கிதாப், ஸுஹுஃபு வேறுபாடு
பெரிய அளவில் வழங்கப்படும் கிதாப் எனும் வேதம், சிறிய அளவில் வழங்கப்படும் ஸுஹுஃப் எனும் சிற்றேடு என்று சிலர் இரு வகைகளாக இறை வேதங்களை பிரித்துள்ளனர்.
இதற்கு திருக்குர்ஆனிலோ, ஆதாரப் பூர்வமான நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கிதாப் எனும் வேதம் மட்டுமே வழங்கப்பட்டது; ஸுஹுஃபு எனும் சிற்றேடு வழங்கப்படவில்லை என்று இவர்கள் கூறுவார்கள்.

இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளைக் கூறுகிறார்.
(அல்குர்ஆன் 98:2)
இவ்வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுஹுஃபை ஓதிக் காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஸுஹுஃபு என்பதையும், கிதாப் என்பதையும் அல்லாஹ் ஒரே கருத்தில்தான்
பயன்படுத்தியுள்ளான் என்பதை இதிருந்து அறியலாம்.