பாப்புலர் ஃப்ரண்ட் எனும் ஆக்டோபஸ்
இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று கிளம்பிய ஒரு கூட்டம்
இப்போது இந்திய ஆட்சியை நிர்மாணிக்கக் கிளம்பி விட்டது. ஜனநாயகம் ஓர் இணை வைப்பு என்று
பாடம் படித்து அதையே போதித்து வந்த இந்தக் கூட்டம் அதே ஜனநாயகத்தின் உச்சக்கட்டமான
தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளிலேயே கேடு கெட்ட
விதமாக விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ்
போன்ற இணை வைப்பு விழாக்களுக்கு வாழ்த்துச் சொல்லி பேனர் வைக்க ஆரம்பித்தது. வீதி வீதியாகச்
சென்று,
வீடு வீடாகச் சென்று இப்போது ஓட்டுப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றது.
அரசியலில் எந்த இயக்கமும் குதிக்கலாம்; அந்த இயக்கத்தைச் சேர்ந்த எவரும் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகலாம். அதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆட்சேபணை இல்லை.
ஆனால் இஸ்லாத்தை அதற்குப் பகடையாகப் பயன்படுத்துவார்களேயானால்
அவர்களின் முகத்திரையைக் கிழிக்க தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் தயங்காது. அந்த அடிப்படையில்
இவர்களை அடையாளம் காட்டும் விதமாக ஏகத்துவம் இதழில், "கொள்கை இல்லாக் கூட்டம்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
அவர்களது முகத்திரையைக் கிழிக்கும் அந்தக் கட்டுரையை குமரி மாவட்ட
கொள்கைச் சகோதரர்கள் மறுபதிப்பு செய்து பிரசுரமாக வெளியிட்டனர். சந்தி சிரிக்கும் இவர்களின்
நயவஞ்சகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற இந்தப் பிரசுரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குமரி மாவட்டச் செயலாளர் நாஸர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஜாஃபர் ஆகிய இருவரும்
கடந்த மார்ச் 13 அன்று சந்தி தெரு முனையில்
வினியோகித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ.யைச் சேர்ந்த ரவுடிக் கூட்டத்தினர் அவ்விருவர் மீதும்
கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் சகோதரர் ஜாஃபர் கீழே விழுந்ததும் அவர் மீது
ஏறி மிதித்து, தங்கள் வெறியைக் கட்டவிழ்த்து
விட்டுள்ளனர். இதன் பிறகு ஜாஃபர் இறந்து விட்டார் என்று நினைத்து அடித்துப் புரண்டு
தப்பி ஓடிவிட்டனர் இந்த வீரப்புலிகள் (?); கடைந்தெடுத்த கோழைகள்.
ஆனால் அல்லாஹ்வின் அருளால் ஜாஃபர் இறக்கவில்லை. அல்லாஹ் காப்பாற்றி
விட்டான். கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நமது சகோதரர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர்.
முஸ்லிம்களைக் காக்கப் புறப்பட்டதாகக் கூறிய இவர்கள் இன்று முஸ்லிம்களைக்
கொலை செய்யும் கருங்காலிகளாக மாறி விட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்.-ஐ விடக் கொடிய இந்தக் குண்டர்களைக் கைது செய்யும்படி
குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறையில் புகார் செய்தது. புகாரைப் பெற்ற காவல்துறை, கைது செய்வதற்காக வீடு தேடிச் சென்ற போது அசகாய வீர சூரர்கள்
தப்பியோடி விட்டனர்.
திராணியிருந்தால், நாங்கள் தான் தாக்கினோம் என்று காவல்துறையில் தங்களை ஒப்படைத்திருக்க
வேண்டும். அதையும் செய்யத் தயாரில்லாமல் தங்களை பெட்டைகள், பேடிகள் என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றனர். குற்றச்சாட்டுக்குப்
பதில் கூறத் திராணியில்லாத, விமர்சனங்களைக்
கூட தாங்கிக் கொள்ளத் தயாரில்லாத இவர்களை நோக்கி ஒன்றைக் கூறுகிறோம். தவ்ஹீத் ஜமாஅத்
இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை; அடங்கப் போவதில்லை.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தக் காளான்களுக்கு, தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பாளர்களின் கழுத்துக்குக் கத்தி வந்த வரலாறு
தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இந்த உருட்டல் மிரட்டலுக்கொல்லாம் இந்த ஜமாஅத்தைச்
சேர்ந்தவர்கள் ஒரு போதும் அஞ்ச மாட்டார்கள். நோட்டீஸ் கொடுப்பாயா?' என்று கேட்டுத் தான் இந்தக் கயவர்கள் தாக்கியிருக்கின்றனர்.
உயிர் இருக்கும் வரை கொடுக்கத் தான் செய்வோம்' என்று வீர முழக்கமிட்டு இந்தக் கோழைகளை மாவட்டச் செயலாளர் நாஸர்
எதிர் கொண்டுள்ளார்.
இதில் சகோதரர் ஜாஃபரைத் தாக்கியவன் வேறு யாருமல்ல! அவரிடம் ஆட்டோ
ஓட்டிய வேலைக்காரன் தான். நல்லவன் போல் நடித்து தனது நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறான்
இந்தக் கயவன். இதிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ. இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விடக் கொடியது; ஆக்டோபஸ் போன்று பன்முகம் கொண்டது என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளனர்.
இவர்களைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சாது; அயராது என்பதை இங்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
EGATHUVAM APR 2011