Apr 30, 2017

பொருளியல் தொடர் 18 - அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை

பொருளியல் தொடர் 18 - அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை

யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு உள்ளது  (அல் குர்ஆன் 51:19)

பொதுவாக நாம் வீதியில் செல்லும் போது ஒரு தோட்டத்தைப் பார்க்கின்றோம். அதிலிருந்து நாம் உண்ணலாம். எந்த வகையில் என்றால் அதில் ஒரு பங்கு வழிப்போக்கர்களுக்கு உரிமை இருக்கின்றது. மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில், இவ்வாறு மக்கள் எடுப்பதை அந்த நிலத்தின் உரிமையாளர் பொருட்படுத்தக்கூடாது

பொதுவான மரத்தின் கிளையில் காய்த்துத் தொங்கும் கனிகளை எடுத்து உண்பதும் கூடும்.

அம்ர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்:  தொங்கவிடப்பட்டிருக்கும் பேரிச்சை பழத்தை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தன்னுடைய ஆடையில் இரகசியமாக முடிந்து எடுத்துக் கொள்ளாமல் தேவையுடைய ஒருவர் அதிலிருந்து சாப்பிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறினார்கள்.  (நுôல்: திர்மிதி 1210)

முஸைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?'' என்று கேட்டார்.  இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் "உனக்கும் அதற்கும் என்ன  சம்பந்தம்? அதனுடன் தான் அதன் குளம்பும் அதன் தண்ணீர் பையும் உள்ளதே! நீர் நிலைகளுக்கு அது செல்கின்றது; மரத்தி-ருந்து தின்னுகின்றது. அதைத் தேடக்கூடியவன் அதனிடம் வரும் வரை அதை நீ விட்டு விடு'' என்று கூறினார்கள். தன்னுடைய மேய்ச்சல் நிலத்திலே பாதுகாப்பாக உள்ள (கால்நடைகளைத் திருடுவதைப்) பற்றி கேட்கப்பட்ட போது, "அதற்கு அதனுடைய விலையைக் போன்று இருமடங்கு (அபராதமும்) தண்டனைக்குரிய அடியும் உண்டு'' என்று கூறினார்கள். அதனுடைய தொழுவத்திலிருந்து (திருடி) எடுக்கப்பட்டால், அதிலிருந்து எடுக்கப்பட்டது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அதற்கு கைவெட்டுதல் இருக்கிறது என்று கூறினார்கள். தானியங்கள் அதனுடைய கிளைகளிலிருந்து (திருடி) எடுக்கப்பட்டால் என்னவென்று கேட்டார். "யார் இரகசியமாகத் தன் ஆடையில் முடிந்து எடுத்துக் கொள்ளாமல் அந்த இடத்திலேயே சாப்பிடுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. யார் கட்டிக் கொண்டு செல்கிறானோ அவனுக்கு அதனுடைய மதிப்பைப் போன்று இருமடங்கு (அபராதமும்) தண்டனையாக அடியும் இருக்கிறது'' என்று கூறினார்கள். தானியக்களஞ்சியத்திலிருந்து (திருடி) எடுக்கப்பட்டதற்கு, அதிலிருந்து எடுக்கப்பட்டது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அதற்கு கைவெட்டப்படும் என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் வசிக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் நிலை என்ன?'' எனறு அவர் கேட்டார். "அதை ஒரு வருடம் அறிவிப்புச் செய். அதைத் தேடக்கூடியவன் காணப்பட்டால் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் அது உனக்குரியதாகும்'' என்று கூறினார்கள். மக்கள் வசிக்காத பாழடைந்த இடங்களிலே பெற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றி கேட்டார். அதற்கு, புதையலில் ஐந்தில் ஒன்று (வரியாகச் செலுத்தப்பட வேண்டும்) என்று கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 6396)

தானியங்களை  களத்திலிருந்து எடுத்து வந்தால் அதற்குத் தண்டனை வழங்கப்படும்.

நபி (ஸல்) அவர்களிடம் தொங்கவிடப்பட்ட பேரீத்தம் பழங்களைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ஒருவன் இரகசியமாக முடிந்து எடுத்துக் கொள்ளமால் தன்னுடைய வாயினால் அந்த இடத்திலேயே சாப்பிட்டால் அவன் மீது எந்தக் குற்றமும் இல்லை. என்று கூறினார்கள்.  யார் அதிலிருந்து ஏதாவது ஒரு அளவிற்கு எடுத்துச் சென்றால் அவருக்கு அது போன்று இருமடங்கு அபராதமும் தண்டனையும் இருக்கிறது. யார் தானியக் களஞ்சியத்திற்கு வந்த பிறகு அதிலிருந்து ஏதாவது ஒரு அளவு திருடிச் சென்றால், அவன் திருடியது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அவனுக்குக் கைவெட்டுதல் இருக்கிறது. யார் கேடயத்தின் மதிப்பை விடக் குறைவாகத் திருடுகிறாரோ அவருக்கு, திருடியதின் மதிப்பைப் போன்று இருமடங்கு அபராதம் உண்டு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி),

நூல்: அபூதாவுத் 3816

அவர் அந்தக் களத்திலிருந்து எடுத்து உண்ணலாம். அதை அவர் ஒரு துணியிலோ அல்லது ஒரு பையிலோ முடிந்தால் அவர் மீது குற்றம் சுமத்தப்படும். அந்த அளவுகளையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். அந்த களத்தில் அவர் எடுத்த கனிகள் ஒரு கேடயம் அளவு இருந்தால் அவருக்குத் திருட்டிற்குரிய தண்டனை வழங்கப்படும்.

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  (அல்குர்ஆன் 5:38)

இந்த அடிப்படையில் திருட்டிற்குரிய தண்டனை அவருக்கு வழங்கப்படும். அவர் அந்தக் களத்திலிருந்து எடுத்த தானியங்கள் கேடயத்தின் அளவை விடக் குறைவாக இருந்தால் அவருக்கு இரண்டு மடங்கு அபராதம் வழங்கப்படும்.

கண்டெடுக்கப்பட்ட பொருளின் சட்டம்

நபி (ஸல்) அவர்கüடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதன் பை (உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் அறிந்து கொள். பிறகு, ஓராண்டு காலத்திற்கு (அதை) அறிவிப்புச் செய்'' என்று கூறினார்கள். பின்னர் அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) கூறியதாவது:  அதை அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வராவிட்டால் அதைக் கண்டெடுத்தவர் அதைச் செலவு செய்து கொள்வார். மேலும், அது அவரிடத்தில் அடைக்கலப் பொருளாக இருக்கும். இந்தப் பிந்திய வாக்கியம் மட்டும். அல்லாஹ்வின் தூதருடைய சொல்லா, அல்லது அறிவிப்பாளர் யஸீத் அவர்கüன் சொல்லா என்று எனக்குத் தெரியவில்லை'' என்று அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கüடம் (கண்டெடுத்த பொருளைப் பற்றிக் கேட்டவர்), "வழி தவறி வந்த ஆட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அதை நீ எடுத்துக் கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) அவர்கள், "அதையும் கூட அறிவிப்புச் செய்ய வேண்டும்'' என்று கூறினார்கள். பிறகு அந்த நபர், "வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "அதை (அப்படியே) விட்டு விடுங்கள். ஏனெனில், அதனுடன் அதன் குளம்பு இருக்கின்றது; அதன் தண்ணீர்ப்பை (வயிறு) இருக்கின்றது; அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அது நீர் நிலைகளுக்குச் செல்கின்றது; மரங்கü-ருந்து சாப்பிடுகின்றது'' என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் கா-த் (ரலி),

நூல்: புகாரி 2428

அடையாளங்களைக் குறித்துக் கொள்ளுதல்

ஒரு பணப்பையை நாம் கண்டெடுத்தால் அதன் தொகையைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மதிப்பு பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எத்தனை? அதில் நூறு ரூபாய் நோட்டுகள் எத்தனை? அதில் சுத்தப்பட்டிருக்கும் ரப்பர் பேன்டின் நிறம் என்ன? போன்ற நுணுக்கமான அடையாளங்களைக் கவனித்து வைப்பது மிக அவசியம் ஆகும்.

அந்தப் பணத்தை ஒரு வருட காலம் மக்கள் நடமாடும் இடத்தில் அறிவிப்புச் செய்ய வேண்டும். அது என்னுடைய தொகை என்று யார் கூறுகிறாரோ அவரிடம் தகுந்த அடையாளங்களைக் கேட்க வேண்டும் அவர் சரியான அடையாளங்களைச் சொன்னால் அவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் அதை நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டும். சரியாக ஒரு வருடம் அறிவிப்பு செய்த பிறகும் அந்தத் தொகையைக் கேட்டு யாரும் வரவில்லையென்றால் அது நமக்கு ஆகுமானதாகும். அது ஹராமாக இருக்குமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. அதை நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மூன்று வருடம் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று ஒரு ஹதீஸ் வந்துள்ளது.

நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்கüடம் வந்தேன். அவர்கள், "ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை.  பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்கüடம் சென்றேன். அப்போதும், "ஓராண்டு காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி(ஸல்) அவர்கüடம் வந்தேன்.  அப்போது அவர்கள், "அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள்  கூறுகிறார்கள்: அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், "(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், "மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்' என்று கூறினார்களா, அல்லது "ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்' என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன் (அதாவது "எனக்கு நினைவில்லை'') என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி),

நூல்: புகாரி 2426

மேற்கூறப்பட்ட ஹதீஸில் ஒரு வருடம் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று நாம் பார்த்தோம். ஆனால் அதற்கு மாற்றமாக மூன்று வருடம் என்று இந்த ஹதீஸில் வந்துள்ளது. இந்த ஹதீஸை நன்கு கூர்ந்து படித்தால் ஒரு வருடம் மட்டுமே அறிவிப்புச் செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இந்த ஹதீஸில் இறுதியில் "(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், "மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்' என்று கூறினார்களா, அல்லது "ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்' என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன்'' (அதாவது "எனக்கு நினைவில்லை") என்று அறிவிப்பாளர் சொல்வதன் காரணத்தினால் ஒரு வருடம் தான் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று நாம் விளங்க முடியும்.

இந்தச் சட்டம் எல்லா பொருட்களுக்கும் பொதுவானதல்ல.

கம்பு, சாட்டை, கயிறு மற்றும் இவை போன்றவைகளை ஒரு மனிதன் கண்டெடுத்தால் அதைப் பயன்படுத்துவதற்கு நபியவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல் அபூதாவூத் 1459

மக்கள் சாதாரணமாகக் கருதும் பொருளாக இருந்தால் அதை நாம் தாராளமாக நாம் பயன்படுத்தலாம்.

நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். "இது ஸதகா பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 2431

மக்கள் சாதரணமானவை என்று எதைக் கருதுவார்களோ அதை எடுத்துக் கொள்வது நம் மீது குற்றமாகாது. "இது ஸதகா பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு ஸதகா பொருள் ஹராம் என்பதே ஆகும். நமக்கு ஸதகா பொருள் தடை செய்யப்படவில்லை என்பதால் அதை உண்பது நம் மீது தடையாகாது.

புதையல் கண்டெடுக்கப்பட்டால்....

 "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் வசிக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் நிலை என்ன?'' எனறு ஒருவர் கேட்டார். "அதை ஒரு வருடம் அறிவிப்புச் செய். அதைத் தேடக்கூடியவன் காணப்பட்டால் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் அது உனக்குரியதாகும்'' என்று கூறினார்கள். மக்கள் வசிக்காத பாழடைந்த இடங்களிலே பெற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றி கேட்டார். அதற்கு, "புதையலில் ஐந்தில் ஒன்று (வரியாகச் செலுத்தப்பட வேண்டும்)'' என்று கூறினார்கள்.  (நூல்: அஹ்மத் 6396)

வரதட்சணை திருமணத்தில் போய் சாப்பிடலாமா?

தவறான முறையில் ஒருவர் சம்பாதிக்கின்றார். அவர் தவறான முறையில் சம்பாதித்தாலும் அதை நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அது நமக்கு ஹராம் இல்லை. ஏனென்றால் அவருடைய வருமானம் தான் ஹராமாகும். அவர் நமக்கு கொடுக்கக்கூடிய அன்பளிப்பு ஹராம் ஆகாது.

அப்படியென்றால் வரதட்சணை திருமணத்திற்குச் சென்று சாப்பிடலாமா?

புறக்கணிப்பதற்கான காரணங்கள்

வரதட்சணை திருமணத்தில் போடப்படும் உணவு ஹராம் என்று நாம் ஒருபோதும்கூறவில்லை. எனினும் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகின்றோம். சபை சரியில்லாத காரணத்தாலும், அல்லாஹ்வின் வார்த்தையும், அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் வார்த்தையும் அங்கே காலில் போட்டு மிதிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். சபை சரியில்லாத காரணத்தால் நபி (ஸல்) அவர்களும் விருந்தைப் புறக்கத்துள்ளார்கள். இதற்கு, பின்வரும் செய்தி ஒரு வலுவான ஆதாரம் ஆகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கüன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்கüடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ(ரலி) அவர்கüடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, "நான் ஃபாத்திமாவின் வீட்டு வாச-ல் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்துவிட்டேன்)'' என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கüடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள்.  அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், "அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)'' என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள், "அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது'' என்று கூறினார்கள்.

(நூல்: புகாரி 2613)

இந்த ஹதீஸின் மூலம் சபை சரியில்லாத இடத்தைப் புறக்கணிக்கலாம் என்று நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

(அல்குர்ஆன் 4:140)


வரதட்சணை திருமண விருந்துகளில் கலந்து கொண்டால் அதை மறைமுகமாக ஆதரிப்பவராக நாம் ஆகி விடுவோம். இதன் காரணத்தால் தான் நாம் அது போன்ற சபைகளைப் புறக்கணிக்கின்றோம்.

EGATHUVAM DEC 2011