரத்திலும் எடுத்த எடுப்பிலேயே போரைத் தீர்வாக முன்வைக்கவில்லை. இறுதி முடிவாகத்தான்
அனுமதி கொடுக்கிறது.
இஸ்லாம் கூறும் போர் நெறிமுறைகளுக்கும், இன்று நடக்கும் போர் நடைமுறைகளுக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. இன்று நடக்கும்
போர்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள்
என்று பலரும் கொத்து கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள். பொருளாதாரம் சுருட்டப்படுகின்றன; வளங்கள் சூறையாடப்படுகின்றன. நாடும் சமுதாயமும் ஒட்டுமொத்தமாக
சீர்குலைக்கப்படுகிறது. இதன் மோசமான, கோரமான விளைவுகள்
பாதிப்புகள் பல தலைமுறைகளுக்கும் தொடர்கின்றன.
இன்று நடக்கும் போர் முறைகளையும் நோக்கங்களையும் இஸ்லாம் அறவே
ஆதரிக்கவில்லை. இத்தகைய காரியங்களை முஸ்லிம் சமுதாயத்தில் இருப்பவர்கள் செய்தாலும்
சரியே. இதற்குக் காரணம், இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை
ஆதரிக்கவில்லை,
மாறாக அதை எப்போதும் எதிர்க்கிறது என்பதே! இதை முஸ்லிம்களும்
பிற மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்
பொதுவாக இஸ்லாம் என்றால் வன்முறையைத் தூண்டும் மார்க்கம், மற்றவர்களை வலிய வம்புக்கு இழுக்கும் மார்க்கம், சண்டைக்கும், சச்சரவுக்கும்
பெயர் போன மார்க்கம் என்ற தப்பும் தவறுமான ஒரு முத்திரை திட்டமிட்டு இஸ்லாத்திற்கு
எதிராகக் குத்தப்படுகின்றது. திட்டமிட்டே, வேண்டுமென்றே
இஸ்லாத்திற்கு எதிராக இந்தப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
உண்மையில் சண்டையா? சமாதானமா? என்ற நிலை ஏற்படுகின்ற போது இஸ்லாம் அமைதிக்குத் தான் முக்கியத்துவம்
கொடுக்கின்றது. இது வெறும் ஊகமல்ல! உண்மை நிகழ்வும் நிலவரமும் ஆகும். இதற்கான ஆதாரங்களைப்
பல்வேறு தலைப்புகளில் இந்த இதழில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மேலும் ஒரு செய்தியைப்
பார்ப்போம்.
இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு
உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள்.
மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு அறவே கிடையாது. ஆனால் முஹம்மது
நபி (ஸல்) அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப்பயணமாகவே பார்த்தனர்.
நபி (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற
ஒட்டகங்களை அழைத்து வருகின்றார்கள். அவர்களது எண்ணிக்கை 700 பேர் என அஹ்மத் 18152வது
ஹதீஸிலும்,
1400 பேர் என புகாரி 4153வது ஹதீஸிலும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மக்காவாசிகளை
மிரட்டும்படியாக இருந்தது.
தோழர்களுடனான நபி (ஸல்) அவர்களது வருகை மண்ணில் புழுதியைக் கிளப்பியது
போன்று மக்களிடம் போர்ப் பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. அந்தப் பீதியைப் போக்கும்
விதமாக தமது பயணத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில்
ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகள் அறுத்து
விட்டனர். கிராஷையும் கொலை செய்ய முனைந்தனர். அங்கிருந்த பல்வேறு கிளையினர் அவர்களைத்
தடுத்து விட்டனர். முடிவில் நபி (ஸல்) அவர்களிடமே அவர் திரும்ப வந்துவிட்டார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்புவதற்காக
அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள்
என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து
எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது
கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும்
தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மான்
(ரலி) அவர்களை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்தார்.
"நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து
அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம்
தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகின்றார்கள்.
உஸ்மான் (ரலி) புறப்பட்டு அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத்
தலைவர்களையும் சந்தித்து, நபி (ஸல்) அவர்கள் தன்னை அனுப்பி
வைத்த செய்தியையும் அவர்களிடம் தெரிவித்தார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்கின்ற வரை நான்
தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளித்தார். குறைஷிகள்
உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்ப விடாமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொண்டனர்.
நூல்: முஸ்னத் அஹ்மத் 18152
உஸ்மானை, குறைஷிகள் தடுத்து வைத்த செய்தி
நபி (ஸல்) அவர்களிடம் வேறு மாதிரியான தகவலாகச் சென்றடைகின்றது. உஸ்மான் கொல்லப்பட்டு
விட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் கிடைக்கிறது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட
நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் கடுமையான கோபத்திற்கும்
கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள்.
பொதுவாகவே அன்றைய காலத்தில் தூது செல்பவர்களைக் கொலை செய்யும்
வழக்கம் இல்லை. அதை ஒரு மரபாகக் கடைப்பிடித்து வந்தனர். இந்த மரபுக்கு மாற்றமாக மக்கா
குறைஷிகள் நடந்து விட்டார்கள் என்பது முஸ்லிம்களிடம் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி
விட்டது. இதனால் அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள்.
தங்கள் உயிர்களை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கவும் முன்வந்தார்கள்.
பைஅத் ரிள்வான்
நபித்தோழர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்களிடம்
உடன்படிக்கையும் செய்தனர்.
"ஹுதைபிய்யா தினத்தில் என்ன விவகாரத்தின் மீது நபி (ஸல்) அவர்களிடம்
உடன்படிக்கை செய்தீர்கள்?' என்று ஸலமா பின் அக்வஃ அவர்களிடம்
கேட்டேன். அதற்கு அவர்கள், "மரணத்தின் மீது உடன்படிக்கை
செய்தோம்' என்று பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஸீத் பின் அபீஉபைத், நூல்: முஸ்லிம் 3462
உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதாக வந்த விவகாரத்தில் தங்களுடைய உயிர்களை
அர்ப்பணம் செய்ய முன்வந்த தியாகத்தை இந்தச் செய்தி தெரிவிக்கின்றது. அல்லாஹ்வும் நபித்தோழர்களின்
இந்த தியாகத்தையும், தங்களது உயிர்களை அர்ப்பணிப்பதாகச்
செய்த உடன்படிக்கையையும் மிகச் சிறப்பாகப் பாராட்டுகின்றான்.
உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர்.
அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே
முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான
கூலியை அவன் வழங்குவான். (அல்குர்ஆன் 48:10)
தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செய்த அந்த உடன்படிக்கையை, தன்னிடம் செய்த உடன்படிக்கை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இவ்வாறு உடன்படிக்கை செய்து கொண்டவர்களைத் தான் திருப்திப்பட்டுக் கொண்டதாகவும் இறைவன்
கூறுகின்றான். அதனால் இந்த உடன்படிக்கைக்கு பைஅத்துர் ரிள்வான் (இறைவனின் திருப்பொருத்தத்தைப்
பெற்ற உடன்படிக்கை) என்று பெயர் வழங்கப்படுகின்றது.
மக்காவிற்கு உம்ரா செய்வதற்காகத் தான் முஸ்லிம்கள் வந்தனர்.
ஆனால் இடையில் அவர்களது பயணத்தில் இப்படி ஒரு இனம்புரியாத திருப்பம் ஏற்பட்டு அது ஒரு
போராக மூளப் பார்த்தது. ஆனால் பின்னர் உஸ்மான் (ரலி) கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல்
முஸ்லிம்களுக்குத் தெரிய வந்ததும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சமாதான முயற்சிகளை முழு
மூச்சுடன் மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகளை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
குறைஷிகளின் முதல் நல்லெண்ணத் தூதராக வந்த பிஷ்ர் பின் சுஃப்யான்
அல்கஃபி என்பார் உஸ்ஃபான் என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, "குறைஷிகள் நீங்கள் வருவதைத் தெரிந்து கொண்டு தங்கள் பெண்டு பிள்ளைகளுடன்
வெளியே கிளம்பி வந்துவிட்டார்கள். வலுக்கட்டாயமாக, முஹம்மது
மக்காவிற்கு வருவதை என்ன விலை கொடுத்தேனும் தடுத்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில்
இருக்கிறார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தில் காலித் பின் வலீத் தனது குதிரைப் படையுடன்
முன்னரே வந்து விட்டார்'' என்று கூறினார். காலித் பின்
வலீத் அப்போது இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகப் படை
திரட்டி வந்திருந்தார்.
போர்ப் பயணம் அல்ல! புனிதப் பயணமே!
நபி (ஸல்) அவர்களுக்குப் போர் செய்வது தான் நோக்கம் என்றிருக்குமானால்
குதிரைப் படையுடன் நின்றிருந்த காலித் பின் வலீதிடம் தமது கைவரிசையைக் காட்டியிருப்பார்கள்.
ஆனால் அவர்களின் நடவடிக்கையைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள், "காலித்
பின் வலீத்,
குறைஷிகüன் குதிரைப் படையுடன்
"கமீம்'
என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர்
கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப்
பாதையில் செல்லுங்கள் (காலித் பின் வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை
காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக் குழுப்
படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக்
காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார்.
நபி (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும்
("மிரார்'
என்னும் இடத்தில்) அவர்களுடைய வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு
அமர்ந்து கொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) "ஹல்ஹல்' என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது.
உடனே, மக்கள், " "கஸ்வா' பிடிவாதம் பிடிக்கிறது, "கஸ்வா' பிடிவாதம் பிடிக்கிறது'' என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா
பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை.
ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க
வந்த போது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கின்றான்'' என்று கூறினார்கள். பிறகு, "என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக்
கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள்
என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்'' என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத்
தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில்
சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது பயணம் போருக்கான பயணம் அல்ல! உம்ராவுக்கான
புனிதப் பயணம் என்பதை நிரூபிக்கும் விதமாக மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஹுதைபிய்யாவில்
முகாமிடுகின்றார்கள்.
இப்போது இங்கு குறைஷிகளின் இரண்டாவது நல்லெண்ணத் தூதர் புதைல்
பின் வரக்கா என்பார் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கிறார்கள்.
நம்பிக்கையாளர் புதைலின் வரவு
இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகüடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும்
மக்கüடையே) நபி (ஸல்) அவர்கüன் நலம் நாடும்
நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், "(முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவசுனைகüன் அருகே முகாமிட்டிருக்க, அங்கே
அவர்களை விட்டு விட்டு (தங்கüடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன்.
அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு
உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்'' என்று கூறினார்கள்.
புதைல் அவர்களின் இந்தச் செய்தி, முதல் தூதரான பிஷ்ர் என்பாரின் செய்தியை உறுதிப்படுத்துகின்றது.
"தாய் ஒட்டகங்கள், குட்டிகளுடன்
வந்துள்ளனர்'
என்ற புதைலின் வார்த்தைகள் அரபியர்களின் முக்கியமான நடைமுறைகளைத்
தெளிவுபடுத்துகின்றன. நீண்ட நாட்கள் ஓரிடத்தில் முகாமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால்
அரபிகள் இப்படி பால் கொடுக்கும் ஒட்டகங்களை அவற்றின் குட்டிகளுடன் ஓட்டிச் செல்வார்கள்.
தங்களுடைய உணவுக்கு ஒட்டகத்தின் பாலைக் கறந்து குடித்துக் கொள்வார்கள் என்பது தான்
அந்த நடைமுறை. இதையே புகைலின் வார்த்தைகள் விளக்குகின்றன.
தங்களுடைய மனைவி, மக்களுடன்
வந்து முகாமிடுவதையும் இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. பயந்து, போரிலிருந்து பின்வாங்கி ஓடக்கூடாது என்பதற்காக மனைவி, மக்கள், பிள்ளை குட்டிகளுடன் போர்க்களங்களுக்கு
வருவது அரபுக் குலத்தவரின் வழக்கத்தில் இருந்தது. இந்தக் கருத்தும் புகைலின் இந்த வார்த்தைகளில்
அடங்கியிருப்பதை நாம் அறியலாம்.
மொத்தத்தில் குறைஷியர்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் ஒரு கடினப்
போக்கைக் கடைப்பிடித்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ நிதானம், நீக்குப்போக்குத் தன்மையையும், சாந்தி, சமாதானத்தையும் கடைப்பிடிக்கின்றார்கள்.
இதோ அந்த சமாதானத் தூதர் தெரிவிக்கின்ற சாந்தி வார்த்தைகளைப்
பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள், "நாங்கள்
எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா
செய்வதற்காகத் தான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள்.
போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால்
அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள்
எனக்கும் மக்களுக்குமிடையே தடையாக இருக்க வேண்டாம். நான் வெற்றி பெற்று விட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும்
இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு
ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்து விட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது
இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான்'' என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட புதைல் அவர்கள் கூறுகிறார்கள்:
"நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்'' என்று கூறிவிட்டு புதைல் பின் வரகா குறைஷிகüடம் சென்று, "நாங்கள்
இந்த மனிதரிடமிருந்து உங்கüடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு
விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று
நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்'' என்று
சொன்னார். அப்போது அவர்கüலிருந்த அறிவிலிகள், "அவரைக் குறித்து எங்களுக்கு எதனையும் நீர் தெரிவிக்க வேண்டிய
அவசியமில்லை''
என்று கூறினர். அவர்கüல் கருத்துத்
தெüவுடையவர்கள், "அவரிடமிருந்து
நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்'' என்று கூறினர்.
புதைல், "அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
உர்வாவின் வருகை
புதைலின் இந்த சமாதானப் பேச்சை குறைஷிகள், குறிப்பாக அவர்களிலுள்ள அறிவிலிகள் காது கொடுத்துக் கேட்பதாக
இல்லை. இப்போது உர்வா என்பவர் எழுந்து குறைஷிகளிடம் அனுமதி கேட்கின்றார்.
உடனே, (அப்போது இறைமறுப்பாளராயிருந்த)
உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ, "முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள்
(அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்ல விடுங்கள்'' என்று கூறினார். அதற்கு அவர்கள், "அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்'' என்று கூறினர்.
சூடான சூழல்
அவரும் நபி (ஸல்) அவர்கüடம் சென்று
பேசத் தொடங்கினார். நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது
உர்வா, "முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை
நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு
முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்... குறைஷிகள் வென்று விட்டாலும்...(அதனால்
உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை
(உங்கள் தோழர்கüடம்) பார்க்கின்றேன்; மக்கüல் பலதரப்பட்டவர்களைப் பார்க்கின்றேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடியவர்களாகவே (இவர்களை) நான்
பார்க்கின்றேன்''
என்று கூறினார்.
உர்வா நபித்தோழர்களிடம் ஏடாகூடமாகப் பேசி அவர்களை சூடாக்கி விடுகின்றார்.
ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் சூழலை சூடாக்காமல் விவகாரத்தை சாதுரியமாகக் கையாள்கிறார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆக்ரோஷம்
(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி
ஏசிவிட்டு,
"நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா?'' என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, "இவர் யார்?'' என்று கேட்டார். மக்கள்
"அபூபக்ர்''
என்று பதிலüத்தார்கள்.
அதற்கு உர்வா,
"நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள்.
அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால்
நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்'' என்று
கூறி விட்டு,
நபி (ஸல்) அவர்கüடம் பேசத்
தொடங்கினார்;
நபி (ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களுடைய தாடியைப்
பிடித்தபடி இருந்தார்.
அப்போது முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும்
தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி (ஸல்) அவர்கüன்
தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே உர்வா, நபி (ஸல்) அவர்கüன் தாடியைப்
பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா (ரலி) அவர்கள், அவரது
கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, "உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து'' என்று கூறிய வண்ணமிருந்தார்கள். அப்போது உர்வா தனது தலையை உயர்த்தி, "இவர் யார்?'' என்று கேட்க மக்கள், "இவர் முகீரா பின் ஷுஅபா'' என்று கூறினார்கள்.
உடனே உர்வா,
"மோசடிக்காரரே! நீர் மோசடி செய்த போது (உம்மை
தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?'' என்று கேட்டார். முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக்
காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம்
சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள்.
(அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா (ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்த போது அவரது
தந்தையின் சகோதரரான உர்வா தான், அவர்களை உயிரீட்டுத் தொகை கொடுத்து
தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ
இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை'' என்று கூறியிருந்தார்கள்.
குறைஷிகளிடம் திரும்பிய உர்வா, "முஹம்மது ஒரு நேரிய திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்; அதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று
என்று கூறினார். ஆனால் அதைக் குறைஷிகள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
தாக்க வரவில்லை, தவாஃபுக்கே
வருகின்றோம்
உடனே பனூகினானா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், "என்னை அவரிடம் செல்ல விடுங்கள்'' என்று சொன்னார். அதற்கு அவர்கள், "சரி, செல்லுங்கள்'' என்று கூறினர். அவர் நபி (ஸல்) அவர்கüடமும் அவர்கüன் தோழர்கüடமும் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக
ஒட்டகங்களைக் கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் தியாகப் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்'' என்று சொன்னார்கள். உடனே, அவரிடம்
ஒரு தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. மக்கள் "தல்பியா' கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், "சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது
சரியில்லையே''
என்று (தமக்குள்) கூறிக் கொண்டார். தம் தோழர்கüடம் திரும்பிச் சென்ற போது, "தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றைக் கீறி காயப்படுத்தி அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன்.
ஆகவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக்
கருதவில்லை''
என்று கூறினார்.
இதற்கு அடுத்து, பனூ கினானா
குலத்தைச் சார்ந்த ஒருவர் நான்காவது தூதராக வருகின்றார். இவரது ஆலோசனையையும் குறைஷிகள்
ஏற்க முன்வரவில்லை. பலிப் பிராணிகள் அழைத்து வந்ததன் மூலம் நாங்கள் போர் தொடுப்பதற்கு
வரவில்லை, புனிதத் தலத்தில் வலம் வந்து, பலி
கொடுக்கவே வந்துள்ளோம் என்ற முஸ்லிம்களின் உண்மை நிலையை குறைஷிகள் ஒத்துக்கொள்ளவில்லை.
இதுவரை நபி (ஸல்) அவர்களிடம் சென்று வந்த அத்தனை பிரதிநிதிகளும்
நபி (ஸல்) அவர்களைத் தடுப்பது நியாயமில்லை என்ற கருத்தையே குறைஷிகளிடம் பதிவு செய்தனர்.
ஆரம்பத்தில் காட்டமாகப் பேசிய உர்வாவும் முஹம்மது (ஸல்) அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதையே
பிரதிபலிக்கின்றார். ஆனால் குறைஷிகள் அசைந்து கொடுக்கவில்லை.
மிக்ரஸின் வருகை
அவர்கüல் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட
ஒரு மனிதர் எழுந்து, "என்னை அவரிடம் போக விடுங்கள்'' என்று கூறினார். மக்காவாசிகள், "சரி, நீங்கள் அவரிடம் செல்லுங்கள்'' என்று கூறினர். முஸ்லிம்கüடம்
அவர் சென்ற போது நபி (ஸல்) அவர்கள், "இவன்
மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்'' என்று கூறினார்கள்.
அவன் (வந்தவுடன்) நபி (ஸல்) அவர்கüடம் பேச ஆரம்பித்தான்.
ஐந்தாவது பிரதிநிதியாக சுஹைல் பின் அம்ரீ வருகையளிக்கின்றார்.
மிக்ரஸ் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் பின் அம்ர் என்பவர் குறைஷிகüன் தரப்பிலிருந்து வந்தார். சுஹைல் பின் அம்ர் வந்த போது நபி
(ஸல்) அவர்கள்,
"உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது'' என்று கூறினார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, "(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான
(சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்'' என்று கூறினார்.
முஸ்லிம்களின் முதல் கொந்தளிப்பு
நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், "அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்...' என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள்.
சுஹைல், "ரஹ்மான் - அளவற்ற அருளாளன்' என்பது
என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், "இறைவா!
உன் திருப்பெயரால்...' என்று நீங்கள் முன்பு எழுதிக்
கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்'' என்றார். முஸ்லிம்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
- அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்று தான் இதை எழுதுவோம்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், " "பிஸ்மிக்க அல்லாஹும்ம - இறைவா! உன் திருப்பெயரால்' என்றே எழுதுங்கள்'' என்று சொன்னார்கள்.
அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பெயர் குறைஷிகளுக்கு ஒருவிதமான
குமட்டலை ஏற்படுத்துகின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
"அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா?'' என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது.
அல்குர்ஆன் 25:60
இணை வைப்பாளர்களின் இந்த வெறுப்பு முஸ்லிம்களைக் கொதிப்பிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்துகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நபித்தோழர்களின் இந்த வெறுப்பையும் தாண்டி சமாதான ஒப்பந்தத்தைத்
தொடர்கிறார்கள்.
இரண்டாவது கொந்தளிப்பு
பிறகு நபி (ஸல்) அவர்கள், "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான
ஒப்பந்தம்'
என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று
நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, "முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்று எழுதுங்கள்'' என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக!
நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான்.
(இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் பின் அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன்
முஹம்மது' என்றே எழுதுங்கள்'' என்று கூறினார்கள்.
ஒப்பந்தத்தின் இந்த இரண்டாவது விதியும் முஸ்லிம்களைக் கொதிநிலைக்குக்
கொண்டு போய்விடுகின்றது. இறைத்தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் கசப்பு
மருந்தை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன்
தகாரறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய்விட்டதற்குக் காரணம் அவர்கள், "அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட(மக்கா நகரத்)தை
கண்ணியப்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு
நான் (வகுத்துக்) கொடுப்பேன்'' என்று முன்பே சொல்லியிருந்ததை
நிறைவேற்றுவதற்காகத் தான்.
மூன்றாவது கொந்தளிப்பு
பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், "எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை
நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது' என்று
(வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின்
மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியüத்தால்) "நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்' என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்; அவ்வாறே எழுதினார்.
ஒப்பந்தத்தின் இந்த விதியும் நபித்தோழர்களிடம் பெரிய அளவில்
பாதிப்பை ஏற்படுத்தியது. அதையும் அவர்கள் அமைதியாக சகித்துக் கொண்டனர்.
நான்காவது கொந்தளிப்பு
மேலும் சுஹைல், "எங்கüடமிருந்து ஒருவர் உங்கüடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்கüடம் நீங்கள் திருப்பியனுப்பி
விட வேண்டும்'
என்று நிபந்தனையிட்டார்.
ஒப்பந்தத்தில் அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு விதியும் முஸ்லிம்களுக்கு
ஒவ்வொரு அடி அல்ல, இடியாகவே விழுகின்றது. இதனால்
அவர்கள் கொந்தளிப்பில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சுஹைல் தொடர்ந்து சூடாக்கிக்
கொண்டிருந்தார். நபித்தோழர்கள் உணர்ச்சிக் கொதிப்பில் தகித்தனர்.
முஸ்லிம்கள், "சுப்ஹானல்லாஹ்!
அவர் முஸ்லிமாக (எங்கüடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்கüடம்
திருப்பியனுப்புவது?'' என்று வியப்புடன் கேட்டார்கள்.
நபித்தோழர்கள் தங்கள் சூட்டை இப்படி வியப்புடன் கூறி தணித்துக்
கொண்டனர்.
ஐந்தாவது கொந்தளிப்பு
அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகüன் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய
மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து
வந்தார். அவர் மக்காவின் கீழ்ப்பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்கüடையே வந்து தஞ்சம் புகுந்தார். உடனே (அவரது தந்தையான) சுஹைல், "முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்கüடம் ஒப்படைக்கும்படி உங்கüடம் கோருகிறேன்'' என்றார். அதற்கு
நபி (ஸல்) அவர்கள், "நாம் இன்னும் இந்த நிபந்தனையை
எழுதி முடிக்கவில்லையே'' என்று பதிலüத்தார்கள். அதற்கு சுஹைல், "அப்படியென்றால், அல்லாஹ்வின்
மீதாணையாக! உங்கüடம் நான் எந்த அடிப்படையிலும்
ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால்
இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல்
நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியüயுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நான் அனுமதியüக்கப் போவதில்லை'' என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், "நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியüத்து விட்டோம்'' என்று கூறினார்.
அபூஜந்தல் (ரலி) அவர்கள், "முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக
(உங்கüடம்) வந்திருக்க, என்னை இணை
வைப்பவர்கüடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபூஜன்தல் அவர்கள் இணை வைப்பாளர்களிடமே
திருப்பி அனுப்பப்படுகின்றார். இதை நபித்தோழர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கெஞ்சிக் கேட்ட பிறகும் குறைஷிகள் ஒப்புக் கொள்ளாததால், இரத்தம் தோய்ந்தவராக இருந்த அபூ ஜன்தல் இணை வைப்பாளர்களிடம்
ஒப்படைக்கப்படுகின்றார்.
"முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக வந்திருக்க என்னை இணைவைப்பாளர்களிடம்
திருப்பி அனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள்
பார்க்க மாட்டீர்களா?'' என்று அபூஜன்தல் கேட்டது முஸ்லிம்களின்
இதயங்களை நொறுங்கச் செய்து விட்டது.
அதுவரை கொதிப்பிலும் கொந்தளிப்பிலும் இருந்த நபித்தோழர்கள் அக்கினிப்
பிழம்பாக மாறிவிட்டார்கள். அவர்கள் சார்பாக உமர் (ரலி) அவர்கள் வெடித்துச் சிதறுகிறார்கள்.
அசத்தியத்திற்கு எதிராக அடங்கிக் போவதா? இறை நிராகரிப்பு
எகிறிக் குதிப்பதா? அது இறை நம்பிக்கையாளர்களை ஏறி
மிதிக்க நாம் அனுமதிப்பதா? என்று கேட்டு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கொப்பளித்த வார்த்தைகள் இதோ:
அப்போது (நடந்ததை) உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதர் தான்'' என்று பதிலüத்தார்கள்.
நான், "நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும்
இல்லையா?'' என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், "ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கின்றோம். அவர்கள்
அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.)'' என்று பதிலüத்தார்கள்.
"அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு
நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள்,
"நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு
மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன்'' என்று பதிலüத்தார்கள். நான், " "விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் தவாஃப் செய்வோம்' என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆனால், நாம் இந்த
ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?'' எனக் கேட்டார்கள். நான், "இல்லை'' என்று பதிலüத்தேன். நபி
(ஸல்) அவர்கள்,
"நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை
தவாஃப் செய்வீர்கள்'' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அமைதியான, அதே சமயம் அழுத்தமான பதிலில் அடங்காத உமர் (ரலி), அடுத்தக்கட்டத் தலைவரான அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தமது ஆத்திரத்தைக்
கொட்டித் தீர்க்கிறார்கள். அதற்கு அபூபக்ரும் நபியவர்களின் பதிலை அப்படியே அச்சுப்
பிசகாமல் அழுத்தம் திருத்தமாய் சமர்ப்பிக்கின்றார்கள். அந்த சூடான விவாதத்தையும் உமர்
(ரலி) அவர்களின் வார்த்தையில் சுவைப்போம்.
பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்கüடம் சென்று, "அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான்'' என்று கூறினார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும்
இல்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்'' என்றார்கள். நான், "அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம்
ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம்
இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே
நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்'' என்று கூறினார்கள்.
"அவர்கள் நம்மிடம், "நாம்
இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம்' என்று
சொல்லவில்லையா?''
என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், "நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்' என்று உங்கüடம் சொன்னார்களா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)'' என்று பதிலüத்தேன். அதற்கு
அவர்கள், "நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத்
தான் போகிறீர்கள்'' என்று கூறினார்கள்.
துயரத்தில் மூழ்கிய தோழர்கள்
ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டால்
அவர் தடுக்கப்பட்ட அந்த இடத்திலேயே பலிப்பிராணிகளை அறுத்து, தலைமுடியைக் களைய வேண்டும்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப்
பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, "எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்கüல் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை.
எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள்.
தோழர்கள் ஒருபோதும் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீற மாட்டார்கள்.
ஆனால் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு விதியும் தங்கள் மீது விழுந்த அடியாக அல்ல, இடியாக இருந்ததால் அவர்களிடம் இந்தத் தயக்கம் ஏற்பட்டது.
அருமை மனைவியின் அற்புத யோசனை
அவர்கüல் எவரும் எழுந்திருக்காத காரணத்தால்
(தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கüடம் சென்று
மக்கüடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியைச் சொன்னார்கள். உடனே உம்மு
சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தியாகப்
பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி கûளையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி
ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர்
உங்கள் முடியைக் களையும் வரை அவர்கüல் எவருடனும்
ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து
விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை
அவர்கüல் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற
நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப்பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர்
மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு
(தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.
உரிய நேரத்தில் உரிய ஆலோசனையை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழங்கினார்கள்.
அது உடனே எடுபடவும் ஆரம்பித்தது. அந்த சோக மயமான கட்டத்தில் நபி (ஸல்) அவர்களின் வாய்மொழி
உத்தரவில் நபித்தோழர்கள் சிறிது தயக்கம் காட்டியிருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள்
செயலில் இறங்கிய பிறகு அதைப் பின்பற்றுவதை விட்டுக் கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை.
அதில் அவர்கள் கொஞ்சம் கூடப் பின்தங்கவில்லை. உடனே செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
நெருக்கியடித்து ஒருவரையொருவர் கொன்று விடுவார்கள் என்ற அளவுக்கு
நபியவர்களின் செயலை, செயல்படுத்த முனைந்துவிட்டனர்.
அந்த அளவுக்கு அவர்களது கட்டுப்பாடு அவர்களின் இந்தச் செயலில் பிரதிபலித்தது.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், நபி (ஸல்) அவர்கள் ஒரு போரைத் தவிர்ப்பதற்காகக் கடைப்பிடித்த
சமாதான நடவடிக்கையையும், அதில் அவர்கள் கொண்ட பிடிமானத்தையும்
தான்.
மக்காவின் மீதும் குறைஷிகள் மீதும் போர் தொடுப்பதற்கான அத்தனை
நியாயங்களும் சரியான காரணங்களும் அவர்களுக்கு முன்னால் இருந்தன. ஏற்கனவே உஸ்மான் (ரலி)
கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பிய போது, நபித்தோழர்
தங்கள் உயிரை அர்ப்பணிப்பதாக உறுதிப்பிரமாணமும் செய்திருந்தனர். போர் என்ற கார்மேகம்
சூல் கொண்ட கருவாக போர் மழையைக் கொட்டுவதற்குத் தயாராக இருந்தது. போருக்கான சூழ்நிலைகள்
அத்தனையும் நபியவர்களுக்கு சாதகமாக இருந்தன. ஆனால் அத்தனையையும் தட்டிக் கழித்து, நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தையே நிலைநாட்டினார்கள். அதை அல்லாஹ்வும்
அங்கீகரிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பும் போது
"அல் ஃபத்ஹ் - அந்த வெற்றி' என்ற அத்தியாயத்தின் 1 முதல் 5 வரையிலான வசனங்கள் இறங்கின.
நபித்தோழர்கள் கவலையிலும் வேதனையிலும் மூழ்கியிருந்தனர். நபி
(ஸல்) அவர்கள் தியாகப் பிராணியை ஹுதைபிய்யாவில் அறுத்துப் பலியிட்டனர். அப்போது இந்த
உலகம் அனைத்தை விடவும் எனக்கு மிக விருப்பமான ஓர் வசனம் அருளப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்:
முஸ்லிம் 3341
(முஹம்மதே!) தெளிவான, மாபெரும் வெற்றியை
உமக்கு நாம் அளித்தோம். உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ்
மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை
அளித்தான்.) தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள் மற்றும் பூமியின்
படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக
(நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அவர்களின் பாவங்களை அவர்களை விட்டும் அவன் நீக்குவான். இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக
இருக்கிறது.
அல்குர்ஆன் 48:1-5
கவலையில் மூழ்கியிருந்து நபித்தோழர்களுக்கு ஆறுதலாக இந்த வசனங்கள்
இறங்கின. வெற்றி என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுவது ஹுதைபிய்யா உடன்படிக்கையைத் தான்.
இதற்குப் பிறகு நடந்த மக்கா வெற்றியைப் பற்றி இந்த வசனம் பேசவில்லை.
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பாக்கியத்திற்காக நபித்தோழர்கள்
வாழ்த்துத் தெரிவிக்கின்றார்கள். அதே சமயம் இதனால் எங்களுக்கு என்ன பயன் என்றும் கேட்கின்றார்கள்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கீழ்க்காணும் இந்த ஹதீஸ் அமைகின்றது.
"தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம்
அளித்தோம்''
என்னும் (48:1) வசனம் ஹுதைபிய்யா (சமாதான
ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும்'' என்று நான்
கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கüன் தோழர்கள், "(நபியவர்களே!) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (இந்த வெற்றியினால்)
எங்களுக்கு என்ன (பயன்)?'' என்று கேட்டனர். அப்போது, "நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும்
சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில்
ஆறுகள் ஓடும்''
என்னும் (48:5) வசனத்தை அல்லாஹ் அருüனான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்:
புகாரி 4172
உண்மையில் ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும்
திருப்புமுனையாக அமைந்தது. ஒரு போர் தொடுத்தால் கூட இந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்காது.
மக்காவில் இருந்தவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி, ஒட்டுமொத்த
மக்காவும் இஸ்லாத்தின் கீழ் வந்தது. அந்த அளவுக்கு இந்த உடன்படிக்கை மாபெரும் வெற்றியாக
அமைந்தது.
மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தவர்களை திரும்பத் தந்துவிட
வேண்டும் என்ற விதியை கொஞ்ச காலம் கழித்துத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். மக்காவில்
உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆண், பெண் என அனைவரும்
மக்கா வெற்றிக்கு முன்பே இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்து விட்டனர்.
இஸ்லாத்தின் முதல் எதிரியாகவும், குறைஷிகளின் முன்னணித் தலைவராகவும் திகழ்ந்த உக்பா பின் அபீமுஐத்தின்
மகள் உம்மு குல்சூம் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்து விட்டார்.
அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி)
ஆண்கüல் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள்
இருந்ததில்லை;
அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி
விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்கüன் தலைவன்) உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்தூம் (ரலி)
அவர்களும் நபி (ஸல்) அவர்கüடம் (அபயம் தேடி) வந்த பெண்கüல் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள்.
ஆகவே, அவரது வீட்டார் நபி (ஸல்) அவர்கüடம் அவரைத் தங்கüடம் திருப்பியனுப்பக்
கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை
அவர்கüடம் திருப்பியனுப்பவில்லை. அவர்கள் விஷயத்தில் அல்லாஹ், "விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்கüடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) சோதித்துப் பாருங்கள்.
அவர் களுடைய இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறை
நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்கüடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான
அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த
(நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்'' (60:10) என்னும் வசனத்தை அருüயிருந்ததே
(அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.
நூல்: புகாரி 2713
இதே போன்று ஆண்கள், பெண்கள் என்று
பலர் இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்து வந்தனர். இம்மாபெரிய பயன்கள் இந்த ஹுதைபிய்யா
உடன்படிக்கையால் விளைந்தன. ஹுதைபிய்யா உடன்படிக்கையை ஆரம்பத்தில் எதிர்த்த உமர் (ரலி)
அவர்கள் இதையெல்லாம் பின்னால் உணர்ந்து, நான் இவ்வாறு
அதிருப்தியுடன் பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்கள் புரிந்தேன் என்று கூறுகின்றார்கள்.
சண்டையா? சமாதானமா? போரா? அமைதியா? என்றால் நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தையும் அமைதியையும் தான்
தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வரலாற்றுப்
பதிவாகும். இஸ்லாமிய மார்க்கம் சாந்தி, சமாதான மார்க்கம்
என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை தொடர்பான இந்தச் செய்தி புகாரி 2734, முஸ்னத் அஹ்மத் 18166 ஆகிய
ஹதீஸ்களிலிருந்து தொகுக்கப்பட்டது.
ஹுதைபிய்யா உடன்படிக்கையை செயல்படுத்தியதிலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களிலும் நபி (ஸல்) அவர்கள்
எந்த அளவுக்கு சமாதானப் போக்கை மேற்கொண்டார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில்
காண்போம்.
EGATHUVAM OCT 2014