Apr 19, 2017

கலகம் கொலையை விடக் கொடியது

கலகம் கொலையை விடக் கொடியது

புனிதமிகு ரமளான் மாதம் பிறை 25, செப்டம்பர் 5ம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரி பள்ளிவாசலில் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் பலியாகி விட்டனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முஸ்லிம் விவகாரம் என்றதும் ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. தங்களது அன்றாட செய்திகளில் முஸ்லிம்கள் தொடர்பான கொலைச் செய்திகள் வராத ஆத்திரத்தை, அரிப்பை இதில் தாகம் தீரத் தணித்துக் கொண்டன. உலை நெருப்பை, ஊதி ஊதி ஊர் நெருப்பாக்கி மகிழ்ந்தன.

இந்த ஊடகங்களுக்குச் செய்தி வருகின்ற வழி நம்பகமான வழியா? நம்பகமற்ற வழியா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. சமூக அமைதிச் சூழல் மாசானாலும் பரவாயில்லை, செய்தியை செய்தீயாக்கி பரவச் செய்து காசாக்குவது தான் அதனுடைய ஒரே இலக்கும் குறிக்கோளும் ஆகும்.

இந்த அடிப்படையில் தான் துப்பாக்கியால் சுட்ட ஹாஜி முஹம்மது என்பவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர் என்ற வதந்தியை சன் டிவி திரும்பத் திரும்ப வாந்தியெடுத்தது.

ஊடகங்கள் தான் செய்தி வந்த வழியைப் பார்ப்பதில்லை. காரணம் அவற்றுக்கு மறுமை விசாரணையில் நம்பிக்கை இல்லை எனலாம். ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்டோம் என்று சொல்லிக் கொள்ளும் நயவஞ்சகக் கும்பல்கள் இணைய தளங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியது தவ்ஹீத் ஜமாஅத் தான் என்ற நாசக் கருத்துக்களை மின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் மின்னஞ்சல்களில் பரப்பி விட்டன, பறக்க விட்டன.

இறையச்சம் இவர்களுக்கு இருக்கின்றதா? என்று எண்ணிய மறு கணத்தில் நம்முடைய உள்ளத்தில் மின்னிய பதில், இவர்களுக்கு இதயம் இருந்தால் தானே இறையச்சம் இருக்கும் என்பது தான்.

கடந்த ஜூலை 4ல் மக்களால் மறக்க முடியாத பேரியக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாறியிருக்கின்றது என்பதைத் தாங்க முடியாத ஆத்திரத்தில், துப்பாக்சிச் சூடு செய்தி பரவிய மாத்திரத்தில் சென்னையில் அனைத்து இயக்கங்களும் கூடின. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஒரேயடியாகக் குழி பறிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

"சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சுட்ட இவர்களைச் சும்மா விடக் கூடாது; நாம் அனைவரும் பேரணியாகப் புறப்பட்டுச் சென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தடை செய்யுமாறு முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும்'' என்று பேசினர். அப்போது அங்கிருந்த சிலர், "ஆதாரமில்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தை இதில் இழுக்கக் கூடாது. ஆய்வு செய்து தான் நாம் முடிவுக்கு வர வேண்டும்'' என்று ஆட்சேபணை செய்ததால் இவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.

இதன் பின்னர் உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் ஒரு பயணத்தை மேற்கொண்டனர். துப்பாக்கியால் சுட்டவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தான் ஊர் மக்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அந்த உண்மையை மறைத்து சில நயவஞ்சகர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக சுவரொட்டிகளை சில இடங்களில் ஒட்டியுள்ளனர்.

நடந்த உண்மையை நாம் விளக்குவதற்கு முன்னால் இவர்களின் திட்டம் இன்ஷா அல்லாஹ் தோல்வியில் தான் முடியும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.

ஜூலை 4 மாநாட்டின் போது, அதில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்கள் செய்த பிரச்சாரம் கொஞ்சமல்ல! ஆனால் இவர்களின் சதித் திட்டம் பலிக்கவில்லை. இவர்கள் காலமெல்லாம் பொறாமையில் வெந்து சாகும் அளவுக்கு அல்லாஹ் மாநாட்டுக்கு மாபெரும் வெற்றியளித்தான்.

இவர்களுக்கு மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்றால் இவர்கள் ஒன்று திரண்டு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தடை செய்யுமாறு மாபெரும் பேரணியை நடத்திக் காட்டட்டும்! தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தினாலும் அல்லாஹ் நாடினாலே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தை யாராலும் தடை செய்ய முடியாது. தடை செய்வதற்கான எந்தச் செயலையும் இந்த ஜமாஅத் செய்ததோ ஆதரித்ததோ கிடையாது.

19 ஆயிரம் அமைப்புகள் ஒன்று திரண்டு சுவரொட்டிகள் ஒட்டினாலும் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத்தை அசைக்க முடியாது. ஏனெனில் துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினராகவோ ஆதரவாளராகவோ இருந்தால் தான் இது மக்களிடம் எடுபடும். ஆனால் சுட்டவருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும் போது இவர்கள் வகுத்துள்ள திட்டம் இவர்களுக்குக் கடுகளவும் உதவாது.

மாறாக, இவர்களின் கபட நோக்கத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்பதால் அவர்களுக்குத் தான் இது இழப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி வைக்கிறோம்.

இனி, திருவிடைச்சேரியில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம்.

உண்மை நிகழ்வு

திருவிடைச்சேரியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த சில மாதங்களுக்கு முன் நபிவழி அடிப்படையில் தொழ அனுமதி மறுத்துள்ளனர். தொழுகைக்குச் சென்ற முஜிபுர்ரஹ்மான் என்பவரை ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் என்பவர் தாக்கியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் இரு தரப்பும் தனித்தனி இடங்களில் தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அப்துர்ரஹீம் என்பவரது வீட்டின் மாடியில் தொழுகை நடத்தி வந்தனர்.

வீட்டுச் சொந்தக்காரரான அப்துர்ரஹீமின் குடும்பத்தினருக்கும் எதிர் வீட்டிலிருந்த ஜபருல்லாஹ் என்பவரின் குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்துள்ளது.

இந்தப் பிரச்சனையில், மாடியில் செயல்படும் மர்கஸிற்கு நோன்பு திறக்க வந்த ஸலாவுத்தீன் என்பவரது தகப்பனாரை எதிர்வீட்டு ஜபருல்லாஹ், ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல் மற்றும் சிலர் வழிமறித்து, "இங்கு தொழுகைக்குச் செல்லக் கூடாது' என்று தடுத்துள்ளனர்.

இந்தத் தகவலை ஸலாவுத்தீன், தனது நண்பரான குத்புதீனுக்குத் தெரிவிக்க அவர் அந்த இடத்திற்கு வருகிறார். ஜபருல்லாஹ், ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல் மற்றும் அவரது கூட்டத்தினரிடம் குத்புதீன் சமாதானமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்தக் கும்பல் குத்புதீனை உருட்டுக் கட்டையால் தாக்குகின்றது.

மர்கஸ் வாசலில் குத்புதீன் தாக்கப்பட்டுள்ளார் என்பதால் செய்தியறிந்த திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், திருவிடைச்சேரி கிளை நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு, இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் புகார் கொடுக்க குத்புதீன் மறுத்து விடவே இந்தத் தகவலை கிளை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகிகள் குத்புதீனைத் தொடர்பு கொண்டு, புகார் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அப்போதும் அவர், "இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று கூறி விடுகின்றார்.

இதன் பின், குத்புதீன் திருமங்கலக்குடியில் இருக்கும் தனது மச்சான் ஹாஜி முஹம்மதுவிடம், ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல் மற்றும் அவரது அடியாட்கள் உருட்டுக்கட்டையால் தன்னைத் தாக்கியது குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார்.

கும்பலாகத் தாக்கியுள்ளார்கள் என்பதால் ஹாஜி முஹம்மது, மூன்று கார்களில் ஆட்களை அழைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத் தலைவரிடம் நியாயம் கேட்கின்றார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஜமாஅத் தலைவர் இஸ்மாயீலின் மூக்கு உடைந்துள்ளது.

"ஜமாஅத் தலைவர் தாக்கப்பட்டு விட்டார், எல்லோரும் பள்ளிக்கு வாருங்கள்' என்று பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்துள்ளனர். ஜபருல்லாஹ் மற்றும் அவரது அடியாட்கள் கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அங்கு இருந்ததால் ஹாஜி முஹம்மதை நோக்கி அந்தக் கும்பலில் ஒருவர் அரிவாளால் வெட்ட வருகின்றார். அப்போது ஹாஜி முஹம்மதுடன் வந்த ரவி என்பவர் குறுக்கே நின்று தடுக்கும் போது ரவியில் தலையில் வெட்டு விழுகின்றது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த ஹாஜி முஹம்மது, அடுத்த வெட்டு தனக்குத் தான் என்பதால் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கியும் தரையை நோக்கியும் சுட்டுள்ளார். இதற்கும் அந்தக் கும்பல் அஞ்சாமல் அவரைக் கொல்ல முற்படவே அவர்களை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல், பிரச்சனைக்குக் காரணமான ஜபருல்லாஹ் என்பவரின் மைத்துனர் ஹஜ் முஹம்மது, அடியாட்கள் பால்ராஜ், ராமதாஸ், சந்தியாகு, ஹாஜா மைதீன் ஆகியோர் காயமடைகின்றனர்.

இதில் இஸ்மாயீல் மற்றும் ஹஜ் முஹம்மது ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் இறந்து விடுகின்றனர். பால்ராஜ், ராமதாஸ், சந்தியாகு ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் பின்னர் ஜபருல்லாஹ்வும் அவரது அடியாட்களும் அரிவாள், கம்பு, உருட்டுக்கட்டைகளுடன் அப்துர்ரஹீமின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். அப்துர்ரஹீம், அவரது மனைவி கமருன்னிஸா, மகள் மற்றும் பேரக் குழந்தை ஆகியோர் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளேயிருந்துள்ளனர்.

வெளிக் கதவையும், கொல்லைப்புறக் கதவையும் உடைத்து உள்ளே சென்ற ஜபருல்லாஹ் மற்றும் அவரது அடியாட்கள் வீட்டிலிருந்த டிவி, டேபிள், அலமாரி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை உடைத்து, அலமாரியில் வைத்திருந்த தங்க நகைகள், கமருன்னிஸா அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டுள்ளனர்.

"இவர்களைக் கொல்லுங்கடா' என்று ஜபருல்லாஹ் வெறிக் கூச்சலிட, அவர்கள் அப்துர்ரஹீமை வெளியே இழுத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்துர்ரஹீம் தனது கைகளால் தடுத்ததால் அவரது கைகளில் வெட்டு விழுகின்றது. அவரது மனைவி கமருன்னிஸாவையும் அரிவாளின் மறு முனையால் தாக்கியுள்ளனர்.

வெட்டுக்காயம் அடைந்த அப்துர்ரஹீமும், ஹாஜி முஹம்மதுடன் வந்த ரவியும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு எள்ளளவும் தொடர்பில்லாத தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட அப்துர்ரஹீம் ஆகியோர் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தான் நடந்த நிகழ்வு!

உண்மையில், இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற வன்முறைக் கலாச்சாரத்தை ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆதரிக்கவும் செய்யாது.

மிக மிகச் சிறுபான்மையாக இருந்த போதும் சரி! அல்லாஹ்வின் அருளால் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்த பின்பும் சரி! பள்ளிவாசலில் தாக்கப்படும் போதெல்லாம் காவல்துறையைத் தான் நாடியிருக்கின்றோம். நீதிமன்றம் சென்று நீதியைத் தான் நாடியிருக்கின்றோம்.

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று திருப்பிக் கொடுக்கும் வலிமையைப் பெற்றுள்ளது. இருந்தாலும் நம்மைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்காமல் சகிப்புத் தன்மையைத் தான் கடைப்பிடிக்கின்றது.

காரணம், இறைவன் நாடினால் நாளைய தினம் இவர்கள் இந்த ஏகத்துவக் கொள்கைக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் நல்லெண்ணத்திலும் தான்.

இன்று ஏகத்துவத்திற்காகத் தாக்கப்படுபவர்கள், ஒரு காலத்தில் ஏகத்துவவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தவர்கள் தான்.

ஏகத்துவத்தை எதிர்த்துத் தாக்குதல் தொடுத்தவர்கள் தான் இன்று இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பின் இதற்காகத் தாக்கப்படுகின்றார்கள் என்பதே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருவிடைச்சேரி சம்பவம் நடைபெற்றதற்குக் காரணம் என்ன? என்பதை இனி பார்ப்போம்.

திருவிடைச்சேரி சம்பவம்:  முழு முதற் காரணம்

திருவிடைச்சேரி சம்பவம் குறித்து இறையச்சம் துளியும் இல்லாமல் பல்வேறு பொய்களை அவிழ்த்து விட்டுள்ள துரோகிகளின் ம.உ. பத்திரிகை, "தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத்' என்று கிண்டலடித்துள்ளது.

திருவிடைச்சேரி போன்று பல பள்ளிகளில் அடி வாங்கிய தவ்ஹீது சகோதரர்கள் தான் முகம் தெரியாத இந்தத் துரோகிகளைத் தோள்களில் தூக்கிச் சுமந்தனர். அந்த நன்றி கெட்ட நாடகக் கம்பெனியினர் தான் "தவ்ஹீத் ஜமாஅத் துப்பாக்கிச் சூடு நடத்தியது' என்பதை இந்த வார்த்தையில் சொல்கின்றனர். ஹாஜி முஹம்மதை தவ்ஹீத் ஜமாஅத் என்று நிலை நிறுத்துகின்றனர்.

திருவிடைச்சேரி பிரச்சனைக்கு மூல காரணம் என்ன? என்று பார்த்தால் இரண்டு காரணங்கள் உள்ளன.

1. பள்ளிவாசலில் தவ்ஹீது ஜமாஅத்தினரைத் தொழ விடாமல் அந்தப் பள்ளி நிர்வாகம் தடுத்தது.

2. தனிப் பள்ளி கண்ட பிறகு அங்கு வந்தும் தொழ விடாமல் தடுத்தது.

இவை தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்.

இந்தத் துரோகிகளின் பார்வையில் துப்பாக்கிச் சூடு பெரும் பாவமாகவும் பயங்கரவாதமாகவும் தெரிகின்றது. மனித உயிர்களைக் கொன்றது பெரும் பாவம் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அல்லாஹ்வின் பார்வையில் எது பெரும் பாவம்? எது பயங்கரவாதம்? என்பது இந்தத் துரோகிகளுக்கு, சுனாமித் திருடர்களுக்குத் தெரியவில்லை. தெரியவும் செய்யாது.

இதோ அல்லாஹ் கூறுகிறான்:

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:217

1. மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பது.

2. அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுவது.

3. அவனை ஏற்க மறுப்பது.

ஆகியவை தான் இறைவனின் பார்வையில் கலகம் செய்வதாகும். இது கொலையை விடக் கொடியது என்று சொல்கின்றான்.

இந்த வசனம் இறங்கிய பின்னணியைப் பார்த்தால் இதன் கருத்து இன்னும் தெளிவாகப் புரியும்.

நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளை உளவு பார்ப்பதற்காக) ஒரு கூட்டத்தை அபூஉபைதா தலைமையில் அனுப்புகின்றார்கள். அவர் செல்லத் துவங்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பின் காரணமாக அழுகின்றார்; செல்லாமல் அமர்ந்தும் விடுகின்றார். அவருக்குப் பதிலாக அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷை அவருடைய பொறுப்பில் நியமித்து அனுப்புகின்றார்கள். அவரிடம் ஒரு கடிதத்தையும் எழுதிக் கொடுத்து, "இன்ன இடத்தை அடைந்த பிறகு தான் இந்தக் கடிதத்தைப் படிக்க வேண்டும்'' என்றும் அவருக்குக் கட்டளையிடுகின்றார்கள்.

(அந்தக் கடிதத்தில்) "உன்னுடைய தோழர்கள் யாரையும் உன்னுடன் வருவதற்கு நிர்ப்பந்திக்காதே'' என்று தெரிவித்திருந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் அதைப் படித்து விட்டு, "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செவிமடுப்பதும் கட்டுப்படுவதும் நமது கடமை ஆகும்'' என்று கூறியவாறு தன்னுடன் வந்தவர்களிடம் அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டுகின்றார். அவருடன் வந்தவர்களில் இரண்டு பேர் திரும்பி விடுகின்றர். எஞ்சியவர்கள் அவருடன் செல்கின்றனர்.

அந்தக் கூட்டத்தினர் செல்லும் வழியில் (மக்காவைச் சேர்ந்த எதிரியான) இப்னுல் ஹள்ரமி என்பவரைச் சந்தித்து, கொலை செய்து விடுகின்றனர். அந்த நாள் (போர் தடுக்கப்பட்ட புனித மாதமான) ரஜபா? அல்லது ஜமாதில் ஆகிரா? என்று அவர்களுக்குத் தெரியாது.

அப்போது இணை வைப்பவர்கள், முஸ்லிம்களை நோக்கி, "(தூய இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால்) போர் தடுக்கப்பட்ட புனித மாதத்தில் கொலை செய்து விட்டீர்களே!'' என்று விமர்சிக்கின்றார்கள்.

அப்போது தான் அல்லாஹ் 2:217 வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்னத் அபூயஃலா, தப்ரானி

தூய்மையைப் பற்றிப் பேசும் நீங்கள் புனித மாதத்தில் தப்பு செய்யலாமா? என்று முஷ்ரிக்குகள் கேட்கிறார்கள். அதற்குத் தான் அல்லாஹ் பதிலடி கொடுக்கின்றான்.

புனித மாதத்தில் தெரியாமல் ஒரு தவறு நடந்து விட்டது. தெரியாமல் நடந்தால் அது தவறாகாது. கொலை செய்வது குற்றம் தான். ஆனால் நீங்கள் செய்து கொண்டிருப்பது அதை விடப் பெருங்குற்றம்.

1. மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பது.

2. அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுவது.

3. அவனை ஏற்க மறுப்பது.

இம்மாபெரும் பாவங்களைச் செய்து கொண்டு இந்தப் பாவத்திற்காகக் காட்டுக் கூச்சல் போடுகின்றீர்களே என்று கேட்பது போல் அல்லாஹ் இந்த வசனத்தை அருளுகின்றான்.

நூறு சத பொருத்தம்

திருக்குர்ஆன் கூறுகின்ற இந்த விஷயத்தை அப்படியே திருவிடைச்சேரி சம்பவத்துடன் பொருத்திப் பாருங்கள்.

1. பள்ளியை விட்டுத் தடுத்தல். ஒரே ஒரு வித்தியாசம், அது மஸ்ஜிதுல் ஹராம். இது சாதாரண பள்ளிவாசல். ஆனால் தொழுவதற்குத் தடை விதித்தது தான் இரண்டு இடங்களிலும் நடந்துள்ளது.

பள்ளியில் தான் தொழ விடாமல் தடுத்தார்கள். சரி! தொலைந்து விட்டுப் போகிறார்கள், இவர்களது அராஜகம் தாங்க முடியாமல் தனிப் பள்ளி துவங்கி தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகின்றனர். அங்கும் வந்து தொழ விடாமல் தடுக்கின்றனர்.

2. அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; இறந்து போன பெரியார்களிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் ஜமாஅத்திற்கும் உள்ள பிரச்சனை இது தான்.

அவனை மட்டும் வணங்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!

அல்குர்ஆன் 40:14

இதை இவர்கள் மக்கா காஃபிர்கள் பாணியில் மறுக்கிறார்கள். இது அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் மறுப்பது இல்லையா?

3. அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுதல்: இறை மறுப்பாளர்கள், இறை நம்பிக்கையாளர்களை மக்காவை விட்டு வெளியேற்றியதை இது குறிக்கின்றது. இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு என சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது. இந்த சட்டத்தின் ஆட்சி மட்டும் இல்லை என்றால் சுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொட்டத்தின் ஆட்சி தான் நடக்கும். ஆம்! ஊரை விட்டும் துரத்தி விடுவார்கள். இப்போது அவர்களால் துரத்த முடியவில்லை என்பதால் ஊர் நீக்கம் செய்து வைக்கின்றார்கள்.

பொதுக் குழாயில் தண்ணீர் கொடுக்கக் கூடாது.

திருமணப் பதிவேடு வழங்கக் கூடாது.

ஊரார் யாரும் இவர்களிடம் பேசக் கூடாது.

தவ்ஹீதுக் கொள்கையில் உள்ளவர்கள் இறந்து விட்டால் ஜனாஸாவை அடக்கம் செய்யக் கூடாது.

பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது.

இதுவெல்லாம் என்ன? மக்கா காபிர்களைப் போன்று ஊரை விட்டே துரத்தி அடிக்க முடியாது. காரணம், இவர்களிடம் ஆட்சியதிகாரம் இல்லை. இருந்தால் அதைச் செய்திருப்பார்கள். அது இல்லையென்பதால் அதற்கு இணையான காரியத்தை இந்த ஜமாஅத்தார்கள் செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் பார்வையில் இவை கொலையை விடக் கொடிய கலகமாகும், கலவரமாகும். பெரும் பாவமும் பயங்கரவாதமும் ஆகும்.

சங்கரன்கோயிலில் ஒரு அபூஜஹ்ல்

அபூஜஹ்லின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு சங்கரன்கோயில் ஜமாஅத் தலைவர் ஓர் எடுத்துக்காட்டு.

இவர்களுடைய பள்ளிவாசலைப் பிய்த்து எறியுங்கள்; இவர்கள் குழப்பவாதிகள் என்று கூச்சல் போட்டிருக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்தினரின் தொழுகைப் பள்ளிக்கு அருகில் கொண்டு வந்து ஒலிபெருக்கிக் குழாய்களைக் கட்டி தொழக் கூடியவர்களுக்கு இடையூறு செய்திருக்கிறார்.

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?

அல்குர்ஆன் 96:9,10

இந்த வசனங்களில் அல்லாஹ் சொல்வது போன்று அபூஜஹ்லின் வேலையை அப்படியே செய்கின்றார். இத்துடன் நிற்காமல், தவ்ஹீத் ஜமாஅத்திருக்கு யாரும் முடி வெட்டக் கூடாது என்று சலூன் கடைக்காரர்களுக்கு ஓர் உத்தரவு போட்டிருக்கிறார். இவர்களால் இந்த "மயிர்' உத்தரவு தான் போட முடியும். இதைத் தாண்டி ஜனாஸாவை அடக்கக்கூடாது என்று சொல்வார்கள், ஊர் நீக்கம் செய்வார்கள். இவற்றைத் தவிர்த்து இவர்களால் வேறெதுவும் செய்ய முடியாது.

இப்படி எத்தனையோ பேர்களை தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 25 ஆண்டுகளாகப் பார்த்து விட்டது. இந்த அடக்குமுறைகளுக்கு எல்லாம் இந்த ஜமாஅத் அடங்காது, அடி பணியாது.

இவர்களுடன் கைகோர்ப்பதற்கும் களம் இறங்குவதற்கும் எங்களிடமிருந்து பிரிந்த நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் எங்களுக்கு எதிரான அனைத்து இயக்கங்களையும் அழைத்துக் கொள்ளட்டும். அல்லாஹ்வின் படையான ஸபானிய்யாக்களுடன் மோதுவதற்கு இவர்கள் தயாராவது எங்களது ஈமானைத் தான் மேலும் அதிகரிக்கும் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறோம்.

"மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 3:173

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், கொலையை விடக் கொடிய பாவம் என்று சொல்லும் இந்த பயங்கரவாதச் செயல்கள் இவர்களிடம் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத் தான்.

துப்பாக்கிச் சூட்டை விட பெரும் பாவம் பள்ளியில் தொழ விடாமல் தடுப்பது தான். ம.உ. நயவஞ்சகர்களுக்கு இதுவெல்லாம் பெரும் பாவமாகத் தெரியாது. பயங்கரவாதமாகத் தோன்றாது.

ஏனெனில் இந்தத் துரோகிகளும், பள்ளிவாசலை விட்டுத் தடுக்கின்ற, பள்ளியைப் பாழாக்குகின்ற பாவத்தில் பங்கு கொண்டு தவ்ஹீதுவாதிகளைத் துரத்தியடிக்கின்றனர்.

கடையநல்லூரில் தொழ வந்த மக்கள் மீது அடியாட்களைக் கொண்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள்.

அபூஜஹ்லைப் போன்று அல்லாஹ்வின் ஆலயத்தில் தொழ விடாமல் தடுக்கும் அநியாயத்திற்குத் துணை நிற்பவர்கள் தான் இந்த நயவஞ்சகர்கள்.

அல்லாஹ்வின் பார்வையில் இவர்களும் பயங்கரவாதிகள் தான்.

தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் பள்ளியில் தடுக்கப்படும் போது அடிதடி தாக்குதலில் கூட ஈடுபடுவதில்லை. இந்தக் கொள்கைச் சகோதரர்களின் பார்வையில் அடிதடியே பெரும் பாவமாகத் தெரியும் போது துப்பாக்கிச் சூட்டைப் பற்றி கற்பனை செய்து பார்க்க முடியுமா?

ஹாஜி முஹம்மது இந்தக் காரியத்தைச் செய்வார் என்று தெரிந்திருந்தால் அவரது மைத்துனர் குத்புதீன் கூட அவரை அழைத்திருக்க மாட்டார். இப்போது தானும் கொலைக் குற்றவாளியாகி, தனது மச்சானும் கொலைக் குற்றவாளியாகி மரண தண்டனைக்கு வழிவகுக்கின்ற ஒரு காரியத்திற்கு அவர் துணை போயிருக்க மாட்டார்.

தன்னைத் தாக்கிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பது தான் அவரது நோக்கமே தவிர வெட்டுக் குத்தில் இறங்க வேண்டும் என்பது அவரது நோக்கமல்ல! அது தான் இப்போது துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கின்றது. இந்தச் துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல!

அதுவும் புனிதக் குர்ஆன் இறங்கிய புனிதமிகு ரமளான் மாதத்தில் எள்ளளவு ஈமான் உள்ளவன் கூட இப்படி ஒரு ரத்தக் களரியை, மரணக் களத்தை நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்.

திட்டமிட்டாதிடீரென்றா?

இப்னுல் ஹள்ரமி என்பவன் கொல்லப்பட்ட சம்பவத்தை மேலே கண்டோம். புனித மாதத்தில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்பது நபித்தோழர்களுக்குத் தெரியும். ஆனால் அந்நாள் ஜமாதில் ஆகிர் மாதத்தின் கடைசியா? அல்லது ரஜப் மாதத்தின் துவக்கமா? என்று தெரியாமல், திட்டமிடாமல் திடீரென்று நடந்த சம்பவம் தான் அது!

அது போன்று தான் திருவிடைச்சேரி சம்பவமும்! இது திட்டமிட்டு நடந்ததல்ல! திடீரென்று நடந்தது. துரோக நயவஞ்சகக் கூட்டம், தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழித்துக் கட்டுவதற்காக இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது.

இந்த நயவஞ்சகர்கள் ம.உ. பத்திரிகையில்,

முதுகு முழுவதும் அழுக்கை வைத்துக் கொண்டு போலி தூய்மை பேசி சக கொள்கை சகோதரர்களையும் சக முஸ்லிம்களையும் எதிரிகளாகக் கருதி அதன் வழியாக இயக்க வெறியை அப்பாவித் தொண்டர்களிடம் வளர்ப்பவர்கள் தமிழக முஸ்லிம் சமுதாயத்தையே தலை குனிய வைத்திருக்கிறார்கள்.

என்று துரோகக் கூட்டம் நம்மைப் பார்த்துக் கேட்கின்றது.

புனித மாதத்தில் போர் செய்வது பாவம் என்று பேசும் மக்கா காபிர்களே!

உங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பது, அதற்குரியோரை அங்கிருந்து வெளியேற்றுவது, அவனை ஏற்க மறுப்பது.

இவ்வளவு அழுக்குகளை மூடை மூடையாக முதுகில் சுமந்து கொண்டு முஸ்லிம்களைப் பார்த்து இப்படிக் கேட்கிறீர்களே என்று அல்லாஹ் கேட்பதைத் தான் இந்த நயவஞ்சகக் கும்பலைப் பார்த்து நாமும் கேட்கிறோம்.

சுனாமித் திருட்டுக்குப் பதில் தராமல் சுருண்டு விழுந்த ஊழல்வாதிகளே! தூய்மையைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்குக் கடுகளவாவது அருகதை, யோக்கியதை இருக்கின்றதா?

முதுகில் குத்திய முதுபெரும் துரோகிகளே! முடை நாற்றங்களே! அபூஜஹ்லின் வாரிசுகளே!

இதே திருவிடைச்சேரியில் பள்ளிவாசலில் தொழ விடாமல் தடுத்த போது நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்? தனிப்பள்ளியில் தொழுகை நடத்துவதையும் வந்து தடுத்தார்களே! அப்போது எங்கே சென்றிருந்தீர்கள்?

நாங்கள் யாரையும் தலை குனிய வைக்கவில்லை. பள்ளிவாசலில் தொழ விடாமல் தடுத்ததுடன், தனியாகத் தொழுவதையும் தடுத்து அல்லாஹ்வுடன் போர் செய்த துரோகிகளாக நீங்கள் தான் தலை குனிய வைத்திருக்கின்றீர்கள்.

விளைவா? எதிர் விளைவா?

திருவிடைச்சேரியில் நடந்தது ஒரு போரல்ல! இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடுகளவும் காரணமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை பதிய வைத்துக் கொண்டு இங்கு கேள்வியை எழுப்புகிறோம். இது ஒரு போர் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால், இந்தப் போரைத் துவக்கியவர்கள் யார்?

பள்ளியை விட்டுத் துரத்தியதன் மூலம், தனிப் பள்ளியில் தொழுவதையும் தடுத்ததன் மூலம் ஜமாஅத் நிர்வாகிகள் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது ஏறி மிதித்திருக்கின்றார்கள். விளைவை ஏற்படுத்தியவர்கள் அவர்கள்! வினையைச் செய்தவர்கள் அவர்கள்! அதன் எதிர் விளைவைச் சந்தித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தே எதிர்பார்த்திராத ஓர் எதிர்விளைவைச் சந்தித்தார்கள். அவர்களிலிருந்தே ஒருவரைக் கொண்டு அவர்களுக்கு அல்லாஹ் இழிவை வழங்கியுள்ளான். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுப்பாக்கி அதில் ஆதாயம் தேட முயல்வது இந்த நயவஞ்சகக் கும்பலின் சதியாகும்.

மனிதநோய் கட்சியின் மறைமுக சதி

ஆரம்பத்தில், அப்துர்ரஹீம் மற்றும் எதிர்வீட்டு ஜபருல்லாஹ் ஆகிய இரு குடும்பத்தாருக்கும் பகை முற்றியதால் ஏற்பட்ட வெளிப்பாடு தான் இந்தத் துப்பாக்கிச் சூடு என்ற வரம்பில் தான் நின்றது.

மருத்துவமனையில் இருந்து கொண்டு செய்தியாளர்களிடம், இரு குடும்பங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனை என்று மக்கள் கொடுத்த தகவலை, மனிதநோய் கட்சியைச் சேர்ந்த ஒரு ஷைத்தான், "தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் காரணம் என்று சொல்லுங்கள்' என்று திருத்தி, திரித்துக் கூறியிருக்கின்றான்.

அந்த ஷைத்தான் இவ்வாறு கூறும் போது நமது சகோதரர்களும் அருகில் இருந்துள்ளார்கள். அதனால் இந்த உண்மை நமக்குத் தெரிய வந்தது. இப்போது தான் தவ்ஹீத் ஜமாஅத்தை முடக்குவதற்கு இவர்கள் பின்னிய சதி வலை இது என்பது நமக்குத் தெரிகின்றது.

அதைத் தொடர்ந்து, பொய்யாசிரியரின் பெருநாள் உரை, குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி, ம.உ. ஆகியவற்றைப் பார்க்கும் போது, இவர்கள் திட்டமிட்டுத் தான் இந்த அவதூறைப் பரப்பி வருகின்றார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது.

பொய்யாசிரியரின் புலம்பல்

துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட சுன்னத் வல்ஜமாஅத்தினரோ, காவல்துறையினரோ வேறு எவருமே இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அல்லது பி.ஜே. தான் காரணம் என்று சொல்லாத போது, இந்த நயவஞ்சகக் கும்பல் தலைவரான பொய்யாசிரியர் மட்டும், "இவர்கள் தான் சுட்டார்கள், இவர்கள் தான் சுட்டார்கள்'' என்று மன நோயாளி போன்று புலம்புவது ஏன்?

"இதோடு தவ்ஹீதுவாதிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடவேண்டும். இவர்கள் இருந்தால், நாம் அரசியல் நடத்த முடியாது. சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்க முடியாது. ஒரு பொதுக்கூட்டம் போட்டுப் பேசினால் போதும். உள்ள ஓட்டும் நமக்குக் கிடைக்காமல் போய் விடும்'' என்ற அச்சம் தான் காரணம்.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி. கனவுகளுடன் கற்பனையில் மிதந்தவர்களை, மண்ணடிப் பொதுக்கூட்டத்தில் பி.ஜே. ஆற்றிய உரை மண்ணைக் கவ்வச் செய்து விட்டது. இப்போதும் இவர்களை விட்டால் சட்டமன்றத் தேர்தலில் சட்டியைத் தூக்க வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் பொய்யாசிரியர் பித்துப் பிடித்து உளறத் துவங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது.

இப்படி வதந்தியைப் பரப்பி விட்டால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் அனைவரும் நம் பின்னால் வந்து விடுவார்கள்; சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போட்டு முதலமைச்சர் ஆக்கி விடுவார்கள் என்ற கனவும் பொய்யாசிரியரின் புலம்பலுக்குக் காரணமாக இருக்கலாம்.

இவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம்.

எங்களைப் பொறுத்த வரை கொள்கை விஷயத்தில் நாங்கள் யாரிடமும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

இணை வைப்பவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது; அவர்களைத் திருமணம் முடிக்கக் கூடாது என்றெல்லாம் பகிரங்கப் பிரச்சாரம் செய்கிறோமே! இதுவெல்லாம் யாரை நோக்கி? சுன்னத் வல் ஜமாஅத்தில் ஒரு பகுதியினரைத் தான். இருந்தாலும் சமுதாயப் பிரச்சனைக்காக நாங்கள் அழைத்தால் அவர்கள் வருகிறார்கள்.

ஜூலை 4 அன்று தீவுத்திடலில் லட்சக்கணக்கில் கூடினார்களே! அவர்கள் அனைவரும் தவ்ஹீதுவாதிகளா? இல்லை. நாங்கள் யாரை விமர்சிக்கிறோமோ அந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரும் சேர்ந்து தான் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காட்டினார்கள். ஏன்? எங்களது தலைமையை அவர்கள் நம்புகிறார்கள். நாங்கள் சொல்லும் கட்சிக்கு அவர்கள் ஓட்டுப் போடுகிறார்கள்.

முஸ்லிம்கள் என்றாலே திமுக தான் என்ற நிலையை மாற்றி, அதிமுகவுக்கு முஸ்லிம்களை ஓட்டுப் போட வைத்தது யார்? தவ்ஹீதுவாதிகள் தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் திமுக தோற்றது; அல்லது நூலிழையில் வென்றது. இதற்குக் காரணம் என்ன? அப்போது இட ஒதுக்கீட்டிற்கு ஆணையம் அமைத்ததற்காக  தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது.

அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு தந்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரித்தது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும் திமுக கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.

கொள்கையில் வேறு என்றாலும் சமுதாயப் பிரச்சனைகளில் தவ்ஹீத் ஜமாஅத் தான் தங்களுக்குச் சரியான வழியைக் காட்டும் என்று சுன்னத் வல் ஜமாஅத்தினரும் நம்புகிறார்கள்.

நயவஞ்சக வாத்தியார் கூட்டத்தைப் போன்று கூட்டம் சேர்ந்தவுடன் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டு விட்டுப் பதவிக்கு அலையும் கூட்டம் அல்ல என்று விளங்கி வைத்திருக்கிறார்கள். இவர்கள் நம்மை ஏமாற்ற மாட்டார்கள்; நம்மைக் காட்டி தங்களை வளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் ஊறிப் போய் விட்டது.

இது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் கண்ணியம். இதைப் பார்த்து வயிற்றெரிச்சல் அடைந்திருக்கும் வாத்தியார் கூட்டம் இப்போது, துப்பாக்கிச் சூட்டைக் காரணம் காட்டி புலம்பத் தொடங்கியிருக்கின்றது.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.

அல்குர்ஆன் 9:32


இவர்கள் என்ன தான் சதித் திட்டம் தீட்டினாலும் இந்த ஏகத்துவ ஜோதியை இவர்களால் அணைத்து விட முடியாது.


அபூஜஹ்ல் கண்ட அவமானமும் அழிவும்

"இக்ரஃ - ஓதுவீராக' என்ற வசனம் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வசனமாகும். இந்த வசனத்தைத் துவக்கமாகக் கொண்டு அமைந்தது தான் "அலக்' எனும் அத்தியாயம்.

இதனையடுத்து அமைந்திருக்கின்ற வசனங்களை ஒருமுறை படியுங்கள்.

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

அல்குர்ஆன் 96:9-19

தொழுகின்ற அடியாரைத் தடுப்பவனைப் பற்றி, அவன் அடையப் போகும் தண்டனையைப் பற்றி இந்த வசனங்கள் போதிக்கின்றன.

தொழுகின்ற அடியார் யார்? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம்.

தடுப்பவன் யார்? அனைத்து ஆலயத் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒரு கேடுகெட்ட முன்மாதிரியாகத் திகழ்பவன் யார்? அபூஜஹ்ல் தான். இதை ஹதீஸ்கள் தெளிவாக விவரிக்கின்றன.

அதாவது, குர்ஆனை மக்களிடம் சொல்ல ஆரம்பித்து விட்டாலே, அதனைச் சொல்பவர்கள் இப்படி ஒரு சோதனையைச் சந்திப்பார்கள் என்பதை இந்த வசனங்கள் தெரிவிக்கின்றன.

தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்களிடம், "குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றுங்கள்' என்று தூதர் (ஸல்) அவர்களின் அந்தத் தூய உத்வேகத்திலும் உணர்ச்சியிலும் சொல்லும் போது, நபி (ஸல்) அவர்கள் சந்தித்த அதே சோதனைகளைச் சந்திக்கின்றது.

அபூஜஹ்லின் அதே சாதனைகளை (?) அதாவது அவனது சாத்தானியத்தனங்களை அவனது வாரிசுகளான இன்றைய ஜமாஅத் தலைவர்கள் அன்றிலிருந்து இன்று வரை அரங்கேற்றுகின்றனர்.

பள்ளியைப் பாழாக்கும் பயங்கரவாதம்

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

அல்குர்ஆன் 2:114

இந்த வசனத்தைச் சொல்லி, இது நியாயமா? என்று கேட்டிருக்கிறோம். இதற்கு அவர்களிடமிருந்து பதில் வராமல் அடி, உதை, ஊர் நீக்கம் என்ற பயங்கரவாதம் தான் வெளிப்பட்டது. இவர்களை இயக்குகின்ற பயங்கரவாதிகள் மவ்லவி வர்க்கம் தான். கருப்புச் சிந்தனைக்குச் சொந்தக்காரர்களான அவர்கள் தான் பள்ளியின் கரும் பலகைகளில் பள்ளியைப் பாழாக்குகின்ற வாசகங்களை எழுதச் செய்தனர்.

குர்ஆன் என்றதும் அவர்களிடம் கொதிப்பு ஏறியது; கோபம் கொப்பளித்தது.

நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். "இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 22:72

அல்லாஹ் சொல்கின்ற இந்த வெளிப்பாடுகளை இவர்களிடம் காண முடிந்தது. பள்ளியில் தொழுபவர்களைத் தடுக்கும் இந்த அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் கூறும் எச்சரிக்கைகள் இதோ:

அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.

அல்குர்ஆன் 96:14-19

இவை தான் அந்த எச்சரிக்கை மணிகள். ஆர்ப்பரிக்கும் அபாயச் சங்கொலிகள்.

(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?'' என்று கேட்டான். அப்போது "ஆம்' என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்து கொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்'' என்று சொன்னான். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5005

நபி (ஸல்) அவர்களைத் தொழுவதை விட்டும் தடுக்கும் பணியைத் தொழிலாகவே கொண்டவன் தான் அபூஜஹ்ல்! அவனைத் தான் இந்த வசனங்கள் எச்சரிக்கை செய்கின்றன என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் இந்த எச்சரிக்கையைக் கேட்டு அவன் திருந்தவில்லை என்பதற்குப் பின்பவரும் ஹதீஸ் எடுத்துக்காட்டு.

(ஹிஜ்ரத் நடைபெற்று) நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் சஅத் (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்ற போது உமய்யாவிடம் தங்கினார்கள். ( அப்போது நடந்ததை சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) "இறையில்லம் கஅபாவை வலம் (தவாப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறு'' என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் தவாஃப் செய்து கொண்டிருந்த போது) எங்களை அபூஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி) "அபூ ஸஃப்வானே! உன்னோடு இருக்கும் இவர் யார்?'' என்று கேட்டார். உமய்யா, "இவர் தான் சஅத்'' என்றார். அப்போது என்னிடம் அபூஜஹ்ல், "மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக் கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்சமüத்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக்கொண்டிருப்பதை நான் காண்பதா....? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லாவிட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்க மாட்டாய்'' என்று சொன்னார்.

நூல்: புகாரி 3950

உக்பா பின் முஐத்தின் அநியாயம்

இது அபூஜஹ்லின் அநியாயம் எனில் உக்பா பின் அபீமுஐத் என்பவன் செய்த அநியாயத்தைப் பார்ப்போம்.

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் (கஅபா) அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூஜஹ்லும் அவனுடைய சகாக்களும் (அங்கே) அமர்ந்திருந்தனர். அவர்கüல் சிலர் சிலரிடம், "இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள சவ்வைக் கொண்டு வந்து முஹம்மத் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது அவருடைய முதுகின் மீது வைப்பர் யார்?'' என்று கேட்டனர்.

அக்கூட்டத்திலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் புறப்பட்டுச் சென்று அதைக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் நேரம் பார்த்து அவர்கüன் இரு தோள்களுக்கிடையில் முதுகின் மீது போட்டான். இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு ஒத்தாசை செய்பவர்கள் (மட்டும்) இருந்திருந்தால் (அதை நான் தடுத்திருப்பேன்.)

இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த (அபூ ஜஹ்லும் சகாக்களும்) ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரிக்கத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தாமல் சஜ்தாவிலேயே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கüன் புதல்வி, சிறுமி ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அவர்கüன் முதுகிலிருந்து அவற்றைத் தூக்கி வீசும் வரையில் (அப்படியே இருந்தார்கள்). பிறகு தமது தலையை உயர்த்தி, "இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்!'' என்று மூன்று முறை பிராத்தித் தார்கள். தங்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை பிராத்தனை புரிந்தது குறைஷிகளுக்கு மன வேதனை அüத்தது. (காரணம்,) அந்த (மக்கா) நகரில் செய்யப்படும் பிராத்தனை யாவும் ஏற்கப்படும் என்று அவர்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக் கொள்வாயாக! உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 240, 520

பத்ருப் போரில் பலியான பாவிகள்

பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்று கொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்கüலும்) இள வயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். ''அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்கüல் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து, "என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?'' என்று கேட்டார்.  நான், "ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!'' என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், "அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்கüல் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)'' என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார்.

சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்கüடையே சுற்றி வருவதைக் கண்டு, "இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!'' என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உங்கüல் யார் அவனைக் கொன்றது?'' என்று கேட்டார்கள். அவர்கüல் ஒவ்வொருவரும், "நான் தான் (அவனைக் கொன்றேன்)'' என்று பதிலüத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?'' என்று கேட்டார்கள். இருவரும், "இல்லை'' என்று பதிலüத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு, "நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் பின் அம்ருடைய வாüல் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) "அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹுக்கு உரியவை'' என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

நூல்: புகாரி 3141

அல்லாஹ்வின் பள்ளியில் மக்களைத் தொழவிடாமல் தடுத்த பாவிகளின் தலைவன், இஸ்லாத்தின் எதிரி, இறைத் தூதரின் விரோதி அபூஜஹ்ல், இரண்டு இளவல்களிடம் வெட்டுப்பட்டு சாகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் சபித்த அத்தனை பேர்களுமே பத்ர் களத்தில் கொல்லப்பட்டனர்.

ஆனந்தமடையும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி "கலீபு பத்ர்' எனும் அந்த பாழும் கிணற்றில் மாண்டு கிடந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 240, 520

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஒட்டகக் கருப்பையை வைத்து ஆர்ப்பாட்டமாய், அட்டகாசமாய் சிரித்தவர்கள் அசிங்கமான, அருவருப்பான பிணமாய், வேரறுந்த மரங்களாய் வீழ்ந்து கிடந்தனர். அன்று ஆதங்கமடைந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் இன்று ஆனந்தமடைகின்றார்.

பள்ளியைப் பாழாக்கியோர் பாழுங் கிணற்றில்...

அல்லாஹ்வைத் தொழுபவர்களை, பள்ளியை விட்டும் தடுத்த இந்தப் பாவிகள் பாழுங்கிணற்றில் பிணங்களாகத் தூக்கி வீசப்படுகின்றார்கள்.

இவ்வாறு வீசப்பட்ட அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் வினவுகின்றார்கள்.

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்கüல் இருபத்தி நான்கு பேர்(கüன் சடலங்)களை பத்ருடைய கிணறுகüல் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெüயில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, "இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியüக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்கüத்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்கüத்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?'' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்கüடமா பேசுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)

நூல்: புகாரி 3976

பாழாய் போனவர்களே! பள்ளியில் எங்களைத் தொழ விடாமல் தடுத்தீர்கள். அதற்கான பரிசைப் பெற்றுக் கொண்டு விட்டீர்கள் என்ற கருத்தும் இதில் அடங்கியிருப்பதை யாரும் மறுக்க முடியுமா?

ஜமாஅத்தார்கள் ய/ள் ஸபானிய்யாக்கள்

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

அல்குர்ஆன் 2:114

அபூஜஹ்லை இம்மையில் இழிவும் அவமானமும் அழிவும் தழுவியது. மறுமையில் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்ற தண்டனையும் காத்திருக்கின்றது. "அலக்' அத்தியாயத்தில் கூறுவது போன்று ஸபானிய்யாக்கள் எனும் மலக்குகள் அபூஜஹ்லையும் அவனது வாரிசுகளான இன்றைய ஜமாஅத்தினரையும் சரியான முறையில் சாத்துவார்கள். அந்த வேதனையிலிருந்து இவர்கள் தப்ப முடியாது.

அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையை அபூஜஹ்ல் மதித்திருந்தால் இவ்வளவு பெரிய இழிவையும் அழிவையும் சந்தித்திருக்க மாட்டான். இதை ஜமாஅத்தார்கள் பாடமாகவும் படிப்பினையாகவும் எடுத்துக் கொண்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவ்வுலகில் இழிவு இவர்களை சந்திக்கத் தான் செய்யும்.

இவர்கள் இழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதோ சில உண்மை நிகழ்வுகளைப் பார்ப்போம்.

1. வளர்ச்சி

இவர்கள் பள்ளியில் வர விடாமல் தடுப்பதற்குரிய காரணம் என்ன?

தவ்ஹீதுவாதிகள் வளர்ந்து விடக்கூடாது என்பது தான். ஆனால் ஊருக்கு ஊர், இன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தவ்ஹீத் ஜமாஅத் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இவர்கள் நிர்வகிக்கும் பள்ளியில் 5 நேரங்கள் தொழ வருபவர்களை விட தவ்ஹீது ஜமாஅத் வளர்ச்சியடைந்துள்ள ஊர்களில், தவ்ஹீது பள்ளிகளில் அதிகமான எண்ணிக்கையினர் தொழ வருகின்றனர்.

2. பெற்றோர் அங்கே! பிள்ளைகள் இங்கே!

எந்தக் கொள்கையை வளர விடக் கூடாது; ஊருக்குள் வர விடக் கூடாது என்று நினைத்தார்களோ அந்தக் கொள்கையை அவர்களது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது இவர்களுக்கு இழிவில்லையா?

3. மவ்னமான மவ்லவிகள்

எத்தனையோ மவ்லவிகள், இந்தத் தடைக்குக் காரணமாக இருந்தவர்கள், தடையைத் தூண்டியவர்கள் அந்தப் பள்ளியிலேயே பணி செய்ய முடியவில்லை. அப்படியே பணி புரிந்தாலும் அந்தப் பள்ளிகளில் நபிவழி அடிப்படையில் தொழுவதை அவர்களால் இப்போது தடுக்க முடியவில்லை. இனிமேல் இவர்களைத் தடுக்க முடியாது என்று வாயடைத்து நிற்கின்றனர்.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலேயே இப்போது தடுக்க முடியவில்லை என்பது இவர்களுக்கு இழிவில்லையா?

4. தோல்வியில் முடிந்த வழக்குகள்

பள்ளிவாசலில் தொழ விடாமல் நிர்வாகிகள் விதித்த தடையை எதிர்த்து தவ்ஹீதுவாதிகள் நீதிமன்றம் செல்கின்றனர். இந்த நீதிமன்றங்களில் ஜமாஅத் நிர்வாகிகள் தோல்வியையே சந்திக்கின்றனர். அல்லது தவ்ஹீதுவாதிகளுடன் சமரசம் செய்து கொள்கின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணை வரும் போது, நாங்கள் இனி தடுக்கமாட்டோம் என்று எழுதிக் கொடுத்து விட்டு வருகின்றனர். இதுவும் இவர்களுக்கு ஏற்படும் இழிவு தான்.

5. பொறுப்பிலிருந்து நீக்கப்படுதல்

பள்ளிவாசலில் தொழ விடாமல் தடுத்த நிர்வாகிகள் அந்தப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கின்றார்கள். இப்படியும் கேவலத்தைச் சந்திக்கின்றார்கள். பள்ளியில் தொழ விடாமல் தடுப்போரை இப்படி அல்லாஹ் ஏதாவது ஒரு வகையில் கேவலப்படுத்துகிறான்.

திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆதரிக்காது.

இது வன்முறையை ஆதரிக்கும் ஜமாஅத் என்றால் எஸ்.பி. பட்டிணம், மந்தாரம்புதூர், செய்துங்கநல்லூர், அம்பாசமுத்திரம் போன்ற ஊர்களில் விவகாரங்கள் காவல்துறைக்கும் நீதி மன்றங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்காது. வன்முறையில் நம்பிக்கை இருந்தால் அந்த வழியில் தீர்வு கண்டிருக்கும். ஆனால் அதுபோன்ற வழிகளில் தவ்ஹீத் ஜமாஅத் இறங்கவில்லை.

நம் நாட்டு நீதிமன்றங்களில் நீதி, நியாயம் கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் தாண்ட வேண்டும். அவ்வளவு கால தாமதமானாலும் அதற்குத் தக்க கிளைகள் காத்துக் கொண்டு தான் இருக்கின்றன. வன்முறைப் பாதையில் அது செல்லவில்லை. அப்படியிருந்தும் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்தேறியிருக்கின்றது. அதில் இருவர் பலியாகி இருக்கின்றனர்.  பிறருடைய மரணத்தில் மகிழ்ச்சியடைபவர்கள் நாங்கள் கிடையாது. இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஹாஜி முஹம்மது தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர் அல்ல.

அரிவாள் வெட்டைக் கூட, ஏன் அடிதடியைக் கூட விரும்பாத நாங்கள் துப்பாக்கிச் சூட்டை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

இருப்பினும் இது உணர்த்துகின்ற செய்தி, பள்ளிவாசலில் தொழுபவரைத் தடுத்தால், அவ்வாறு தடுப்பவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகில் ஏதாவது ஓர் இழிவை ஏற்படுத்துவான் என்பது தான்.

கொலை என்பது கொடிய பாவம் தான். ஆனால் கொலையை விடக் கொடிய பாவம் கலகம் செய்வது. அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் தொழுபவர்களைத் தடுப்பது அந்த வகையைச் சேர்ந்தது தான்.


எனவே பொதுவாக ஜமாஅத்தார்கள் இந்தக் கொடிய பாவத்தைச் செய்து இம்மையில் இழிவையும், மறுமையில் கடும் தண்டனையையும் அடைந்து விடாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

EGATHUVAM OCT 2010