பாதுகாக்கப்
பட்ட கூரை
அவனே ஏழு
வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த
முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக்
காண்கிறீரா? இரு தடவை
பார்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.
(அல்குர்ஆன் 67:3,4)
இந்த
வசனங்களின் படி மனிதன் அறிவியல் உலகின் வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு நூற்றாண்டிலும்
புதுப்புது கருவிகளைக் கண்டுபிடித்து, ஆகாய அண்டப் பெருவெளியின் அதிசய ரகசியங்களைக்
கண்டுபிடித்து விட்டு வெற்றியுடன் தனது பார்வையைக் கீழே போட நினைக்கின்றான்.
ஆனால்
அவனது பார்வையோ படுதோல்வியைச் சந்தித்து, தரையை நோக்கித் திரும்புகின்றது. இன்னும் அவன்
கண்டுபிடிக்க வேண்டியவை ஏராளம்! ஏராளம்! ஏழு வானங்கள் என்று அல்லாஹ் கூறும்
உண்மையும் அவற்றில் அடக்கம்! மனிதன் எட்டிப் பிடிக்க வேண்டியவை இன்னும் எவ்வளவோ
உள்ளன. இப்போது அவன் எட்டிப் பிடித்தவற்றை மட்டும் சற்று நோக்குவோம். நமக்கு மேலே
வளி மண்டலத்தில் ஐந்து அடுக்குகள் உள்ளன என்று பார்த்தோமல்லவா? அந்த
அற்புதங்களுக்குள் - அந்த அடுக்குகளுக்குள் ஒவ்வொன்றாக இப்போது நுழைவோம்.
வளி
மண்டலத்திலுள்ள ஐந்து அடுக்குகளாவன:
1. கீழ் அடுக்கு - புவியின் மேற்பரப்பிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை
2. படுகை அடுக்கு - 16 கி.மீ. முதல் 50 கி.மீ. உயரம் வரை
3. நடு அடுக்கு - 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை
4. வெப்ப அடுக்கு - 80 கி.மீ. முதல் 1600 கி.மீ. வரை
5. வெளி அடுக்கு - 1600 கி.மீ. முதல் 10,000 கி.மீ. வரை
கீழ்
அடுக்கு
இந்த
அடுக்கு புவியை ஒட்டிய பகுதியாகும். இந்த அடுக்கில் மட்டும் தான் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை
ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் அதிகம் காணப்படுகின்றன. மேகம், இடி, மின்னல், புயல், மழை போன்ற
வானிலை நிகழ்வுகளுக்குக் காரணமான நீராவி காணப்படுகின்றது. இந்த அடுக்கில்
தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து கொண்டே செல்கின்றது. இது 165 மீ. உயரத்திற்கு 1ஞ ஈ வீதம் குறைகின்றது.
இதை
ஊட்டியின் வெப்பத்தையும் சென்னையின் வெப்பத்தையும் ஒப்பிடுவதன் மூலம் புரிந்து
கொள்ளலாம். ஊட்டியின் வெப்பம் சென்னையை விட 12ஞஈ குறைவாகக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம்
ஊட்டி சென்னையை விட கடல் மட்டத்திலிருந்து 2000 மீ. உயரத்தில் இருப்பது தான்! இதனால் புவியின்
மேல் நாம் செங்குத்தாகச் செல்லச் செல்ல வெப்பம் குறைவதை உணரலாம். எனவே தட்பவெப்ப
நிலைகளை நிர்ணயிக்கக் கூடியதாக அல்லாஹ் இந்த கீழ் அடுக்கை அமைத்திருக்கின்றான்.
இந்தக்
கவசத்தின் முக்கியமான இன்னொரு அம்சம், இது சூரியனின் மிக அதிகமான வெப்பத்திலிருந்து
பாதுகாக்கின்றது. சூரியனிடமிருந்து வரும் வெப்பம் முழுவதும் பூமியின் மேற்பரப்பை
அடைந்தால் பூமி கடும் வெப்பத்தை அடைந்து விடும். சூரியனிடமிருந்து வரும்
வெப்பத்தின் ஒரு பகுதியை வளி மண்டலத்திலுள்ள தூசி மற்றும் மேகம் திருப்பியனுப்பி
விடுகின்றது. இதனால் புவிக்கு அளவான வெப்பம் கிடைக்கின்றது.
புவியைச்
சுற்றி வளி மண்டலம் இல்லாவிட்டால் புவி பகல் நேரத்தில் தான் பெற்ற வெப்பத்தை விட
அதிகமான வெப்பத்தை இரவு நேரத்தில் இழந்து விடும். இதனால் பூமி மிகவும்
குளிர்ச்சியடைந்து விடும். இந்தக் கட்டத்தில் வளி மண்டலமானது ஒரு போர்வை போல்
செயல்படுகின்றது. குளிர்காலங்களில் நமது உடல் மீது போர்த்தப் பட்ட போர்வை, உடலிலிருந்து
வெப்பம் வெளியேறாமல் தடுக்கின்றது. இதுபோலத் தான் புவி மீது வளி மண்டலம் போர்வை
போல செயல்பட்டு பகலில் சூரிய வெப்பம் முழுவதும் புவியை வந்தடையாமலும் இரவில்
புவியிலிருந்து வெப்பம் விரைவாக வெளியேறாமலும் தடுக்கின்றது. இதை எவ்வளவு
பொருத்தமாக அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான் என்று பாருங்கள்!
அல்லாஹ்வே
இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். உங்களுக்கு
வடிவம் தந்தான். உங்கள் வடிவங்களை அழகுற அமைத்தான். தூய்மையானவற்றை உங்களுக்கு
வழங்கினான். அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்
பாக்கியம் பொருந்தியவன்.
(அல்குர்ஆன் 40:64)
(அல்குர்ஆன் 40:64)
படுகை
அடுக்கு
கீழ்
அடுக்கிற்கு மேலே 50 கி.மீ. வரை அமைந்துள்ள படுகை அடுக்கில்
காற்றின் அடர்த்தி மிகவும் குறைவு! இவ்வடுக்கு முழுவதும் உயரத்திற்கேற்ப வெப்பம்
மாறுபடுவதில்லை. இதன் எல்லாப் பகுதிகளிலும் சமமான வெப்பமே காணப்படுகின்றது. இந்தப்
படுகை அடுக்கில் நீராவி காணப்படுவதில்லை. எனவே மேகம், இடி, மின்னல், மழை
முதலியவை தோன்றுவதில்லை. அதனால் வானிலை மாற்றங்கள் நிகழ்வதில்லை. இங்கு தான்
விமானங்கள் மிகவும் வேகமாக நீண்ட தூரம் செல்வதற்குரிய பாதுகாப்பான சூழல்
நிலவுகின்றது.
ஓசோன்
படலம்
இந்தப்
படுகை அடுக்கின் மேற்பகுதியில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ. வரை ஓசோன் வாயு உள்ளது. ஓசோன் வாயு
சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை உட்கவர்ந்து புவிக்கு வர விடாமல்
தடுத்து விடுகின்றது. புற ஊதாக் கதிர்கள் புவியில் வாழும் உயிரினங்கள் மீது பட்டால்
அந்த உயிரினங்களின் உயிரணுக்கள் தாக்கப்பட்டு தோல் புற்று நோய் போன்ற நோய்கள்
ஏற்பட வாய்ப்புண்டு. இத்தகைய தீமையிலிருந்து இந்த ஓசோன் வாயுப் படலம் நம்மைப்
பாதுகாக்கின்றது. இது நாம் படுகை அடுக்கில் கண்ட அல்லாஹ்வின் அரிய
அற்புதங்களாகும்.
நடு
அடுக்கு
இந்த நடு
அடுக்கு, படுகை
அடுக்கின் மேல் 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை பரவியுள்ள காற்றடுக்காகும். இந்த
அடுக்கு தான் நம்மை நோக்கி வருகின்ற கல்மழையிலிருந்து காக்கும் கவசமாகும்.
நாட்டின் எல்லைப் புறத்தில் எதிரிகள் நுழைந்தால் இராணுவத்தினர் அவர்களை இரு
விதத்தில் தாக்குவர். எதிரிகளை உள்ளே வர விடாது அடித்துத் தாக்கி அவர்களை
எல்லைக்கப்பாலே துரத்தி அழிப்பது ஒரு விதம்! உள்ளே விட்டு ஒருவர் கூட தப்பி
விடாமல் உள்ளுக்குள் வைத்தே தாக்கி அழிப்பது இன்னொரு விதம்! இந்த இரண்டாவது
வகையைத் தான் இந்த அடுக்கைக் கையில் போட்டுக் கொண்டு புவி ஈர்ப்பு விசை
செய்கின்றது. புவியின் உயிரினங்கள் மீது எதிரிகள் அண்ட விடாது காத்துக்
கொண்டிருக்கின்றது.
பூமியில்
எதிரிகள் உள்ளார்கள்; அவர்களை நாம் பார்க்கிறோம் அதனால் ஒத்துக்
கொள்கிறோம்! ஆனால் ஆகாயத்தில் எதிரிகளா? யார் கண்டார்கள்? யார் சொன்னது?என்று
கேட்கலாம். இதற்கு அல்லாஹ்வே பதில் சொல்கின்றான்.
வானத்தைப்
பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப்
புறக்கணிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 21:32)
(அல்குர்ஆன் 21:32)
வானத்தை
"பாதுகாக்கப் பட்ட கூரை' என்று வல்ல ரஹ்மான் இந்த வசனத்தில்
கூறுகின்றான். அதாவது இந்தக் கூரைகளைப் பொத்துக் கொண்டு குதிக்கக் கூடிய எதிரிகள்
இருக்கின்றார்கள்! அவர்கள் பொத்துக் கொண்டு உள்ளே வந்து விடாத வண்ணம் வானத்தின்
மேற்கூரை அமைக்கப் பட்டிருக்கின்றது என்று கூறுகின்றான். இதன் மூலம் வானத்தில்
எதிரிகள் இருக்கின்றார்கள் என்று சொல்லிக் காட்டுகின்றான். அப்படியானால் அந்த
எதிரிகள் யார்? அதற்கும்
குர்ஆனிலிருந்தே பதிலைப் பார்ப்போம்.
வானத்தில்
உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது
எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள்.
(அல்குர்ஆன் 67:17)
ஆகாயத்தில்
மிதக்கும் மேகங்களிலிருந்து நீர் மழை பொழியக் கண்டிருக்கின்றோம். ஆனால் கல் மழை
பொழியட்டுமா? என்று
அல்லாஹ் கேட்கின்றான் என்றால் மழையாகப் பொழியும் அளவுக்கு ஆகாயத்தில் கற்கள்
இருக்கின்றன என்பது தான் அதன் பொருள்.
செவ்வாய்
கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஆயிரக்கணக்கான விண் கற்கள் சுழன்று
வருகின்றன. இவற்றில் சில பூமியின் ஈர்ப்பு சக்தியால் கவரப் பட்டு,மணிக்கு 43,200 கி.மீ. முதல் 57,600 கி.மீ. வரையிலான அசுர வேகத்துடன் பூமியை
நோக்கிப் பாய்ந்து வருகின்றன. இவை நேராகப் பூமியை அடையுமானால் இந்தப் பூமி பெரும்
பாதிப்புக்கு உள்ளாகி விடும். மேலும் இப்பூமியில் வசிக்கும் நாமும் தூள் தூளாகி
விடுவோம். ஏனெனில் இந்தக் கற்களில் சில 96,000 சதுர
மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு கொண்டவை! ஆனால் இந்தப் பிரமாண்டமான கற்கள் நேராக
பூமியை அடைந்து விடாமல் நமது ஆகாயம் அவற்றைத் தடுக்கின்றது.
அசுர வேகத்தில்
இந்தப் பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் இக்கற்கள் பூமியை அடைவதற்கு முன் பூமியில்
மேல் போர்த்தப் பட்டுள்ள கூரையில் - அதாவது காற்று மண்டலத்தில் நுழைகின்றது.
அப்போது காற்று மண்டலத்தின் எதிரியக்கம் (தங்-ஹஸ்ரீற்ண்ர்ய்) கற்களின் இயக்க
வேகத்திற்கேற்ப அவற்றின் மீது வினை புரிவதால் அக்கற்கள் வெப்பமடைகின்றன. இந்த
வெப்பம் அக்கற்களை எரித்துச் சாம்பலாக்கி பூமியின் மீது விழச் செய்கின்றது.
பூமியின் மேற்பரப்பின் மீது இவ்வாறு விழும் சாம்பலின் எடை கூட நாளொன்றுக்கு
நூற்றுக்கணக்கான டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக்
கற்கள் தான் நமது எதரிகள்! அந்தக் கற்கள் நம் மீது விழுந்து விடாத வண்ணம் இந்த நடு
அடுக்கின் மூலம் அல்லாஹ் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான். இதைத் தான்
அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்வின் கோபப் பார்வை
இறங்கி நம் மீது கல்மழை பொழியாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!
1979ம் ஆண்டு
ஸ்கைலாப் என்ற விண்ணாய்வி மண்ணகத்தை நோக்கி விழப் போகின்றது என்ற தகவல்
கிடைத்ததும் எங்கே அது தங்கள் தலையில் விழுந்து விடுமோ என்று மக்கள் அலறித்
துடித்தனர். ஆனால் அது யார் தலையிலும் விழாமல் மனித சஞ்சாரமற்ற பகுதியில் விழுந்து
நொறுங்கியது. அதன் பின் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இதற்கே இந்தப் பாடு
என்றால் விண்ணகத்து கற்கள் அனைத்தும் தொடர்ந்து இந்தப் பூமியில் விழுந்தால்
என்னாவது?
வாலாட்ட
முடியாத வால் நட்சத்திரங்கள்
நமக்கு
மேலே உள்ள பேரண்டத்தில் நட்சத்திரங்கள், துணைக் கோள்கள், கோள்கள் மட்டுமின்றி மேலும் பல கோடிக்கணக்கான
உடைந்து சிதறிய பாறைத் துண்டுகள் வலம் வருகின்றன. அப்பாறைத் துண்டுகளில்
சிலவற்றுக்கு தலைப்பகுதி பெருத்தும் உடற்பகுதி வால் போன்று நீண்டும்
காணப்படுகின்றன. இவற்றையே வால் நட்சத்திரங்கள் என்று நாம் அழைக்கின்றோம்.
வால்
நட்சத்திரங்களுக்கு நட்சத்திரங்களைப் போன்று பிரகாசிக்கும் தன்மை கிடையாது.
அண்டத்தில் சுற்றி வரும் வால் நட்சத்திரங்கள் (ஈர்ம்ங்ற்ள்) சூரிய குடும்பத்திற்கு
அருகில் வரும் போது சூரியனின் வெளிச்சத்தினால் பிரகாசிக்கின்றன.
இரவில்
வானத்தில் நட்சத்திரங்கள் வண்ணக்கோலத்தில் சிவகாசிப் பட்டாசு போல் எரிந்து
விழுவதைப் பார்க்கின்றோம். இவை உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல! பேரண்டத்தில் வலம்
வரும் பாறைத் துண்டுகள்! புவி ஈர்ப்பு சக்தியினால் ஈர்க்கப் பட்டு காற்று
மண்டலத்தில் உராய்வுக்குள்ளாகி புஸ்வானமாக்கப் படுகின்றன! இவற்றையே எரி
நட்சத்திரங்கள் (ஙங்ற்ங்ர்ழ்ண்ற்ங்ள்) என்று அழைக்கின்றோம்.
1994ம் ஆண்டு
ஷூமேக்கர் லெவி (நட்ர்ங் ஙஹந்ங்ழ் கங்ஸ்ஹ்) என்ற வால் நட்சத்திரம் வியாழன்
கிரகத்தின் மீது மோதிய போது, பத்திரிக்கைகள் தலைப்புச் செய்தி வெளியிட்டதை
யாரும் மறந்திருக்க மாட்டோம். இதுபோல் இந்தப் பாறைகள் நமது பூமியின் மேல் மோதினால்
நாம் என்னாவோம்?
வானங்களையும், பூமியையும்
படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய
மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும்,அமர்ந்தும், படுத்த
நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது
குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக
வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!''
(அல்குர்ஆன் 3:190,191)
என்று நாம்
உள்ளம் பொங்கக் கூறத் தோன்றுகிதல்லவா? இறைவா! உண்மையில் நீ தூய்மையானவன்!
இப்படி
விண்கற்கள், எரி
நட்சத்திரங்கள், வால்
நட்சத்திரங்கள் போன்றவை பூமியில் வந்து விழாமல் இந்த நடு அடுக்கின் மூலம் அல்லாஹ்
நம்மைப் பாதுகாக்கின்றான். இதைத் தான் ரப்புல் ஆலமீன், பாதுகாக்கப்
பட்ட கூரை என்று கூறுகின்றான்.
கொலம்பியா
ஓடமும் குர்ஆன் தரும் பாடமும்
புவி
ஈர்ப்பு சக்தி இந்த நடு அடுக்கின் மூலம் அதாவது காற்று மண்டலத்தின் மூலம்
புவிக்குப் பாய்ந்து வரும் விண் கற்களை உள்ளே விடாது இழுத்துப் பிடித்து அடித்து
நொறுக்கி விடுகின்றது. காற்று மண்டலத்தில் இருந்து கிளம்பும் எதிரியக்கம் (தங்-ஹஸ்ரீற்ண்ர்ய்)
அக்கற்களை சூடாக்கி சுட்டெரித்து விடுகின்றன! இந்த ராணுவ நடவடிக்கையில் தான்
சமீபத்தில் கொலம்பியா விண்வெளி ஓடம் சிக்கிக் கொண்டது.
கொலம்பியா
ஓடம் பூமிக்குத் திரும்பும் போது புவி ஈர்ப்பு சக்தியின் காரணமாக அதன் வேகம்
மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர்! காற்று மண்டலமோ இங்கு
யார் நுழைந்தாலும் சுட உத்தரவு என்று சுட்டுத் தீர்த்து விடுகின்றது. காற்று
மண்டலத்திற்கு அல்லாஹ் இட்ட அந்தக் காவல் உத்தரவை அது காத்து நின்று பூமிக்கு
வரும் ஆபத்தைத் தடுத்து விடுகின்றது.
எனவே
காற்று மண்டலத்தின் காவல் கட்டுப்பாடுகளை கணக்கில் கொண்டு தான் இங்கிருந்து
செல்வோர் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று வரவேண்டும். இதில் ஏதேனும்
மயிரிழை அளவுக்குத் தவறு ஏற்படுமானால் உயிர் தீக்கிரையாகிவிடும். அப்படி ஒரு தவறு
நிகழ்ந்ததால் தான் - வெப்பத்தைத் தாங்குவதற்காக பொருத்தப்பட்ட தகடுகள் குறைந்ததால்
தான் - கொலம்பியா கொழுந்து விட்டெரிந்து கொட்டி விழுந்த சாம்பலானது.
இங்கு
கொலம்பியாவை நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, எழுதப்
படிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்கள் இன்றைய அறிவியல் உலகம் எண்பித்து
நிற்கும் இந்த உண்மையை சுயமாக இயம்பியிருக்க முடியுமா? அப்படியானால்
நிச்சயமாக இது இறைவாக்கு தான் என்று உறுதியாகின்றது.
புனித
ரமளானில் இறங்கிய இவ்வேதத்தில் "வானம் பாதுகாக்கப் பட்ட முகடு' என்று
அல்லாஹ் கூறியதை இன்று கொலம்பியா விண்ணகத்துக்குச் சென்று
நிரூபணமாக்கியிருக்கின்றது. இந்த உண்மையை இங்கு உணர்த்துவதற்காகத் தான்
கொலம்பியாவை இங்கு குறிப்பிடுகின்றோம். விண் முகட்டின் இந்த வலிமையான பாதுகாப்பை
எண்ணி நமது ஈமான் மென்மேலும் வளர்கின்றது; வலுக்கின்றது. இது தான் நடு அடுக்கு சாதித்துக்
கொண்டிருக்கும் சாதனையாகும்.
பாதுகாக்கப்
பட்ட முகடு எனும் போது நடு அடுக்கிற்கு முந்தைய அடுக்கான படுகை அடுக்கில் உள்ள
ஓசோன் வாயு மண்டலத்தையும் சேர்த்துத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல
அல்லாஹ் புவியை சூரியனை விட்டும் 150 மில்லியன்
கி.மீ. தூரத்தில் வைத்திருக்கின்றான். அவ்வளவு தூரத்தில் இருந்தும் அதிலிருந்து
வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் உயிரினத்தின் மேனிகளில் ஓடும் உயிரணுக்களைத்
தாக்கிக் கொல்லக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. அல்லாஹ் இந்த முகட்டின் மூலம் இந்த
புற ஊதாக் கதிர்களின் தீய விளைவுகளிலிருந்தும் காக்கின்றான். இப்படிப் பட்ட
மாபெரும் பயன்களை இவ்விரு அடுக்குகளும் தந்து கொண்டிருக்கின்றன. இந்த அடுக்குகளைத்
தாங்கிப் பிடித்திருப்பது புவி ஈர்ப்பு விசை தான் என்பதை மறந்து விடக் கூடாது.
வெப்ப
அடுக்கு
நான்காவதாக
நாம் சந்திக்கவிருப்பது வெப்ப அடுக்காகும். பெயருக்கேற்றாற்போல் இவ்வடுக்கில்
வெப்பநிலையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் இங்குள்ள அணுக்கள் சூரிய
வெப்பக் கதிர்களால் நிரந்தரமாக வெப்பப் படுத்தப்படுகின்றன. இவ்வடுக்கில் ஹீலியமும், ஹைட்ரஜனும்
அதிகம் காணப்படுகின்றன. இவ்வடுக்கின் கீழ் பகுதியில் அயனிகள் உள்ளன. அயனிகள்
நிறைந்த இவ்வடுக்கை அயனி அடுக்கு என்றும் அழைப்பர். சுமார் 500 கி.மீ. உயரம் வரை இந்த அயனி அடுக்கு
பரவியுள்ளது.
திருப்பித்
தரும் வானம்
வானொலி
நிலையங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மின் காந்த அலைகளாக வளி மண்லத்திற்கு
அனுப்பப் படுகின்றன. இவை அயனி அடுக்கிலுள்ள அயனிகளால் பிரதிபலிக்கப் பட்டு
மீண்டும் புவியை அடைகின்றன. இதனால் நாம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடிகின்றது.
இதைப் பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
திருப்பித்
தரும் வானத்தின் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன்86:11)
(அல்குர்ஆன்86:11)
இவ்வசனத்தில்
"திருப்பித் தரும் வானம்' என்று ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ்
வானத்திற்குப் பயன்படுத்துகிறான்.
கடலிலிருந்தும், நீர்
நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு
வானம் திருப்பித் தருவதோடு மட்டுமல்லாமல் மேலே நாம் குறிப்பிட்டுள்ளது போல்
இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது.
வெப்ப
அடுக்கைப் பற்றியோ அதிலுள்ள அயனிகளைப் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத
காலத்தில் "திருப்பித் தரும் வானம்' என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா?
இந்த
மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்கள்
சொல்கிறார்கள் என்றால், நிச்சயமாக இது அவர்களுடைய வார்த்தையாக இருக்க
முடியாது; படைத்த
இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்பதை இந்த வசனம்
மெய்ப்பிக்கின்றது.
இந்த வெப்ப
அடுக்கிற்கு மேல் 1600 கி.மீ.
முதல் சுமார் 10,000 கி.மீ. வரை வெளியடுக்கு பரவியுள்ளது. இங்கு
மிகவும் அடர்த்தி குறைந்த காற்றே காணப்படுகின்றது. இந்த வெளியடுக்கு விண்வெளியுடன்
கலந்து விடுகின்றது. இதன் பின் வெற்றிடமே காணப்படுகின்றது.
இவை தான்
வளி மண்டலத்தின் சாராம்சம்! இந்த வளி மண்டலத்தின் இத்தனை அடுக்குகளையும் தாங்கி
நிற்கும் புவி ஈர்ப்பு விசையைத் தான் "பார்க்க முடியாத தூண்கள்' என்று வல்ல
ரஹ்மான் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான். இந்தத் தூண்களில் தான் பூமியிலுள்ள
அனைத்து உயிரினங்களின் வாழ்வும் அடங்கியிருக்கின்றது. இந்தப் புவி ஈர்ப்பு விசை
மூலம் புவியைக் காத்துக் கொண்டிருக்கின்ற அந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று
நாம் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதைத் தான் தோற்றுவாயின் துவக்கத்தில் அமைத்து
ஒவ்வொரு தொழுகையின் போதும் நம்மைச் சொல்ல வைத்திருக்கின்றான். தூய்மையான அந்த
நாயனுக்கே புகழனைத்தும் என்று மீண்டும் ஒருமுறை கூறி அவனைத் துதிப்போமாக! 64:3,4 வசனங்களை மீண்டும் ஒருமுறை எண்ணிப்
பார்ப்போமாக!
மழையும்
மாமறையும்
நாம்
சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன், நமக்குப் பலனளிக்கும் நைட்ரஜன், வெப்பத்தைத்
தக்க வைக்கும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது வளி மண்டலம்! அந்த
வளி மண்டலம் இண்டு இடுக்குகள் இல்லாமல் ஐந்து அடுக்குகளாக அமையப் பெற்று சூரியனின்
புற ஊதாக் கதிர்களை உள்ளே ஊடுருவாமல், பிரமாண்டமான வால் நட்சத்திரங்களை உள்ளே நுழைய
விடாமல் இந்தப் புவியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வளி மண்டலத்தைத்
தன் கைவசம் வைத்திருப்பது புவி ஈர்ப்பு விசை என்பதை அறிந்தோம். இந்தப் புவி
ஈர்ப்பு விசையின் இன்னொரு பயன் வானிலிருந்து மழையைப் பெற்றுத் தருவதாகும். அது
எப்படி? என்ற
கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால் தாகம் தீர்க்கும் மேகத்தைப் பற்றி முதலில்
பார்ப்போம்.
பென்னம்
பெரும் மலைகளைப் போல் வானத்தில் திரண்டு நிற்கும் கன்னங்கருத்த மேகத்தை நாம்
பார்க்கின்றோம். இந்த மேகம் இவ்வாறு திரள்வதற்கு முன்பாக இரண்டு கட்டங்களைச்
சந்திக்கின்றன. மூன்றாவது கட்டமாகத் தான், சூழ் கொண்ட இந்தத் திரட்சி நிலையை அடைகின்றன.
பஞ்சுகளைப்
போல் திட்டு திட்டாக தனித்தனியாக மிதந்து நிற்கும் குட்டி குட்டி மேகங்களைக்
காற்று தள்ளிக் கொண்டு செல்கின்றது.
இவை
அனைத்தும் ஒன்றிணைகின்றன.
இவ்வாறு
ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. குவியக் கூடிய இந்த
மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு
பக்கவாட்டிலும் உள்ள மேக சகாக்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச்
செல்கின்றது. விண்ணகத்தின் குளிர்ந்த பகுதியை நோக்கி இது இழுத்துச் செல்லப்
படுகின்றது. அவ்வாறு இழுத்துச் செல்லும் போது அந்த மத்தியப் பகுதியான இழுவை சக்தி
குளிரினால் பொழிந்து சிந்தி விடாமல் பக்கவாட்டிலுள்ள மேகங்கள் பார்த்துக்
கொள்கின்றன.
விண்வெளியின்
குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில்
ஆலங்கட்டிகள், நீர்
திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில்
கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது.
தனது
எல்லைக்குள் இப்படி ஆலங்கட்டிகள் தொகுப்பாக கனமான ஒரு மலையாக ஏறுவதை அனுமதிக்காக
புவி ஈர்ப்பு விசை அம்மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. அது தான் நம் மீது அருளாகப்
பொழிகின்ற மழை! இது மழையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! இப்போது விஷயத்திற்கு
வருவோம்.
வானிலை
ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்த மேகங்களை நாம் மேற்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர்.
இப்படி சூல் கொண்டு திரண்டெழுந்து நிற்கும் இந்த மேகக் கூட்டத்திற்கு
ஈன்ம்ன்ப்ர்ய்ண்ம்க்ஷன்ள், ஈப்ர்ன்க் என்று குறிப்பிடுகின்றனர். இன்று
வானியல் வல்லுநர்களால் வகைப்படுத்தப் பட்ட இந்த மேகத் திரட்சியை, மழைப்
பொழிவை எந்தப் பல்கலைக் கழகத்திலும் போய் படித்து மேதையாகிடாத, ஏடெத்துப்
படித்திராத முஹம்மது (ஸல்) அவர்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? மேற்கண்ட
நவீன கண்டுபிடிப்புகளை அச்சுப் பிசகாமல் அப்படியே அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்!
அல்லாஹ்
மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர்
அறியவில்லையா? அதன்
மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி)
மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச்
செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி
பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.
(அல்குர்ஆன் 24:43)
(அல்குர்ஆன் 24:43)
இதிலிருந்து
புனித ரமளான் மாதத்தில் இறங்கத் தொடங்கிய இந்த வேதத்தின் வசனங்கள் படைத்த எல்லாம்
வல்ல அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று சான்று கூறி நிற்கின்றன! இந்த வசனத்தில்
அல்லாஹ், மேகங்களுக்குப்
(பனி) மலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்று வானியல் ஆய்வாளர்கள்
சொல்லும் இந்தக் கருத்தை அல்குர்ஆன் அன்றே சொல்லி முடித்திருக்கின்றது எனும் போது
இது நூற்றுக்கு நூறு அல்லாஹ்வின் வேதம் தான் என்ற நம்பிக்கை மென்மேலும்
அதிகரிக்கின்றது.
மேற்கண்ட
வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது, "அதன்
மின்னொளி கண்ணைப் பறிக்கப் பார்க்கின்றது'' என்று சொல்லி முடிக்கின்றான். அதன் மின்னொளி
என்றால் எதன் மின்னொளி? இதற்கான விளக்கத்தை அடுத்து வரும்
"மின்னல்' என்ற
தலைப்பில் பார்ப்போம்.
மின்னல்
அல்லாஹ்
மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர்
அறியவில்லையா? அதன்
மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி)
மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச்
செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி
பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.
(அல்குர்ஆன் 24:43)
(அல்குர்ஆன் 24:43)
இந்த
வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன்
இணைத்து அல்லாஹ் கூறுகின்றான்.
எதன்
மின்னல்?என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த
வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க
முடிகின்றது. "அதன் மின்னல்' என்பது "ஆலங்கட்டியின் மின்னல்' என்று
திருக்குர்ஆன் பதில் கூறுகின்றது.
அது சரி!
ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த
மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
ஒன்றாகத்
திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள்,அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும்
பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று
விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும்
பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித்
தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள்
மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
இதன்
விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன.
சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற
போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின்
அடிப்பாகத்தில் விழுகின்றன.
கீழே
விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம்
வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 ஈ அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது
சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு
வெப்பம் 60000 ஈ) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை
வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்!
இங்கு நாம்
கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம்
மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை
ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான
அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும்.
விண்ணகத்தில்
வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக்
கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும்
அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான்.
அச்சத்தையும், எதிர்பார்ப்பையும்
ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான
மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப்
பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும்
அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ
அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன்.
(அல்குர்ஆன் 13:12,13)
இவ்விரண்டு
வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல்
எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில்
மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக்
கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான்.
மின்னல்
பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப்
பரவுகின்றன. 30,0000 ஈ வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி
அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து
என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மின்னலுக்கு
ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற
விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.
வளி
மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த
அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற
தலைப்பில் முன்னர் கண்டோம்.
ஒரு தடவை
மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண்
சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை
மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.
ஆம்!
காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை
கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும்
ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை
நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி
மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள்
கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி
மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக,சத்தாக, சாறாக
மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள்
கால்சியம், இரும்பு, அலுமினியம்
போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின்
நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு
உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன.
இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின்
இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக்
கொள்கின்றான்.
மனிதனுடைய
உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது
மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த
உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில்
கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப்
பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப்படுகின்றது.
சுப்ஹானல்லாஹ்!
அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு
மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன்
என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி
அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!
மின்னலில்
பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே
நபி (ஸல்) அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே!
அல்லாஹு அக்பர்!
எரிமலையும்
இறைமறையும்
வானியல்
ஆராய்ச்சியாளர்களிடம் மிகவும் பிரபலமானது பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் க்ஷஹய்ஞ்
ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட அனைத்து
கோள்களும் துணைக் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரே பொருளாகத் தான் இருந்தன.
இந்தப்
பொருள் பூமியை விட 318.5 மடங்கு
எடையைக் கொண்டதாகவும் மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்தது. அந்தப் பொருள் ஏதோ ஒரு
வானியல் மாற்றத்தால் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அண்டம் முழுவதும் ஒரே
தூசுப் படலமாகப் பரவியது. இது சுமார் 1500 கோடி
ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
இதற்குப்
பிறகு புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுப் படலம் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறிது
சிறிதாக இணைந்து பெரிதாகி இப்போதுள்ள கோள்கள், துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றின. இவ்வாறு தூசுப்
படலத்திலிருந்து பிரிந்து கோள்கள் உருவான நிகழ்வு சுமார் 500 கோடி முதல் 750 கோடி வருடங்களுக்கிடையில் நடைபெற்றது. இது தான்
பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும்.
மனிதன்
தன்னுடைய விஞ்ஞான அறிவையும் நவீன கருவிகளையும் கொண்டு இந்தப் பேரண்டம் எவ்வாறு
தோன்றியது என்ற வரலாற்றை தற்போது கண்டறிந்துள்ளான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி யாருக்காவது
தெரிந்திருந்ததா? பூமி, சூரியன், சந்திரன்
ஆகியவற்றைப் பற்றி வெறும் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக் கொண்டிருந்த காலம்.
இன்று கூட மற்ற மதங்களின் வேதங்களில் இந்தக் கதைகள் தான் கூறப்படுகின்றன.
பேரண்டத்தின் தோற்றம் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
வானங்களும், பூமியும்
இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள
ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர்
சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
(அல்குர்ஆன் 21:30)
பின்னர்
வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள்
கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே
கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.
(அல்குர்ஆன் 41:11)
என்ன
அற்புதமான வார்த்தைகள்! பூமியும் இதர கோள்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன என்பதையும் அதன் பிறகு புகை போன்றிருந்த நிலையில்
தான் அனைத்தும் உருவாயின என்பதையும் இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
மேலே நாம் கூறியுள்ள பெரு வெடிப்புக் கொள்கையையும் (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்)
இந்த இரு வசனங்களையும் படித்துப் பாருங்கள்! உண்மையிலேயே நமது உடலைப் புல்லரிக்கச்
செய்கின்றதல்லவா? இந்தப்
பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு
எப்படித் தெரியும்? படைத்த
இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே
திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
அடுப்பிலிருந்து
ஒரு தீக்கங்கை கிடுக்கியில் தனியாக எடுத்து ஓரிடத்தில் வைக்கின்றோம். நேரமாக
நேரமாக அந்தத் தீக்கங்கின் மேற்பகுதி குளிர்ந்து விடுகின்றது. ஆனால் அதன்
உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது. சூரியனிலிருந்து
பிரிந்து வந்த பூமி மேற்பகுதியில் குளிர்ந்து,அதன் மீது
தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக்
குழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் அது அவ்வப்போது
எரிமலைகளைக் கொப்பளிக்கின்றது. இந்தப் பூமி ஒரு காலத்தில் சூரியனுடன் ஒன்றாக
இருந்தது என்பதற்கு இந்த எரிமலைகள் அக்கினி சாட்சிகளாகத் திகழ்கின்றன! நெருப்பைப்
பஞ்சு மெத்தையாக்கி எங்களை வாழ வைக்கும் இறைவா! நீ தூயவன்! என்று தினமும் அந்த
வல்ல இறைவனைத் துதிப்போமாக!
EGATHUVAM NOV 2003