ஜகாத்
ஓர் ஆய்வு: விமர்சனங்களும் விளக்கங்களும்
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்ற
ஆய்வுக் கட்டுரையை செப்டம்பர் 2005 ஏகத்துவம் இதழில் நாம் வெளியிட்டிருந்தோம்.
இந்த
ஆய்வுக் கட்டுரை வெளிவந்து இரண்டு மாதங்களுக்குப் பின் அல்ஜன்னத் மாத இதழில் நமது ஆய்வுக்
கட்டுரை பற்றி மறு ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளனர்.
முரண்பட்ட
இரண்டு கருத்துக்கள் மக்கள் மத்தியில் வைக்கப்படும் போது ஆரம்பத்தில் குழப்பம் போல்
தோன்றினாலும் இறுதியில் எது சரியான கருத்தோ அந்தக் கருத்தை அறிவுடை யோர் திட்டவட்டமாக
அறிந்து கொள்ள இயலும் என்பதால் அல்ஜன்னத்தின் மறு ஆய்வுக் கட்டுரையை நாம் மனதார வரவேற்கிறோம்.
அவர்களின்
மறு ஆய்வுக் கட்டுரை சரியானதாக அமைந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் நாம் தயக்கம்
காட்ட மாட்டோம். ஜகாத் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட ஏகத்துவம் இதழிலேயே நாம் இதனைத்
தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
அல்ஜன்னத்தின்
மறு ஆய்வுக் கட்டுரைக்குள் செல்வதற்கு முன்னால் சில முக்கியமான தகவல்களை தெரிவித்துக்
கொள்கிறோம்.
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்பதில்
தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியிலேயே ஆரம்பத்தில் மாறுபட்ட இரண்டு கருத்துக்கள் இருந்து
வந்தன. ஒவ்வொரு கருத்துடையவர்களும் தத்தமது கருத்தைக் கூறி வந்தனர்.
அவர்கள்
மத்தியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னரே
"ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை' என்ற
ஒத்த கருத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து அறிஞர்களும் வந்தனர்.
ஆயினும், வருடாவருடம்
ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற கருத்தில் ஆரம்பம் முதலே இருந்து வந்த அறிஞர்களின்
வாதம் சரியானது என்றாலும் அதை நிறுவுவதற்காக எடுத்து வைத்த சில காரணங்களும், சில
ஆதாரங்களும் சரியானவை அல்ல என்ற முடிவுக்கும் அனைவரும் வந்தனர்.
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் கொடுக்க வேண்டியதில்லை என்ற
வாதத்தை முன் வைக்கும் போது எந்த ஆதாரம் அனைவராலும் சரியானது என்று ஏற்றுக் கொள்ளப்
பட்டதோ அதை மட்டுமே கூற வேண்டும். எந்தக் காரணம் எதிர்க் கருத்து சொல்ல முடியாத அளவுக்கு
வலிமையானதாகவுள்ளதோ அதை மட்டுமே கூற வேண்டும் என்ற முடிவும் அன்றைய தினம் எடுக்கப்பட்டது.
அதன்
அடிப்படையில் தான் ஏகத்துவம் இதழ் வெளியிடப்பட்டது.
தவிர்க்கப்பட்ட
ஆதாரங்கள்
நி கொடுத்த பொருளுக்கே ஜகாத் கொடுத்தால் ஏழ்மை
ஏற்படும் என்பது போன்றவற்றை உதாரணமாகக் கூட கூறக் கூடாது.
நி "ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால்
ஒரு ஆண்டு நிறைவடையும் வரை ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்களில் ஒரே ஒரு அறிவிப்பு மட்டும்
சரியாகவுள்ளது;
ஆயினும் அந்த ஹதீஸின் வாசகத்திலிருந்து கொடுத்த பொருளுக்கு மீண்டும்
மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியாது'' என்ற வாதத்தையும் எடுத்து வைக்கக் கூடாது. ஏனெனில் இந்தக் கருத்தில் எந்த ஒரு ஹதீஸும்
ஆதாரப்பூர்வமானது அல்ல.
நி "ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடாவருடம்
மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று சட்டம் எளிமையாக இருந்தால் தான்
அதிகமானோர் ஜகாத் கொடுப்பார்கள்'' என்பது போன்ற வாதங்களையும் தவிர்க்க வேண்டும்.
நி இறுதியாக எடுக்கப்பட்ட முடிவுகளை மட்டுமே
ஏகத்துவத்தில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடப்பட்டவற்றை மட்டுமே தவ்ஹீத் ஜமாஅத்
அறிஞர்கள் ஜகாத் குறித்த ஆதாரங்களாகக் குறிப்பிட்டுப் பேச வேண்டும்.
நி புதிய ஆதாரங்கள் ஏதும் கிடைத்தால் அனைத்து
அறிஞர்களும் ஆய்வு செய்து பின்பே அதை அறிவிக்க வேண்டும்.
என்பன
போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஏகத்துவம் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது.
இதன் காரணமாகத் தான் முதன்மையான ஆதாரம் எது? துணை ஆதாரம் எது? என்று
அக்கட்டுரையில் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டது.
ஆயினும்
ஏகத்துவம் இதழின் ஆய்வை மறு ஆய்வு செய்யப் புகுந்த அல்ஜன்னத் இதழ், ஏகத்துவத்தில்
நாம் எழுப்பிய வாதங்களில் சிலவற்றைக் கண்டு கொள்ளவில்லை. ஏகத்துவத்தில் எழுதப்படாத
பல விஷயங்களுக்கு வியாக்கியானம் செய்துள்ளது. அவற்றை ஆங்காங்கே விளக்குவோம்.
அல்ஜன்னத்தின்
மறு ஆய்வுக் கட்டுரையில் எந்த ஒரு ஒழுங்கு முறையும் கடைப்பிடிக்கப்படவில்லை. அவர்கள்
எடுத்து வைக்கும் வாதங்களை சாதாரண மக்கள் புரிந்து
கொள்ள முடியாத அளவுக்கு இயன்ற வரை குழப்பியுள்ளனர்.
அவர்களின்
மறுப்பை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் முறைப் படுத்துவதாக இருந்தால் மூன்று வகையாக
முறைப்படுத்தலாம்.
முதல்
வகை
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடாவருடம் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற
கருத்துடையவர்கள் எந்தெந்த ஆதாரங்களை முன் வைக்கிறார்களோ அவை அனைத்தையும் விரிவாக நாம்
விளக்கி, அவை அனைத்துமே தவறானவை என்று ஏகத்துவம் செப்டம்பர் - 2005 இதழில் நிரூபித்திருந்தோம்.
அதற்கு
அல்ஜன்னத் மறு ஆய்வில் என்ன பதில் சொல்லி இருக்கின்றது என்பது முதல் வகை!
இரண்டாம்
வகை
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு நமது தரப்பில்
முதன்மையான சான்றுகளையும் துணைச் சான்றுகளையும் ஏகத்துவத்தில் விளக்கியிருந்தோம்.
இதற்கு
அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரை என்ன பதில் கூறியுள்ளது என்பது இரண்டாம் வகை!
மூன்றாம்
வகை
ஏகத்துவத்தில்
எழுதாத, அதே நேரத்தில் கடந்த காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் இது பற்றிக் கூறிய உதாரணங்கள், காரணங்கள்.
இது பற்றி அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரை கூறிய பதில்.
இப்படி
மூன்றாக அல்ஜன்னத்தின் மறு ஆய்வுக் கட்டுரையை நாம் வரிசைப் படுத்தியுள்ளோம். சாதாரணமாக
அனைவரும் புரிந்து கொள்ள ஏற்ற வகையில் இவ்வாறு நாம் வகைப்படுத்தியுள்ளோம்.
இனி
அல்ஜன்னத்தின் மறு ஆய்வு சரியானதா? என்பதை விரிவாக அலசுவோம்.
யாருமே
சொல்லாத கருத்து
"ஒரு பொருளுக்கு ஒரு தடவை
தான் ஜகாத் என்ற கருத்து கடந்த காலங்களிலும் இருந்துள்ளது என்று இப்னு ஹஸ்மு அவர்கள்
கூடத் தெரிவிக்கின்றார்கள்'
என தனது உரையில் பி.ஜே. கூறியிருந்தார். கடந்த காலத்தில் யாரும்
சொல்லியிருக்கிறார்களா?
இல்லையா? என்பது நமக்குத் தேவையற்றது என்று முடிவு
செய்ததால் அதை ஏகத்துவத்தில் வெளியிடவில்லை.
இப்னு
ஹஸ்மின் பெயரால் பொய் கூறிவிட்டதாக அல்ஜன்னத் மறு ஆய்வு கூறுகின்றது. கடந்த காலத்தில்
இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது என்பதற்கு நாம் ஆதாரம் காட்டத் தேவையில்லாத அளவுக்கு
அவர்களே காட்டிக் கொண்டனர்.
மேய்ந்து
திரியாத கால்நடைகள்,
அணியும் நகைகள் ஆகிய இரண்டுக்கு மட்டும் ஒரு தடவை ஜகாத் வழங்கி
விட்டால் அதற்கு ஜகாத் இல்லை எனக் கூறும் சிலருக்கு அதனை மறுக்கும் விதமாக இப்னு ஹஸ்ம்
பின்வரும் கேள்விக் கணையையும் அவர்களை நோக்கி வீசுகின்றார். ஒட்டகம், மாடு, ஆடு
ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக்
கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே ஜகாத் வசூலிப்போரை ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைப்பது (கடந்த காலங்களில் ஜகாத்
வழங்கப்பட்டது உட்பட அனைத்து பொருட்களிலும்) ஜகாத் வசூலிப்பது கடமை என்பதை என்பதையே
தெளிவு படுத்துகின்றது. இந்நிலையில் முதல் ஆண்டில் ஜகாத் வாங்கியவற்றில் அடுத்த ஆண்டு
ஜகாத் வாங்குதல் இல்லை என்பது சான்றில்லாத கூற்றாகும். (அல்முஹல்லா பாகம் 6, பக்கம் 28) - என்று அல்ஜன்னத் எழுதியுள்ளது.
கால்நடைகளுக்கும், நகைகளுக்கும்
ஒரு தடவை தான் ஜகாத் என்ற கருத்துடையவர்களுக்கு எதிராக இப்னு ஹஸ்ம் கேள்வி எழுப்புகின்றார்
என்றால் அந்தக் காலத்தில் இந்தக் கருத்து இருந்துள்ளது என்பது தானே பொருள்.
ஜகாத்
சட்டம் தெளிவானதே!
ஜகாத்
எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இஸ்லாம் தெளிவுபடுத்தவில்லை என்பது போன்ற ஒரு
தோற்றத்தை ஏகத்துவம் செப்டம்பர் இதழில் வெளிப்படுத்தி மக்களிடையே பதட்ட நிலையை உருவாக்குகின்றனர்.
என்றும்
அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரை கூறுகின்றது.
ஒரு
பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று நாம் கூறுவதால் ஜகாத் சட்டத்தை இஸ்லாம் தெளிவு
படுத்தவில்லை என்று எப்படி ஆகும்?
ஒரு
பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் என்பது தான் உண்மையில் தெளிவாகவுள்ளது. இஸ்லாம் மிகத் தெளிவாக
ஜகாத் சட்டத்தைக் கூறியுள்ளது என்பதால் தான் மேற்கண்ட தெளிவான சட்டத்தை நாம் கூறுகின்றோம்.
காலம்
நிர்ணயம் செய்யாமல் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று கூறினால் அதன் பொருள் ஒரு
தடவை செய்ய வேண்டும் என்பது தான். இது தான் தெளிவானது. வருடா வருடம், வாரா
வாரம் என்று இல்லாததைச் சேர்ப்பது தான் தெளிவற்றது என்பதை அல்ஜன்னத் உணர வேண்டும்.
மறு
ஆய்வு - முதல் வகை ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள்
பொதுவாக தங்கள் தரப்பில் எந்தெந்த ஆதாரங்களை எடுத்து வைப்பார்களோ அந்த ஆதாரங்கள் ஏகத்துவம்
செப்டம்பர் இதழில் ஆய்வு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சான்று கூட ஆதாரப் பூர்வமானதல்ல
என்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.
1. அனாதைகளின் சொத்து
"அனாதைகளின் சொத்து உங்களிடம்
இருந்தால் வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள்! இல்லாவிட்டால் ஜகாத் அதை விழுங்கி விடும்'' என்ற கருத்தில் அமைந்த எந்த ஒரு ஹதீஸும் சரியானதல்ல என்று நாம் தக்க காரணங்களுடன்
ஏகத்துவத்தில் சுமார் பத்து பக்கங்கள் விளக்கி இருந்தோம்.
அல்ஜன்னத்
இதழில் இதற்கு எந்த மறுப்பும் கூறவில்லை. இவை சரியான ஹதீஸ் தான் என்று வாதிடவில்லை.
இதை அவர்கள் கண்டு கொள்ளவும் இல்லை. இதன் மூலம் அனாதைகள் பற்றிய மேற்கண்ட ஹதீஸ்கள்
பலவீன மானவை என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டு விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற
கருத்துடையோரின் ஆதாரங்களில் ஒன்று குறைந்து விட்டது.
2. இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை முன்
கூட்டியே வாங்கிய ஹதீஸ்
"அப்பாஸ் (ரலி) அவர்களிடம்
இரண்டு வருடங்களுக்கான ஜகாத்தை நபிகள் நாயகம் அவர்கள் முன் கூட்டியே வாங்கினார்கள்'' என்ற ஹதீஸையும் மாற்றுக் கருத்துடைய வர்கள் எடுத்து வைத்து வந்தனர்.
இந்தக்
கருத்தில் உள்ள அறிவிப்புக் கள் ஒன்று கூட சரியானது அல்ல என்பதையும், சரியான
அறிவிப்பு எது?
என்பதையும் சுமார் ஒன்பது பக்கங்களில் நாம் விளக்கினோம்.
ஏகத்துவத்தின்
ஆய்வை மறு ஆய்வு செய்த அல்ஜன்னத் இதழ் இதற்கு எந்த மறு மொழியும் கூறவில்லை. இது சரியான
ஹதீஸ் தான் என்று வாதிடவில்லை. எனவே இதிலும் நாம் எழுதியதை ஒப்புக் கொண்டு விட்டனர்.
3. ஒரு ஆண்டு நிறைவடையும் வரை...
ஒருவனுக்கு
ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில்
அமைந்த ஹதீஸ்களையும் மாற்றுக் கருத்துடை யோர் ஆதாரமாகக் காட்டி வந்தனர்.
இந்த
ஹதீஸ்களில் எந்த ஒன்றும் சரியானதல்ல என்பதை சுமார் ஐந்து பக்கங்களில் நாம் விளக்கியிருந்தோம்.
நமது
கட்டுரையை மறு ஆய்வு செய்த அல்ஜன்னத் இதழ் இதையும் கண்டு கொள்ளவில்லை. இதன் மூலம் நாம்
கூறியதை ஒப்புக் கொண்டு விட்டனர்.
4. அபூபக்கர் ஆட்சியில்....
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று
கூறுவோர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டி வந்தனர்.
அந்த
ஹதீஸ் சரியானது தான் என்றாலும் அந்த ஹதீஸில் கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜகாத் கொடுக்க
வேண்டும் என்ற கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்தோம்.
மறு
ஆய்வு செய்த அல்ஜன்னத் அதற்கும் எந்த மறு மொழியும் கூறாததன் மூலம் நமது கருத்தை ஏற்றுக்
கொண்டு விட்டனர்.
5. கால்நடைகளின் ஜகாத்
கால்நடைகளுக்கான
ஜகாத்தை ஆதாரமாகக் காட்டி மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டு
வந்தனர்.
அந்த
வாதமும் அர்த்தமற்றது என்பதை ஏகத்துவத்தில் நிரூபித்தோம். இதற்கும் அல்ஜன்னத் மறு ஆய்வில்
எந்த மறுப்பும் இல்லை.
தங்கள்
தரப்பு வாதத்தை நிரூபிக்க எதையெல்லாம் ஆதாரமாகக் காட்டி வந்தார்களோ அவை அனைத்துமே ஏற்புடையவை
அல்ல என்று நாம் எழுதியதற்கு எந்த மறுப்பும் எழுதவில்லை.
மறு
ஆய்வு செய்பவர்கள்,
எந்தக் கட்டுரையை மறு ஆய்வு செய்கிறார்களோ அந்தக் கட்டுரையில்
கூறப்பட்ட விஷயங்கள் சிலவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அக்கருத்தில் அவர்கள்
உடன் படுகிறார்கள்;
அதை மறுக்க இயலவில்லை என்பதே பொருள். இதில் அறிவுடையோர் மத்தியில்
மாற்றுக் கருத்து இல்லை.
எனவே
ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக மாற்றுக் கருத்துடையவர்கள்
இது நாள் வரையிலும் எடுத்துக் காட்டி வந்த மேற்கண்ட ஐந்து சான்றுகளும் ஏற்புடையவை அல்ல
என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர்.
அவர்கள்
பதில் சொல்ல முன் வந்த ஒரே விஷயம் அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் தான். அந்தப் பதிலும்
சரியானது தானா?
என்பதை இந்த இதழில் பார்ப்போம்.
ஒவ்வொரு
ஆண்டும்...
"மனமுவந்து தனது சொத்துக்
களுக்கு ஆண்டு தோறும் ஜகாத் கொடுத்து வந்தவன் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டான்'' என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் மாற்றுக் கருத்துடையவர்கள் தங்களின் ஆதாரமாகக்
காட்டி வருகின்றனர்.
இந்தக்
கருத்தில் மூன்று ஹதீஸ்கள் உள்ளன. இம்மூன்றுமே ஆதாரப் பூர்வமானவை அல்ல என்று நாம் ஆய்வு
செய்து எழுதியிருந்தோம்.
தப்ரானியில்
இடம் பெற்றுள்ள இக்கருத்துள்ள ஹதீஸ் பலவீனமானது என எழுதியிருந்தோம். அதற்கான காரணங்களையும்
விளக்கியிருந்தோம்.
அதுபோல்
இதே கருத்தில் பைஹகீயில் இடம் பெற்ற மற்றொரு ஹதீஸையும் எடுத்துக் காட்டி அதுவும் பலவீனமானது
என்பதைத் தக்க காரணங்களுடன் விளக்கியிருந்தோம்.
இதே
கருத்தில் அபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸ் ஒன்றையும் நாம் வெளியிட்டு அதுவும் பலவீனமானது
என்பதைத் தக்கச் சான்றுகளுடன் வெளியிட்டு இருந்தோம்.
இது
பற்றி அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு எழுதியுள்ளனர்.
வருடா
வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்ற நபி மொழியில் அபூதாவூத் ஹதீஸ் தவிர அபூதாவூதில் இடம்
பெற்றிருக்கும் அறிவிப்பாளர் வரிசையைத் தவிர தப்ராணி, பைஹகி, புகாரியின்
தாரிக் அல்கபீர்,
மூஃஜம் ஸஹாபா, அல்ஆஹாது வல்மஃதானி ஆகிய பல்வேறு
நூட்களில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் பலவீன மானவர்கள் இடம் பெற்றுள்ளதால் மற்றவைகளை
நாம் ஆதாரமாகக் காட்டவில்லை.
இவ்வாறு
பக்கம் 55ல் எழுதியுள்ளனர்.
"ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க
வேண்டும் என்ற கருத்தில் உள்ள ஹதீஸ்களில் அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் தவிர வேறு
எதுவும் சரியானதாக இல்லை''
என்று தெள்ளத் தெளிவாக அவர்களே அறிவித்து விட்டதால் அவர்களிடம்
அபூதாவூதில் இடம் பெற்ற மேற்கண்ட ஹதீஸ் தவிர வேறு ஆதாரம் இல்லை என்பது உறுதியாகின்றது.
இதற்கு
மட்டும் தான் அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரை மறுப்புக் கூறுகிறது.
அதாவது, ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிலை நாட்டிட
மாற்றுக் கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் சான்றுகளில் அபூதாவூதில் இடம் பெறும் மேற்கண்ட
ஹதீஸைத் தவிர மற்ற அனைத்தும் சான்றுகள் அல்ல என்பதை அவர்களை ஏற்றுக் கொண்டு விட்டனர்.
அபூதாவூதில்
இடம் பெறும் ஹதீஸும் அதனடிப்படையில் மாற்றுக் கருத்துடையோரின் வாதமும் சரியானது என்று
நிரூபணமானால் மாற்றுக் கருத்துடையோர் கூறுவது சரியான கருத்து என்று ஆகி விடும்.
அந்த
ஹதீஸும் சரியானது அல்ல என்பது நிரூபணமானால் நமது கருத்து சரியானது என்பது உறுதியாகி
விடும்.
எனவே
மாற்றுக் கருத்துடை யோரிடம் கைவசம் உள்ள இந்த ஒரே ஒரு ஆதாரத்தைப் பற்றி அலசினாலே போதுமானது.
"மூன்று காரியங்களை யார்
செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியை சுவைத்து விட்டார். 1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை
மட்டும் வணங்குதல். 2.
ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல்.
3. கிழப் பருவம் அடைந்தது,
சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது
ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல் ஆகிய மூன்று காரியங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூதாவூதில்
இடம் பெறும் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று நாம் எழுதியதை மறு ஆய்வு செய்து வெளியிட்ட
அல்ஜன்னத் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு தங்கள் வாதத்தைத் துவக்குகின்றனர்.
குற்றச்சாட்டு
- 1
"கோடிட்டு காட்டப்பட்ட
யஹ்யா பின் ஜாபிர் என்பவர்,
ஜுபைர் பின் நுஃபைர் என்பவரிடம் நேரிடையாக இந்த ஹதீஸைக் கேட்கவில்லை.
இவ்விருவருக்குமிடையில் அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்டுள் ளார். அதனால் அது தொடர்பறுந்த
(முன்கதிஃ) ஹதீஸாகும்.'
ஆகையால், இது பலவீனமானது.
பதில்
- (ஸஹீஹ் என்பதனை சரிகாணல்)
அறிவிப்பாளர்
விடுபட்டுள்ளார் என்பது உண்மையே எனினும், அறிவிப்பாளர் விடுபட்டிருப்பதால்
மட்டும் ஒரு ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு வரக் கூடாது. விடுபட்டவர் யார்? என
அறவே தெரியவில்லை அல்லது விடுபட்டவர் பலவீனமானவர் என கண்டு கொள்ளப்பட்டது போன்ற சூழ்
நிலையில் மட்டும் அந்த நபி மொழி பலவீனமானது என்று உறுதியாக முடிவு எடுக்க முடியும்.
விடுபட்டவர்
நம்பகமானவர் என வேறு சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளப்படுமேயானால், அல்லது
வேறொரு தொடரில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டிருந்தால் அப்போது அதனை பலவீன
மானது என ஒதுக்கிவிட முடியாது.
அபூதாவூதில்
உள்ள நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர்
என்பவருக்குமிடையில் விடுபட்டவர், அப்துர் ரஹ்மான் என்பவர் ஆவார் என்பதை வேறு
நூட்களில் இடம் பெற்ற அறிவிப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. "இவர், இதே
அறிவிப்பில் இடம் பெற்ற ஜுபைர் என்பவரின் மகனாவார். இவர் நம்பகமானவர்' என
ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். ஆகையால், இது
ஸஹீஹானது தான் என இக்கலை அறிஞர்கள் பலரும், குறிப்பாக சமீபத்தில் தோன்றிய
ஹதீஸ் ஆய்வாளர்களில் சிறந்து விளங்கும் நாஸிருத்தீன் அல்பானியும் ஏற்றுள்ளனர். அர்னாவூத்
என்பவர் ஹஸன் என்ற தரத்தில் உள்ளது எனக் கூறுகிறார்.
மேலும்
அபூதாவூதின் இன்னொரு மூலப் பிரதியில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர்ச்சியாகவே
அறிவிக்கப் பட்டுள்ளது என்பதை இப்னு ஹஜர் அவர்கள் தன் வசம் இருந்து வந்த வேறொரு மூலப்
பிரதியின் மூலம் அல் இஸாபா என்ற நூலில் இனம் காட்டியுள்ளார்.
அல்ஜன்னத்
பக்கம் 56
முதல்
குற்றச்சாட்டு என்ற தலைப்பில் இவர்கள் எழுதிய விஷயம் நாம் கூறாத ஒன்றாகும். ஆனாலும்
இது நம் கவனத்துக்கு வராத ஒன்றாகும்.
அபூதாவூதில்
இடம் பெறும் ஹதீஸில் யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் என்பவருக்கு மிடையில்
அறிவிப்பாளர் தொடர் விடுபட்டுள்ளது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டனர்.
இங்கே
அறிவிப்பாளர் விடு பட்டிருந்தாலும் வேறு ஹதீஸ்களில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது
என்று இவர்கள் கூறுகின்றனர்.
அறிவிப்பாளர்கள்
விடுபடாமல் வேறு ஹதீஸ்கள் உள்ளன என்று இவர்கள் எதைக் குறிக்கிறார்கள் தெரிகிறதா?
"வருடா வருடம் ஜகாத் வழங்க
வேண்டும்''
என்ற நபி மொழியில், அபூதாவூத் ஹதீஸை தவிர, அபூதாவூதில்
இடம் பெற்றிருக்கும் அறிவிப்பாளர் வரிசையைத் தவிர, தப்ராணி, பைஹகி, புகாரியின்
தாரீக் அல்கபீர்,
முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி ஆகிய பல்வேறு
ஹதீஸ் நூட்களில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளதால், மற்றவைகளை
நாம் ஆதாரமாகக் காட்டவில்லை.
அல்ஜன்னத்
பக்கம் 55
இவ்வாறு
எழுதி எவற்றைப் பலவீனமானது என்று இவர்களே ஒப்புக் கொண்டார்களோ அதைத் தான் இங்கே சுட்டிக்
காட்டுகிறார்கள்.
அபூதாவூதில்
அறிவிப்பாளர் விடுபட்டுள்ளாரே என்று கேட்டால் தப்ரானி, பைஹகீ
உள்ளிட்ட நூற்களில் அறிவிப்பாளர் விடுபடவில்லையே என்று கூறுகின்றார்கள். இது எப்போது
சரியாகும்?
தப்ரானி, பைஹகீ அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமாக இருந்தால்
தான் சரியாகும்.
அவை
ஆதாரப்பூர்வமானவை அல்ல என்ற இவர்களே ஒப்புக் கொண்ட பிறகு அபூதாவூதில் அறிவிப்பாளர்
விடுபட்ட ஹதீஸ் எப்படி ஆதாரப்பூர்வமாக அமைய முடியும்?
அறிவிப்பாளர்
விடுபட்டுள்ளார் என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் - "மற்ற ஹதீஸ்களில் அறிவிப்பாளர்
விடுபடாமல் அறிவிக்கப்பட்டுள்ளார்' என்று தாங்கள் கூறும் மற்ற ஹதீஸ்கள்
பலவீனமானது என்பது தெரிந்திருந்தும் - மக்களை ஏமாற்றுவதற்காகவும், எப்படியாவது
தங்கள் கூற்றை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இத்தகைய திரிப்பு வாதத்தைச் செய்துள்ளனர்
என்பதில் சந்தேகம் இல்லை.
இப்னு
ஹஜருடைய மூலப் பிரதியில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அல்ஜன்னத்
கூறுகின்றது.
இவர்கள்
கூறுவது போல் மூலப் பிரதி ஏதும் இருப்பதாகவும், அது தான் சரியானது என்றும் இப்னு
ஹஜர் அவர்கள் இஸாபாவில் கூறவில்லை.
அப்படி
ஒரு மூலப் பிரதி இருந்திருந்தால் அதன் அடிப்படையில் அச்சிடப்பட்ட பிரதிகள் உலகில் இருக்க
வேண்டும். அல்லது அருங்காட்சியகத்தில் அப்பிரதி இருக்க வேண்டும்.
அபூதாவூதுக்கு
எத்தனை பிரதிகள் உள்ளதோ அத்தனையிலும் அறிவிப்பாளர் விடுபட்டதாகத் தான் பதிவாகியுள்ளது.
இதை அவ்னுல் மஃபூத் ஆசிரியரும் ஒப்புக் கொள்கிறார்.
இப்னு
ஹஜர் அவர்கள் தப்ரானியில் உள்ள அறிவிப்பாளர் பட்டியல் அடிப்படையில் அபூதாவூதையும் சேர்த்துக்
கூறி விட்டார் என்று தான் கருத முடியுமே தவிர அபூதாவூதின் மூலப் பிரதி என்றெல்லாம்
கூறுவது தவறாகும்.
மூலப்
பிரதியை யாரும் இப்படி முடிவு செய்வதில்லை. எத்தனையோ நூல்களில் உள்ளதை எடுத்து எழுதும்
அறிஞர்கள் சிலதை விட்டு விட்டு, அல்லது அதிகப்படுத்தி எழுதி விடுவதுண்டு.
அதை அடிப்படையாகக் கொண்டு மூலப் பிரதியை முடிவு செய்ய மாட்டோம்.
எது
அபூதாவூத் என்று உலகில் உள்ளதோ அதற்கு மாற்றமாக யாராவது எடுத்து எழுதினால் அவர் தவறுதலாக
எடுத்து எழுதி விட்டார் என்று தான் முடிவு செய்ய முடியும்.
உதாரணமாக, தொழுகையில்
அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் அபூதாவூதில் இருப்பதாக அல்பானி
கூறுகின்றார்கள். ஆனால் அபூதாவூதில் அப்படி ஒரு ஹதீஸ் இல்லை. இதை அல்பானி தவறாகக் கூறி
விட்டார் என்று கூறுவீர்களா? அல்லது அல்பானியிடமிருந்த மூலப்பிரதியில்
இவ்வாறு இருந்தது என்று கூறுவீர்களா? இப்படி நூற்றுக் கணக்கான உதாரணங்களை
எடுத்துக் காட்ட முடியும்.
எனவே
முதல் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் இவர்களே ஒப்புக் கொண்ட படி அறிவிப்பாளர் விடுபட்டதால்
இது பலவீனமான ஹதீஸ் என்பது உறுதியாகின்றது.
குற்றச்சாட்டு
- 2
அபூதாவூதில்
பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட ஹதீஸ் பற்றி நாம் எழுப்பிய வாதத்துக்கு குற்றச்சாட்டு
2 என்ற தலைப்பில் அவர்கள் எழுதும் மறுப்பை ஒவ்வொன்றாகக் காண்போம்
அபூதாவூத்
அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம்
அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸைப்
பதிவு செய்கிறார்கள்.
அப்துல்லாஹ்
பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை.
அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார்.
அம்ரு
பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ்
பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற
விபரம் ஏதுமில்லை.
ஒருவரின்
குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள்
என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின்
நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.
மேலும்
அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தினர் என்று கூறப்படுவதில், அம்ரு
பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை என்பதை முன்னரே கண்டுள்ளோம்.
நம்பகத்தன்மை
நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத்
கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது.
ஏகத்துவம்
- செப்டம்பர் 2005
ஏகத்துவத்தில்
நாம் செய்த விமர்சனத்தை மேலே முழுமையாகத் தந்துள்ளோம்.
இதில்
அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத் தன்மையே நிரூபிக்கப்படவில்லை என்பதை முன்னரே கண்டோம்
என்று குறிப்பிட்டுள்ளோம். இவரைப் பற்றி ஏகத்துவம் இதழில் பக்கம் 43ல்
எழுதியதைத் தான் இவ்வாறு குறிப்பிட்டோம்.
"இவரைப் பற்றி விபரம்
கிடைக்கவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாக வில்லை என்று கூறுகின்றார்கள்.
இவர் நம்பகமானவரா?
இல்லையா என்பது தெரியாத நிலையில் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனமடைகின்றது''
இது
தான் செப்டம்பர் இதழில் 43ஆம் பக்கத்தில் நாம் எழுதியது.
அதாவது
அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் பலவீனமானது என்பதற்கு நாம் கூறிய பல காரணங்களில் அம்ரு
பின் ஹாரிஸ் என்பார் யார் என்று தெரியவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.
தஹபீ
கூறியது என்ன?
அம்ரு
பின் ஹாரிஸ் என்பார் பற்றி நாம் எடுத்துக் காட்டிய இந்த விமர்சனம் தவறானது என்று கூறி
மறு ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்.
அம்ர்
பின் ஹாரிஸின் நம்பகத்தன்மை நிரூபணம் ஆகவில்லை என தஹபி கூறுவதாக அவர்கள் எழுதிய தகவல்
உண்மைக்குப் புறம்பானதாகும். தஹபி அவர்கள் எந்த இடத்திலும் அவ்வாறு கூறவில்லை. மாறாக
மீஜானுல் இஃதிலால் என்ற நூலில் அவர் கூறியதைத் திரித்து மொழி பெயர்ந்துள்ளனர். தஹபி
கூறிய வாசகம்
அவரது
நேர்மை அறியப்படவில்லை.
நேர்மை
அறியப்படவில்லை என்ற வாசகத்திற்கு நேர்மை நிரூபணமாக வில்லை என்ற வாசகத்திற்கும் மிகப்
பெரிய வேறுபாடு உண்டு. அறியப் படவில்லை என்ற வாசகத்தின் மூலம் நம்பகமானவரா என்பது தஹபிக்குத்
தெரியாது என்றே புரிந்து கொள்ள வேண்டும். நிரூபணம் ஆகவில்லை என்று அர்த்தம் செய்வதாக
இருந்தால் ........ என்று கூறியிருக்க வேண்டும். பொய்யுரைக்கக் கூடியவர், மனன
சக்தி குன்றியவர்,
மறுக்கப்பட வேண்டியவர். போன்ற அவரைக் குறைப்படுத்துகின்ற காரணங்களையும்
தஹபீ அறிய வில்லை. எனவே தான் அவரது நேர்மை அறியப் படவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.
என்று
மறு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
நேர்மை
அறியப்படவில்லை என்பதற்கும் நேர்மை நிரூபணமாகவில்லை என்பதற்கும் இவர்கள் கூறுவது போல்
மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது.
நேர்மை
அறியப்படவில்லை என்ற வாசகத்துக்கு, தஹபீக்கு அவரைப் பற்றி தெரியாது
என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று அல்ஜன்னத் கூறுகிறது.
அறியப்படாதவர்
என்று ஒருவரைப் பற்றிக் கூறினால் அதன் பொருள் என்ன என்பதை இவர்கள் மறு ஆய்வுக் கட்டுரை
வெளியிடுவதற்கு முன்னரே,
பல சந்தர்ப்பங்களில் நாம் விளக்கியுள்ளோம்.
அவரது
நேர்மை அறியப்படவில்லை என்று தஹபீ கூறுகிறார் என்றால் தஹபீயைப் பொறுத்த வரை அவரது நேர்மை
நிரூபணமாகவில்லை என்று தான் பொருள். இதைப் பெரிய பாரதூரமான விஷயம் போல் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இவர்கள் திருப்திக்காக நேர்மை அறியப்படவில்லை என்றே குறிப்பிடுகிறோம்.
நேர்மை
அறியப்படவில்லை என்று பொருள் கொள்வதால் நாம் எடுத்து வைக்கும் வாதத்திற்கு எந்தப் பாதிப்பும்
இல்லை.
"அறியப்படவில்லை என்று
யார் சொல்கிறாரோ அவருக்கு இவரைப் பற்றி தெரியவில்லை என்பது தான் பொருள்; ஒருவரைப்
பற்றி ஒரு அறிஞருக்குத் தெரியாவிட்டால் அவரைப் பற்றி யாருக்குமே தெரியாது என்று பொருள்
கொள்ளக் கூடாது'
என்பதும் ஏற்கனவே நாம் கூறிவரும் விஷயம் தான். அந்த அடிப்படையில்
இந்த வாதத்தை நாம் எழுப்பவில்லை.
ஒரு
அறிவிப்பாளரைப் பற்றி "அறியப்படாதவர்' என்று ஒரு அறிஞர் விமர்சிக்கிறார்.
வேறு யாராவது இவரைப் பற்றி அறிந்திருக்கிறார்களா என்று நாம் தேடிப் பார்க்கிறோம். எந்த
அறிஞரும் அவரைப் பற்றியும் அவரது நம்பகத் தன்மை பற்றியும் அறிந்திருப்பதாக நமக்குத்
தகவல் கிடைக்கவில்லை. இப்படி இருந்தால் என்ன நிலை என்பது தான் கேள்வி. இந்த அடிப்படையில்
தான் நாம் வாதத்தை எடுத்து வைத்தோம்.
"இவரது நாணயம், நேர்மை
எனக்குத் தெரியாது'
என்று தஹபீ கூறுகிறார். மற்ற அறிஞர்கள் இவரது நாணயத்தைப் பற்றியும்
நேர்மையைப் பற்றியும் கூறியுள்ளார்களா? என்பது தான் கேள்வி.
இதைத்
தான் நாம் கேட்கிறோம் என்று தெரிந்திருந்தும் ஒருவருக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்கும்
தெரியாமல் போய் விடுமா?
என்று அல்ஜன்னத் தன் மறு ஆய்வுக் கட்டுரை விஷமத்தனமாகக் கேட்கின்றது.
தஹபீ
அவர்களுக்குத் தெரியா விட்டால் வேறு யாருக்கும் தெரியாது என்று நாம் கூறவில்லை. வேறு
யாருக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் நம்பகத்தன்மை தெரியும் என்று கூறுவார்களானால்
அந்தக் கூற்றுக்களை எடுத்துக் காட்ட வேண்டும் என்பது தான் நமது கேள்வி.
இதற்குப்
பதிலாக கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளனர்.
மேலும், ஹிஜ்ரி
720ல் தங்களது 48வது வயதில் எழுதிய அல் காஷிஃப் என்ற நூலில் அமர் பின் ஹாரிஸ் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார்
என்று பதிவு செய்து,
தனது முந்திய கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இச்செய்தி அவர்களுக்கு
குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக அமைந்திருப்பதால் வசதியாக அதை மறைத்தே விட்டார்கள்.
காஷிஃபில் பதிவான செய்தி இதோ!
...அம்ர் பின் ஹாரிஸ் நம்பகமானவராகக்
கருதப்பட்டுள்ளார். - அல் காஷிஃப் 2/73
என்று
எழுதி இதன் அரபி மூலத்தையும் வெளியிட்டுள்ளனர்.
அதாவது
"இவரது நேர்மை அறியப்படவில்லை' என்று எழுதிய தஹபீ அவர்கள் முன்னர்
இவ்வாறு எழுதி விட்டுப் பின்னர் "நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்' என்று
இவரைப் பற்றி எழுதி தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என்பது இவர்களின் வாதம்.
அதாவது
அம்ர் பின் ஹாரிஸின் நேர்மை அறியப்படவில்லை என்பது தஹபீயின் முந்தைய கூற்று.
நம்பகமானவராகக்
கருதப் பட்டுள்ளார் என்பது அவரது பிந்தைய கருத்து என்று கூறுகின்றனர்.
இதைத்
தொடர்ந்து அல்ஜன்னத் மேலும் பின்வருமாறு எழுதுகிறது.
அறிவிப்பாளர்கள்
ஆய்வில் தஹபீயை விட சிறந்து விளங்கிய இப்னுஹிப்பான் அவர்கள் அம்ர் பின் ஹாரிஸ் நேர்மையான
அறிவிப்பாளர் என்று ஃதிகாத் எனும் தனது நூலில் சான்று தருகிறார்.
என்றும்
மறு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
இதன்
மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் அம்ர் பின் ஹாரிஸின் நேர்மை அறியப்படவில்லை
என்று ஒரு இடத்தில் தஹபீ கூறினாலும் மற்றொரு இடத்தில் அவரைப் பற்றி நம்பகமானவராகக்
கருதப்பட்டுள்ளார் என்று கூறுவதாலும்,
இப்னு
ஹிப்பான் அவர்கள் தமது ஸிகாத் எனும் நூலில் இவரைப் பற்றி நம்பகமானவர் என்று கூறியுள்ளதாலும்
அம்ர்
பின் ஹாரிஸ் நம்பகமானவர் தான், அறியப்படாதவர் அல்ல என்று பதிலளித்துள்ளனர்.
இவரது
நம்பகத்தன்மை அறியப் படவில்லை என்று தஹபீ கூறினாலும் இப்னு ஹிப்பான் "நம்பகமானவர்' என்று
இவரைப் பற்றிக் கூறியுள்ளாரே! அது போதாதா? என்பதற்கான விளக்கத்தை முதலில்
பார்ப்போம்.
இப்னு
ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்
இப்னு
ஹிப்பான் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வாளர் என்றாலும் இந்த விஷயத்தில் அவர் தவறான அளவுகோலைப்
பயன்படுத்துகிறார்.
இந்த
அளவுகோலை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சாதாரணமாகச் சிந்தித்துப் பார்த்தாலும்
அந்த அளவுகோல் தவறானது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நம்பகமானவர்
என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அவரது நம்பகத் தன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்தியிருக்க
வேண்டும் என்பது மற்ற அறிஞர்களின் அளவு கோலாகவுள்ளது.
ஒருவரை
நம்பகமானவர் என்று முடிவு செய்ய இப்னு ஹிப்பான் வேறு அளவுகோலைப் பயன்படுத்துகிறார்.
எந்த
அறிவிப்பாளரைப் பற்றி யாரும் குறை கூறவில்லையோ, அவரை நம்பகமானவர் என்று முடிவு
செய்து விடுவார்.
யாராலும்
குறை கூறப்படாதவர்கள் என்பதில் நம்பகமான அறிவிப்பாளர் களும் அடங்குவர்.
யாராலும்
குறை கூறப்படாதவர் என்பதில் யாரென்று அறியப் படாதவரும் அடங்குவர்.
அதாவது
ஒருவரைப் பற்றிக் குறை கூறுவதாக இருந்தால் அவரைப் பற்றித் தெரிந்தால் தான் குறை கூற
முடியும்.
அமெரிக்காவில்
வசிக்கும் இப்ராஹிம் என்பவரைப் பற்றி ஒரு பேச்சு வருகிறது. இவரை நாமும் அறியவில்லை.
வேறு யாரும் இவரைப் பற்றி எதையும் கூறி நாம் கேள்விப் பட்டதில்லை. இந்தப் பெயர் கற்பனையாகக்
கூட இருக்கலாம். ஆனாலும் இவரைப் பற்றி யாரும் குறை கூறாததால் இப்னு ஹிப்பான் வாதப்படி
நம்பகமானவர் ஆகி விடுவார்.
நம்பகமானவர்
என்று ஒருவரைப் பற்றி இப்னு ஹிப்பான் கூறினால் உண்மையில் நம்பகமானவராக இருக்கலாம்.
(மற்றவர்கள் அவரைப் பற்றிக் கூறியுள்ளதைத் தேடி இதை உறுதி செய்ய வேண்டும்) அல்லது யாரென்று
அறியப்படாதவராகவோ,
கற்பனைப் பெயராகவோ கூட இருக்கலாம்.
எனவே
அம்ரு பின் ஹாரிஸ் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் கூறியிருப்பதை இவர்கள் ஆதாரமாகக்
காட்டி, தவறான தகவலை ஆய்வு என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.
இதை
அல்ஜன்னத் ஏடும் தெரிந்து வைத்துக் கொண்டு பின்வருமாறு சப்பைக் கட்டுகிறது.
ஒருவர்
நம்பகமானவர் என்று கூறுவதில் இப்னு ஹிப்பான் கவனக் குறைவாகவும், தனக்கு
தெரியாதவர்களையும் கூட நம்பகமானவர் என்று கூறிவிடுவார் என்றொரு குற்றச்சாட்டு இப்னு
ஹிப்பான் மீது கூறப்படுகிறது. அதனைக் காரணம் காட்டி அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் இப்னு
ஹிப்பான் கூறிய கருத்தை புறக்கணிக்க முயற்சி செய்யலாம். எனவே, அதற்கான
பதிலையும் நாம் சொல்லித் தான் ஆக வேண்டும்.
இக்குற்றச்சாட்டு
பொதுவானதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் பயன்படுத்துகின்ற வாசகத்தின் அடிப்படையில்
தான் முடிவு செய்ய வேண்டும் என அல் முஅல்லிம் அல் யமானி என்ற இக்கால அறிஞர். அத்தன்கீப்
பிமாஃபி தஃனீபில் கவ்ஃதரி என்ற தனது நூலின் முதல் பாகத்தில் 66,437,438 ஆகிய பக்கங்களில் கூறி விட்டு, இப்னு ஹிப்பான் நம்பகமானவர்
அவர்கள் என்று கூறப்படுவோரை என்று கூறுவோரை ஐந்தாக வகைப்படுத்துகிறார்.
அல்ஜன்னத்
- பக்கம் 60
(அவர்கள் எழுதியதை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
இது புரியா விட்டால் நாங்கள் பொறுப்பல்ல)
இதைத்
தொடர்ந்து அரபியில் அரைப் பக்கம் எதையோ எழுதி தமிழாக்கமும் செய்துள்ளனர்.
இதில்
இவர்கள் கூறும் சாராம்சம் என்னவென்றால் இப்னு ஹிப்பான் அவர்கள் வெறும் நம்பகமானவர்
என்று கூறுவதற்கும் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறுவதற்கும்
வேறுபாடு உள்ளது.
வெறுமனே
நம்பகமானவர் என்று அவர் கூறினால் அதில் யாரென்று தெரியாதவர்களும் இருக்கலாம்.
ஆனால்
முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறினால் அவர் நம்பகமானவர் தான்.
இந்த வார்த்தையைத் தான் அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் இப்னு ஹிப்பான் பயன்படுத்தியுள்ளார்
என்று அல்ஜன்னத் ஏடு வாதிக்கிறது.
இப்னு
ஹிப்பானின் ஐந்து வகையான வார்த்தைகளும் ஐந்து படித்தரங்களைக் கொண்டது என்று சொன்னவர்
யார்? ஹதீஸ் கலை அறிஞர்கள் யாருடைய கூற்றையும் அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. இக்கால
அறிஞர் என்று கூறி அல் முஅல்லிம் அல் யமானி இப்படிக் கூறுகிறார் என்று அவரது கூற்றை
அரபியில் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள்
தமிழில் எழுதுவது போல அரபியில் ஒருவர் எதையாவது எழுதினால் அதுவே ஆதாரமாகி விடுமா?
யாரென்று
அறியப்படாத அல் முஅல்லிம் அல் யமானி இப்படிக் கூறியது சரியா என்று இவர்கள் ஆய்வு செய்திருக்க
வேண்டாமா? அவர் அறிஞராக இருக்கட்டும். அவர் கூறியது சரியாகவும் இருக்க வேண்டும். எந்தச் சான்றுகளில்
அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்தார் என்பதையும் பார்க்க வேண்டும்.
தங்களுக்குச்
சாதகமாக இருக்கிறது என்பதற்காக யாராவது எழுதியிருந்தால் அதையும் சான்றாகக் காட்டி மக்களை
ஏமாற்றுவது தான் மறு ஆய்வா?
இவர்கள்
கூறுகின்ற இவர்களின் வாதம் முற்றிலும் தவறானதாகும்.
அம்ரு
பின் ஹாரிஸ் என்பரைப் பற்றி கூறும்போது முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்)
என்று கூறியதைப் போல் பொய்யர்கள் பலருக்கும், பலவீனமானவர்களுக்கும் இதே வார்த்தையை
அவர் பயன்படுத்தியுள்ளார்.
இவ்வாறு
பலவீனமான நூற்றுக் கணக்கான அறிவிப்பாளர்கள் பற்றி இந்த வார்த்தையைப் பயன் படுத்தியுள்ளார்.
உதாரணத்திற்காக
சிலவற்றைக் கூறுகின்றோம்.
இம்ரான்
இப்னு இஸ்ஹாக் என்பவர் யாரென்று அறியப் படாதவராக இருந்தும் இவரைப் பற்றி முஸ்தகீமுல்
ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
நூல்:
லிஸானுல் மீஸான் 4/343
வலீத்
பின் அப்துல் மலிக் அல்ஹிரானி என்பவரைப் பற்றி முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்)
என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இவர் பலவீனமானவர்.
நூல்கள்:
ஹைஸமியின் மஜ்மவுஸ் ஸவாயித் 1/333, பைலுல்கதீர் 4/109
அஹ்மத்
பின் புதைல் என்பாரைப் பற்றியும் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்ற
வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இவரும் பலவீனமானவர்.
நூல்:
மஜ்மவுஸ் ஸவாயித் 9/119
ரபீவு
பின் அல்ஹத்தான் என்பவர் நிராகரிக்கப்பட்டவராக இருந்தும் அவரைப் பற்றியும் முஸ்தகீமுல்
ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறியிருக்கிறார்.
நூல்:
லிஸானுல் மீஸான் 2/444
முஹம்மத்
பின் ஷுரஹ்பீல் என்பவர் பலவீனமானவராக இருந்தும் அவரைப் பற்றி முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை
உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறியிருக்கிறார்.
லிஸானுல்
மீஸான் 5/199
ஹதீஸ்களை
இட்டுக் கட்டும் மர்வான் பின் முஹம்மத் என்பவரைப் பற்றியும் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை
உறுதியாக அறிவிப்பவர்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.
தானே
பலவீனமானவர் என்று யாரைக் கூறினாரோ அதே மர்வான் பின் முஹம்மத் என்பாரைப் பற்றியும்
முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.
இஜ்மா
பின் ரூஹ் என்பவர் பலவீனமானவராக இருந்தும் இவரைப் பற்றியும் இவ்வாறே முஸ்தகீமுல் ஹதீஸ்
(ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறியிருக்கிறார்.
இப்படி
பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
எனவே
அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் நேர்மை அறியப் படவில்லை என்று தஹபீ கூறியதற்கு எதிராக
இப்னு ஹிப்பானின் கூற்றைக் கொண்டு வந்து நிறுத்துவது ஆய்வு வரம்புக்கு எதிரானதாகும்; நேர்மையற்றதாகும்.
இப்னு
ஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் என்று நற்சான்று அளித்த நூற்றுக்கணக்கானோருக்கு எந்தக்
குறிப்பும் எந்த அறிஞருக்கும் கிடைக்கவில்லை. அது போல் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றிய
குறிப்பும் கிடைக்கவில்லை.
எனவே
இப்னு ஹிப்பான் நம்பகமானவர் (ஸிகத்) என்று கூறுவதும், ஹதீஸ்களை
உறுதியாக அறிவிப்பவர் (முஸ்தகீமுல் ஹதீஸ்) என்று கூறுவதும், ஒரே
தரத்தில் உள்ளது தான். யாரென்று தெரியாதவர் களுக்கும் இவ்விரு வார்த்தைகளையும் அவர்
பயன்படுத்தியுள்ளார்.
அது
போல் அம்ர் பின் ஹாரிஸுக்கும் இதே வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றார். ஆகவே இப்னு
ஹிப்பான் கூறியதை ஆதாரமாகக் கொண்டு அம்ர் பின் ஹாரிஸை நம்பகமானவர் என்று கூறுவது மோசடியான
ஆய்வாகும்.
தஹபீ
முரண்படுகிறாரா?
இவரது
"நேர்மை அறியப் படவில்லை' என்று கூறிய தஹபீ அவர்கள் "வுஸ்ஸிக' (இவர் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்று கூறுவதை ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.
உண்மையில்
இந்த வாதமும் ஹதீஸ் கலை பற்றிய இவர்களின் அறியாமை காரணமாகவே எடுத்து வைக்கப்படுகிறது.
"நம்பகமானவராகக் கருதப்
பட்டுள்ளார்'
என்று தஹபீ கூறினால் அதன் பொருள் அவர் நம்பகமானவர் என்பது அல்ல.
மாறாக "இப்னு ஹிப்பானால் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்' என்பதே
இதன் கருத்தாகும்.
அதாவது
யாரென்று தெரியாதவர் களை இப்னு ஹிப்பான் நம்பகமானவர் பட்டியலில் சேர்த்திருந்தால் அவரைப்
பற்றி தஹபீ கூறும் போது "நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்' என்று
கூறுவார். இதன் கருத்து "இப்னு ஹிப்பானைத் தவிர யாரும் இவரை நம்பகமானவர் என்று
கூறவில்லை'
என்பது தான். ஒருவரது சொல் வழக்கு என்ன என்பதை ஆராயாமல் மேலோட்டமாகப்
பார்த்ததால் தஹபீ முரண்பட்டுப் பேசுவதாக எண்ணிக் கொண்டு அது முன்னர் கூறியது; இது
பின்னர் கூறியது என்று சொந்த ஊகத்தின் அடிப்படையில் தங்கள் மறு ஆய்வுக் கட்டுரையில்
கூறியுள்ளனர்.
எனவே
தஹபீ அவர்கள் "இவரது நேர்மை அறியப்படவில்லை' என்று கூறுவதும்
"நம்பகமானவராக (சிலரால்) கருதப்பட்டுள்ளார்' என்பதும் ஒரே கருத்தைக்
கூறும் இரண்டு சொற்றொடர்கள் தான்.
ஹதீஸ்
கலை பற்றிய ஞானக் குறைவு காரணமாக இவ்வாறு யாரென்று அறியப்படாத ஒருவரை நம்பக மானவராக
ஆக்கி, தங்கள் வாதத்தை நிலை நாட்ட முயன்றுள்ளனர்.
இவர்களே
ஒப்புக் கொள்ளும் காஷிஃப் நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
இப்னு
ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று யாரைக் கூறியுள்ளாரோ அவர்களைப் பற்றி, தஹபீ
குறிப்பிடும் போது சில நேரம் "ஸிகத்' என்பார். சில நேரம் "ஸதூக்' என்பார்.
சில நேரம் "வுஸ்ஸிக'
என்பார்.
(காஷிஃப் முன்னுரை)
அம்ரு
பின் ஹாரிஸ் என்பவரைப் பற்றி ஏகத்துவம் செப்டம்பர் இதழுக்காக நாம் ஆய்வு செய்த போது, தஹபீ
அவர்கள் அவரைப் பற்றி "வுஸ்ஸிக' (நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்)
என்று குறிப்பிடுவது நமக்குத் தெரியும்.
தஹபீ
அவர்களின் இந்தச் சொல் வழக்கு அறிஞர்களுக்குத் தெரியும் என்பதால் அதைச் சுட்டிக் காட்டி
விளக்காமல் விட்டுவிட்டோம்.
மறு
ஆய்வு என்ற பெயரில் அறியாமையை வெளிப்படுத்துவார்கள் என்று நாம் எண்ணியிருந்தால் அப்போதே
அதைப் பற்றியும் விளக்கியிருப்போம்.
ஒருவரைப்
பற்றி "வுஸ்ஸிக'
(நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்ற சொல்லை தஹபீ பயன் படுத்தினால்
அவரை நம்பகமானவர் என்று தஹபீ முடிவு செய்துவிட்டார் என்பது பொருளல்ல. இதற்கு தஹபீ அவர்களின்
காஷிஃப் நூலிலிருந்தே ஆதாரம் தருகிறோம்.
ரைஹான்
பின் யஸீத் என்பவரைப் பற்றி தஹபீ அவர்கள் குறிப்பிடும் போது, "இவர் (வுஸ்ஸிக) நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர்' என்று
கூறுகிறார்கள்.
நூல்:
காஷிஃப் 1/399
அப்துல்லாஹ்
பின் அபீபக்ர் என்பாரைப் பற்றி கூறும் போது (வுஸ்ஸிக) நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்
எனக் கூறிவிட்டு,
இவர் யாரென அறியப்படாதவர் என்றும் கூறுகிறார்கள்.
நூல்:
காஷிஃப் 1/541
உமாரா
பின் ஸவ்பான் என்பாரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறிவிட்டு,
அவர் யாரென அறியப்படாதவர் என்றும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/53
யஃலா
பின் அபீயஹ்யா என்பாரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறி விட்டு,
இவர் யாரென அறியப்படாதவர் என்றும் கூறுகிறார்.
ஒருவர்
அறியப்படாதவராகவும் நம்பகமானவராகவும் ஒரே நேரத்தில் எப்படி இருக்க முடியும்? அவர்
நம்பகமானவர் எனக் கூறினால் அவர் அறியப்பட்டவராக ஆகிவிடுகிறார். அவர் அறியப்படாதவர்
எனக் கூறினால் அறியப்படாத ஒருவர் நம்பகமானவரா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது.
ஒருவரைப்
பற்றி "அறியப்படாதவர்'
என்றும் "நம்பகமானவராகக் கருதப் பட்டுள்ளார்' என்றும்
இரண்டு விதமாகக் கூறுவதால் தஹபீ அவர்கள் முரண்பட்டு கூறுகிறார் என்று குழம்பத் தேவையில்லை.
இப்னு ஹிப்பான் போன்றவர்களால் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் என்ற தகவலைத் தான்
அவர் தெரிவிக்கிறாரே தவிர தஹபீ அவர்கள் அவரை நம்பக மானவர் என்று முடிவு செய்யவில்லை
என்று இதைப் புரிந்த கொண்டால் இதில் முரண்பாடு ஏதும் இல்லை.
இப்னு
ஹிப்பானால் நம்பகமான வராகக் கருதப்பட்டுள்ளார்; ஆனால் உண்மையில் அவர் அறியப்படாதவர்
என்று பொருள் கொள்ளும் போது முரண்பாடு இல்லாமல் அவரது கூற்றைப் புரிந்து கொள்கிறோம்.
இப்படி
ஏராளமான இடங்களில் தஹபீ குறிப்பிட்டுள்ளார். அறியப் படாதவர்களையும், பலவீனமானவர்
களையும் "நம்பகமானவராகக் கருதப் பட்டுள்ளார்' (வுஸ்ஸிக) என்று கூறியுள்ளார். உதாரணத்துக்குச் சில இடங்களைச் சுட்டிக் காட்டுகிறோம்.
ஹுரைஷ்
பின் ஸலீம் என்பவரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறிவிட்டு,
இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தஹபீ கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 1/319
ஹுஸைன்
பின் முத்ரிக் என்பாரைப் பற்றி, இவர் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறிவிட்டு,
இவரை பெரும் பொய்யர் என்றும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 1/330
ஹகம்
பின் அதிய்யா என்பரைப் பற்றி நம்பகமானவராக கருதப் பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறி
விட்டு, அவர் பலமானவர் அல்ல என்றும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 1/345
ஹைஸமா
பின் அபீஹைஸமா என்பவரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறிவிட்டு,
இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 1/377
ஸுபைர்
பின் கரீப் என்பவரைப் பற்றிக் கூறும் போது நம்பகமான வராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறிவிட்டு,
இவர் பலமான அறிவிப்பாளர் அல்லர் எனவும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 1/401
ஆஸிம்
பின் அபின்னுஜூத் என்பவரைப்பற்றி நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று
கூறிவிட்டு,
இவர் நினைவாற்றல் குறைந்தவர் எனவும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 1/518
அப்துல்லாஹ்
பின் அபீ ஜஃபர் என்பார் பலவீனராக இருந்தும் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 1/543
அப்துல்லாஹ்
பின் ஹுஸைன் அல் அஸ்தீ என்பார் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, "அலீ (ரலி) மரணிக்கவில்லை; திரும்பி வருவார்கள் என்பது அவரது கொள்கையாக
இருந்தது' எனவும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 1/545
உமர்
பின் இப்ராஹீம் அல் அஸ்தீ என்பாரைப் பற்றிக் கூறும் போது, நம்பகமானவராகக்
கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறி விட்டு, இவரை ஆதாரமாகக் கொள்ளக்
கூடாது என்றும் கூறியுள்ளார்.
நூல்:
காஷிஃப் 2/55
அம்ரு
பின் கைஸ் என்பாரைப் பற்றிக் கூறும் போது, நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்
(வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவரிடம் தவறான அறிவிப்புக்கள் உள்ளன என்றும்
கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/86
இம்ரான்
பின் ஹத்தான் என்பவரைப் பற்றி கூறும் போது, நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்
(வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, "அலீயைக் கொன்ற இப்னு முல்ஜிமை
இவன் பாராட்டிய காரிஜியாக இருந்தான்' எனவும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/92
அவ்ஸஜா
என்பவரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவரது
ஹதீஸ் சரியானது அல்ல என்றும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/101
இயாள்
பின் அப்துல்லாஹ் என்பாரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்
(வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவர் பலமானவர் அல்ல என்றும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/107
மஸ்ரூக்
பின் அல் மர்சுபான் என்பாரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்
(வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவர் பலமானவர் அல்ல என்றும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/256
முஸ்லிம்
பின் காலித் என்பாரைப் பற்றி கூறும் போது நம்பக மானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறிவிட்டு,
பலவீனமானவர் என்று கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/258
முஸ்அப்
பின் முஹம்மத் என்பாரைப் பற்றி கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக)
என்று கூறி விட்டு,
இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/268
ஹுபைரா
என்பரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவர்
பலமானவர் அல்ல என்றும் கூறுகிறார்.
நூல்:
காஷிஃப் 2/334
இப்படி
ஏராளமான சான்றுகள் உள்ளன.
தஹபீ
அவர்கள் ஒருவரைப் பற்றி,
நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறினால்
அதன் பொருள் இப்னு ஹிப்பான் அவரை நம்பகமானவர் என்று கூறியிருக்கிறார் என்பது தான்.
இப்னு ஹிப்பான் ஒருவரை நம்பகமானவர் என்று கூறியிருக்கிறார் என்றால் அதன் பொருள் இவரைப்
பற்றி யாரும் குறை கூறவில்லை என்பது தான்.
அவர்
நம்பகமானவராகவும் இருக்கலாம்; கற்பனையானவராகவோ, யாரென
அறியப்படாதவராகவோ இருக்கலாம் என்பது உறுதியாகி விட்டது.
ஒவ்வொரு
வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிரூபிப்பதற்கு அல்ஜன்னத் காட்டும் ஒரே ஒரு
ஆதாரமான அபூதாவூத் ஹதீஸில் இடம்பெறும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் நம்பகமானவர் என்பதற்கு
எந்த நிரூபணமும் இல்லை.
அம்ரு
பின் ஹாரிஸ் என்பார் நம்பகமானவர் என்பதற்கு ஆதாரமாக இப்னு ஹஜர் அவர்கள் கூற்றையும்
அல்ஜன்னத் எடுத்துக் காட்டுகிறது.
அம்ர்
பின் ஹாரிஸ் ஏற்றுக் கொள்ளப்படுபவர் (மக்பூல்) என இமாம் இப்னு ஹஜர், தக்ரீப்
தஹ்தீப் எனும் நூலில் குறிப்பிடுகிறார் என்று எழுதியுள்ளனர்.
இதுவும்
இவர்களது அறியாமையை எடுத்துக் காட்டுகிறது.
இப்னு
ஹஜர் அவர்கள் சில அறிவிப்பாளர்கள் பற்றி மக்பூல் என்ற சொல்லைப் பயன்படுத்துவார். இதன்
அகராதி அர்த்தம் ஏற்கப்படுபவர் என்பதாகும். ஆனாலும் ஹதீஸ் கலையில் பயன்படுத்தும் சொற்களுக்கு
அந்தக் கலையில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அந்தப் பொருளைத் தான் கொடுக்க
வேண்டும்.
ஹதீஸ்
கலையில் ஹஸன் என்ற சொல் பயன்படுத்தப்படும். இதன் நேரடிப் பொருள் அழகானது என்பதாகும்.
ஆனால் ஹதீஸ் கலையில் இந்தப் பொருளைக் கொடுக்க முடியாது. "ஸஹீஹ் என்ற தரத்துக்கு
அடுத்த நிலையில் உள்ளது'
என்பது ஹதீஸ் கலையில் ஹஸன் என்பதன் பொருளாகும்.
இப்னு
ஹஜர் அவர்கள் ஏராளமான அறிவிப்பாளர்கள் பற்றி மக்பூல் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கான அடையாளமாகத் தான் அச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர
இவ்வாறு கூறப்பட்ட அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அர்த்தம் செய்வதற்காக பயன்படுத்தப்
படவில்லை.
தமது
நூலில் இது போன்ற சொற்களை எந்தப் பொருளில் பயன்படுத்தியுள்ளார் என்பதை இப்னு ஹஜர் அவர்கள்
இதே நூலின் துவக்கத்தில் விளக்கியுள்ளார்.
மக்பூல்
(ஏற்கப்படுபவர்) என்ற சொல்லை எந்தக் கருத்தில் பயன்படுத்தினார் என்பதையும் அவரே விளக்கியுள்ளார்.
இதன்
கருத்து: ஒருவர் குறைந்த எண்ணிக்கையிலான ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். இவரைப் பற்றி
இரண்டு விதமாக முடிவு செய்ய வேண்டும். அதாவது இவர் அறிவிக்கும் ஹதீஸைப் போன்று மற்றவர்களும்
அறிவித்திருந்தால் அப்போது அவர் மக்பூல் (ஏற்கப்படுபவர்) எனக் குறிப்பிடப் படுவார்.
அவ்வாறு வேறு யாரும் அறிவிக்காவிட்டால் அவர் பலவீனமானவராவார்.
(தக்ரீபுத் தஹ்தீப் முன்னுரை)
மக்பூல்
(ஏற்கப்படுபவர்) என்பதற்கு இப்னு ஹஜர் அவர்கள் மேற்கண்டவாறு விளக்கம் தருகிறார்கள்.
இப்னு
ஹஜர் அவர்கள் மக்பூல் (ஏற்கப்படுபவர்) என்று யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அத்தகையோரின்
பல ஹதீஸ்கள் இந்தக் காரணத் தினாலேயே பலவீனமாகி விடுகிறன.
அல்ஜன்னத்
ஏடு இந்த உண்மைகளை அறிந்திருந்தாலும் இத்துறை பற்றிய அறிவு இல்லாத ஒருவர் எழுதியதை
அப்படியே வெளியிட்டு அவமானப்பட்டு நிற்கிறது.
இப்னு
ஹஜர் அவர்கள் மக்பூல் (ஏற்கப்படுபவர்) என்று கூறிய அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள்
அனைத்தும் சரியானவை என்று இவர்கள் பிரகடனம் செய்யத் தயாரா? என்று
அவர்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம்.
சுருக்கமாகச்
சொல்வதென்றால் "அம்ர் பின் ஹாரிஸ் என்பார் யாரென்று அறியப்படாதவர்' என்று
தான் தஹபீ கூறுகிறார்.
இப்னு
ஹிப்பான் இவரை நம்பகமானவர் என்று கூறுவதைச் சரியான முறையில் இவர்கள் விளங்கவில்லை.
இப்னு ஹிப்பான் ஒருவரைப் பற்றி நம்பகமானவர் என்று கூறினால் மேலும் யாராவது இவரைப் பற்றிக்
கூறியுள்ளார்களா?
என்று தேட வேண்டும். அப்படி எந்த விபரமும் கிடைக்காவிட்டால்
அவர் அறியப் படாதவர் என்று முடிவு செய்ய வேண்டும். இந்த அடிப்படையை இருட்டிப்புச் செய்து
விட்டனர்.
மேலும்
இப்னு ஹஜர் ஒருவரைப் பற்றி மக்பூல் (ஏற்கப்படுபவர்) என்று கூறினால், அதுவும்
ஏறக்குறைய தஹபீ அவர்கள் "வுஸ்ஸிக - நம்பகமான வராகக் கருதப்படுபவர்' என்ற
தரத்தில் அமைந்தது தான். இதன் பின்னர் அவர் கூறுவதை உறுதிப்படுத்தும் சான்றுகள் இருந்தால்
தான் ஏற்கப்படும்.
இதைத்
தவிர இதை உறுதிப்படுத்தும் வேறு சான்றுகள் இல்லை என்று அல்ஜன்னத்தே ஒப்புக் கொண்டு
விட்டதால் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் யாரென அறியப்படாதவர் தான் என்பதில் ஐயமில்லை.
எனவே
ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அபூதாவூத் ஹதீஸில் யாரென்று அறியப்படாத
ஒருவர் இடம் பெறுவதால் இது பலவீனமான ஹதீஸ் என்பது சந்தேகமற நிரூபணமாகி விட்டது.
இந்தப்
பிரச்சனையுடன் தொடர்பு இல்லாத மற்றொரு எதிர்க் கேள்வியையும் இவர்கள் கேட்டுள்ளனர்.
அது இதுதான்:-
தொழுகையில்
விரல் அசைப்பதற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸை அறிவிக்கக் கூடிய குலைப் என்பவரின்
நம்பகத்தன்மையை "வுஸ்ஸிக' (நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்ற
வார்த்தையின் மூலம் தான் இமாம் தஹபீ விமர்சனம் செய்துள்ளார். தஹபீயின் ஒரே மாதிரியான
விமர்சனத்தை குலைப் விஷயத் தில் ஏற்றுக் கொண்டவர்கள் அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில்
ஏற்க மறுப்பது ஏன்?
இது
தான் அந்தக் கேள்வி! அதாவது அம்ர் பின் ஹாரிஸ் என்பவருக்குப் பயன்படுத்திய "வுஸ்ஸிக' (நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்ற வார்த்தையைத் தானே குலைப் என்பாருக்கும்
தஹபீ பயன் படுத்துகிறார். அதை மட்டும் ஏற்றுக் கொண்டு குலைபை நம்பகமானவர் எனக் கூறுவது
ஏன்?
இந்தக்
கேள்வியும் அறியாமை யினால் ஏற்படுகிறது. ஏனெனில் தஹபீ அவ்ர்கள் குலைபைப் பற்றி
"வுஸ்ஸிக'
(நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்று சொன்னதை வைத்து மட்டும்
அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. தஹபீ மட்டும் இவரை "வுஸ்ஸிக' (நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்று சொல்லி வேறு யாரும் இவரின் நம்பகத் தன்மையை
உறுதிப் படுத்தியிருக்காவிட்டால் அம்ர் பின் ஹாரிஸ் போலவே அவரும் அறியப்படாதவர் என்று
நாம் கூறியிருப்போம்.
ஆனால்
குலைபைப் பற்றி தஹபீ கூறியதற்கு மாற்றமாக அறிஞர்கள் நற்சான்று அளித்துள்ளனர்.
"குலைப் நம்பகமானவர்' என்று
அபூசுர்ஆ கூறுகிறார். "இவர் நம்பகமானவராக இருந்தார். இவரது ஹதீஸை அறிஞர்கள் ஆதாரமாகக்
கொண்டுள்ளனர்'
என்று இப்னு ஸஃது கூறுகிறார். (நூல்: தஹ்தீப் 8/400)
இத்தகைய
நற்சான்றுகள் காரணமாகவே குலைப் நம்பகமானவர் என்று கூறுகிறோம்.
குலைப்
அவர்களுக்கு இத்தகைய நற்சான்று இருப்பது போல் அம்ர் பின் ஹாரிஸ் பற்றி அறிஞர்கள் சிலாகித்துக்
கூறியதை அல் ஜன்னத் ஏடு எடுத்துக் காட்டுமா?
இவ்வளவு
அபத்தமான வாதங்களைத் தான் அல்ஜன்னத்தில் பின் வரும் அறிமுகத்துடன் எடுத்து வைத்துள்ளனர்.
திரிப்பு
வேலையில் ஈடுபட்டு மக்களை திசை திருப்பாமல் இருக்க அம்ர் பின் ஹாரிஸ் பற்றி இக்கலை
அறிஞர்கள் கூறியதை அவர்களின் நூல்களிலிருந்து அப்படியே அரபு மூலத்துடன் தந்துள்ளோம்.
இவ்வாறு
ஆணவத்துடன் எழுதி,
எடுத்து வைத்த அல்ஜன்னத்தின் திரிப்பு வேலை இப்போது அம்பலமாகி
விட்டது.
குடும்பத்தார்
நம்பகமானவர்களா?
அம்ர்
பின் ஹாரிஸ் என்பவர் அறியப்படாதவர் என்பதால் அபூதாவூதின் ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ள முடியாத
நிலைக்குச் சென்று விட்டது என்பதை அறிந்தோம்.
இந்த
ஹதீஸை ஏற்க முடியாது என்பதற்கு நாம் மற்றொரு காரணத்தை கூறியிருந்தோம்.
இதை
அறிவிப்பாளர்கள் இடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்று இமாம் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.
அபூதாவூத்
அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ்
பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள்.
அப்துல்லாஹ்
பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை.
அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார்.
அம்ரு
பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ்
பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற
விபரம் ஏதுமில்லை.
ஒருவரின்
குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள்
என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின்
நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.
ஏகத்துவம்
- செப்டம்பர் 2005
இவ்வாறு
நாம் ஏகத்துவத்தில் எழுதியிருந்தோம்
அல்ஜன்னத்
இதற்கு அளிக்கும் நகைச்சுவை நிறைந்த பதிலைப் பாருங்கள்!
அம்ர்
பின் ஹாரிஸின் குடும்பத்தினர் நம்பகமானவர்களா? இல்லையா? என்ற
ஆய்வில் இறங்கினால் புஹாரி,
முஸ்லிம் போன்ற எல்லா நூற்களையும் நாம் புறக்கணிக்க வேண்டிய
நிலைக்குத் தள்ளப்படுவோம். காரணம் இவர்கள் தங்கள் நூற்களைத் தொகுத்து தங்களது வீட்டில்
தானே வைத்திருப்பார்கள். அவர்களது குடும்பத்தாரைப் பற்றி சந்தேகம் கொண்டால் இந்நூற்களையும்
கூட ஏற்க முடியாது தான்.
எனவே
நம்பகமான (அம்ர் பின் ஹாரிஸ்) ஒருவரிடம் வேறொரு நம்பகமானவரின் (அப்துல்லாஹ் பின் ஸாலிம்)
நூல் இருந்தது. அந்நூலிலிருந்து அபூதாவூத் அவர்கள் பதிவு செய்த இந்த ஹதீஸை ஏற்கத் தான்
வேண்டும். வேறொரு நூலைப் பார்த்து விட்டு, தவறாகப் பதிவு செய்திருப்பார்
என சந்தேகம் கொள்வது அபூதாவூத் அவர்களின் நம்பகத்தன்மையை குறை கூறுவதாக அமையும்.
இவ்வாறு
அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினரிடம் இருந்த நூல் அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின்
ஏடு தான் என தஹபி. (மிஜானுல் இஃதிதால்) அபூதாவூத் ஆகிய இரு நம்பகமானவர்கள் ஊர்ஜிதம்
செய்வதால்,
அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் நூலைத் தம்மிடம் வைத்துக்
கொண்டு வேறொரு நூலை எடுத்துக் காட்டி யிருப்பார்கள் என்பது இவர்களின் வெறும் யூகம்
தான். யூகம் எந்த விதத்திலும் பயனளிக்காது என்பது குர்ஆன் வசனம்.
மேலும்
"ஆல்'
என்ற வார்த்தை ஒருவரது குடும்பத்தினருக்கு மட்டும் கூறப்படுவது
போலவே அவரையும் அவரைச் சேர்ந்தவர்களை குறிக்கவும் பயன்படுத்தப்படும். அம்ர் பின் ஹாரிஸ்
குடும்பத்தினர் எனும் போது அவரும் குடும்பத்தில் உள்ளடக்கம். இந்த அடிப்படையில் குடும்பத்தினரிடம்
இருந்து வந்த நூல் என்பதற்கு அவரிடம் இருந்து வந்த நூல் எனப் புரிந்து கொள்ளத் தடை
ஏதும் இல்லை.
அல்ஜன்னத், பக்கம்
62-63
இவர்கள்
உண்மையை விளங்காமல் எழுதியுள்ளார்களா? அல்லது எதையாவது எழுதி விட்டு, பதில்
அளித்து விட்டோம் என்று கூறுவதற்காக சம்பந்தமில்லாமல் எழுதியுள்ளார்களா? என்ற
சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.
நாம்
என்ன கூறினோம் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்.
அப்துல்லாஹ்
பின் ஸாலிம் என்பார் பெயரில் உள்ள கிதாபை அவரிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அப்துல்லாஹ்
பின் ஸாலிமின் குடும்பத்தாரிடம் கிதாபை வாசித்தேன் என்றும் அபூதாவூத் கூறவில்லை. மாறாக
அவர் என்ன கூறுகிறார் என்றால் "அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் கிதாபை அம்ர்
பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன்' என்று தான் கூறுகிறார்.
அதாவது
புகாரி இமாமின் கிதாபை கமாலுத்தீன் என்பவரது குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்பதைப்
போன்றதாகும்.
அதாவது
ஒருவர் பெயரில் எழுதிய கிதாப் வேறொருவரின் - அதாவது யாரென்று அறியப்படாதவரின் குடும்பத்தாரிடம்
காணப்படுகிறது.
ஹதீஸ்
நூற்கள் அச்சிடப்பட்டுப் பலராலும் உறுதி செய்யப்படாத அந்தக் காலத்தில் "இந்த நூலை
இவர் எழுதினார்'
என்று கூறினால் அந்த நூலை எழுதியவரே அதைக் கூறியிருக்க வேண்டும்.
அவர் அனுமதியும் அளிக்க வேண்டும்.
ஏனெனில்
ஒருவர் ஒரு விஷயத்தை எழுதி வைத்து விட்டு, அதில் சில திருத்தங்கள் செய்ய
வேண்டும் என்று எண்ணியிருப்பார். எனவே அவரது அனுமதியில்லாமல் வேறொருவர் அதைக் கையாளும்
போது, அவர் வெளியிட விரும்பாத செய்திகள் அவரது பெயரால் வெளிவந்து விடக் கூடும் என்பது
போன்ற காரணங்களுக்காக,
எழுதியரின் அனுமதியும் பெற வேண்டும் என ஹதீஸ் கலை அறிஞர்கள்
முடிவு செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு
வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறும் அபூதாவூத் ஹதீஸில், யாருடைய
நூல் என்று அபூதாவூத் கூறுகிறாரோ அந்த அப்துல்லாஹ் பின் ஸாலிமை அபூதாவூத் சந்திக்கவில்லை.
"இது நான் எழுதிய நூல் தான்' என்று அப்துல்லாஹ் பின் ஸாலிம், அபூதாவூதிடம்
உறுதிப்படுத்தவும் இல்லை. எனவே இது அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பவரது ஏடு தான் என்பது
உறுதியாகவில்லை.
இதனால்
தான் முன்திரி போன்றோர் இதைத் தொடர்பு அறுந்த செய்தி என்று கூறியுள்ளனர்.
மேலும்
அல்ஜன்னத் உதாரணம் காட்டுவது போல் அபூதாவூத் அவர்கள், அப்துல்லாஹ்
பின் ஸாலிமின் குடும்பத்தாரிடமாவது இந்த நூலை வாசித்தார்களா? என்றால்
அதுவும் இல்லை.
"இது அப்துல்லாஹ் பின்
ஸாலிம் எழுதியது தான்'
என்று அவரது நம்பகமான மகனோ, தந்தையோ, வேறு
யாரோ கூறவில்லை.
மாறாக
வேறொருவரின் குடும்பத்தாரிடம் தான் அந்த நூலைக் காண்கிறார். அந்த வேறொருவரான அம்ர்
பின் ஹாரிஸ் என்பாரும் யாரென்ற வரலாறு இல்லாதவர்.
இதைத்
தான் நாம் கேட்டிருந்தோம்.
இப்படிக்
கூறினால் புகாரி,
முஸ்லிம் போன்ற நூல்களைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று
கூறுகின்றனர். இவர்கள் தங்கள் நூல்களைத் தொகுத்து தங்கள் வீட்டில் தானே வைத்திருப்பார்கள்
என்று கேட்கின்றனர்.
புகாரி, முஸ்லிம்
உள்ளிட்ட நூல்கள் அவர்கள் வீட்டில் கண்டெடுக்கப் பட்டதாக எங்கிருந்து படித்தார்களோ
தெரியவில்லை. புகாரி இமாம்,
தாம் எழுதிய நூலைப் பிரதியெடுக்க சில மாணவர்களுக்கு அனுமதி அளித்தார்.
அவர்கள் அடுத்த தலைமுறைக்கு அனுமதி அளித்தனர். அச்சேறும் வரை சங்கிலித் தொடராக அது
நிரூபிக்கப் பட்டு வந்தது. குடும்பத்தாரிடம் கண்டெடுக்கப்படவில்லை என்பதை முதலில் இவர்கள்
விளங்கிக் கொள்ளட்டும்.
நம்பகமான
ஒருவரிடம் வேறொரு நம்பகமானவரின் நூல் இருந்தது என்று காதில் பூச்சுற்றுகின்றனர்.
அப்துல்லாஹ்
பின் ஸாலிம் நம்பகமானவர் தான். ஆனால் அவரது நூல் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பது
தான் கேள்வி.
அம்ர்
பின் ஹாரிஸின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் அல்லது அறியப்படாததால் அப்துல்லாஹ்
பின் ஸாலிமுடைய நூல் தான் என்று அதை ஏற்க முடியாது.
அவரது
குடும்பத்தினர் உறுதிப் படுத்தினார்கள் என்றால் அவர்கள் யார்? அவர்கள்
நம்பகமானவர்கள் தானா?
என்பது தெரியவில்லை என்று கேட்டால் இதற்கு அளிக்கும் பதிலைப்
பாருங்கள்!
"குடும்பத்திடம் இருந்து
வந்த நூல் என்பதற்கு அவரிடம் இருந்து வந்த நூல் என புரிந்து கொள்ளத் தடை ஏதும் இல்லை''
என்ற
தத்துவத்தைப் பதிலாகக் கூறியுள்ளனர்.
கமாலுத்தீன்
மதனி தனது குடும்பத்தாரிடம் தொலைபேசியில் பேசினார் என்று கூறினால், அவர்
தனக்குத் தானே பேசிக் கொண்டார் என்பது தான் அதன் பொருள் என்று இவர்கள் கூறுவார்களா?
மீண்டும்
சொல்கிறோம்.
அம்ர்
பின் ஹாரிஸ் யாரென அறியப்படாதவர் என்பதாலும்,
அவரது
குடும்பத்தினர் யார் என்பது தெளிவுபடுத்தப்படாததாலும்,
அவர்களின்
நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாததாலும்
அபூதாவூதில்
இடம் பெறும் ஹதீஸும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பலவீனமானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்தச்
செய்தியை முன்திரி போன்றவர்கள் "தொடர்பு அறுந்த செய்தி' என்று
கூறியிருப்பது நமது வாதத்தை மேலும் பலப்படுத்துகிறது.
அபத்தமான
வாதம்
பிறரின்
நூலிலிருந்து ஹதீஸைப் பதிவு செய்வது ஏற்புடையதா? என்ற தலைப்பில் இரண்டு
பக்கங்களை வீணடித்துள்ளனர்.
பிறரின்
நூலிலிருந்து அறிவிப்பது தவறு என்று நாம் வாதிக்கவில்லை. யாருடைய நூலிலிருந்து வாசிக்கப்
படுகிறதோ அந்த நூல் அவருடையது தான் என்பதில் சந்தேகம் இருக்கக் கூடாது என்பது தான்
நமது வாதம். இதற்கும் இவர்கள் எழுதியுள்ள செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பக்கத்தை
நிரப்புவதற்காக நாம் கூறாதவற்றுக்கு விளக்கம் எழுதியுள்ளனர்.
இத்தனை
பலவீனங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளன. இத்துடன் மற்றொரு பலவீனமும் உள்ளது என்பதை செப்டம்பர்
இதழில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
குற்றச்சாட்டு
- 3 நபித்தோழரின் இலக்கணம்
ஒவ்வொரு
ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஆதாரமான அபூதாவூத் ஹதீஸை அறிவிக்கும்
முதல் அறிவிப்பாளராக அப்துல்லாஹ் பின் முஆவியா என்பார் இடம் பெற்றுள்ளார். இதில் நமக்கு
எழும் சந்தேகத்தை ஏகத்துவம் இதழில் நாம் எழுப்பியிருந்தோம்.
இதையும்
தங்கள் மறு ஆய்வில் மறுத்து குற்றச்சாட்டு - 3 என்ற தலைப்பில் சில செய்திகளை
வெளியிட்டுள்ளனர்.
இவர்
நபித் தோழர் என்று உண்மையாக இருந்தால் கூட மேலே நாம் கூறிய காரணங்களால் இந்த ஹதீஸ்
பலவீனமானது என்பதில் சந்தேகம் இல்லை.
இது
பற்றி நாம் எழுதியது இது தான்:-
இவர்
நபித் தோழர் என்று சில நூற்களில் எழுதப் பட்டிருந்தாலும் நபித் தோழர் என்பதை முடிவு
செய்வதற்குரிய அளவு கோல் இவருக்குப் பொருந்தவில்லை.
நபித்
தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித் தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க
வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும்
இல்லை.
"நான் நபியிடம் கேட்டேன்'' என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில், "நான் நபியிடன் கேட்டேன்'' என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப் படவில்லை.
மாறாக நபி சொன்னார்கள் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த அளவுகோலின்
படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை.
அல்லது
ஒரு நபித் தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க
வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை.
தத்ரீப்
2/672ல் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோல் கூறப்பட்டுள்ளது.
நபித்
தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை.
எனினும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.
ஏகத்துவம்
செப்டம்பர் 2005
இதற்கு
மறுப்பாக அவர்கள் சில வாதங்களை முன் வைக்கிறார்கள்.
"அப்துல்லாஹ் பின் முஆவியா
(ரலி) அவர்கள் ஒரு நபித் தோழர் என்றே பெரும்பாலான நூற்களில் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
குறிப்பாக அவர்கள் மேற்கோள் காட்டிய நபித் தோழருக்கான அளவுகோலை விவரிக்கும் தத்ரீப்
என்ற நூலிலும் கூட நபித் தோழர் அல்லர் எனக் கூறப்படவே இல்லை''
என்று
மறுப்பைத் துவக்குகின்றனர்.
தத்ரீப்
என்ற நூலில் இவர் நபித் தோழர் அல்லர் என்று கூறப்படவே இல்லை என்று சிறுபிள்ளைத்தனமாக
எழுதியுள்ளனர்.
அறிவிப்பாளர்களின்
பட்டியலை வெளியிட்டு அலசும் நூலில் தான் அனைத்து தனிப்பட்ட நபர் பற்றிய விபரம் இடம்
பெற்றிருக்கும்.
தத்ரீப்
என்ற நூல் ஒவ்வொரு அறிவிப்பாளரைப் பற்றியோ அல்லது ஒவ்வொரு நபித்தோழரைப் பற்றியோ விவரிக்கும்
நூல் அல்ல.
ஹதீஸ்
கலை பற்றிய விதிகள் மட்டுமே அந்நூலில் விளக்கப்படும். உதாரணத்திற்காக மட்டும் தான்
தனி நபர்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கும்.
நபித்தோழர்
என்றால் அதற்கான இலக்கணம் என்ன? என்பதைத் தான் அந்த நூலில் கூறப்படுமே தவிர
இவர் நபித்தோழர்,
இவர் நபித் தோழர் அல்லர் என்ற முழுமையான பட்டியல் கூறப்படாது
என்ற சாதாரண உண்மையைக் கூட அறிந்து கொள்ளாமல் மறு ஆய்வு செய்யப் புறப்பட்டுள்ளனர்.
இதன்
பின்னர் 13 நூல்களின் பட்டியலை வெளியிட்டு அந்த நூல்களில் அப்துல்லாஹ் பின் முஆவியா பற்றி
நபித்தோழர் என்று கூறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இப்படிக்
கூறியவர்கள்,
மேற்கண்ட நூல்களில் எந்தப் பாகத்தில், எந்தப்
பக்கத்தில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது என்று கூறாமல் மொட்டையாக எழுதியுள்ளனர்.
இவர்கள்
சுட்டிக்காட்டிய நூல்களில் சிலவற்றில் அவரை நபித்தோழர் என்று எழுதியிருப்பது உண்மை
தான். அதை நாமே செப்டம்பர் ஏகத்துவம் இதழில் குறிப்பிட்டுள்ளோம். 13 நூல்களின்
பட்டியலை வெளியிட்டு விட்டுப் பின்வருமாறு அல்ஜன்னத் வாதிக்கின்றது.
இந்த
ஒரு ஹதீஸைத் தவிர வேறு எதிலும் இடம் பெறவில்லை என்றொரு குற்றச்சாட்டையும் கூறுகின்றார்கள்.
இதனை சரியென ஒப்புக் கொண்டால் ஒரு ஹதீஸைத் தவிர வேறு எதிலும் இடம் பெறாத நபித்தோழர்கள்
என நீண்டதொரு பட்டியல் உண்டு. அவர்களை எல்லாம் நபித்தோழர்கள் அல்லர் என்று கூறுவார்களா? ஒரு
ஹதீஸைக் கூட அறிவிக்காத பல நபித்தோழர்களும் உள்ளனர். அதனால் அவர்களை நபித்தோழர்கள்
அல்லர் என்று தான் கூற முடியுமா?
அல்ஜன்னத்
பக்கம் 65
இவ்வாறு
எழுதியுள்ளனர்.
நாம்
எழுதியது என்ன என்பதைக் கூட விளங்காமல் நாம் கூறாத கருத்துக்கு மறுப்பு கூறியுள்ளனர்.
அப்துல்லாஹ்
பின் முஆவியா என்பவர் நபித்தோழராக இருக்க முடியாது என்பதற்கு மேற்கண்ட காரணத்தை நாம்
கூறவில்லை.
ஒரு
ஹதீஸைக் கூட அறிவிக்காத பலர் நபித்தோழர்களாக உள்ளனர். ஒரே ஒரு ஹதீஸை மட்டும் அறிவித்த
நபித்தோழர்களும் இருந்துள்ளனர். அவற்றை நாமும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
நாம்
கேட்பது என்னவென்றால் ஒருவரை நபித்தோழர் என்று கூறுவதாக இருந்தால் அவரே தன்னை எந்த
வகையிலாவது நபித்தோழர் என்று கூறியிருக்க வேண்டும்.
அல்லது
அவரைச் சந்தித்த தாபியீ ஒருவராவது இவ்வாறு கூறியிருக்க வேண்டும். தாபியீ காலத்திற்குப்
பின் வாழ்ந்த யாரும் ஒருவரை நபித்தோழர் என்று சான்றளிக்க முடியாது என்ற அளவுகோலின்
அடிப்படையில் நாம் கேள்வி எழுப்பினோம்.
இதை
நாம் சுயமாக எழுப்பவில்லை.
அந்தத்
துறையில் உள்ள அறிஞர்களின் கூற்றை ஆதாரமாகக் கொண்டே எழுதினோம்.
இப்னு
ஹஜர் அவர்கள் இவரை நபித்தோழர் என்று கூறி விட்டார் என்பதால் இவர் நபித்தோழர் என்று
இவர்கள் நிலைநாட்ட முயல்கின்றனர். ஆனால் இப்னு ஹஜர் அவர்களே எந்த விதியைக் கூறுகின்றார்களோ
அந்த விதியின் படித் தான் நாம் கேள்வி எழுப்பினோம்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்று ஒருவர் கூறினால் அதை வைத்து அவரை நபித்தோழர்
என்று கூறுவது பொருத்தமற்றதாகும். அவர் நபித்தோழராக இல்லாமலிருந்து தனக்குக் கூறியவரை
அவர் விட்டிருக்கக் கூடும் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுகின்றார்கள்.
(அல்இஸாபா முன்னுரை)
அபூபக்ர், உமர்
போன்று அனைவரும் அறிந்து வைத்திருப்பதன் அடிப்படையிலோ, பரவலாக
அறியப்பட்டதன் அடிப்படையிலோ, அல்லது இவர் நபித்தோழர் தான் என்று இன்னொரு
நபித்தோழர் சான்றளிப்பதன் அடிப்படையிலோ, அல்லது அவரே தன்னை நபித்தோழர்
என்று கூறுவதன் அடிப்படையிலோ, அல்லது தாபியீ ஒருவர் அவரை நபித்தோழர் என்று
உறுதி செய்ததன் அடிப்படையிலோ தான் ஒருவரை நபித்தோழர் என்று அறியலாம்.
மறு
ஆய்வு செய்தவர்கள் எதற்கெடுத்தாலும் அல்பானியை ஆதாரமாகக் காட்டுவார்கள். ஏற்கத்தக்க
காரணம் எதையும் கூறாமல் அல்பானி அவர்கள் ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்திருந்தால் அதைச்
சரி என்று நம்புவார்கள்.
இவர்களுக்காக
இது பற்றி அல்பானி அவர்கள் கூறுவதை எடுத்துக் காட்டுகிறோம்.
இப்னு
ஹஜர் அவர்கள் உம்மு பிலால் என்ற பெண்மணியை நபித்தோழர்கள் பட்டியலில் வெளியிட்டுள்ளார்.
உம்மு பிலாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸை அறிவித்துள்ளார். (பார்க்க
அஹ்மத் 25285,
இப்னுமாஜா)
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தியை உம்மு பிலால் அறிவிக்கின்றார். இவரைப்
பற்றி இப்னு ஹஸ்ம் கூறும் போது, இவர் நபித் தோழர் அல்லர் என்று கூறுகின்றார்.
இப்னு முன்தா,
அபூநயீம், இப்னு அப்துல் பர் ஆகியோர் உம்மு பிலாலை
நபித்தோழர் என்கின்றனர். இதில் தலையிட்டு விளக்கம் கூற வந்த அல்பானி பின்வருமாறு விமர்சனம்
செய்கின்றார்.
நான்
(அல்பானி) கூறுகின்றேன்: இப்னு ஹஸ்ம் கூறியது தான் சரியானது. ஏனெனில் உம்மு பிலால்
இந்த ஹதீஸில் தவிர வேறு எந்த வகையிலும் அறியப்பட்டவர் அல்ல. மேலும் தனது நபித் தோழமை
பற்றி அவர் ஏதும் கூறவில்லை. எனவே அவருடன் இச்செய்தியை இணைத்திருப்பது அறியாமையாகும்.
இவ்வாறிருக்க அவர் நபித்தோழர் என்பது எவ்வாறு நிரூபணமாகும்?
நூல்:
ஸில்ஸிலா அஹாதீஸுல் லயீஃபா,
1/157, 158
உம்மு
பிலால் என்பார் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸை அறிவித்திருந்ததாலும், அவர்
நபித் தோழரே என்று பல அறிஞர்கள் கூறியிருந்தாலும், நபிகள் நாயகம் கூற நான்
கேட்டேன் என்று அவர் கூறாததால் இவர் நபித்தோழர் அல்லர் என்பதே சரியான கருத்து என்று
அல்பானி கூறுகின்றார்.
அல்பானி
அவர்கள் கேட்ட இந்தக் கேள்விகள் அனைத்தும் அப்துல்லாஹ் பின் முஆவியாவுக்குப் பொருந்தாமல்
போனது ஏன்?
இது குறித்து நம்மைப் பற்றி இவர்கள் செய்த தரக்குறைவான விமர்சனங்களை, இதே
போன்ற கருத்தைக் கூறிய அல்பானி அவர்களுக்கு எதிராகவும் இவர்கள் செய்யத் தயாரா?
இப்னு
ஹஜர் அவர்கள் அப்துல்லாஹ் பின் முஆவியாவை நபித்தோழர் என்று கூறியிருந்தாலும் அவரே கூறும்
இலக்கணத்திற்கு இது முரண்படுகின்றது.
தனிப்பட்ட
நபரைப் பற்றிக் கூறும் போது தவறுக்கு அதிக வாய்ப்புள்ளது. பொது விதியைக் கூறும் போது
இந்த வாய்ப்பு இல்லை. எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த இலக்கணத்திற்குத் தான்
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவிப்பதால் மட்டும் ஒருவர் நபித்தோழராக ஆக
முடியாது. இதை நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என்பது போன்ற வார்த்தையைக்
கூறி, அவர் நம்பகமானவராகவும் இருந்து, அவர் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றிருக்கும்
வாய்ப்பு இருந்தால் தான் அவரைப் பற்றி நபித் தோழர் என்று முடிவு செய்ய முடியும்.
இதை
இன்னும் தெளிவு படுத்த சில விபரங்களை முன் வைக்கிறோம்.
நபித்தோழர்களைப்
பற்றியும்,
நபித்தோழர் என்று கூறப்பட்டு, உண்மையில் நபித்தோழராக
இல்லாதவர்களைப் பற்றியும்,
பட்டியல் போட்டு விளக்கும் இஸாபா என்ற நூலில் இமாம் இப்னு ஹஜர்
அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் இதைப் புரிய வைக்கின்றார்கள்.
ஹுஸைன்
பின் ஸாயில் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஒரு செய்தியை அறிவித்துள்ளார். ஆனாலும்
இவர் நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 2/211
முத்ரிப்
என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஒரு செய்தியை அறிவித்துள்ளார். ஆனாலும் இவர்
நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 6/129
ஸினான்
பின் ஸலமா என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இரண்டு ஹதீஸ்களை அறிவித்திருந் தாலும்
இவர் நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 3/300
ஆமிர்
பின் மஸ்ஊத் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந்தாலும் இவர்
நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 3/609
அப்துர்ரஹ்மான்
பின் ஜாரியா என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந்த போதும் இவர்
நபித்தோழர் என்பதில் இப்னு ஹஜர் சந்தேகம் தெரிவிக்கின்றார்.
நூல்:
அல்இஸாபா 4/294
அப்துல்லாஹ்
பின் சுரகா என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந் தாலும் நான்
நேரில் கேட்டேன் என்று இவர் கூறாததால் இவர் நபித்தோழர் அல்லர் என்று புகாரி கூறியதாக
இப்னு ஹஜர் தெரிவிக்கின்றார்.
நூல்:
அல்இஸாபா 5/90
அப்துல்லாஹ்
பின் அல்காத் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந் தாலும் இதில்
அறிஞர்கள் சந்தேகம் கொள்வதாக இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 5/216
அப்துல்லாஹ்
பின் ஷைபா என்பார் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக ஒரு ஹதீஸை அறிவித்திருந்தாலும் இவர்
நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 5/234
உபைத்
என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந்தாலும் இவர் நபித்தோழர் அல்லர்
என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 5/255
முஹம்மத்
பின் அபீ ஆயிஷா என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித் திருந்தும் இவர்
நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 6/340
ஸபிய்யா
பின் அபீ உபைத் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்தி ருந்தாலும் இவர்
நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 7/749
யஸ்தாத்
என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந்தாலும் இவர் நபித்தோழர் அல்லர்
என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 1/46
பிலால்
அல் பஸாரி என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந்தாலும் இவர் யாரென
அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
இஸாபா 1/327
& 364
காலித்
பின் முகீஸ் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந்தாலும் இவர்
நபித்தோழர் என்பதில் இப்னு ஹஜர் சந்தேகம் கொள்கின்றார்.
நூல்:
அல்இஸாபா 2/250
ஸியாத்
ஸஹ்மீ என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந்தாலும் இவர் நபித்
தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 2/657
ஸியாத்
(முஐகிபின் அடிமை) என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஒரு ஹதீஸை அறிவித்த போதும்
இவர் நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 3/116
ஸயீத்
பின் நவ்பல் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதீஸை அறிவித்திருந்தாலும் இவர்
நபித்தோழர் அல்லர் என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்.
நூல்:
அல்இஸாபா 3/287
ஸயீத்
பின் அபீஸயீத்,
ஸலம் பின் யஸீத், சுலைமான் பின் ஸஃது, ஸஹ்ல்
பின் தஃலபா,
ஷஜார், அஸ்ஸல்த் அஸ்ஸதூஸி, அப்துல்லாஹ்
பின் ஸர்க்,
அப்துல்லாஹ் பின் அபீ ஷகீதா, அப்துல்லாஹ் பின் கைஸ்....
இப்படி
பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
இவர்கள்
அனைவரையும் பட்டியல் போடுவதென்றால் ஏகத்துவத்தின் பக்கங்கள் போன்று பல மடங்கு தேவைப்படும்.
அந்த அளவுக்கு நீண்ட பட்டியல் உண்டு.
நபிகள்
நாயகம் (ஸல்) கூறியதாக நேரடியாக அறிவித்த இவர்களையும், இவர்களைப்
போன்றோரையும் நபித்தோழர்கள் அல்லர் என்று இப்னு ஹஜர் அவர்களும் மற்றும் பல அறிஞர்களும்
கூறுவது ஏன்?
நான்
நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் என்று கூறாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என்று மட்டும் கூறுவதாலும்,
இவர்கள்
நபித்தோழர்கள் என்பதை வேறு நபித்தோழரோ, தாபியீன்களோ உறுதிப்படுத்தாததாலும்,
அபூபக்ர், உமர்
போன்ற அளவுக்கு அறியபட்டவர்களாக இல்லாததாலும் தான் இவ்வாறு கூறுகின்றனர்.
இதே
அளவுகோலின் படித் தான் அப்துல்லாஹ் பின் முஆவியா அவர்களைப் பற்றி நாம் சந்தேகம் தெரிவித்தோம்.
அளவு
கோல் என்பது அந்த அம்சம் உள்ள அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
அப்துல்லாஹ்
பின் முஆவியா அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளராக இடம் பெறுகிறார் என்பதைத் தவிர வேறு
எந்த விபரமாவது கிடைக்கிறதா?
இப்னு
ஹஜர் அவர்களோ,
வேறு அறிஞர்களோ இவரது வயது, இவரது மரணம், இவர்
மதீனா வந்தாரா?
நபிகள் நாயகத்தைச் சந்தித்தாரா? என்பது
பற்றி எதையும் கூறவில்லை.
ஒவ்வொரு
ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில்
அமைந்த ஹதீஸில் இவரது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தவிர வேறு ஒரு
தகவலும் கிடைக்கவில்லை.
இந்த
நிலையில் உள்ள இவரை நபித்தோழர் என்று இவர்கள் அறுதியிட்டுக் கூறுவார்களானால் இதே போன்ற
நிலையில் உள்ள அனைவரையும் நபித்தோழர் எனக் கூறுவார்களா? என்பது
தான் நமது கேள்வி.
பதிமூன்று
நூல்களின் பட்டியலை வெளியிடுவது கேள்விக்கு விடை ஆகாது. பட்டியலில் உள்ள எந்த நூலிலும்
நாம் கேட்கும் விபரம் இல்லை என்பது தான் உண்மை.
ஆக, அபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸில் ஒரு பலவீனம் அல்ல. பல்வேறு விதமான
பலவீனங்கள் உள்ளன.
1. குற்றச்சாட்டு-1 என்ற
தலைப்பில் இவர்களே ஒப்புக் கொண்ட படி இதன் அறிவிப்பாளர்களான யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும்
ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் இடையே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். எனவே இது
தொடர்பு அறுந்த ஹதீஸாகும்.
2. அபூதாவூதுக்கும், அப்துல்லாஹ்
பின் ஸாலிமுக்கும் எந்தச் சந்திப்பும் இல்லை.
3. அம்ர் பின் ஹாரிஸ் என்பார் யார்
என்பதற்குத் தகவல் இல்லை.
4. அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினர்
என்று அதில் கூறப்படுகின்றது. குடும்பத்தினர் என்றால் யார்? என்பதற்கும், அவர்கள்
நம்பகமானவர்களா?
என்பதற்கும் விபரம் ஏதுமில்லை.
5. முதல் அறிவிப்பாளரான அப்துல்லாஹ்
பின் முஆவியா என்பவர் நபித்தோழர் என்று முடிவு செய்வதற்கு ஏற்ற காரணங்கள் ஏதும் இல்லை.
இப்படி
ஐந்து பலவீனங்களைக் கொண்ட ஒரு செய்தியை ஆதாரமாகக் கொண்டு, இஸ்லாத்தின்
மிக முக்கியமான ஒரு கடமையைப் பற்றி முடிவு செய்யப் பார்க்கின்றனர்.
ஜகாத்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற
வாதத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக ஏற்கத்தக்க ஒரு ஆதாரமும் இல்லை என்பதை
தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டோம்.
மாற்றுக்
கருத்துடையவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்ட ஒரு ஆதாரமும் இல்லை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு
விட்டது.
அவர்களிடம்
எந்த ஆதாரமும் மிச்சமில்லை என்றால் கீழ்க்கண்டவாறு நாம் எழுதியது நிரூபணமானது தவிர
வேறு நிலை இல்லை.
செப்டம்பர்
இதழில் நாம் எழுதியதை அப்படியே மீண்டும் இங்கு நினைவூட்டுகின்றோம்.
மு ஜகாத் கொடுப்பது எப்போது கடமை என்பதற்கு ஆதாரம்
உள்ளது.
மு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்
உள்ளது.
மு யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்கு
ஆதாரம் உள்ளது.
ஆனால்
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம்
ஏதும் இல்லை. இதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் இல்லாத நிலையில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற
கட்டளையை எவ்வாறு புரிந்து கொள்வது?
பொதுவாக
எவ்விதக் காலக் கெடுவும் நிர்ணயிக்காமல் ஒரு காரியத்தைச் செய்யுமாறு கட்டளையிடப்பட்டால்
அதை ஒரு தடவை செய்ய வேண்டும் என்பது தான் அதன் பொருளாகும்.
வணக்க
வழிபாடுகள் முதல் உலகில் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் இப்படித்
தான் புரிந்து கொள்கிறோம்;
புரிந்து கொள்ள வேண்டும்.
தொழுகையைப்
பொறுத்த வரை தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதற்கு நேரடியான கட்டளை இருக்கின்றது.
அதனால் தினமும் ஐந்து வேளை தொழுகை கடமை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
குர்ஆனிலோ, நபிவழியிலோ
"தொழ வேண்டும்'
என்ற கட்டளை மட்டும் இருந்து எவ்வளவு தொழ வேண்டும் என்பது பற்றி
ஒரு குறிப்பும் அறவே இல்லாவிட்டால் தினசரி ஐந்து வேளை என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம்.
மாதம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். வருடம் ஒரு தடவை என்றும் புரிந்து
கொள்ள மாட்டோம். அப்படிப் புரிந்து கொண்டால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு
புரிந்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழும்.
நோன்பைப்
பொறுத்த வரை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றாக வேண்டும் என்று தெளிவான கட்டளை
உள்ளது. ரமளான் என்பது குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயராகும். இம்மாதம் வருடந்தோறும்
திரும்பத் திரும்ப வருவதால் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்து
கொள்கிறோம்.
இப்படிக்
கூறப்படாமல்,
நோன்பு நோற்க வேண்டும் என்று மட்டும் குர்ஆனிலோ, நபிவழியிலோ
கூறப்பட்டு,
நாளோ, கிழமையோ, மாதமோ அத்துடன் குறிப்பிடப்
படாமல் இருந்தால் அதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வோம்?
வாழ்நாளில்
ஒரு தடவை என்று தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதில்
ஏற்கத்தக்க எந்த எதிர்க் கேள்வியும் எழாது.
அவ்வாறு
இல்லாமல் வாரா வாரம் என்றோ,
மாதா மாதம் என்றோ, வருடத்தில் ஒரு மாதம் என்றோ, வருடத்தில்
ஒரு வாரம் என்றோ நாம் அதைப் புரிந்து கொண்டால் அந்தக் காலக் கெடுவை எங்கிருந்து எடுத்தீர்கள்
என்ற கேள்வி எழும். அதற்கு விடை கூற இயலாது.
ஹஜ்
என்ற கடமையை அதற்குரிய சரியான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது "அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமை யாக்கியுள்ளான்.
எனவே ஹஜ் செய்யுங்கள்''
என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமுமா?'' என்று கேட்டார். அவர் மூன்று
முறை இவ்வாறு கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் நபி (ஸல்)
அவர்கள்,
"நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே (வருடா வருடம்) கடமையாகி விடும்.
அது உங்களுக்கு இயலாது''
என்று கூறி விட்டு, "நான் உங்களுக்கு (விவரிக்காமல்)
விட்டதை நீங்களும் என்னை (கேள்வி கேட்காமல்) விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள்
அழிந்தது, தங்களுடைய நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும், முரண்பட்டதாலும்
தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்:
முஸ்லிம் 2380
ஹஜ்
கடமை என்று பொதுவாகக் கூறப்பட்டவுடன் ஒரு நபித் தோழர் ஒவ்வொரு வருடமுமா? என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். இந்தக் கேள்விக்காக நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துகின் றார்கள். வாழ்நாளில் ஒரு தடவை தான் என்று
விளக்கமளிக்கின்றார்கள்.
ஹஜ்
செய்வதற்குரிய மாதம் வருடா வருடம் வருவதாலும், ஆண்டு தோறும் மக்கள் ஹஜ் செய்வதற்காக
குழுமி வருவதாலும் அந்த நபித் தோழர், வருடா வருடமா? என்று
கேட்டார். ஆனாலும் அவ்வாறு புரிந்து கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தெளிவு படுத்தி விடுகின்றார்கள்.
கால
நிர்ணயம் எதையும் கூறாமல் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மொத்தத்தில் ஒரு தடவை
செய்ய வேண்டும் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.
"மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய்
கொடு'' என்று நாம் ஒருவருக்குக் கட்டளையிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு தடவை
மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தான் அந்த நபரும், மூஸாவும்
புரிந்து கொள்வார்கள்.
மேற்கண்ட
நமது கட்டளையின் அடிப்படையில் மூஸா அந்த நபரிடம் சென்று வருடா வருடம் ஆயிரம் ரூபாய்
கேட்டால் அந்த நபர் கொடுப்பாரா? நிச்சயம் கொடுக்க மாட்டார்.
அந்த
அடிப்படையில் ஸகாத் குறித்த கட்டளையும் அமைந்துள்ளது.
ஒரு
பொருளுக்கு ஒரு தடவை தான் ஸகாத் கொடுப்பது கடமை எனக் கூறும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக்
காட்ட இயலுமா?
என்ற கேள்வியை மாற்றுக் கருத்துடையவர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர்.
ஒரு
சொல்லுக்கு இது தான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது அதற்கு ஆதாரம் கேட்பது
அறிவுடைமையாகுமா?
இதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.
"உனக்கு ஆயிரம் ரூபாய்
தருகிறேன்''
என்று ஒருவரிடம் நாம் கூறுகிறோம். அது போல் அவரிடம் ஆயிரம் ரூபாயைக்
கொடுத்து விடுகிறோம். அவர் அடுத்த வருடம் வந்து மீண்டும் ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று
நம்மிடம் கேட்கிறார். "ஆயிரம் ரூபாய் தந்து விட்டேனே'' என்று நாம் கூறுகிறோம். "வருடா வருடம் இல்லை என்று சொன்னீர்களா? அதற்கு
என்ன ஆதாரம்?''
என்று அவர் கேட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?
"வருடா வருடம் தருவேன்'' என்று கூறாமல் பொதுவாகச் சொன்னதே இதற்குரிய ஆதாரம் என்பது விளங்கவில்லையா? என்று
அவரிடம் திருப்பிக் கேட்போம்.
"செல்வங்களுக்கு ஜகாத்
கொடுங்கள்'
என்பது பொதுவான சொல்.
மு ஒவ்வொரு வினாடியும் கொடுக்க வேண்டுமா?
மு ஒவ்வொரு நிமிடமும் கொடுக்க வேண்டுமா?
மு ஒவ்வொரு மணிக்கும் கொடுக்க வேண்டுமா?
மு ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டுமா?
மு ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டுமா?
மு ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா?
மு இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
மு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
மு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
மு வருடம் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
மு ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
என்று
ஆயிரக்கணக்கான அர்த்தங்களுக்கு இச்சொல் இடம் தருகின்றது. ஆயிரக்கணக்கான அர்த்தங்களில்
வருடா வருடம் என்ற ஒரு அர்த்தத்தை மட்டும் திட்டவட்டமாக யார் முடிவு செய்கிறார்களோ
அவர்கள் தான் அதற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.
எந்தக்
கால கட்டமும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டதே நமக்குப் போதுமான ஆதாரமாகும்.
காலக்
கெடு எதையும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டால் பொதுவாக ஒரு தடவை என்ற பொருளைத் தான் தரும்
என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் கூறலாம்.
ஒரு
மனிதருக்குப் புதையல் கிடைக்கின்றது. இதில் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
(புகாரி 1499, 2355, 6912, 6913)
புதையலை
எடுத்தவர் வருடா வருடம் 20 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்வார்களா? மொத்தத்தில்
ஒரு தடவை என்று புரிந்து கொள்வார்களா?
போர்க்
காலங்களில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைச் செலுத்தி
விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
(புகாரி 6179, 53, 87, 523,
1398, 3095, 3510, 4368, 4369, 7266, 7556)
போரில்
கைப்பற்றப்பட்ட பொருட்களில் வருடா வருடம் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்பது
தான் இதன் பொருளா?
அல்லது மீண்டும் போர்க் களத்தைச் சந்தித்து பொருட்களைக் கைப்பற்றினால்
அதற்கு மட்டும் 20 சதவிகிதம் என்பது பொருளா?
எனவே
வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் தங்கள்
கூற்றை நிரூபிக்காவிட்டால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தானாகவே நிரூபணமாகி விடும்.
இது
தான் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான சான்றாகும்.
இதை
வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்கள் சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்
மாற்றுக்
கருத்துடையவர்கள் முதன்மையான நம்முடைய வாதத்துக்கு உரிய மறுப்பு தராமல் துணை ஆதாரமாகச்
சமர்ப்பிக்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து, பிரச்சனையை
திசை திருப்புகின்றார்கள்.
நாம்
கூறும் துணை ஆதாரங்கள் தவறு என்று அவர்கள் நிரூபித்து விட்டதாக ஒரு வாதத்திற்குக் கூறினாலும், நம்முடைய
அடிப்படையான வாதத்திற்குப் பதில் தராத வரை அவர்கள் தங்கள் கருத்தை நிலை நாட்ட முடியாது.
எனவே
துணை ஆதாரங் களுக்குப் பதிலளிக்க வேண்டும். அதை விட முக்கியமாக ஜகாத் கொடுக்கப்பட்ட
பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்பதைச் சந்தேகத்திற்கு
இடமில்லாத வகையில் நிரூபிப்பது அவர்களின் முதல் கடமையாகும்.
ஏகத்துவம்
- செப்டம்பர் 2005
ஜகாத்
கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையவர்களிடம்
எந்த ஆதார மும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டோம்.
இனி
அல்ஜன்னத்தின் மறு ஆய்வில் இரண்டாவது வகையான வாதங்களைப் பார்ப்போம்.
உண்மையை
அறிந்தும் மறைத்தவர்கள்
இது
(தவ்ஹீத் ஜமாஅத் கூறுவது) குர்ஆன் சுன்னாவுக்கு எதிரான கருத்து தான் என உறுதியாக அறிந்திருந்த
பலரும் அதனை பகிரங்கமாக எதிர்க்க முடியாமல் மௌனம் காத்தனர்.
என
அல்ஜன்னத் எழுதியுள்ளது.
கமாலுத்தீன்
மதனியும், ஜாக் அறிஞர்களும் தாங்கள் எதை உண்மை என்று விளங்கி வைத்திருந்தார்களோ அந்த உண்மையைக்
கடந்த ஐந்து ஆண்டுகளாக மறைத்து வந்துள்ளனர் என்று நூர் முஹம்மது என்பவர் அம்பலப்படுத்துகின்றார்.
இதை
வெளியிட்டு ஜாக்கும் ஏற்றுக் கொள்கிறது.
இந்தக்
கட்டுரையை எழுதுவதற்கு முன்னர் நூர் முஹம்மது என்பாரும் தனக்குத் தெரிந்த உண்மையை நான்காண்டுகள்
மறைத்திருக்கிறார் என்பதும் தெளிவாகின்றது.
இவர்களுக்கு
சில கொள்கையற்ற புதிய நண்பர்கள் கிடைத்து, தூண்டுவதால் தான் இவர்கள் அறிந்து
கொண்ட உண்மையை (?)
வெளியிட்டுள்ளார்கள்.
முக்கியமான
ஒரு பிரச்சனையில் அவர்கள் கருத்துப் படி பயங்கரமான ஒரு கருத்து முன் வைக்கப்பட்டிருந்தும்
ஐந்து ஆண்டுகளாக மௌனம் காத்தனர் என்று இவர்களே ஒப்புக் கொண்டது இவர்களை மக்கள் எடை
போடப் போதுமானதாகும்.
நபித்தோழர்களும்
நாமும்
"குர்ஆனும் சுன்னாவும்
காட்டிய வழியில் அந்த நபித்தோழர்கள் செயல்பட்டார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும்
இல்லை. அவர்களைப் பொறுத்தவரை தங்கள் உடல், பொருள், ஆவி
அத்தனையையும் இஸ்லாத்திற்காகத் தியாகம் செய்த உத்தமர்கள். அவர்களை சந்கேகக் கண் கொண்டு
பார்ப்பதும் குற்றவாளியாகச் சித்தரிப்பதும் உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் பண்பல்ல!
என்று
எழுதி நமது வாதத்தைத் திசை திருப்பும் மோசடியில் அல்ஜன்னத் இறங்கியுள்ளது.
நபித்தோழர்களை
மதிப்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்!
நபித்தோழர்களுக்கு
இறைவனிட மிருந்து வஹீ ஏதும் வராது என்பதால் குர்ஆனையும், நபிவழியையும்
மட்டும் தான் மூல ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவது ஒருக்காலும் நபித்தோழர்களைக்
குற்றவாளிகளாகச் சித்தரிப்பதன்று.
எல்லா
மனிதர்களும் தவறு செய்பவர்களே! என்ற நபிமொழிக்கு இணங்க நபித்தோழர்களிடம் சில தவறுகள்
ஏற்பட்டன என்று நாம் கூறுவதும் நபித்தோழர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதாக ஆகாது.
நபித்தோழர்கள்
தவறே செய்ய மாட்டார்கள் என்று கூறினால் அது நபிகள் நாயகத்தின் அறிவுரையை அலட்சியம்
செய்ததாக ஆகி விடும். நபித்தோழர்களை மனிதத் தன்மை யிலிருந்து உயர்த்தி இறைத்தன்மை வழங்குவதாகவும்
அமையும்.
எனவே
அல்ஜன்னத்தின் மேற்கண்ட வாதம் அபத்தத்தின் உச்சக்கட்டம் என்பதில் ஐயமில்லை
இரண்டு
லட்சம் பரிசு
இக்கட்டுரை
யார் பெயரில் வெளியிடப்பட்டுள்ளதோ அவரது அறியாமைக்கு உரை கல்லாகப் பின்வரும் சவடாலைக்
கூறலாம்.
பொருளைத்
தூய்மைப்படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான் (துஹ்ரத்தன் லில் அம்வால்)
என்பதை இறைத் தூதர் கூறியதாக நிரூபித்து விட்டால் இரண்டு லட்சம் பரிசு என்று சவடால்
விட்டுள்ளார்.
இப்படி
சவால் விட்டவர் அதே இதழில் பக்கம் 15ல் பின்வருமாறு எழுதுகின்றார்.
இச்செய்தி
இப்னுமாஜாவிலும் 7021வது நபிமொழியாக பைஹகீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்று
எழுதியுள்ளார். அதாவது துஹ்ரத்தன் லில் அம்வால் என்ற சொல் அடங்கிய செய்தியைப் பற்றி
அவரே நபிமொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.
ஆனால்
நபித்தோழரின் கூற்றாகத் தான் அந்த நூலிலும் உள்ளது. ஆனாலும் நபிமொழி என்பது இவரது அறியாமையால்
தவறாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது என்று நாம் எடுத்துக் கொள்வோமே தவிர இப்னுமாஜாவில்
எடுத்துக் காட்ட முடியுமா?
என்று கேட்க மாட்டோம்.
"பொருளைத் தூய்மைப்படுத்தவே
ஜகாத்' என்ற கருத்தில் நபிமொழி உள்ளதை ஏகத்துவம் செப்டம்பர் இதழில் வெளியிட்டிருந்தோம்.
அதற்கு கிறுக்குத்தனமான அர்த்தம் செய்து உளறியுள்ளனர். அதைத் தனியாக அலசியுள்ளோம்.
"துஹ்ரத்தன் லில் அம்வால்' என்ற
சொல் அடங்கிய ஹதீஸ் தான் இப்னு உமரின் கூற்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர அதே
கருத்தைத் தரும் வேறு சொற்களில் நபிகள் நாயகம் கூறிய ஹதீஸ் உள்ளது.
பி.ஜே.
அவர்கள் சொற்பொழிவின் போது "துஹ்ரத்தன் லில்அம்வால்' என்ற
வார்த்தையை நபிமொழி என்று கூறிவிட்டார். பேசும் போது சொற்கள் மாறி வருவது இயற்கை. ஆனால்
இவர்களோ பல மாதங்கள் யோசித்து எழுதும் போது இப்னு உமரின் கூற்றை நபிமொழி என்று எழுதுகின்றனர்.
"துஹ்ரத்தன் லில் அம்வால்' என்ற
வாசகம் இப்னு உமரின் கூற்று தான் என்பதை "மர்மம் என்ன?' என்ற தலைப்பில் ஏகத்துவம் செப்டம்பர் இதழிலேயே விளக்கியுள்ளோம்.
அதே
சமயத்தில் "பொருளைச் சுத்தப்படுத்தவே ஜகாத்' என்ற கருத்து நபிகள்
நாயகம் கூறியது தான் என்பதை செப்டம்பர் ஏகத்துவம் இதழிலேயே தெளிவாக நிரூபித்து விட்டோம்.
அபூதாவூதில்
இடம் பெறும் அந்த ஹதீஸுக்கு விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டி விட்டு, இருக்கின்ற
ஹதீஸை இல்லை என்று சொல்லும் அளவுக்கு மனோ இச்சை அவர்களை மயக்கி விட்டது.
மறு
ஆய்வு - இரண்டாவது வகை
பொருளைத்
தூய்மைப்படுத்தும் ஜகாத்
ஒரு
பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையவர்களிடம் இருந்த ஒரே
ஆதாரமும் மிகவும் பலவீனமானது என்பதைச் சந்தேகமற நிரூபித்து விட்டோம். எனவே அல்ஜன்னத்
தனது மறு ஆய்வில் எடுத்து வைத்த மூன்று வகையான வாதங்களில் முதல் வகை வாதம் அடிபட்டு
விட்டது. இதையும் அவர்கள் மறுப்பார்களானால் இன்னும் வலுவாக தக்க விளக்கம் தருவோம், இன்ஷா
அல்லாஹ்!
இனி
அல்ஜன்னத் மறு ஆய்வின் இரண்டாவது வகை வாதத்தைப் பார்ப்போம்.
ஒரு
பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்பதை நாம் தக்க சான்றுடன் நிரூபித்து விட்டு, துணைச்
சான்றாக ஒரு நபிமொழியை வெளியிட்டோம்.
தங்கத்தையும்
வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக்
கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன்
அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், "உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்'' என்று கூறி விட்டு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப்
பெரிய பாரமாகத் தெரிகின்றது'' என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்,
"உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர
வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை'' என்று
விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்:இப்னு
அப்பாஸ் (ரலி)
நூல்:
அபூதாவூத் 1417
பொருள்களைத்
தூய்மைப் படுத்துவது தான் ஜகாத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் இது நமது வாதத்தை வலுப்படுத்துகிறது
என்று குறிப்பிட்டிருந்தோம்.
இது
துணைச் சான்று என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டோம்.
இதற்கும்
அல்ஜன்னத் மறுப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட
ஹதீஸில் "யுதய்யிப'
என்ற சொல் இடம் பெற்றுள்ளது. "தூய்மைப்படுத்துவதற்காக' என்பது
இதன் பொருள். "எஞ்சிய பொருளாதாரத்தைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ்
ஜகாத்தைக் கடமையாக்கவில்லை'
என்று இதன் பொருளை நாம் வெளியிட்டோம்.
பொருளைத்
தூய்மைப்படுத்துவதற் காகவே ஜகாத் என்று நபிமொழி கிடையாது; நிரூபித்தால்
இரண்டு லட்சம் பரிசு என்று அவசரமாகக் கூறி விட்டதால் "யுதய்யிப' என்பதற்கு
அர்த்தமே வேறு என்று கூறியுள்ளனர்.
பொருளைத்
தூய்மைப்படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான் (துஹ்ரத்தன் லில் அம்வால்)
என்பதை இறைத் தூதர் கூறியதாக நிரூபித்தால் ரூ. 2 இலட்சம் பரிசளிக்கப்
படும் என்று அவர்களது பாணியில் (அவர்கள் புரிந்து வைத்துள்ள பாணியில்) அறிவிப்பு வெளியிட்டேன்.
அல்ஜன்னத்
- பக்கம் 6
நூர்
முஹம்மது என்பவர் அறியாமையினால் இவ்வாறு சவால் விட்ட பிறகு அங்குள்ள பல நண்பர்கள் பி.ஜே.யிடம்
தொலை பேசியில் தெரிவித்தனர். "அவர் வெளிநாட்டில் இருப்பதால் நேருக்கு நேர் பேச
இயலாது; எனவே மக்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவரும் சபையில் இருக்கட்டும். நான் தொலைபேசி
மூலம் இது பற்றிக் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லத் தயாரா? என்பதைக்
கேளுங்கள். இது பலவீனம் அல்ல என்பதையும், நான் செய்த பொருள் தான் சரியானது
என்பதையும் நிரூபிக்கிறேன்''
என்று பி.ஜே. கூறினார்.
"அவர் தாயகம் வந்தால்
அவரை இது குறித்து விவாதத்துக்குக் கட்டாயப்படுத்துவேன்'' என்று பி.ஜே. அப்போது அறிவித்தார். அவர் அறிவித்த இரண்டு லட்சம் பரிசு சவாலை எதிர்
கொள்ளாமல் அவரை விடப் போவதில்லை என்பதில் பி.ஜே. உறுதியாக இருக்கிறார்.
இனி
அல்ஜன்னத்தின் மறு ஆய்வுக்குள் வருவோம்.
ஜகாத்
செல்வத்தைத் தூய்மைப் படுத்துகிறது என்ற தங்களின் கருத்துக்கு அபூதாவூதில் இடம் பெற்றுள்ள
ஹதீஸை கூடுதல் சான்றாக முன் வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் சான்றாகக் காட்டிய இந்த நபிமொழியில்
"துஹ்ரத்தன் லில் அம்வால்'' (செல்வத்தைத் தூய்மைப் படுத்துகிறது)
என்ற (அர்த்தங் கொண்ட) வார்த்தை அறவே இடம் பெறவில்லை. அதற்கு நிகரான தஹ்ஹாரத்தன், முதஹ்ஹிரத்தன், யுதஹ்ஹிர, தஹ்ஹர, துஹுரன்
போன்ற வார்த்தைகளும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
அல்ஜன்னத்
- பக்கம் 15
மேற்கண்ட
ஹதீஸைப் பற்றி 29.07.2005 அன்று ஜித்தாவில் நடந்த கருத்தரங்கில் முஜிபுர்ரஹ்மான் உமரி என்பவர் பேசிய போது, "லியுதய்யிப'
என்பதற்கு "தூய்மைப்படுத்தவே' என்ற
பி.ஜே.யின் மொழி பெயர்ப்பை அவர் தவறு காணவில்லை. அந்த ஹதீஸ் பலவீனமானது என்று தான்
அவர் வாதம் செய்தார். முஜிபுர்ரஹ்மான் "இரண்டு லட்சம்' சவால்
விடாததால் அவருக்கு அர்த்தத்தை அனர்த்த மாக்கும் நிர்ப்பந்தம் இல்லை.
நூர்
முஹம்மது அவசரப்பட்டு கூறிவிட்டதால் அப்படி ஒரு அர்த்தமே இதற்கு இல்லை என்று தனது குருநாதர்
முஜிபுர்ரஹ்மானுக்கு எதிராகக் கூறியுள்ளார்.
"யுதய்யிப' என்பதன்
பொருள் "தூய்மை'
தான். தூய்மையானவை மட்டுமே இறைவனால் அனுமதிக்கப் பட்டுள்ளதால்
மிகச் சில நேரங்களில் அனுமதிக்கப்பட்டவை என்று பொருள் கூறப்படுவதுண்டு.
ஒரு
சொல்லுக்கு நேரடி அர்த்தம் கொள்ளத் தடை ஏதும் இருந்தால் மட்டுமே மாற்று அர்த்தத்துக்குச்
செல்ல வேண்டும்.
சிங்கம்
என்ற சொல் குறிப்பிட்ட வன விலங்கைக் குறிக்கும். இது தான் அதன் நேரடிப் பொருள்.
சில
நேரங்களில் வீரமான மனிதனையும் இந்த வார்த்தையில் குறிப்பிடலாம். அரபி அகராதியில் இதற்குப்
பொருள் கூறும் போது வனவிலங்கு எனவும், வீரமான மனிதன் எனவும் இரண்டையுமே
குறிப்பிடுவார்கள். அதற்காக எல்லா இடங்களிலும் மனிதர்கள் என்று பொருள் கொள்ள முடியாது.
குறிப்பிட்ட
வனவிலங்கு என்று தான் பொருள் செய்ய முயல வேண்டும். அது பொருந்தாத நேரத்தில் மட்டும்
தான் வீரமான மனிதன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அனுமதிக்கப்படுகிறது
என்ற அர்த்தத்தில் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் பல இடங்களில் கையாளப்படுகிறது என்பதும்
இங்கே குறிப்பிடத் தக்கதாகும். (பார்க்க 5:87)
அல்ஜன்னத்
பக்கம் 28
தய்யிப்
என்ற வார்த்தை "அனுமதிக்கப்படுகிறது' என்ற பொருளில் குர்ஆனிலும் ஹதீஸிலும்
பல இடங்களில் கையாளப்படுகிறது என்று அவர்கள் எடுத்துக் காட்டும் ஒரே ஒரு வசனத்தில்
கூட, தூய்மை என்ற பொருளில் தான் பயன்படுத்தப் பட்டுள்ளது.
"தய்யிப்' என்பதன்
நேரடிப் பொருள் "தூய்மை' என்பது தான் என்பதை ஏராளமான வசனங்கள் மூலம்
அறிந்து கொள்ளலாம்.
ஹலாலாகவும், தய்யிபாகவும்
உள்ளதை நீங்கள் உண்ணுங்கள் (அல்குர்ஆன் 2:168) என்று குர்ஆன் கூறுகின்றது.
(மேலும் பார்க்க 5:88,
8:69, 16:14)
நூர்
முஹம்மது மற்றும் கமாலுத்தீன் மதனி அர்த்தப்படி அனுமதிக்கப் பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட
தாகவும் உள்ளதை உண்ணுங்கள் என்று அர்த்தம் செய்ய வேண்டும். ஏனெனில் இவர்கள் வாதப்படி
ஹலால் என்றாலும் அனுமதிக்கப்பட்டது என்று பொருள். தய்யிப் என்றாலும் அனுமதிக்கப்பட்டது
என்று பொருள்.
நமது
வாதப்படி தூய்மையான தாகவும், அனுமதிக்கப்பட்டதாகவும் உள்ளதை உண்ணுங்கள்
என்று பொருள் வரும். இவர்கள் அங்கீகரிக்கும் குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் நாம் கூறியவாறே
பொருள் செய்யப்பட்டிருக்கும்.
தாங்கள்
கூறியதை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக எவ்வளவு தில்லுமுல்லுகளில்
இறங்கி வந்து விட்டனர் என்பதைக் கவனியுங்கள்.
"இறைவா! எனக்கு தய்யிபான
சந்ததியைத் தா!''
என்று ஜக்கரியா நபி துஆச் செய்தார்கள். (3:38)
இவர்களின்
வரட்டு வாதப்படி அனுமதிக்கப்பட்ட சந்ததி என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு நபி தனது
மனைவியின் மூலம் பெற்றெடுக்க விரும்பும் சந்ததியில் அனுமதிக்கப்பட்ட சந்ததி, அனுமதிக்கப்படாத
சந்ததி என்று இரண்டு வகை உள்ளதா? அவ்வாறு இல்லை எனும் போது "அனுமதிக்கப்
பட்ட சந்ததியைத் தா'
என்று எப்படிக் கேட்க முடியும்? இவர்கள்
ஏற்றுக் கொண்ட மொழி பெயர்ப்புகளில் அனுமதிக்கப்பட்ட சந்ததி என்று தான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா?
தூய்மையான
சந்ததி என்று நாம் கூறுவது போல் மொழி பெயர்ப்பது தான் சரியானது.
தயம்மும்
செய்யும் போது தய்யிபான மண்ணைக் கொண்டு தயம்மும் செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
(4:43,
5:87)
அனுமதிக்கப்பட்ட
மண் என்று தான் இதற்கு இவர்கள் பொருள் செய்வார்களா? தூய்மையான மண் என்று
பொருள் செய்வார்களா?
அவர்களுக்கு
ஹலாலாக்கப்பட்ட தய்யிபுகளை நாம் தடை செய்தோம் என்று 4:160ல் அல்லாஹ் கூறுகின்றான்.
அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்
பட்டவைகளை என்று தான் இவர்கள் இதற்குப் பொருள் கொள்வார்களா?
தய்யிபாத்கள்
உங்களுக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளது என்று 5:4, 5:5 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்பட்டுள்ளது
என்று பொருள் செய்வார்களா?
தூய்மை யானவை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவார்களா?
தய்யிபான
ஊரில் புற்பூண்டுகள் முளைக்கின்றன (7:58) என்றால் அனுமதிக்கப்பட்ட
ஊரில் முளைக்கின்றன என்று தான் பொருள் கொள்வார்களா?
முஹம்மது
நபியவர்கள் இவர்களுக்கு தய்யிபாத்களை ஹலாலாக்குவார் என்று 7:157 வசனம் கூறுகின்றது.
அனுமதிக்கப்பட்டதை
அனுமதிப்பார் என்று தான் இவர்கள் பொருள் செய்வார்களா?
சொர்க்கத்தில்
தய்யிபான வீடுகள் உள்ளன என்று கூறப்படுகின்றது. (9:72, 61:12)
சொர்க்கத்தில்
அனுமதிக்கப்பட்ட வீடுகள் உள்ளன என்பது தான் இதன் பொருளா?
தய்யிபான
காற்று கப்பலைச் செலுத்துகிறது (10:22) என்ற வசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட
காற்று என்பது தான் பொருளா?
தய்யிப்
என்பதன் நேரடிப் பொருள் தூய்மை என்பது தான் என்பதற்கு இவை மறுக்க முடியாத சான்றுகளாக
உள்ளன.
எனவே
எஞ்சிய பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்தை அல்லாஹ் கடமையாக்கினான் என்பது தான் மேற்கண்ட
ஹதீஸின் ஒரே பொருள். "பொருளைத் தூய்மைப் படுத்தவே ஜகாத்' என்று
நபிகள் நாயகம் கூறியதை நிரூபித்து விட்டோம்.
பொருளைத்
தூய்மையாக்கும் என்ற ஹதீஸ் பலவீனமானதா?
அடுத்ததாக
மேற்கண்ட ஹதீஸை பலவீனமானது என்று நிலை நாட்ட பல அபத்தமான வாதங்களை அல்ஜன்னத் வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட
ஹதீஸ் பலவீனமானது என்பதற்குப் பின்வரும் வாதத்தை முன் வைக்கின்றனர்.
"முஜாஹித் என்பவரிடமிருந்து
ஜாபர் பின் இயாஸ் அறிவிப்பதாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜஃபர் நம்பகமானவர்; புகாரி, முஸ்லிம்
ஆகிய நூற்களில் இடம் பெற்றவர் தான் என்றாலும் முஜாஹிதின் மூலம் அவர் அறிவிக்கும் ஹதீஸ்
பலவீனமானதாகும் என்று அவரது மாணவரும் அறிவிப்பாளர் ஆய்வில் சிறந்து விளங்குபவருமான
ஷுஃபா அவர்கள் கூறியதை யஹ்யா பின் முயீன், யஹ்யா பின் ஸயீத், அஹ்மத்
பின் ஹம்பல்,
இப்னு ஹஜர் ஆகியோர் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துகின்றனர்.
என்று
அல்ஜன்னத் எழுதியுள்ளது.
இவர்கள்
அறியாமை காரணமாக இவ்வாறு எழுதியுள்ளார்களா? அல்லது உண்மையை அறிந்து கொண்டே
இருட்டடிப்பு செய்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்களா? மேற்கண்ட இவர்களின் வாதத்திலிருந்து
இரண்டில் ஒன்று தான் காரணமாக இருக்க முடியும்.
ஜஃபர்
பின் இயாஸ் நம்பகமானவர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டதாகும்.
இவர்
முஜாஹித் வழியாக சில ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இதைப் பற்றி சில அறிஞர்கள் கூறும் போது, "இவர் முஜாஹிதிடமிருந்து அறிவிப்பதாக வருவது பலவீனமானது'' என்று கூறுகின்றனர். இவர்களில் ஷுஃபா குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
முஜாஹித்
வழியாக அறிவிப்பதாகக் கூறப்படுவது பலவீனமானது என்று ஷுஃபா ஏன் கூறுகின்றார்? முஜாஹிதிடம்
இவர் எதையும் செவியுற்றதில்லை என்பது தான் ஷுஃபா கூறும் காரணம்.
ஷுஃபா
கூறும் இந்தக் காரணம் சரியானது என்றால் தான் ஷுஃபா கூறுவதை ஏற்க வேண்டும். அவர் கூறும்
காரணம் சரியில்லை என்றால் அவரது கூற்றை நாம் விட்டு விட வேண்டும்.
முஜாஹிதிடம்
ஜஃபர் பின் இயாஸ் செவியுற்றிருக்கின்றாரா? என்பதை எப்படி நாம் முடிவு செய்வது?
இதில்
முதல் தரத்தில் எடுத்துக் கொள்ளப்படுவது சம்பந்தப்பட்டவர் தரும் வாக்குமூலம் தான்.
ஒருவர் நம்பகமானவராக இருந்து அவர் இன்னாரிடம் கேட்டேன் எனவும் கூறினால் அது தான் அவர்
கேட்டதற்கு முதன்மையான ஆதாரம்.
சம்பந்தப்பட்டவரே
கேட்டேன் என்று கூறியிருக்கும் போது அதில் சம்பந்தப்படாத இன்னொருவர் கேட்டதில்லை என்று
கூறினால் அவரிடம் போதிய தகவல் இல்லை என்று ஆகுமே தவிர சம்பந்தப் பட்டவர் கேட்கவில்லை
என்று ஆகாது.
முஜாஹிதிடம்
நான் கேட்டேன் என்று ஜஃபர் பின் இயாஸ் கூறினால் அதற்கு மாற்றமாக எவர் கூறினாலும் அதை
ஏற்க இயலாது. அவ்வாறு ஏற்பதாக இருந்தால் "நான் கேட்டேன்' என்று
ஜஃபர் பொய் சொன்னார் என்று ஆகி விடும்.
ஜஃபர்
நம்பகமானவராக இருக்கும் போது, "நான் கேட்டேன்' என்று
அவர் கூறுவதைத் தான் ஏற்க வேண்டும் என்ற ஹதீஸ் கலையின் அரிச்சுவடி கூடத் தெரியாமல்
மறு ஆய்வு செய்யப் புகுந்து விட்டனர்.
புகாரி
இமாம் அவர்கள் பதிவு செய்யும் ஹதீஸ்களில் முஜாஹிதிட மிருந்து ஜஃபர் வழியாக 4940வது ஹதீஸ் அறிவிக்கப் பட்டுள்ளது. புகாரி இமாமின் விதிப்படி முஜாஹிதிட மிருந்து
ஜஃபர் கேட்டிருக்காவிட்டால் அதைப் பதிவு செய்யவே மாட்டார்கள்.
மேலும்
புகாரி 4310வது ஹதீஸில்,
"நான் முஜாஹிதிடம் கேட்டேன்' என்று ஜஃபர் பின் இயாஸ்
கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ஜஃபர் பின் இயாஸ் அவர்களின் பெயர் அபூபிஷ்ர்
என்ற புனைப் பெயரால் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
நான்
முஜாஹிதிடம் கேட்டேன் என்று ஜஃபர் கூறி விட்ட பிறகு அவர் முஜாஹிதிடம் செவியேற்கவில்லை
என்று எவர் கூறினாலும் அவருக்கு இத்தகவல் கிடைக்கவில்லை என்பதே பொருள்.
எனவே
இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்காக வலிந்து கற்பித்த, தவறான காரணம் அடியோடு
வீழ்ந்து விடுகின்றது.
தொடர்பு
அறுந்த ஹதீஸா?
அடுத்ததாக
இதைப் பலவீனமானது என்று சாதிக்க மற்றொரு காரணத்தையும் கூறுகின்றனர்.
அரபியில்
இரண்டு பக்கங்களுக்கு எழுதி "கைலான் என்பவருக்கும் ஜஃபர் பின் இயாஸ் என்பவருக்கும்
இடையில் உஸ்மான் என்பவர் விடுபட்டுள்ளார்' என்று எழுதியுள்ளனர்.
இதிலும்
ஹதீஸ் கலை பற்றிய இவர்களின் அரை வேக்காட்டுத் தனம் தான் தெரிகின்றது.
மேற்கண்ட
ஹதீஸ் இரண்டு வகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜஃபர்
- உஸ்மான் - கைலான் என்ற வரிசையில் அறிவிக்கப்படுவது
ஒரு வகை. இப்படி அறிவிக்கப்படும் ஹதீஸ் பலவீனமானது என்பதை ஏகத்துவம் செப்டம்பர் இதழில்
விளக்கியுள்ளோம். ஏனெனில் நடுவில் இருக்கும் உஸ்மான் என்பவர் பலவீனமானவர்.
இதே
ஹதீஸ் ஜஃபர் - கைலான் என்ற வகையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நடுவில்
உஸ்மான் இல்லை.
எனவே
வேறொரு அறிவிப்பில் உஸ்மான் விடுபட்டுள்ளதால் இங்கேயும் அவர் விடுபட்டிருக்க வேண்டும்
என்று வாதிக்கின்றனர்.
இது
எப்போது சாத்தியமாகும்?
ஜஃபர், கைலான் ஆகிய இருவரும் சந்தித்துக் கொள்ள
வாய்ப்பில்லை எனும் போது,
அறிவிப்பாளர் தனக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அதற்கு மேல்
உள்ளவரைக் குறிப்பிடும் வழக்கமுடையவராக இருக்கும் போது இப்படி முடிவெடுக்கலாம்.
ஆனால்
கைலான் தனக்கு நேரடியாக அறிவித்தவரைத் தான் கூறுவாரே தவிர இடையில் யாரையும் விட்டு
விட்டு அறிவிப்பவர் அல்ல. மேலும் ஜஃபரின் காலத்தில் அவர் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்திருக்கின்றார்.
எனவே இருவருக்கும் இடையே யாரும் விடுபடவில்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் செப்டம்பர்
இதழில் எழுதியிருந்தோம்.
முஸ்லிம்
இமாம் அவர்கள்,
"இருவரும் சந்தித்துக் கொள்ளும் காலத்திலும் இடத்திலும் வாழ்ந்துள்ளார்களா? அறிவிப்பாளர்
தனக்கு அறிவித்தவரை மறைத்து விடாமல் இருப்பாரா?' என்பதை மட்டும் கருத்தில் கொண்டு
ஆதாரப்பூர்வமான ஹதீஸை முடிவு செய்துள்ளனர் என்பதையும் விளக்கினோம்.
இதை
இவர்கள் ஏற்க மறுப்பது உண்மையானால் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்கள் ஒவ்வொன்றுக்கும்
அறிவிப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர் என்று உறுதி செய்து காட்ட வேண்டும்.
அவ்வாறு இல்லாதவை பலவீனமானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு
அறிவிப்பார்களானால் இனிமேல் முஸ்லிமுடைய ஹதீஸ்களில் 75 சதவிகிதத்தை
இவர்கள் ஒருக்காலும் ஆதாரமாகக் காட்டவே முடியாது. ஏனெனில் இவர்கள் எந்த விமர்சனத்தின்
மூலம் அபூதாவூதின் ஹதீஸைப் பலவீனப்படுத்துகின் றார்களோ அது அப்படியே முஸ்லிமில் உள்ள
75 சதவிகித ஹதீஸ்களுக்கும் பொருந்தும்.
சம
காலத்தில் வாழ்ந்த இருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் சாத்தியம் இருப்பதால்
தான் இமாம் புஹாரி அவர்கள் இந்த நிபந்தனையை ஏற்கவில்லை. மாறாக இருவரும் ஒரு முறையாவது
சந்தித்துள்ளார் கள் என்பது நிரூபணமாகி இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
அல்ஜன்னத்
பக்கம் 21
இருவரும்
சந்தித்துக் கொண்டது நிரூபிக்கப்பட வேண்டும் என்று புகாரி இமாம் ஏற்படுத்திய விதியை
ஆதாரமாகக் காட்டுவதும் இவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும். இவர்கள் இந்த விதி தான்
சரியானது என்று நம்பினால் அந்த விதியின் படி அமையாத, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்
போன்ற நூற்களில் உள்ள ஹதீஸ்களைப் பலவீனம் என்று
அறிவிப்பார்களா?
புகாரியின்
இந்த விதி,
மற்றவர்களின் விதியை விடச் சிறந்தது என்று வேண்டுமானால் கூறலாமே
தவிர அதே விதியின் அடிப்படையில் தான் எல்லா ஹதீஸ்களையும் முடிவு செய்ய வேண்டும் என்று
கூற முடியாது.
இந்த
உண்மை அவர்களுக்கே நன்றாகத் தெரிந்திருந்தும் தங்கள் வாதத்தை எப்படியாவது நிலை நாட்ட
வேண்டும் என்பதற்காக உண்மையை மறைத்து எழுதியுள்ளனர்.
முஜாஹிதிடம்
தப்ஸீர் குறித்து எந்தச் செய்தியையும் ஜஃபர் கேட்டதில்லை எனவும் அல்ஜன்னத் கூறுகின்றது.
ஆனால்
புகாரி 4940வது அறிவிப்பில் தப்ஸீர் பற்றிய ஹதீஸைத் தான் முஜாஹிதிடமிருந்து ஜஃபர் அறிவித்துள்ளார்
என்று கூறப் பட்டுள்ளது.
அடுத்ததாக
இந்த ஹதீஸ் தொடர்பாக அல்ஜன்னத் எடுத்து வைக்கும் வாதம்:
ஜஃபர்
- உஸ்மான் - கைலான் என்ற தொடரில் நான்கு அறிவிப் பாளர்கள் அறிவிக்கின்றார்களாம்.
ஆனால்
ஜஃபர் - கைலான் என்று மூன்று அறிவிப்பாளர்கள் தான் அறிவிக்கிறார்களாம்.
இதனால்
அதிக எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இடையில் ஒருவர் விடுபட்டிருப்பார்கள் என்று முடிவு
செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இந்த
விதியையும் அரை குறையாக விளங்கிக் கொண்டதன் விளைவாக இவ்வாறு கூறுகின்றனர்.
நம்பகமான, அதிகமான
பேர் அறிவிப்பதற்கு முரணாக - மாற்றமாக - எதிராக நம்பகமான, குறைவான
பேர் அறிவித்தால் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்க வேண்டும். ஏனெனில் அதிகமானவர்களிடம்
தவறு ஏற்படுவதை விட,
குறைவான வர்களிடம் தவறு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.
இரண்டு
அறிவிப்புகளும் முரணாக இல்லாமல் வெவ்வேறு செய்தியைக் கூறினால் அல்லது ஒன்றுக்கு விளக்கமாக
மற்றது இருந்தால் அப்போது இரண்டையும் சேர்ந்தாற்போல் ஏற்கலாம்.
"அப்துல் கபூர் பிரியாணி
சாப்பிட்டதைப் பார்த்தேன்'
என்று இப்ராஹீம் கூறியதாக எட்டு பேர் கூறுகின்றனர்.
"அப்துல் கபூர் பிரியாணி
சாப்பிட்டதை நான் பார்த்ததே இல்லை' என்று இப்ராஹீம் கூறியதாக மூவர்
கூறுகின்றனர்.
இது
இரண்டும் முரண்படுவதால் - இரண்டில் ஒன்றைத் தான் ஏற்க முடியும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக
- எட்டுப் பேர் கூறுவதைத் தான் ஏற்க வேண்டும்.
"அப்துல் கபூர் பிரியாணி
சாப்பிட்டார்'
என்று இப்ராஹீம் கூறிய தாக எட்டு பேர் அறிவிக்கின்றார்கள்.
"அப்துல் கபூர் வெள்ளிக்கிழமை
பிரியாணி சாப்பிட்டார்'
என்று இப்ராஹீம் கூறியதாக இருவர் கூறுகின்றனர்.
இப்போது
இரண்டில் ஒன்றைத் தான் நம்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதும் இல்லை. இரண்டும் ஒன்றுக்கொன்று
முரண் இல்லை. எட்டுப் பேர் சொன்னதை விட கூடுதல் தகவலைத் தான் இருவர் கூறியுள்ளனர்.
"வெள்ளிக்கிழமை பிரியாணி சாப்பிட்டார்' என்று நம்பினால் இரண்டு அறிவிப்பையும்
நம்பி விட முடியும்.
இந்த
நுட்பமான வேறுபாட்டை அறியாமல் ஹதீஸ் கலையில் டாக்டர் பட்டம் பெற்றதாகக் கூறிக் கொள்பவர்
நூர் முஹம்மதுக்குத் தவறான வழி காட்டி விட்டார்.
மேற்கண்ட
அறிவிப்பைப் பொறுத்த வரை...
கைலான்
என்பவர் நேரடியாக ஜஃபரிடம் கேட்டிருக்கின்றார்.
உஸ்மான்
என்பவர் வழியாகக் கேட்டிருக்கின்றார்.
இரண்டு
வகையாகக் கேட்டுள்ளார் என்று நம்புவதற்கு எந்த முட்டுக்கட்டையும் தடையும் இல்லை. எனவே
நால்வரை ஏற்று மூவரை விடும் அவசியம் ஏதும் இல்லை.
மேலும்
ஹதீஸ் கலை நூற்களில் ஜஃபரின் மாணவர்கள் பட்டியலில் கைலான் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதுபோல்
கைலானின் ஆசிரியர் பட்டியலில் ஜஃபர் சேர்க்கப்
பட்டுள்ளார்.
எனவே
அபூதாவூதின் அறிவிப்பில் எந்த அறிவிப்பாளரும் விடுபடவில்லை. ஹதீஸ் கலை பற்றி அரை குறை
ஞானத்தால் இவ்வாறு விளங்கிக் கொண்டு தவறான வாதத்தை எடுத்து வைத்து விட்டனர்.
எனவே, "பொருட்களைத் தூய்மைப்படுத்தவே அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கினான்' என்று
அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் மிக மிக ஆதாரப்பூர்வமானது.
இதன்
மூலம் இரண்டு லட்சம் சவால் என்பது சவடால் ஆகி விட்டது.
ஆக, அல்ஜன்னத்தின்
மறு ஆய்வில் இரண்டாவது வகையான வாதங்களும் தவறு என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டோம்.
கண்மூடிப்
பின்பற்றுவோர் யார்?
இந்த
ஆய்வுரையின் மூலம் ஜகாத் பற்றி அதிகமான மக்களுக்குத் தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
அதே நேரத்தில் கண்மூடிப் பின்பற்றுகிறவர் களுக்கும் தனி நபர் வழிபாட்டில் மூழ்கிக்
கிடப்பவர்களுக்கும் எவ்வளவு தான் ஆதாரங்களை எடுத்து வைத்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்
போவதில்லை.
எனவும்
அல்ஜன்னத் எழுதுகின்றது.
தனி
நபர் வழிபாட்டையும்,
கண்மூடிப் பின்பற்றுவதையும் உண்மையாகவே எதிர்ப்பவர்கள் அப்படி
எழுதினால் அதைச் சகித்துக் கொள்ள முடியும்.
அல்ஜன்னத்
இதை எழுதுவதைத் தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
ஜாக்
என்ற இயக்கத்தை அறிமுகம் செய்யும் வகையில் வெளியிடப்பட்ட பிரசுரத்தில், "மார்க்க விஷயமானாலும் நிர்வாக விஷயமானாலும் அமீரின் (கமாலுத்தீன் மதனியின்) கட்டளையை
மீறக் கூடாது,
எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது'' என்ற கருத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.
அதாவது
கமாலுத்தீன் மதனி மார்க்கம் என்று எதைக் கூறுகின்றாரோ அதற்கு மறு பேச்சு பேசாமல் செவி
சாய்க்க வேண்டும் என்று எழுத்து வடிவில் பிரகடனம் செய்தவர்கள் இப்படி எழுதுவது தான்
கேலிக் கூத்தானது.
ஜாக்கின்
கூட்டங்களில் அதன் தலைவர்கள் பேசிய பின்னர் அவர்களின் பேச்சு தொடர்பான எந்த எதிர்க்
கேள்விக்கும் அனுமதிக்கப் படுவதில்லை என்ற நடைமுறையும் இதற்குச் சான்றாகவுள்ளது.
எனவே
கண்மூடிப் பின்பற்றி,
தனி நபர் வழிபாட்டில் மூழ்கி, ஐந்தாவது மத்ஹபை உருவாக்கிக்
கொண்டவர்கள் இப்படி எழுதுவதற்குக் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா?
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்ற நிலைபாட்டை
பி.ஜே. உள்பட ஓரிரு அறிஞர்கள் தான் கூறினார்கள். மற்ற அறிஞர்கள் அனைவரும் அதை ஏற்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க் கருத்தில் இருந்து கொண்டே தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்களாகவும், நிர்வாகிகளாகவும்
அவர்கள் இருந்தனர்.
தனி
நபர் வழிபாட்டுக்கும்,
கண்மூடிப் பின்பற்றுதலுக்கும் இந்த ஜமாஅத்தில் அறவே இடம் இல்லை
என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
மேலும்
ஜகாத் பற்றி நடத்தப்பட்ட பல்வேறு அமர்வுகளில் பி.ஜே. காட்டிய சில ஆதாரங்களும் காரணங்களும்
ஏற்புடையவை அல்ல என்று மற்ற அறிஞர்கள் சுட்டிக் காட்டிய போது அதை ஏற்று, ஏற்புடைய
சான்றுகளை மட்டும் முன் வைத்ததும் இதற்குப் போதிய சான்றாகவுள்ளது.
"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம்
பித்தளை' என்பது போல அல்ஜன்னத்தின் மேற்கண்ட வாதம் அமைந்துள்ளது.
மறு
ஆய்வு - மூன்றாவது வகை
அல்ஜன்னத்தின்
மறு ஆய்வில் இவ்விரண்டைத் தவிர வேறு உருப்படியான வாதம் எதுவும் இல்லை.
அதிகமான
பக்கங்களில் எழுத வேண்டும் என்பதற்காகத் தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் எழுதியுள்ளனர்.
கஞ்சத்தனம்
கூடாது என்று பயான்,
சோம்பேறிகளாக இருக்கக் கூடாது என்று பயான், ஜகாத்
கொடுப்பதன் சிறப்பு பற்றிய பயான் என மறு ஆய்வுடன் தொடர்பில்லாத விஷயங்களை எழுதி, பக்கத்தை
நிரப்பியுள்ளனர்.
கடந்த
காலங்களில் ஜகாத் பற்றி தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் சிலர் உரை நிகழ்த்தும் போது சில உதாரணங்கள், மேலதிகமான
காரணங்களைக் கூறியிருந்தனர்.
அந்த
உதாரணங்களுக்கும்,
காரணங்களுக்கும் பதில் சொல்வதற்காக பக்கங்களை வீணடித்துள்ளனர்.
ஏகத்துவம் இதழில் நாம் கூறாத அந்தக் காரணங்களுக்கு மறுப்பு என்ற பெயரில் எழுதி பக்கங்களை
வீணடித்துள்ளனர்.
அந்தக்
காரணங்கள் அனைத்துமே தவறு என்றால் கூட நாம் எடுத்து வைத்த வாதத்துக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.
எனவே
அவை அலட்சியப்படுத்தப் படவேண்டியவை ஆகும். ஆயினும் பெட்டிச் செய்திகளாக அவற்றுக்கும்
விளக்கம் அளித்துள்ளோம்.
அனைவருக்கும்
அன்பான அழைப்பு
ஜகாத்
என்ற முக்கியமான கடமையை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பதில் ஏற்பட்டுள்ள கருத்து
வேறுபாடுகளைக் களைய திறந்த மனதுடன் நாம் தயாராக இருக்கிறோம்.
அல்ஜன்னத்
மறு ஆய்வில் பங்கு வகித்த முஹம்மது யூசுப் மிஸ்பாஹி, முஹம்மது கான் பாகவி, அஹ்மது
அஷ்ரப் (இலங்கை),
சயீத், ஷேக் சையது அலீ, ரபீக்
அன்வர், ஹாஜா முகைதீன்,
நிஜாமுத்தீன் பாகவி, முஜிபுர்ரஹ்மான் உமரி, கமாலுத்தீன்
மதனி, நூர் முஹம்மது உள்ளிட்ட அனைவருக்கும் இது பற்றித் திறந்த மனதுடன் கலந்துரையாடல்
நடத்த தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுக்கின்றது.
உங்களிடம்
நியாயம் இருந்தால் இதற்கு நீங்கள் அவசியம் முன் வர வேண்டும் என்று அழைக்கிறோம்.
தொடர்புக்கு...
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு
மண்ணடி, சென்னை
- 1.
EGATHUVAM JAN 2006