களவு போகும் கடவுளர்கள் கை பிசைகின்ற பக்தர்கள்
எம். ஷம்சுல்லுஹா
தமிழகத்தில்
அவ்வப்போது ஏதாவது பரபரப்பான செய்திகள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் இடம் பெறும். அண்மையில் சிலைக் கடத்தலில் ஈடுபட்ட தீனதயாளன் என்பவர் கைதானது
அந்தப் பரப்பரப்பான செய்திகளில் முக்கியச் செய்தியாகும்.
இந்தச்
சிலைத் திருட்டில் ஈடுபடுவோர் அகில உலக அளவில் தொடர்பு வைத்துள்ளவர்கள். சிவபுரத்து
நடராஜன் சிலை அமெரிக்காவில் குடியேறிய கதை எல்லாம் உண்டு.
சென்னை
நகரின் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் சாதாரண புகாருக்கு சோதனையிடச்
சென்ற காவல்துறையினருக்கு அள்ள அள்ளக் குறையாத, பழைமை வாய்ந்த கற்சிலைகள், வெண்கலச்சிலைகள்
மற்றும் பழைமை வாய்ந்த தஞ்சை ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த பங்களாவின் பல்வேறு
ரகசிய அறைகளில் இன்னும் சிலைகள் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்பதால் நவீன இயந்திரம்
கொண்டு ஆய்வு செய்யவும் மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
தற்போது
கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சிலைதிருட்டுப்
பிரிவு காவல்துறையினரும்,
தொல்லியல் ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். இந்த சிலைதிருட்டுக் கும்பலின் தலைவனாக திகழ்ந்தவர்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர். இவர் தொழிலதிபர் என்ற போர்வையில் தமிழகத்தில்
பல்வேறு பிரமுகர்களிடம் நல்ல பழக்கம் வைத்துள்ளவராம்.
தமிழ்நாட்டில்
காஞ்சிபுரம்,
மதுரை, தஞ்சாவூர் போன்ற நகரங்களில் கோயில்கள் அதிகம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில்கள் கட்டடக் கலை, சிற்பக்
கலை மற்றும் வரலாற்றுப் பிரியர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளவையாகும். கோயில்களின்
அழகைப் போற்றவும்,
கடவுளை வழிபடவும் மட்டுமே அனைவரும் அங்கு வருவதில்லை. இதனால்
சிலை திருடர்களுக்குக் கோயில்கள் எளிதான இலக்காக ஆகிவிட்டன.
12ஆம் நூற்றாண்டுக்கு முன் கலை
அழகு நயத்துடன் வார்க்கப்பட்டுள்ள நடராஜர், ஆழ்வார்கள், முருகன்
சிலைகள், பாதுகாப்பு அதிகமில்லாத இக்கோயில்களிலிருந்து திருடப்பட்டு, பல
அயல் நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இச்சிலைகளுக்கு மேலை நாட்டினர் மிக அதிகப்படியான
விலை தருகின்றனர்.
சோழர்
காலத்தைச் சேர்ந்த தஞ்சை மதுரை கோயில்கள், பல்லவர் காலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், வேலூர்
கோயில்கள்,
பாண்டியர் காலத்தைச் சேர்ந்த திருநெல்வேலி கோயில்களை இலக்காக
வைத்து இத்திருடர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த
மாவட்டங்களில் தொடர்ந்து சுற்றித் திரிந்து, போதுமான பாதுகாப்பு அற்ற கோயில்களைத்
தங்கள் இலக்காகத் தேர்ந்து எடுக்கின்றனர். கோயிலுக்குள் திருடச் செல்லும்போது, விலை
உயர்ந்த சிலைகளை மட்டுமே அவர்கள் திருடுகின்றனர். பல நேரங்களில், கோயில்
பாதுகாப்புக்காக இருக்கும் காவலர்களை அவர்கள் கொன்று விடுகின்றனர் என்று சிலை திருட்டுப்
பிரிவு காவல்துறை அதிகாரி கூறுகிறார்.
சிலைதிருடன்
தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பஞ்சலோக சிலைகளின் மதிப்பை தொல்பொருள் ஆய்வுத் துறையினராலும்
கூட மதிப்பிட முடியவில்லையாம். இவை முதல்நிலை
இடைத் தரகருக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலான விலைக்கு விற்கப்படுகின்றன. அதனை அவர் இரண்டாம்நிலை இடைத்தரகருக்கு
ரூபாய் ஒரு லட்சம் வரைக்கும் விலை வைத்து விற்று விடுகின்றார். அவர் அதனை 5 முதல்
10 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து மூன்றாம் நிலை இடைத்தரகருக்கு விற்றுவிடுகிறார்.
சர்வதேச சந்தையில் இந்தச் சிலைகள் 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய்
வரை விலை போகின்றன என்று அந்த அதிகாரி கூறுகிறார்.
இந்த
சிலை திருட்டை நாத்திகர்கள் விமர்சித்து, கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக
இதைப் பதிகின்றார்கள். ஆனால் இவர்கள் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று பீற்றிக் கொண்டாலும்
பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை போட்டு வணங்கி வருவதின் மூலம் இவர்களின் பகுத்தறிவு வாதம்
பளிச்சென்று பல்லிளிக்க ஆரம்பித்து விட்டது.
மரியாதை
என்ற பெயரில் சிலைகளுக்கு மாலை போடுவது, அவற்றிற்கு முன்னால்
சிரம் பணிந்து கையெடுத்துக் கும்பிட்டு வணங்குவது அந்தச் சிலைகளுக்கு ஒன்றும் தெரியப்
போவதில்லை. இதில் என்ன பகுத்தறிவு வாழ்கின்றது என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப்
போனால் பகுத்தறிவு என்ற பெயரில் இவர்களுடைய பைத்தியக்காரத்தனம் தான் கொடிகட்டிப் பறக்கின்றது.
இந்த அடிப்படையில் இவர்கள் சிலை வணங்கக் கூடிய இந்த ஆத்திகர்களைக் குறை சொல்ல எந்த
அருகதையும் இல்லாதவர்களாகி விடுகின்றனர்.
சிலை
வணக்கத்தை விமர்சிக்கின்ற அருகதை அல்லாஹ்வை மட்டும் கடவுளாக வணங்கக் கூடிய முஸ்லிம்களுக்கு
மட்டும் தான் இருக்கின்றது.
இந்தப்
பின்னணியில்,
இப்போது களவு போகும் இந்த சிலை விவகாரத்திற்கு வருவோம். சிலைத்
திருட்டில் ஈடுபடுபவர்களைப் பார்க்கும் போது அவர்களில் பெரும்பான்மையினர் ஆத்திகர்களாகத்
தான், அதாவது கடவுள் பக்தர்களாகத் தான் இருக்கின்றார்கள்.
சிலை
திருட்டிலும்,
கடத்தலிலும் ஈடுபடுபவர்களின் உள்ளங்களில் இந்தச் சிலைகள் என்ன
செய்து விடப் போகின்றன என்ற அசத்தலான, துணிச்சலான நம்பிக்கை தான் இவர்கள்
திருடுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. சிலைகளுக்கு எந்தச் சக்தியுமில்லை என்பது தான்
உண்மையும் எதார்த்தமுமாகும்.
ஏதோ
ஒரு தீன தயாளன் மாட்டியிருக்கலாம். மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கின்ற எத்தனையோ
தீன தயாளன்கள் இருக்கின்றார்கள். அவர்களெல்லாம் காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவி
விட்டு சிலை கடத்தல் எனும் வியாபாரக் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இது
உணர்த்தும் பாடமும்,
படிப்பினையும் என்ன? சிலைகளுக்கு எந்தச் சக்தியுமில்லை என்பது தான்.
பிள்ளை
பிடிப்பவன் ஒரு பிள்ளையைப் பிடிக்கும் போது
கூட அந்தப் பிள்ளை சுதாரித்துக் கொண்டு அலறி, அபய மற்றும் அபாயக் குரல்
எழுப்பும். ஆனால் இந்தச் சிலைக்கு ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் போது அலறக் கூடத் தெரியவில்லை.
இது எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று மக்கள் சிந்திப்பது கிடையாது.
தன்னுடைய
குழந்தையிடம் உண்மையில் ஒரு பாம்பு, தேள் என்று வந்து விட்டால் பெற்றோர்கள்
துடிதுடித்துப் போய் அதை அடித்துக் கொன்று விடுகின்றனர். அதே சமயம் அந்த குழந்தைகளுக்கு
முன்னால் செயற்கை பாம்புகள், செயற்கை தேள்கள் கிடந்தால் அதைக் கண்டு அவர்கள்
அலட்டிக் கொள்வதில்லை. காரணம் அவற்றிற்கு எந்த சக்தியும் இல்லை என்று விளங்கி வைத்திருப்பது
தான்!. இதே அளவுகோலை ஏன் இந்த சிலைகளுக்குப் பொருத்திப் பார்ப்பதில்லை.
பொன்னால்
ஆன பொருளிலிருந்து மண்ணால் ஆன பொருள் வரை அசல் தன்மையை ஊர்ஜிதம் செய்யும் மக்கள் தாங்கள்
வணங்குகின்ற கடவுளர்கள் விஷயத்தில் ஊர்ஜிதம் செய்து பார்ப்பதில்லை. அதை ஊர்ஜிதம் செய்தால்
களவு போகும் இந்தப் போலிக் கடவுள்களை வணங்கவும் மாட்டார்கள். அவை களவு போனதும் கை பிசைந்து
கையறு நிலையில் நிற்க மாட்டார்கள். கவலைப்பட்டு கண்ணீர் விட்டு அழவும் மாட்டார்கள்.
காவல் நிலையத்தில் போய் புகார் செய்து தங்கள் காவல் தெய்வங்களை மீட்டுத் தரும்படிக்
கோரிக்கை வைக்கவும் மாட்டார்கள்.
இதோ
திருக்குர்ஆன் கூறுகிறது.
எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு
இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள்
அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே!
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப்
போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள்
உங்களுக்குப் பதில் தரட்டும்!
அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!
எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 7: 191-195
இந்த
அளவு கோலைப் பயன்படுத்தி உண்மையான ஒரே ஒரு
கடவுளை இனியாவது அடையாளம் கண்டு அவனை மட்டும் வணங்க முன் வருவார்கள் எதிர்ப்பார்ப்போமாக!
EGATHUVAM JULY 2016