May 4, 2017

பைத்தியம் பலவிதம்

பைத்தியம் பலவிதம்

"பைத்தியம் பலவிதம்அதில் பரேலவிசம்ஒருவிதம் என்று சொன்னால் அது சரியான வாதமாகும்.

ஒருவர் இறந்து விட்டால் அவர் பேச மாட்டார்அவர் கேட்க மாட்டார். அதனால் தான் அவர் உயிருடன் இருக்கின்ற வரை அவரை மரியாதையாக அழைத்த மக்கள்அவர் இறந்த பின்பு பிணம் வருகின்றதுமய்யித் வருகின்றதுசவம் கிடக்கின்றதுபிரேதத்தை அடக்கப் போகின்றோம் என்று பேசுகின்றனர்.

சவம்சடலம்பிணம்பிரேதம் என்ற அவப்பெயருக்கு இறந்தவர் ஆளாவதற்குக் காரணம் என்னஅவருடைய உடலில் இருந்த உயிர் மறைந்ததால் இத்தகைய சிறப்புப் பட்டங்கள் கிடைக்கின்றன. இதில் நல்லவர்கெட்டவர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் இதே கதி தான்.

இந்த உண்மையை சாதாரண பாமரன் கூடப் புரிந்து வைத்துள்ளான். ஆனால் இந்த உண்மை பரேலவிகளுக்குப் புரிவதில்லை. இவர்கள் எப்போதும் இறந்தவர்களை உயிருள்ளவர்கள் என்றே அழைப்பார்கள். இருளை ஒளி என்பார்கள். நிழலை வெயில் என்பார்கள். அதனால் இந்த வகையில் அவர்கள் சரியான பைத்தியம் என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவர்களது இந்தப் பைத்தியக்கார வாதங்களில்புத்தி பேதலிப்பு பிதற்றல்களில் ஒன்று தான், "நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல! அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட படைப்பு'' என்ற குருட்டுக் கருத்து!

தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வேர் பிடிப்பதற்கு முன்பு இந்தத் தீய சிந்தனை தமிழக முஸ்லிம்களிடம் இடம் பிடித்திருந்தது. ஏகத்துவ சிந்தனை வந்தவுடன் இந்தக் கருத்து படிப்படியாக மறைந்து கொண்டிருக்கின்றது. ஒரேயடியாக இனி அது மரணிக்கவும் இருக்கின்றது. அவ்வாறு மரண அடி கொடுத்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் அருள் வசனங்கள் தான்.

அந்த அருள் வசனங்களில் ஒன்று தான் இது!

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்ற குருட்டு வாதத்திற்குச் சம்மட்டி அடி கொடுக்கின்ற சத்திய வசனம் இது!

ஆனால் இந்த பைத்தியக்காரக் கூட்டம் அந்தச் சம்மட்டியை வளைக்கவும் உடைக்கவும் பார்க்கின்றது. அது எப்படி?

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான்என்று (முஹம்மதே!) கூறுவீராக!என்று அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம்அல்லாஹ் சொல்ல வருகின்ற கருத்து, "நான் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்நான் அப்படிச் சொல்ல மாட்டேன்'' என்பது தான்.

இப்படி ஒரு பரேலவிப் பைத்தியம் கூறியுள்ளது.

அல்லாஹ் குர்ஆனில் அதே வசனத்தில், "உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே'' என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால் அதற்கு, "உங்களுடைய கடவுள் ஒரே ஒரு கடவுள் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்நான் அப்படிச் சொல்ல மாட்டேன். காரணம் நான் பல கடவுள் கொள்கையைத் தான் சொல்கிறேன்'' என்ற மோசமான கருத்து வராதா?

"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1)

இந்த வசனத்தில் "அல்லாஹ் ஒருவன் என்று கூறுவீராகஎன்று சொல்லப்படுகின்றது. இவர்களுடைய கிறுக்குத்தனமான வாதத்தின்படி, "அல்லாஹ் ஏகன் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்ஆனால் உண்மையில் அல்லாஹ் ஏகன் கிடையாதுஏராளமான அல்லாஹ் இருக்கிறான்'' என்ற தீய கருத்து வராதா?

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும்மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும்மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219

பரேலவிகளின் பைத்திய விளக்கத்தின்படிமதுவிலும் சூதாட்டத்திலும் மறுமையில் நன்மை இருக்கின்றது என்ற அர்த்தம் வந்து விடாதா?

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 2:22)

இதிலும் இதே கருத்து வராதா?

இப்படி, "நபியே! நீங்கள் சொல்லுங்கள்என்ற கருத்தில் வரக்கூடிய அத்தனை வசனங்களுக்கும் பொருள் செய்தால் குர்ஆன் கூறக்கூடிய கொள்கைகோட்பாடுகள்சட்ட திட்டங்கள் அனைத்துமே கேலிக்கூத்தாக ஆகிவிடும்.

"நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 14:11

நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்ல! ஏனைய இறைத்தூதர்கள் அனைவருமே மனிதப் படைப்பு தான் என்று இந்த வசனம் தெள்ளத்தெளிவாகசந்தேகமில்லாமல் தெரிவிக்கின்றது.


எனவே முஹம்மத் (ஸல்) அவர்களும்அதற்கு முன்பு வந்த ஏனைய தூதர்களும் மனிதப் படைப்பு தான் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பல்ல என்ற பரேலவிகளின் வாதம் பைத்தியக்காரத்தனமானது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

EGATHUVAM APR 2012