ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா?
எம்.ஐ. சுலைமான்
تاريخ بغداد - (6 / 328)
أخبرنا على بن محمد بن علي
الأيادي أخبرنا احمد بن يوسف بن خلاد العطار حدثنا الحارث بن محمد حدثنا إسحاق بن بشر
الكاهلى حدثنا أبو معشر المدائني عن محمد بن المنكدر عن جابر بن عبد الله قال قال رسول
الله صلى الله عليه و سلم الحجر الأسود يمين الله في الأرض يصافح بها عباده
ஹஜ்ருல் அஸ்வத் பூமியில் அல்லாஹ்வின் வலது கையாகும். அதைக் கொண்டு
அடியார்களிடம் முஸாஃபஹா (கை குலுக்கல்) செய்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 328
மக்காவில் உள்ள கஅபத்துல்லாஹ்வில் உள்ள ஹஜ்ருல் அஸ்வத்தை யார்
முத்தமிடுவாரோ அவர் அல்லாஹ்விடம் கை குலுக்கியவரைப் போலாவார் என்று இந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து சிலர் இதற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.
ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது அல்ல. இந்தச் செய்தியைப்
பதிவு செய்த கதீப் பக்தாதி அவர்கள் இந்தச் செய்தி பொய்யானது என்பதை அந்த இடத்திலேயே
தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
والكاهلى من أهل الكوفة
يروى عن مالك بن أنس وأبي معشر نجيح وكامل أبي العلاء وغيرهم من الرفعاء أحاديث منكرة
இஸ்ஹாக் பின் பிஷ்ர் அல்காஹிலீ என்பவர் கூஃபா பகுதியைச் சார்ந்தவர், மாலிக் பின் அனஸ், அபூமிஃஷர், காமில் அபில் அலா மற்றும் இவர்கள் அல்லாதவர்கள் வழியாகவும் நபிகளார்
கூறியதாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தாரீக் பக்தாத், பாகம் 6, பக்கம் 328
قال أبو يعقوب كذاب
அபூ யஃகூப் என்பவர் இவர் பொய்யர் என்று குறிப்பிட்டுள்ளார்.
நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 328
قال أبو حفص عمر بن علي
وإسحاق بن بشر الكاهلى متروك الحديث
இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டிய (பொய்யர்) ஆவார் என்று அபூஹஃப்ஸ்
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 328
இந்தச் செய்தியைப் பதிவு செய்த இப்னு அதீ அவர்கள் பின்வருமாறு
இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
الكامل في ضعفاء الرجال
ـ موافق للمطبوع - (1 / 342)
قال الشيخ وإسحاق بن بشر
الكاهلي قد روى غير هذه الأحاديث وهو في عداد من يضع الحديث
இஸ்ஹாக் பின் பிஷ்ர் அல்காஹிலீ என்பவர் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை
அறிவிப்பவர்களில் உள்ளவர்.
நூல்: காமில், பாகம்: 1, பக்கம்: 342
இதைப்போன்று கஅபத்துல்லாஹ்வில் முத்தமிடும் இன்னொரு இடமான ருக்குனுல்
யமானி என்ற இடத்தில் முத்தமிட்டால் அல்லாஹ்விடம் கை குலுக்குதல் போன்றாகும் என்றும்
செய்தியும் உள்ளது.
صحيح ابن خزيمة -موافق للمطبوع
- (4 / 221)
2737 - ثنا الحسن الزعفراني ثنا
سعيد بن سليمان ثنا عبد الله بن المؤمل سمعت عطاء يحدث عن عبد الله بن عمرو : أن رسول
الله صلى الله عليه و سلم قال : يأتي الركن يوم القيامة أعظم من أبي قبيس له لسان و
شفتان يتكلم عن من استلمه بالنية و هو يمين الله التي يصافح بها خلقه
மறுமை நாளில் ருக்குனுல் யமானி என்பது அபூ குபைஷ் மலையை விட
பிரமாண்டமானதாக வரும். அதற்கு ஒரு நாவு, இரண்டு உதடுகள்
இருக்கும். அதை முத்தமிட்டவர்களைப் பற்றி அது பேசும். அது அல்லாஹ்வின் வலது கையாகும்.
அதைக் கொண்டு அல்லாஹ் படைப்பினங்களை முஸாஃபஹா செய்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னு ஹுஸைமா, பாகம்: 4, பக்: 221
இந்தச் செய்தி தப்ரானீ - கபீர், அவ்ஸத் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்மானது அல்ல. இந்தச் செய்தியில்
இடம் பெறும் அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பவர் பலவீனமானவராவார்.
تهذيب التهذيب ـ محقق -
(6 / 42)
وقال ابن أبي خيثمة وغير
واحد عن ابن معين ضعيف وقال النسائي ضعيف وقال أبو داود منكر الحديث.
அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பவர் பலவீனமானவர் என்று இப்னு
மயீன், நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர், ஹதீஸ்
துறையில் மறுப்பட வேண்டியவர் என்று அபூதாவுத் அவர்களும் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:
6, பக்கம்: 42
ஹஜ்ருல் அஸ்வத், ருக்குனுல்
யாமனீ ஆகியவை அல்லாஹ் வலது கை என்ற கருத்தில் வரும் அனைத்தும் செய்திகளும் பலவீனமானவையாகும்.
எனினும் ஹஜ்ருல் அஸ்வத், ருக்னுல் யாமனீ
ஆகியவற்றை முத்தமிட வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்மான நபிமொழிகள் உள்ளன.
EGATHUVAM JAN 2017