பிகார்
தேர்தல்:பி.ஜே.பி.க்குப் பிராண வாயு தந்த பயங்கரவாதம்
கடந்த
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி. மரணப் படுக்கையில் உயிர் பிரியும் நிலையில்
கிடந்தது. இந்நிலையில் அதற்கு ஒரு பிராண வாயு கிடைத்து பிழைத்துக் கொண்டது. அந்தப்
பிராண வாயு டெல்லி குண்டு வெடிப்புக்குப் பின்னால் அதற்குக் கிடைத்தது. தீபாவளிக்கு
ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தில் 60 பேர் இறந்து போயினர்.
210 பேர் காயம் அடைந்தனர்.
தீபாவளி
மற்றும் நோன்புப் பெருநாள் போன்ற மிக முக்கியமான பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட
இந்தக் குண்டு வெடிப்பில் வணிகத் தலத்திற்கு வந்த பெண்கள், குழந்தைகள்
பலியான காட்சி மக்களின் நெஞ்சைப் பிளப்பதாக அமைந்தது.
இதைச்
செய்தது யார்?
எந்த மதத்தினர் என்று பாராமல் அனைவரும் இந்தக் கோரத் தாக்குதலை
வன்மை யாகக் கண்டித்தனர். ஏகத்துவமும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.
(இந்தக் கொடுமையைச் செய்தது முஸ்லிம்கள்
தான் என எப்படிச் சொல்ல முடியும்? என்ற கேள்வி எழலாம். இந்தக் குண்டு வெடிப்பு
உட்பட அன்றாடம் காஷ்மீரில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் பெயர் தாங்கிகள்
பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்)
ஒரு
பண்டிகை நாளை முன்னிட்டு நடந்த இந்தப் பயங்கரவாதம், இஸ்லாத்தின் மீது ஒரு
வெறுப்பான பார்வை வரக் காரணமாக அமைந்து விட்டது. அதன் எதிரொலி தான் பீகாரில் பி.ஜே.பி.
அடைந்த வெற்றியாகும்.
ஜிஹாத்
என்ற பெயரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துதல், ஆள் கடத்திக் கொலை செய்தல் போன்றவற்றில்
ஈடுபடுவோர் ஒரு போதும் நன்மையான காரியத்தில் ஈடுபட்டவராக மாட்டார். அதனால் ஏற்படும்
விளைவுகளிலிருந்து அவர் தப்பி விட முடியாது. அந்த விளைவுகளுக்கு அவரே பொறுப் பேற்றாக
வேண்டும்.
இது
போன்ற காரியங்களால் ஏற் படுகின்ற விளைவுகளைப் பார்ப்போம்.
இஸ்லாத்தின்
மீது ஏற்படும் வெறுப்பு
கேரளாவில்
மணியப்பன் குட்டி என்பவரின் குடும்பமும் அவர்
வாழ்ந்த கிராமமும் அவருடைய மரணத்தால் சோகத்தில் மூழ்கியது. இவர்களிடத்தில் யாராவது
போய் இஸ்லாத்தைப் பற்றி,
அது ஒரு கருணை மார்க்கம் என்று எடுத்துச் சொல்ல முடியுமா?
மறுமையில்
மக்கள் நரகத்தில் போய்ச் சேர்ந்து விடக் கூடாது. அவர்களை நரகிலிருந்து காக்க வேண்டும்.
இதைச் சொல்லவே நபிமார் கள் வந்தனர். அவர்களுக்கு வேதம் அருளப்பட்டது. இந்த இலட்சியத்தை
மணியப்பனின் ஒரு தலைமுறை அல்ல, ஏழு தலைமுறையினர் ஏற்க முடியாத அளவுக்கு
இஸ்லாத்தின் மீது ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
கிறித்தவ
மதத்திற்கு ஆள் சேர்த்தல்
கிறித்தவ
மதம் தன்னை அன்பு மார்க்கம், காருண்ய மார்க்கம் என்று கூறிக் கொண்டிருக்கிறது.
இஸ்லாம், கிறித்தவம் ஆகிய இவ்விரண்டில் அமைதியை விரும்பும் ஒருவன் கிறித்தவத்தையே தேர்வு
செய்யும் அளவுக்கு அப்பாவிகள் மீது மிருகத் தனமான தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்றது.
பாதிப்புக்குள்ளாகும்
சிறுபான்மை சமுதாயம்
இத்தகைய
குண்டு வெடிப்புகள் நடந்து முடிந்ததும் பெரும்பான்மை சமுதாயத்துடன் கலந்து வாழும் சிறுபான்மை
முஸ்லிம்கள்,
பெரும்பான்மையினரின் எல்லையற்ற வெறுப்புக்கும், கோபத்திற்கும்
உள்ளாகும் நிலை. அவர்களுடன் கொடுக்கல் வாங்கல், விவசாயம், தொழில்
அத்தனையிலும் முஸ்லிம்கள் தனிமைப் படுத்தப்படுகின்றனர்.
இதற்குச்
சிறந்த உதாரணம் கோவை மற்றும் மேலப்பாளையம் போன்ற பகுதிகள். வணிகத்தில் முஸ்லிம்கள்
கொடி கட்டிப் பறந்த கோவையில் குண்டு வெடிப்புக்குப் பிறகு முஸ்லிம்கள் 50 ஆண்டுகள்
பின்னோக்கித் தள்ளப்பட்டனர். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிமல்லாத வர்களின்
வணிகச் சந்தையாகத் திகழ்ந்த மேலப்பாளையத்தில் சில சமூக விரோதச் செயல்கள் நடைபெற்ற பிறகு
ஒட்டு மொத்த வியாபாரமும் படுத்து விட்டது.
பாதிக்கப்படும்
பிரச்சாரப் பணி
இஸ்லாமிய
ஆட்சி உள்ள நாடுகளை விட இந்தியாவில் முஸ்லிம்
களுக்கு பேச்சு சுதந்திரமும், பிரச்சார உரிமையும் உள்ளது.
முஸ்லிம்களிடமே இன்று இஸ்லாத்தைச் சொல்ல வேண்டிய நிலையில் உள்ள நாம் அந்தப் பிரச்சாரப்
பணியை முழுமையாகச் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
கோவையில்
குண்டு வெடிப்பு நடந்த பிறகு முஸ்லிம் அமைப்புகள் பொதுக் கூட்டம் நடத்த முடியாத நிலை
ஏற்பட்டது. சமீபத்தில் லண்டனில் நடந்த பாதாள ரயில் குண்டு வெடிப்புக்குப் பிறகு முஸ்லிம்கள்
சந்தித்த சோதனைகள் சொல்லி மாளாது. அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு நாடுகளைச்
சேர்ந்த மார்க்க அறிஞர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
டில்லியில்
குண்டு வெடிப்பு நடந்து விட்டதா? அப்படியானால் பீகாரில் பி.ஜே.பி. கூட்டணி
ஆட்சிக்கு வந்து விடும் என்று பாமரனும் கணக்குப் போடும் அளவுக்கு அதன் பாதகம் பரந்து
விரிந்த ஒன்றாகி விட்டது. பீகாரில் நக்ஸலைட்டுகளால் நடத்தப் பட்ட சிறை தகர்ப்பு நிகழ்வும்
இந்தத் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்யும் ஒரு கூடுதல் காரணியாக அமைந்தது.
கோவை
குண்டு வெடிப்பு,
தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் தேர்தலின் போக்கையே
மாற்றி அமைத்தது. அது தான் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக் கட்டில் அமைப்பதற்கு அஸ்திவாரம்
போட்டுக் கொடுத்தது என்ற உண்மையை யாராலும் மறக்க முடியுமா? மறைக்க
முடியுமா?
ஆப்கானிஸ்தான், ஈராக்
போன்ற நாடுகளை வேரறுத்ததால் சொந்த நாட்டு மக்களிடமே வெறுப்புக்குள்ளாகி 2004ல் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை எதிர் நோக்கியிருந்த ஜார்ஜ் புஷ், தனக்கு
எதிராகக் களத்தில் நின்ற ஜான் கெர்ரியை விட ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகள்
பெற்று வெற்றி பெற்றார். இதற்கு என்ன காரணம் தெரியுமா? தேர்தலுக்கு
முதல் நாள் வெளியான ஒரு ஆடியோ கேஸட் தான். உலக வர்த்தக மையத்தைத் தாக்கியது போன்ற பெரிய
தாக்குதல் ஒன்றை மீண்டும் நடத்தப் போவதாக உஸாமா பின் லாதின் மிரட்டல் விடுப்பதாக அந்தக்
கேஸட் மிரட்டியது. அவ்வளவு தான்! தேர்தலின் போக்கே தலைகீழாக மாறி கொடுங்கோலன் புஷ்
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அது காரணமாக அமைந்தது. பின் லேடனுக்கு நன்றி என்ற தலைப்பில்
ஊடகங்கள் இதைச் செய்தியாக வெளியிட்டன. உலகெங்கும் உள்ள தேர்தல் முடிவுகள் முஸ்லிம்
களுக்கு எதிராக அமைவதற்கு இந்தத் தாக்குதல்கள் காரணமாக உள்ளன என்பதற்கு இது நிதர்சனமான
எடுத்துக்காட்டு.
எதிர்த்
தாக்குதலில் பலியாகும் அப்பாவிகள்
உலகில்
எந்தப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றாலும் அந்தப் பகுதியில் வசிக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள், பெரும்பான்மை
சமுதாயத்திலுள்ள விஷமிகளால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
இந்தியாவில்
ஆர்.எஸ்.எஸ்.,
வி.ஹெச்.பி. போன்ற இந்து மத வெறியர்கள் ஏற்கனவே முஸ்லிம்களைக்
கருவறுப்பதற்குக் காரணம் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறு தாக்குதல் நடந்தாலும்
அதைச் சாக்காக வைத்துக் கொண்டு சகட்டு மேனிக்கு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள்.
இதில்
இந்தப் போலி ஜிஹாத்வாதிகள் யாரும் பாதிப்பது கிடையாது. பாதிக்கப்படுவது எல்லாமே அப்பாவி
முஸ்லிம்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகள். மும்பை கலவரம், குஜராத்
படுகொலைகள் எல்லாமே எதிர் விளைவால் ஏற்பட்டவை தான்.
இந்தோனேஷியா
நாட்டின் பாலி தீவில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முஸ்லிம்
கள் கொடும் தாக்குதலுக்கு உள்ளாயினர்.
அமெரிக்காவிலும், லண்டனிலும்
நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு அங்குள்ள முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.
அடித்து நொறுக்கப்பட்ட பள்ளிவாசல்கள் கணக்கிலடங்காது.
அநாதைகள்
வயிற்றில் அடித்தல்
உலகமெங்கும்
உள்ள ஏழை நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக அனாதைகளுக்கு அரபக
முஸ்லிம்கள் மாதாந்திர,
வருடாந்திர நிதி உதவிகளைச் செய்து வந்தனர். அமெரிக்காவில் உலக
வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட பிறகு இந்தப் பயங்கர வாதத்திற்குப் பணம் எப்படிச் செல்கிறது? என்ற
தனது ஆந்தைப் பார்வையை அமெரிக்க அரசு செலுத்தியது. அதன் கோணப் பார்வையில் தட்டுப்பட்டது
இந்த அனாதைகளுக்கும்,
ஏழைகளுக் கும் வளைகுடா முஸ்லிம்கள் அளிக்கும் அற்பக் காசுகள்
தான். (அரபக மக்களின் குடும்பச் செலவுடன் ஒப்பிடும் போது அவை அற்பக் காசுகள் தான்)
அவற்றை
நிறுத்து! என்று வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவு போட்டு, அனாதைகள்
மற்றும் ஆதர வற்றவர்களின் வயிற்றில் மண்ணள்ளிப் போட்டது. சோமாலியா என்றாலே அங்குள்ள
எலும்புக் குழந்தைகள் தான் நம் கண் முன் தோன்றும். அந்த நாட்டில் பட்டினியால் வாடும்
மக்களுக்கு உதவிக் கொண்டிருந்த இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்களும் முடக்கப்பட்டன; முடமாக்கப்பட்டன.
இந்த
ஏழை, எளிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்த எச்சில் காசுகளும் தற்கொலைத் தாக்குதல்களால்
தடுத்து நிறுத்தப்பட்டு விட்டன. ஜிஹாதின் நோக்கமே இவர்களைக் காப்பதற்காகத் தான். ஆனால்
அவர்களின் வாழ்க்கையைக் இது அழிக்கவல்லவா செய்கின்றது?
இது
மட்டுமா? உலகின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும்
வளைகுடா முஸ்லிம்கள் பண உதவி செய்து வந்தனர். அந்த வாசலையும் அமெரிக்கா அடைத்து விட்டது.
பாவம்
ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
இந்தத்
தவறான ஜிஹாத்வாதிகள் கையாளும் யுக்தியில் ஒன்று மறைமுகத் தாக்குதல். இவர்கள் தாக்கி
விட்டுப் போய் விடுவார்கள். காவல் துறை அல்லது ராணுவத்தினர், அப்பாவிகள் யாரையாவது இதற்குப்
பலிகடாவாக்கி விடுகின்றனர். ஒவ்வொரு தடவை தாக்குதல் நடத்தும் போதும், நடத்தியவர்கள்
தப்பித்துக் கொள்வார்கள். அப்பாவிகள் தான் பலிகடாவாக்கப் படுகின்றார்கள். தாக்குதல்
நடத்தியவர்களில் யாரையாவது காவல் துறை அடையாளம் கண்டு விடடால், அவர்களுடைய
குடும்பத்தை வதை செய்ய ஆரம்பித்து விடுகின்றது. தொழில் நடத்த விடாமல், வியாபாரம்
செய்ய விடாமல்,
பாஸ்போர்ட்டை முடக்கி வெளிநாடு செல்ல விடாமல், இன்னும்
ஒரு படி தாண்டி அவர்களுடைய குடும்பப் பெண்களை அழைத்துச் சென்று கொடுமைப் படுத்துதல்
போன்ற அத்துமீறல் எல்லாம் எதனால் ஏற்படுகின்றது? இந்த மறைமுகத் தாக்குதலால்
தான்.
எனவே
இந்தத் தவறான ஜிஹாத் எனும் வினையில் இறங்குபவர்கள் இந்த விளைவுகளைச் சிந்தித்தாக வேண்டும்.
ஆனால் இவர்கள் இதையெல்லாம் கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. அவர்களுடைய பார்வை ஒரு பக்கப்
பார்வை தான். அவர்களுடைய குறி ஒன்று தான். அது கொல்வது மட்டும் தான்.
இஸ்லாமிய
மார்க்கம் போரில் கூட குறியை மட்டும் பார்க்கச் சொல்ல வில்லை. நெறியையும் பார்க்கச்
சொல்கின்றது. அந்த நெறியைப் பார்க்காததால் தான் இத்தகைய பாதக விளைவுகளை இவர்கள் ஏற்படுத்தி
விடுகின்றார்கள். இந்த எதிர் விளைவுகளுக்குத் தாங்கள் பொறுப்பு கிடையாது என்று நினைத்துக்
கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிச்சயமாக இந்த எதிர் விளைவுகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்
இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
மணியப்பன்
குட்டி படுகொலை: தாலிபான்களின் தற்கொலை முடிவுகள்
தினமணி
நாளிதழ் படத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் உருகாத மனமும்
உருகி விடும். கரையாத உள்ளமும் கரைந்து விடும். கண்கள் கண்ணீரை வடிக்கும். பார்ப்பவரின்
நெஞ்சம் பதை பதைக்கும்,
பரிதவிக்கும்.
கணவனைப்
பறி கொடுத்த மனைவி;
அந்தத் தாய்க்கு அருகில் இரண்டு வயதுக் குழந்தை! அந்தப் படத்தின்
கீழே உள்ள செய்தி இதோ:
தன்னையே
தேற்றிக் கொள்ள முடியாத சோகத்தில், "அப்பா எப்போம்மா வருவார்?'' என்று கேட்கும் ஒன்றும் அறியாத குழந்தைக்கு என்ன பதில் கூறித் தேற்றுவது எனத் தெரியாமல்
திகைத்து நிற்கும் தாய் பிந்து! தனது 2 வயது மகன் ஆஷயேவுடன், கேரளத்தில்
உள்ள சிகோல் கிராமத்திலுள்ள வீட்டில் பித்துப் பிடித்துப் போய் அமர்ந்திருக்கின்றார்.
அவரது கணவர் மணியப்பன் குட்டியைத் தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் கடத்திச்
சென்று படுகொலை செய்து விட்டனர்.
பார்ப்பவர்களிடம்
அந்தப் படமே ஒரு கேள்வியை முன் வைக்கின்றது. போர் செய்வதற்காக அல்ல! பிழைப்புக்காகச்
சென்ற மணியப்பனைத் தாலிபான்கள் கடத்திச் சென்று கொலை செய்தது நியாயமா?
தந்தை
ராமக்குட்டி,
தாயார் மனியம்மா, மனைவி பிந்து, மூன்றாம்
வகுப்பு படிக்கும் மூத்தப் பிள்ளை அஜய், இரண்டு வயதுக் குழந்தை அக்ஷாய்
ஆகியோருக்கு சம்பாதித்துப் போடும் மணியப்பன் என்ற ஆல மரத்தை வெட்டிச் சாய்த்தது, வேரறுத்தது
நீதியா? நியாயமா?
என்று அந்தப் படம் சரமாரியான கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றது.
இது
உண்மையில் இஸ்லாத்தின் கருணை முகத்தைக் காட்டுமிராண்டி முகமாகக் காட்டச் செய்கின்றது.
ஈவு இரக்கத்தைப் போதிக்க வந்த மார்க்கத்தை அரக்க குணம் கொண்ட இரத்தக் காட்டேறியாக இது
சித்தரிக்கின்றது. இஸ்லாத்தின் அகோரம் கைக்குழந்தைகளையும், கர்ப்பிணிப்
பெண்களையும்,
கைத்தடி ஊன்றும் முதியவர்களையும் விட்டு வைப்பதில்லை என்ற தப்பெண்ணம்
மாற்றாரின் உள்ளங்களில் பதியப்பட்டு விட்டது.
EGATHUVAM DEC 2005